Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இஸ்லாமிய நண்பர்களே மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.
4 posters
TamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்
Page 1 of 1
இஸ்லாமிய நண்பர்களே மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.
இஸ்லாமிய நண்பர்களே, மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.
நாம் பெரும்பான்மையாக வாழும் மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளிலோ அல்லது இந்தோனேஷியா மலேஷியாவிலோ வாழும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் யாராவது, அங்கு ஆட்சியிலிருக்கும் இஸ்லாமிய அரசுகளால் பாதிக்கப்படும்போது, அவர்களால் ஒரு சிறு போராட்டத்தைத்தானும் நடத்த முடியுமா? குறைந்தபட்சம் அவ்வாறு ஒன்றை நடாத்துவது பற்றி நினைக்கத்தானும் இயலுமா?
இஸ்லாமாபாத்திலும் தெஹ்ரானிலும் ஜித்தாவிலும் கோலாலம்பூரிலும் குவைத்திலும் அவ்வாறான போராட்டம் ஒன்றை நடாத்தினால் அவர்களுக்கு என்ன கதியெற்படும் என்று யோசித்துப் பாருங்கள். ‘மனிதாபிமானமிக்க’ நமது சாம்ராஜ்யங்கள் குறைந்தபட்சம் அவர்களை உயிருடனாவது விட்டு வைக்குமா?
ஐரோப்பிய கல்லூரிகளிலும் விமானங்களிலும் ஹலால் இறைச்சி வேண்டும் என்கின்றோம். பொதுக் கழிப்பறைகளை இஸ்லாமிய கழிப்பறைகளாக மாற்ற வேண்டும் என்கின்றோம் (ஐரோப்பியர்களுக்கு ஈரமான கழிப்பறை என்பது அருவருப்பானது என்பதால் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன) ஆனால் நாமோ ஐரோப்பிய கழிப்பறைகளில் தண்ணீர்க் குழாய் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றோம். அங்குள்ள பொதுக் கட்டிடங்களிலும் பாடசாலைகளிலும் தொழுகை செய்யத் தனியறைகள் வேண்டும் என்று உரிமையுடன் நச்சரிக்கின்றோம். ஆனால், அதேசமயத்தில், இஸ்லாமிய நாடுகளில் மற்ற மதங்களைச் சேர்ந்த நபர்களை வழிபாட்டில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கவும், மரண தண்டனை கொடுக்கவும் செய்கின்றோம்.இது எந்த ஊர் நியாயம்?
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அப்படி நாமும் மற்றவர்களை நடத்துவதே தங்க விதியின் அடிப்படைக்கொள்கை.
இதையேதான், ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்குவது’ என்று கிராமங்களிலே எளிமையாக கூறுவார்கள்.இதிலே பெரிதாக என்ன உள்ளது என்று சாதாரணமாக கேட்கத் தோன்றுகின்றதல்லவா? ஆனால் அடுக்களை முதல் அரசியல் வரை அணுவுலைகள் முதல் அண்டங்களின் ஆராய்ச்சி வரை எவ்வளவோ விடயங்கள் இதற்குள் அடங்கியிருப்பதை அறிந்தால் உண்மையில் பிரமித்துப் போவீர்கள்.
சற்று யோசித்துப்பாருங்கள்.. நமது குடும்பத்திலேயுள்ள உறவுகளிடம் நாம் என்னென்ன எதிர்பார்ப்போம்? அன்பு, பாசம், அங்கீகாரம், விசுவாசம், நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டுப்பொறுப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் போது அவற்றை நாமும் அவர்களுக்கு வழங்கும் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதுதானே பொதுவான நியாயம்?
இந்த விதியை நாம் நமது உறவினர், நண்பர்கள், சகபாடிகள், மதிப்புக்குரிய எதிரிகள், பிறசமூகத்தவர்கள் என்று அனைவருக்கும் பிரயோகித்து வந்தால்தான் அவர்களும் நம்மீது மரியாதை வைத்து நடப்பார்கள்.
அவ்வாறின்றி, ‘நான் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தடையில்லாமல் தரவேண்டும். ஆனால் அவற்றை என்னிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது’ என்பதுதான் உங்களது எண்ணமென்றால் எப்படியிருக்கும்?
சரி அப்படி ஒரு எண்ணத்துடன் நீங்கள் இருப்பதை மற்றவர்கள் அறிந்தால் உங்களைப்பற்றி எப்படி நினைப்பார்கள்? மற்றவர்கள் நினைப்பதிருக்கட்டும் முதலில் அது உங்களுக்கே நியாயமாக இருக்குமா?
இப்போது மீண்டும் தங்க விதிக்கு வருவோம். ‘நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அவ்வாறே நாமும் மற்றவர்களை நடத்துவது’. இதை நாம் சரிவரச் செய்கின்றோமா?
நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே நமது மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மட்டுமன்றி தொழிலுக்காக கூடியுள்ள சிறு நகரங்களிலும் கூட நம்மால் வணக்க ஸ்தலங்களை அமைத்துக்கொள்ள முடிந்திருக்கின்றது.. ஏன் இப்போதும் கூடமுடிகின்றது.
ஆனால் பிற மதவழிபாட்டு நிலையங்களைக் கட்டவும், அவர்களது ஆன்மீக பேணுதல்களைப் புரியவும் அனுமதிக்கின்ற ஒரு இஸ்லாமிய நாட்டையேனும் காண்பிக்க முடியுமா? எனக்குத் தெரிந்தவரை ஒன்று கூட இல்லை!
நாம் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலே தொழில் புரிந்துகொண்டு அந்த நாட்டு பெரும்பான்மை மக்களின் மதநம்பிக்கைகளையெல்லாம் புண்படுத்துகின்ற விதத்திலே அவர்களை விமர்சித்து வெறுப்பை உமிழ்கின்றோம். அதேவேளை நாம் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலே நம்மையும் நமது நம்பிக்கைகளையும் பற்றி தவறிப்போய் சிறுபிழையாக ஏதாவது சொல்லிவிட்டாலும் போதும் உடனே அவர்களைக் கொன்றொழிக்கவும் மரணதண்டனை வழங்கவும் சித்திரவதை செய்யவும் புறப்பட்டு விடுகின்றோம்.
அதாவது நம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு நாம் மற்றவர்களுக்கு இழைக்கும் ஒவ்வொரு கொடூரக்குற்றத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
இது நியாயமா?
நண்பர்களே, நாம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதால் அநியாயங்கள் எல்லாம் ஒருபோதும் நியாயங்களாகி விடாது.தவறுகளை யார் புரிந்தாலும் அது தவறுதான்.
இவ்வாறு சொல்வதால், சிறுபான்மையினர் என்ற விதத்திலே உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மீது நிகழும் அநீதிகளையும் புறக்கணிப்புகளையும் ஒதுக்கல்களையும் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிவிடக் கூடாது. ஒடுக்குமுறைகள் யாருக்கு எதிராக எங்கு நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் எதுவிதமான தயவு தாட்சண்யமுமின்றிக் கண்டிக்கப்படவேண்டியதே.
அதேவேளை நாம் செய்யும் தவறுகளையும் கொடூரங்களையும் உணர்ந்து நம்மை நாமே திருத்திக்கொள்ளாதவரை அதே தவறுகளையும் கொடூரங்களையும் தட்டிக்கேட்பதற்கு நமக்குள்ள தார்மீக உரிமை பிறரின் கேலிக்குள்ளாவதைத் தவிர்க்கவே முடியாது.
நண்பர்களே! மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.
…..மூதூர் மொகமட் ராபி....

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: இஸ்லாமிய நண்பர்களே மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.
ஆமாம் சக்தி ..நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .இந்தியா ஜனநாயக நாடு
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: இஸ்லாமிய நண்பர்களே மனதைத் திறந்து சிந்தித்துப் பாருங்கள்.
இது கட்டுரை உண்மையில் இந்துதுவா தீவிரவாதிகள் எடுத்த வாந்தியை அப்படியே சாப்பிட்டுவிட்டு மீண்டும் வாந்தி எடுத்துள்ளார் கட்டுரையாளர் இதை பதிவு செய்தவரின் அறிவு எங்கே போனது என்று தெரியவில்லை அதற்க்கு உண்மை! உண்மை! என்று கட்டியம் கூற அருளும் மாலதியும் இஸ்லாமிய நாடுகளில் மாற்று மதத்தினரின் ஆலயங்கள் இல்லையாம் சவுதி அரேபியாவை தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் மாற்றுமததினரின் கோவில்கள் உள்ள்து நான் வாழும் துபாயில் இந்து கோவில்களும் 50 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ ஆலையங்களும் உள்ள்ன இவைகள் அனைத்தும் அரேபிய ஆட்சியாள்ர்கள் தானமாக கொடுத்த நிலத்தில் தான் அமர்ந்துள்ளது அவைகளில் சில சர்ச்களின் கட்டிடத்துக்காக கோடிகண்க்கில் பணம் செலவு செய்தது கூட முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஒமானில் ராம்தாஸ் என்பவர் அமைச்சரின் அந்தஸ்துடன் வாழ்ந்து வருகிறார் பல ஆயிரக்கணக்கன இந்துக்கள் அந்த நாட்டு குடியுரிமையை பெற்று வாழ்து வருகின்றனர் அவர்கள் கொவில்கள் கட்டி பிறார்தித்து வருகின்றனர் இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் இந்து கொவில்களும் கும்பாபிசேகங்களும் உள்ள்து ஈரானில் யூத கிறிஸ்தவ கோவில்கள் உள்ள்ன ஈராக் எகிப்து சிரியா லப்னான் போன்ற நாடுகளில் கிறித்தவ ஆயிரகணக்கான கோவில்கல் உள்ளன ஏன் சதாம் உசேனின் ஆட்சியில் ஈராக் பிரத்மராக இருந்த தாரிக் அஸிஸ் ஒரு கிறிஸ்தவர் ஆவார், அடுத்து அந்த நாட்டில் எல்லாம் இந்துக்கள் போராட்டம் ந்டத்த முடியாதாம் அந்த நாட்டு குடிமக்களுக்கே போராட்டம் நடத்த உரிமையில்லாதபோது வயிற்று பிழைப்புக்கு வந்தவனுக்கு போராட்டம் நடத்த உரிமையில்லை எண்பது பத்தியக்காரனின் வாதம் மேலும் அப்படியே அங்கெல்லம் மற்றவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு என்ன? இங்கு உள்ள் இஸ்லாமியர் கள் அரேபியாவிலிருந்து வந்தவர்களா? எங்கள் முதாதய்ர்கள் புத்தமததிலிருந்தும் இந்துமததிலிருந்தும் மத்ம் மாறியவர்கள் ஆரியர்கள் போன்று வ்ந்தேறிகள் அல்ல கட்டுரயிலிருந்து ஒன்றும்ட்டும் புரிகிகிறது நாங்கள இதயத்தை பிளந்து காட்டி இதய துடிப்பு ஒவ்வொன்றும் இந்தியா!இந்தியா! என்று சொல்கிறது என்றாலும் நீங்கள் எங்களை அன்னியன் என்றும் கூறுவீர்கள் இப்படி போனால் இச்லாமியர்கள் தங்களது குடியுரிமையை இந்திய அரசிடம் திருப்பி ஒப்படைக்கும் காலம் வந்தாலும் ஆச்சரியபடுவத்ற்க்கிலை
Similar topics
» இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்...
» இஸ்லாமிய இயக்கங்கள் சுயநலவாத இயக்கங்களா?
» மனதைத் தொட்ட வரிகள்
» இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு
» இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள்
» இஸ்லாமிய இயக்கங்கள் சுயநலவாத இயக்கங்களா?
» மனதைத் தொட்ட வரிகள்
» இஸ்லாமிய சகோதர-சகோதரிகளுக்கு
» இஸ்லாமிய ஆண் குழந்தை பெயர்கள்
TamilYes :: சர்வ மதம் :: இஸ்லாமிய சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum