Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மறக்கப்பட்ட மனிதர்கள் -1 இந்தியக் கொடி கொடுத்த பெண் போராளி வள்ளியம்மை.
3 posters
Page 1 of 1

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்,உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு.
நம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும்,நாட்டிற்கும்,மக்களுக்கும் சேவை செய்தவர்களை எப்போதாவது ஒரு முறையாவது நினைவு கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் இந்த தொடரை எழுத முயற்சிக்கிறேன்.ஈழத்தில் மாவீரர்களான பலரை நாம் நவம்பர் மாதத்திலும்,மறைந்த நாளிலும்,எந்த வேறுபாடுகளும் இன்றி தமிழர்களாய் இருந்து நினைவு கூருகிறோம். அந்த வரிசையில் நாம் மறந்த பலரில்,நாடு வேறுபாடின்றி, தமிழர்களாய், மனிதர்களாய் நின்று,அவர்களை நினைவு கூரும் நோக்குடன், இன்று நான் உங்கள் கண் முன் கொண்டு வர இருப்பவர்........................
தில்லையாடி வள்ளியம்மை என்ற பெண் போராளி.
வெள்ளையர் ஆட்சி உலகெங்கும் பரவி இருந்த காலம். இலங்கை,இந்தியா,பர்மா இப்படி ஆரம்பித்து தென் ஆபிரிக்காவில் காலைப் பதித்த வெள்ளையர்கள்,அங்கு கரும்புத் தோட்டத்திற்கு ஆளை தேடிய போது,குறைந்த கூலி, எதிர்த்துப் பேசாத அடிமைகள், என்று வெள்ளையன் கண்களை மூடிக் கொண்டு சொல்லிய நாடு இந்தியா,அதுவும் தமிழ் நாடு தான்.காரணம்,ஆபிரிக்க கறுப்பினத்தவர்கள் முரட்டுக் குணம் கொண்டவர்கள், முதலாளிகளுடன் முரட்டுத்தனமாக சண்டை போடுகிறார்கள் என்ற வெள்ளையர்களின் அன்றைய கருத்தாக இருந்தது தான். அந்த அடிமைக் கூட்டத்தை அழைத்துச் சென்றது என்பதை விட, இறக்குமதி செய்த கூட்டத்தில், அடிமைக் கூலித் தொழிலாளியாக,பல கனவுகளுடன் சென்றவர்களில் ஒரு ஏழைக் கிராமவாசி தம்பதிகளான, தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி-மங்களத்தம்மாள் தம்பதிகளும் அடங்குவர்.
எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்ட முனுசாமி தம்பதியர்களுக்கு, 1898 ல் பிறந்தாள் வள்ளியம்மை.அந்த பெண்ணின் எதிரகாலம் பற்றிய கனவுகளுடன், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, இருவரும் கரும்புத் தோட்ட அடிமைகளாய் வாழத் தொடங்கினர்.ஆனால் சிறிது காலத்திற்குள்ளேயே சிறிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்து விட்டாலும்,அவர்களும் இந்தியர்கள் என்ற கூட்டத்தில் அடிமைகளாகவே பார்க்கப்பட்டார்கள்.அந்த தமிழ் அடிமைகளுக்கு, தனியான சலுகைகள் கிடைக்குமா என்ன?மற்ற அடிமைகளைப் போல் வாக்குரிமை இல்லை, ஒருவருக்கு தலைவரியாக 3 பவுண் கட்டுவதுடன், அவர்களுக்கான பகுதிகளை விட்டு வெளியேறக் கூடாது என்ற கட்டுப்பட்டும் இருந்தது.(அந்த நிலையை விட,கொடுமையாக இன்றும்,சுதந்திர இந்தியாவில், ஈழத்து அகதிகளுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கிறது. திறந்தவெளி முகாம் சிறையோ, வழக்குப் பதிவுகளோ இன்றி,கொடுமையான,வசதிகளற்ற சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.இது தான் காந்தி?? வாங்கித் தந்த சுதந்திரமா?)
இது தவிர,வெள்ளையர் பள்ளிகளில் படிக்க முடியாததுடன், அவர்களுடன் சமமாக அமர்ந்து பயணிக்கும் உரிமையும் கிடையாது.இப்படி வாழ்ந்த அவர்கள் வாழ்விடங்கள், சுகாதார வசதியற்ற சேரிகளாக மாறி நோய்களும் பரவின.
இந்த சமயத்தில் தான்,1893_ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,தாதா அப்துல்லா கம்பெனிக்கான வழக்குகளுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார். ஒரு ஆண்டுடன் திரும்ப இருந்தவர்,20 ஆண்டுகள் வரை இருந்து இந்தியர்களுக்காக போராடினார். (அப்போது அவருக்கு நேரு குடும்பத் தொடர்பில்லாமல் இருந்ததாலும் வேறு திசை திருப்பும் நல்லவர்கள் இல்லாததாலும்,தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை பார்க்கவும்,அதே நேரம் இந்தியர்களின் உரிமைக்காகவும் போராட முடிவு செய்தார்.இந்தியர்கள் மீதான தலைவரியை நீக்க போராட்டத்தை இதியர்கள் ஆரம்பித்த போது,கிறிஸ்தவ சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என்றும், மற்ற எந்தத் திருமணமும் செல்லாது எனவும்,ஒரு தீர்ப்பை கேப் உச்சநீதிமன்ற நீதிபதி கொடுத்ததும் சேர்ந்து கொள்ளவே, மக்கள் அமைதியற்ற நிலைக்கு சென்றனர். இந்திய வழக்கப்படியோ,அல்லது மற்ற மத வழக்கப்படியோ செய்த மணம் செல்லாத நிலையில்,குழந்தைகள்,வாரிசுப் பிரச்சனைகள் எழுப்பப்பட்டன.இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்த போது, காந்தியும் அதற்கு துணை போனார்.
இந்தப் போராட்டங்கள்,கிளர்ச்சிகள்,கூட்டங்களுக்கு அந்த சின்னப் பெண் வள்ளியம்மையும்,பெற்றோருடன் செல்ல ஆரம்பித்தாள்.இந்த நிலையில் மேலும் இந்தியர்கள் வருவதை தடுக்க கைவிரல் அடையாளம் பதிவு செய்ய ஆரம்பித்தது வெள்ளையர் ஆட்சி.அப்போது வள்ளியம்மைக்கு வயது பதினாறு.இருந்தும் சொற்பொழிவுகள், ஆட்சியின் பல இந்தியர்களுக்கு எதிரான செயல்கள்,சட்டங்கள் அவளையும் சிந்திக்கத் வைத்தது.பெண்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்ற நிலையிலும்,இது பெண்களைப் பாதிக்கும் கொடிய சட்டம் என தெரிவித்து அவளும் போராட்டங்களில் கலந்து கொண்டாள்.
1913 ல் ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படையில், ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக, முதல் வரிசையில் நின்ற பெண்மணிகளில் வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார் மங்களத்தம்மாளும் அடங்குவர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்,என்ற அந்த சின்னப் பெண் வள்ளியம்மையின் ஓங்கி ஒலித்த குரல்,எல்லா பெண்களையும்,ஆண்களையும் கூட எழ வைத்தது.அவளின் அந்த ஓங்கி ஒலித்த குரலுடன் ஊர்வலம் ஜொகனஸ்பேர்க்கில் இருந்து நியூகாசில் நகருக்கு முன்னேறியது.நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோதெல்லாம், வள்ளியம்மை போராட்டக்காரர்களுக்கு உதவி செய்தாள். நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலையில் பணி புரிந்தவர்களில் பெரும்பானமையினர் தமிழர்களானதால், வள்ளியம்மையின் குரலுக்கு அவர்களும் வேலை நிறுத்தம் செய்து, போராட்டத்தில் இணந்தது, அவளுக்கு மேலும் உற்சாகம் கொடுத்தது. இந்த உணர்ச்சி வேகம், டிரான்ஸ்வால் நகர எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட போது,தடையை மீறி சென்ற வள்ளியம்மை தலைமையிலான பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது.அவள் சின்னப் பெண்ணாக இருந்தும் கடுமையான வேலைகள் கொடுக்கப்பட்டன.சிறையிலேயே உணவும்,கழிவறையும்(சிறிய பாத்திரம் மூடியுடன்),காலையில் அதை சுத்தம் செய்வதும் எல்லாமே அவர்கள் தான்.
இந்த நிலையில் ஏற்கனவே மெலிந்திருந்த அவள், நோய்வாய்ப்பட்டாள்.அபராதம் செலுத்தி வெளியே சென்று மருத்துவம் பார்ப்பதற்கு அனுமதித்த நிலையிலும்,தான் போராளி என்றும் அப்படி செல்வது போராட்டத்திற்கு இழுக்கு என்று கூறியதுடன்,இங்கேயே சாவதற்கும் தயார், என்று சொல்லி, வெளியே செல்ல மறுத்து விட்டாள்.ஆனாலும் நோய் வாட்ட ஆரம்பித்த போதும் அவள் அபராதம் செலுத்தி வெளியே செல்ல மறுத்ததால்,1914 பெபிரவரி 1 ல் தண்டனை முடியு முன்னரே, பயம் கொண்ட அதிகாரிகள் விடுதலை செய்து விட்டனர்.
நடக்க முடியாதிருந்த அவளை தூக்கி வீட்டுக்கு கொண்டு சென்றனர்.இந்தியர்களுக்கு உரிய மருத்துவ வசதி இல்லாத நிலையில்,நோய் படு மோசமாகி,1914 பெப்பிரவரி 22 ம் திகதி இறந்து விட்டாள்.இந்தியன் ஒப்பீனியன், பத்திரிகையில் காந்தி, இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தார். அத்துடன்,சத்திய சோதனையில்,காந்தி தன்னை விடுதலை உணர்வை ஊட்டியவள் என்று பெருமைப் படுத்தியதுடன்,.போராட்ட காலத்தில் வெள்ளையன் ஒருவன் காந்தியை நோக்கி, துப்பாக்கியை உயர்த்திய போது,இப்போது காந்தியைச் சுடு பார்க்கலாம், என்று சொல்லி காந்திக்கு முன்னால் போய் நின்ற அவளது வீரத்தையும் துணிவையும் எண்ணிப் பெருமைப் பட்டிருந்தார்.
ஆனாலும்,தலைவரியும்,இந்தியர்களுக்கான திருமணச் சட்டமும் நீக்கப்பட்டது அவளுடைய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சொல்லிக் கொண்டார்கள். அத்துடன்,ஒருவர் உங்களுக்கு எது கொடி என்று கேட்ட போது,இதோ கொடி என்று கூறி,தன் வர்ண சேலையை கிழித்துக் கொடுத்து,இது தான் கொடி என்று சொல்லிக் கொண்டாள். அந்த சேலையின் மூவர்ணமே பின்னர் காந்தியின் மூவர்ணக் கொடிக்கு அடிப்படையானது என்றும் பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள்.
தென் ஆபிரிக்காவில் அவளுக்கு நினைவு சிலை வைத்திருந்தார்கள்.அது நெல்சன் மண்டேலா ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டது.தரங்கம்பாடி,தில்லையாடி வள்ளியம்மை கிராமத்தில், 13.8.1971 ல் தமிழக அரசால் நினைவு மண்டபமும், மார்பளவுச் சிலையும்,நூல் நிலையமும் கட்டப்பட்டுள்ளது.வெண்ணந்தூரில் ஒரு மேல் நிலைப் பள்ளியும் வள்ளியம்மை பெயரில் கட்டப்படுள்ளது.
ஆனாலும் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால், சில தமிழ் தலைவர்களால், 1998 ல் தபால் தலை ஒன்று அவள் நினவாக வெளியிடும்படி கேட்கப்பட்ட போது, அது நிராகரிக்கப்பட்டு,பின்னர் 31.12.2008 ல் வெளியிடப்பட்டது என்பது தான்.
காந்திக்கே விடுதலை உணர்வை ஊட்டிய தமிழிச்சி ஒருத்தி மறக்கப்பட்டது என்னவோ மனதை உறுத்தவே செய்கிறது. இவள் தான் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர் துறந்த, முதல் பெண் போராளி என சொல்லலாம்.
உங்கள் படிக்கும் ஆர்வத்தை பார்த்த பின், மற்றொரு வீராங்கனையுடன் சந்திக்கிறேன்.
சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஈழ போரின் இறுதிநாட்கள்” என்ற இந்த புத்தகம் களத்தில் கடைசிவரை நின்ற பெண் போராளி வெற்றிச்செல்வி அவர்கள் எழுதியுள்ளார்.
» கற்பழிக்க முயன்றவரின் ஆணுறுப்பை அறுத்து போலீசிடம் கொடுத்த பெண்
» பணம், காதலுக்காக பாகிஸ்தானுக்கு 'போட்டுக் கொடுத்த' இந்திய பெண் அதிகாரி
» பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்..................நம் நாட்டின் வீர மங்கை வேலுநாச்சியார்
» காந்தியைக் காத்த தமிழ்ப்பெண்-தில்லையாடி வள்ளியம்மை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum