TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

4 posters

Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by மாலதி Wed Oct 10, 2012 9:56 am

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

***********************************************
கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 553507_355087801252966_101918152_n
அரசியலிலும், திரைப்படத்துறையிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்த கருணாநிதிக்கும், எம்.ஜி. ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

"எம்.ஜி.ஆர். அமைச்சராக விரும்பினார். சினிமாவில் நடிப்பதை
நிறுத்திக்கொண்டால், அமைச்சராகலாம் என்று நான் சொன்னேன். அதனால்
எம்.ஜி.ஆருக்கு என் மீது வருத்தம் ஏற்பட்டது" என்று பின்னர் கருணாநிதி
தெரிவித்தார்.

எப்படி இருப்பினும், இந்த கருத்து வேற்றுமை, தி.மு. கழகத்தைப் பிளவுபடுத்தும் அளவுக்கு வளர்ந்தது.

இதையடுத்து 1972 அக்டோபர் 8 ந்தேதி திருக்கழுக்குன்றத்திலும், பின்னர்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலும் நடை பெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர்.
பேசும்போது, தி.மு.கழகத்தில் ஏற்பட்டிருந்த பிளவு பகிரங்கமாக வெடித்தது.
எம்.ஜி.ஆர். பேசுகையில் கூறியதாவது:-

"எம்.ஜி.ஆர். என்றால்
தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர். என்று சொன்னேன். உடனே ஒருவர்,
"நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?" என்று கேட்டார். நான் சொல்கிறேன்.
நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. முன்பொரு முறை காமராஜர்
அவர்களை "என் தலைவர்" என்றும், அண்ணா அவர்களை "வழிகாட்டி" என்றும்
சொன்னேன். தலைவர்கள் பலர் இருப்பார்கள்.

ஆனால் கட்சிகளுக்கு
கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா
அவர்கள்தான் தி.மு.க. வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான்
வழிகாட்டி. கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே
தவிர, தலைவர்களைத் தேடிப்போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய
நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.

நான்
யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும்
இல்லை. தேர்தல் நேரத்தில், "தி.மு.க.வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன
காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று
சொன்னேனே. அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்கவேண்டும் என்று
விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?

மந்திரிகள்,
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று
சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின்
சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப்
பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்;

சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக்காட்டு. மாவட்டச்
செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் பதவிகளில்
இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால்
கணக்குக் காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும்
தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க
முடியாதவர்கள் மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால்
தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்
நிறுத்தி தூக்கி எறிவோம்."என் எம்.ஜி.ஆர். பேசினார்.

இதுதான் அ தி மு க வுக்கு அச்சாரம் போட்ட ஸ்பீச்!!


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by மாலதி Wed Oct 10, 2012 9:57 am

தி. மு. க. விலிருந்து அ தி மு க உருவான பின்னணி ரிப்போர்ட் - 2
********************************************
கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 60265_355480224547057_205131466_n
தி.மு.கழகத்தினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும். தங்கள் கை சுத்தமானது
என்பதை நிரூபிக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆர். பேசியது, தி.மு.கழகத்தில்
பெரிய புயலை உண்டாக்கியது.

தி.மு.க. செயற்குழுவில் உள்ள 31
உறுப்பினர்களில் 26 பேர், "எம்.ஜி.ஆர். மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்" என்ற மனுவில் கையெழுத்திட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம்
கொடுத்தனர்.

மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கோரிக்கையை
வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டும்,
அதுவரை தி.மு.க. பொருளாளர் பொறுப்பிலிருந்தும், சாதாரண உறுப்பினர்
பொறுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாகத் தெரிவித்தும், பொதுச்செயலாளர்
நெடுஞ்செழியன் அக்டோபர் 9ந்தேதி கடிதம் அனுப்பினார்.

அந்த
கடிதத்தில்””"கழகத்தின் முன்னணித் தோழர்களில் ஒருவராகவும், கழகப் பொருளாளர்
என்ற பொறுப்பிலும் உள்ள தாங்கள் அண்மைக் காலமாகக் கழகக் கட்டுப்பாடு
ஒழுங்குமுறைகளை மீறியும், கழகத் தோழர்களிடையே பிளவு உருவாக்கும் முறையிலும்
கழகத்தின் கண்ணியத்துக்குப் பொதுமக்களிடையே இழுக்கு ஏற்படும் வகையிலும்,
கழகத்தின் ஒழுங்கு முறை குலையும் வகையிலும் தாங்கள் செயல்படுவதும், பேசி
வருவதும் கழகத்தின் பல்வேறு பொறுப்பிலுள்ள தோழர்களால் தலைமைக் கழகத்தின்
கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

கழகத் தலைமைச் செயற்குழு
பொதுக்குழு கூட்டங்களில் முறைப்படி பேசி விவாதிக்க வேண்டிய கருத்துக்களைத்
தாங்கள் வெளிப்படையாகப் பேசுவதுடன், அவை கழகத்திற்கு எதிரானதும், ஊறு
செய்யக்கூடியதுமான வகையில் இதழ்களில் வெளிவரும் நிலைமைகளையும் உருவாக்கி
வருகிறீர்கள்.

எல்லா இதழ்களிலும் பரவலாக நாள்தோறும்
வெளியிடப்படும் தங்கள் முறைகேடான பேச்சுக்கள் தொடர்ந்து வெளிவந்து
கொண்டிருப்பது, தலைமைக் கழகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது.

மதுவிலக்குக் கொள்கை பற்றி கோவையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு ஏகமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

இதனைத் தாங்களும் உடனிருந்து நிறைவேற்றியிருப்பதுடன், அந்தத்
தீர்மானத்துக்கு ஆதரவாகத் தாங்கள் விளக்கமாகப் பொதுக்குழுவில்
பேசியுமிருக்கிறீர்கள்.

இந்தத் தீர்மானத்தின் பேரில் கழகமும்,
கழக அரசும் மேற்கொண்ட செயல் முறைகளைத் தாங்கள் இத்தனை நாள் கழித்து
பகிரங்கமாகக் கண்டித்துப் பேசியிருக்கிறீர்கள்.

இது, கழகக்
கட்டுப்பாட்டையும், பொதுக்குழுவின் முடிவின் பேரில் கழகமும், கழக அரசும்
மேற்கொண்ட செயல் முறைகளை அவதூறாகப் பேசுவதாகவும் அமைவதாகத் தலைமைக் கழகம்
கருதுகிறது.

மேலும் 8.10.1972 அன்று சென்னை ஆயிரம்விளக்குப்
பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கழகத்தின் பொதுக்குழுக்
கூட்டத்தில் தாங்கள் ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்போவதாகவும், அந்தத்
தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேறாமல் போகுமானால் அந்தத் தீர்மானத்தைப்
பொதுமக்கள் முன்னிலையில் வைத்து, மூலைக்கு மூலைப் பிரசாரம் செய்து வெளியில்
ஆதரவு திரட்டப் போவதாகவும் பேசியிருக்கிறீர்கள்.

பொதுக்குழுவில்
எந்த ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கும் அதன் உறுப்பினரான யாருக்கும்
முழு உரிமை உண்டு. ஆனால், அப்படிக் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேறாமல்
போகுமானால் பொதுக் குழுவின் முடிவுக்குக் கட்டுப்படவோ, அடங்கவோ மறுத்து அதே
தீர்மானத்தை பொதுமக்களிடையில் அதாவது கழகத்துக்கு வெளியே வலியுறுத்துவேன்
ஆதரவு தேடுவேன் என்று பகிரங்கமாகத் தங்களைப்போன்ற முக்கியப் பொறுப்பில்
உள்ள தோழர் அறிவிப்பது கழகக் கட்டுப்பாடு ஒழுங்கு முறை கழகம் வளர்க்க
விரும்பும் ஜனநாயக அடிப்படை ஆகியவைகளைப் புறக்கணிக்கத் துணிந்துவிட்ட
செயலாகவே கருதவேண்டி யிருக்கிறது.

மேலும் இவைபோன்று அடிக்கடித்
தங்களால் கழக நன்மைகளுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசப்பட்டு வரும்
கருத்துக்கள் கழகத் தோழர்களிடையில் கட்டுப்பாடு இன்மையும்,
பொதுமக்களிடையில் கழகத்தைப் பற்றி தவறான இழிவான எண்ணமும் உருவாக ஏதுவாகிறது
என்று தலைமைக் கழகம் கருதுகிறது.

எனவே, இவைபோன்ற
காரணங்களாலும், கழகத் தோழர்களிடையே குழப்பமும், பொதுமக்களிடையே கழகத்திற்கு
இழுக்கும் நேர்வதைத் தடுக்கும் வகையில் தங்களை இன்று முதல் கழகப்
பொருளாளர் பொறுப்பு மற்றும் சாதாரண உறுப்பினர் பொறுப்பு உட்படக் கழகத்தின்
எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக விலக்கி (சஸ்பெண்டு)
வைப்பதுடன், மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே தங்களை ஏன்
அறவே கழகத்திலிருந்து நீக்கக்கூடாது என்பதற்கும் இந்தக் கடிதம் கிடைத்த 15
(பதினைந்து) நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்குத் தாங்கள் தெரிவிக்க
விரும்பும் விளக்க சமாதானங்களைத் தெரிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்
கொள்ளப்படுகிறீர்கள்."என்று கடிதத்தில் நெடுஞ்செழியன் கூறியிருந்தார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by KAPILS Wed Oct 10, 2012 12:21 pm

ஆச்சரியம் ஆச்சரியம்
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by மாலதி Wed Oct 10, 2012 1:04 pm

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 135634 கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 135634 கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 135634


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by மாலதி Thu Oct 11, 2012 9:15 am

தி. மு. க. விலிருந்து அ தி மு க உருவான பின்னணி ரிப்போர்ட் - 3
**************************
கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 564945_355844014510678_1611266046_n

எம்.ஜி.ஆர். மீது தி.மு.க. மேலிடம் நடவடிக்கை எடுத்தது, தமிழ்நாட்டில்
பெரும்பரபரப்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர்.

தமிழ்நாடெங்கும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தி.மு.க. மேலிடம் நடவடிக்கை
எடுத்தது பற்றி எம்.ஜி.ஆர். ஒரு அறிக்கை விடுத்தார். அதில் அவர் ,””

தி.மு.கழகத்திலிருந்து என்னை விலக்கி வைத்திருப்பதாக பத்திரிகையாளர்கள்
மூலம் அறிந்தேன். எனக்கு தெரிவிக்கப்பட்ட செய்தியிலிருந்து 26 பேர்
கையெழுத்திட்ட வேண்டுகோளின்படி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கழகம், 26 பேருடனோ, சில
அமைச்சர்களுடனோ முடிந்துவிடவில்லை. லட்சோபலட்சம் தொண்டர்களைக் கொண்டது.

அந்த தொண்டர்களில் நானும் ஒருவன். அண்ணாவின் இதயத்தில் இடம் பெற்ற தொண்டன். அண்ணாவின் லட்சியங்களை காக்க பாடுபடும் தொண்டன்.
பாடுபடப்போகும் தொண்டன்.

எனவே, இந்த அறிவிப்பைக் கண்டு தமிழகம் எங்கும் உள்ள கழகத் தொண்டர்கள்,
எம்.ஜி.ஆர். மன்ற தோழர்கள் அனைவரும் மனம் பதறாமல், அமைதி காத்து
எப்படிப்பட்ட துன்பத்தில் தள்ளப்பட்டாலும், சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டாலும்
பேரறிஞர் அண்ணாவின் "எதையும் தாங்கும் இதய"த்தைக் கொண்டு, கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு இவற்றின் கட்டுக்கோப்பில் அமரர் அண்ணாவின் வழியில் என்றும்
போல் தொடர்ந்து நாட்டுக்கு உழைப்போம் என்ற உறுதியை இன்னும் வலுவாகக்
கொண்டு, அண்ணாவின் புகழுக்கு களங்கம் ஏற்படாமல் செயல்படுவோம்.

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கழகம், சர்வாதி காரத்திற்குள் சிக்கி அழியாமல் பாதுகாத்து ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்று விடாது. உலை வாயை மூடலாம்; ஊர்
வாயை மூட முடியாது. இப்போது இதுதான் என் வேண்டுகோளும், அறிவிப்பும்."
என்று எம்.ஜி.ஆர். கூறி இருந்தார்..

தி.மு.கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டது பற்றி நாஞ்சில்
மனோகரன் ,””இந்தச் செய்தி கேட்டு, அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன்.
கழக தலைமைச் செயற்குழு கூட்டத்துக்கு 2 நாட்களே இருக்கும்போது, இப்படி
செய்தது அவசர முடிவாகும். செயற்குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தும்,
என்னிடம் யாரும் இதுபற்றி ஆலோசிக்கவில்லை.””
என்றார் . .


இந்த சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு 12.10.1972 அன்று கூடி, இந்தப்
பிரச்சினை பற்றி ஆராய்ந்தது. கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம்
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி,””"செயற்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர்.
மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆதரித்து பேசினார்கள். இடையில், நண்பர்
மனோகரன் குறுக்கிட்டு, பொதுக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசியது தவறுதான்
என்றும், அதற்காக எம்.ஜி.ஆர். வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக இருந்தால்,
மேல் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பற்றி செயற்குழு ஆலோசிக்க வேண்டும்
என்றும் கருத்து தெரிவித்தார்.

கழகத் தலைவரும், பொதுச்செயலாளரும்
அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, எம்.ஜி.ஆர். வருத்தம் தெரிவிப்பாரேயானால்,
செயற்குழு மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறினார்கள்.


பொதுக்குழுவில் பேசவேண்டிய விஷயத்தை பொது மேடையில் பேசியதும், கழகத்தின்
எல்லா மட்டத்தில் உள்ள தோழர்களையும் இழிவுபடுத்தி பேசியதும், பொதுக்குழு
தன் தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால், பொதுமக்களிடம் போவேன் என்று
பேசியதும், கழகத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகும்.

அதை
எம்.ஜி.ஆர். தவறு என்று உணர்ந்து வருத்தம் தெரிவித்தால் மேல் நடவடிக்கையை
விட்டு விடலாம் என்றும், எம்.ஜி.ஆருக்கு ஒருநாள் அவகாசம் கொடுப்பது நலம்
என்றும், அந்த முயற்சியில் நண்பர் மனோகரனே ஈடுபடுவதாகச் சொல்வதால்,
செயற்குழு உறுப்பினர்கள் அதை ஏற்கவேண்டும் என்றும் கழகத் தலைவர்
கேட்டுக்கொண்டார்.

இதற்கு செயற்குழு இசைவு தந்தது. எம்.ஜி.ஆர்.
அவர்களின் பதிலைப் பொறுத்து, அந்த பிரச்சினை விவாதிக்கப்படும்." என்று
கருணாநிதி கூறினார்..

இதன் பின்னர் நாஞ்சில் மனோகரனும், முரசொலி
மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்து, செயற்குழு தீர்மானத்தை தெரிவித்தனர். "நான்
பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது. நடந்தது நடந்ததுதான்.
மறுபரிசீலனைக்கு இடம் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையடுத்து எம்.ஜி.ஆரை நிருபர்கள் பேட்டி கண்ட போது,””"சொத்துக்கணக்கு
பற்றி பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்.
தவறு செய்தவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தவறை திருத்திக் கொள்ள
வேண்டும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by மாலதி Sun Oct 14, 2012 6:51 am

தி. மு. க. விலிருந்து அ தி மு க உருவான பின்னணி ரிப்போர்ட் - 5
**************************

தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா?
அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள்
எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை.

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். 1972 அக்டோபர் 18ந் தேதி இக்கட்சி உதயமாயிற்று.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை
உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள்
தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர்
நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

தி.மு.க. கொடி போலவே கறுப்பு, சிவப்பு நிறமுள்ள கொடியில், அண்ணாவின் படம்
பொறிக்கப்படும் என்றார், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடக்க விழா பொதுக்கூட்டம்
சென்னை கடற்கரையில் நடந்தது.

அக்கூட்டத்தில், கட்சியின்
அமைப்பாளர் கே.ஏ.கிருஷ்ணசாமி பேசுகையில், "13 நாட்களில் அ.தி.மு.க.வுக்கு 6
ஆயிரம் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 லட்சத்துக்கு மேற்பட்டோர்,
உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்" என்று கூறினார். அவர் மேலும்
பேசுகையில், "எம்.ஜி.ஆர். இதுவரை "புரட்சி நடிகர்" என்று அழைக்கப்பட்டு
வந்தார். அது கருணாநிதி வழங்கிய பட்டமாகும். இனி எம்.ஜி.ஆர்.
"புரட்சித்தலைவர்" என்று அழைக்கப்படுவார்" என்று அறிவித்தார்.


இக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசுகையில், "அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள்
அடங்கிய பட்டியல் விரைவில் கவர்னரிடம் கொடுக்கப்படும்" என்று
குறிப்பிட்டார்.

பின்னர் எம்.ஜி.ஆர். புதுக்கட்சி தொடங்கி உள்ளது
பற்றி, முதல் அமைச்சர் கருணாநிதியிடம் நிருபர்கள் பேட்டி கண்ட
போது,நிருபர்கள் கேட்ட கேள்விகளும் கருணாநிதி அளித்த பதில்களும் சில் இதோ:-


கேள்வி:- புதுக்கட்சியில் போய் சேருகிறவர்கள் மீது நடவடிக்கை ஏதும் உண்டா?

பதில்:- அப்படி போய் சேருகிறவர்கள் உண்மையான தி.மு.கழகத்தினராக இருக்கமாட்டார்கள்.

கேள்வி:- கழகத் தலைவர் என்ற முறையில் உங்களிடம் கேட்கிறோம். இந்த போட்டி
கட்சியினால் தி.மு.கழகத்திற்கு பலவீனம் எதுவும் உண்டாகுமா?


பதில்:- அப்படி எண்ணம் எள்ளளவும் கிடையாது. அண்ணா யார் யாரை உட்கார
வைத்துக்கொண்டு ஒரு மாத காலம் விடிய விடிய பேசி கழகத்தை ஆரம்பித்தாரோ,
அந்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணாவை சுற்றி உட்கார்ந்திருந்த நாங்கள்
இப்பொழுதும் அண்ணா உருவாக்கிய கழகக் கொள்கைகளின் காவலர்களாக இருக்கிறோம்.

லட்சோப லட்சம் தொண்டர்கள் இந்த கழகத்தைக்காக்க என்றென்றும் தயாராக
இருக்கிறார்கள். எங்களிடம் சொத்துக்கணக்கு கேட்டவர் 1969 க்கு மட்டும்
சட்டசபையில் கணக்கு வைத்துவிட்டு, அதற்கு பிறகு சட்டசபையில் எந்த கணக்கும்
வைக்கவில்லை.

சுருக்கமாக சொல்லப்போனால் எம்.ஜி.ஆர்.
தி.மு.கழகத்தில் இருந்து கணக்கு தீர்த்துக்கொள்ள விரும்பினாரே தவிர, கணக்கு
பார்க்க விரும்பவில்லை.

உலகத்தில் தன்னைத்தவிர தூய்மையானவர்களே
கிடையாது என்றும், 18 ஆயிரம் கிளைக்கழக செயலாளர்களும், தொண்டர்களும் தூய்மை
அற்றவர்கள் என்றும் குற்றம் சாட்டுவது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிற
காரியம் ஆகும்.

>>என்று கருணாநிதி கூறினார்.


மேலும் சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் தி.மு.க. பொதுச்செயலாளரும்,
அமைச்சருமான நெடுஞ்செழியன் பேசுகையில்,””"இன்னும் மூன்று அல்லது நான்கு
மாதங்களில் அ.தி.மு.க. கரைந்து போய்விடும். அதற்கு இப்போது இருக்கும்
சக்தி, ஒரு மாயத்தோற்றம்தான். ஒரு தனி மனிதரின் கவர்ச்சியே, அ.தி.மு.க.வின்
அரசியல் பலம். தி.மு.க. அரசின் மீது எம். ஜி.ஆர். கூறிய குற்றச்சாட்டுகள்
ஆதாரமற்றவை."

என நெடுஞ்செழியன் கூறினார்.

இதற்கிடையில் "அண்ணா தி.மு.க" என்ற பெயரில் கட்சி அமைக்கப்பட்டதை ஆட்சேபித்து, அண்ணாவின் மனைவி ராணி அம்மாள் வழக்குத் தொடர்ந்தார்.

கட்சியின் பெயரில் அண்ணாவின் பெயர் இருக்கக்கூடாது. கட்சிக்கொடியில்
அண்ணாவின் படம் இருக்கக்கூடாது' என்று கோர்ட்டில் அவர் மனு தாக்கல்
செய்தார்.

பிறகு, இந்த வழக்கை வாபஸ் பெற்றார்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by மாலதி Tue Oct 16, 2012 3:28 pm

தி. மு. க. விலிருந்து அ தி மு க உருவான பின்னணி ரிப்போர்ட் - 6
**************************
கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 12760_357979917630421_324503920_n

அ தி மு க. ஆரம்பித்த நாள் முதல் கருணாநிதிக்கு இரவுத் தூக்கம் தொலைந்து
போயிற்று..தினமும் தன் ஆதரவாளர்களுடன் எம் ஜி ஆர் போக்கு குறித்து விடிய
விடிய ஆலோசனை நடத்தினார்.

அதே சமயம் எம் ஜி ஆர் உலகம் சுற்றும்
வாலிபன் படத்தில் பிசியாக இருந்த படி புது அரசியல் கட்சியான் அ. தி. மு. க.
ஆதரவாளர்களுடன் டிஸ்கஷன் என்று படு பிசியாக இருந்தார்

கூடவே
ரகசியமாய் தன் பர்சனல் ஸோர்ஸ் மூலம் கருணாநிதி அமைச்சரைவையினரின் அத்து
மீறல் மற்றும் சொத்து விவரங்களை திரட்டினார் எம்.ஜி. ஆர்.

இதைத்
தொடர்ந்து .அதை தி மு க வினரின் ஊழல் பட்டியல் என்ற தலைப்பிட்டு முதலில்,
நவம்பர் 4 ந்தேதி இந்த புகார் மனுவாக எம்.ஜி.ஆரும், கம்யூனிஸ்டு தலைவர்
எம்.கல்யாணசுந்தரமும் சென்னையில் கவர்னர் கே.கே.ஷாவிடம் கொண்டு போய்க்
கொடுத்தனர்.

அதை உடனே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி
கேட்டுக்கொண்டார்கள்.ஆனால் "அரசியல் சட்டப்படி, இந்த மனுவை முதல்
அமைச்சருக்கு அனுப்பி அவர் கருத்தையும் அறிந்தபிறகுதான் ஜனாதிபதிக்கு
அனுப்ப இயலும்" என்று கவர்னர் கூறினார். இதனால் புகார் மனுவை திரும்பப்
பெற்றுக்கொண்டு, எம்.ஜி.ஆரும், கல்யாணசுந்தரமும் வந்துவிட்டனர்.


பின்னர் மனுவை ஜனாதிபதியிடம் நேரில் கொடுக்க முடிவு செய்து, டெல்லிக்குச்
சென்றார்கள். டெல்லியில் நவம்பர் 7 ந்தேதி காலை 7.45 மணிக்கு ஜனாதிபதி
வி.வி.கிரியை எம்.ஜி.ஆர். சந்தித்தார்.

அவருடன் பாராளுமன்ற
உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோர்
சென்றிருந்தனர். ஜனாதிபதியுடன் இவர்கள் 15 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.
பிறகு நிருபர்ளைச் சந்தித்த எம்.ஜி.ஆர்..,"தமிழ்நாட்டு மந்திரிகள் மீது
தனிப்பட்ட முறையிலும், மொத்தமாகவும், மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மீதும்
ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவை ஜனாதிபதியிடம் கொடுத்தேன். மனு மீது
உடனடியாக நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்யும்படியும், ஆட்சியில்
இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட "ரிக்கார்டு"களை திருத்தாமல் தடுக்க உடனடி
நடவடிக்கை அவசியம் என்று ஜனாதிபதியிடம் நான் கேட்டுக்கொண்டேன்.””என்று
எம்.ஜி.ஆர். கூறினார்...

பிறகு நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டார்கள்.

நிருபர்:- தி.மு.க. மந்திரிசபை கவிழ்ந்துவிடுமா?

எம்.ஜி.ஆர்:- கவிழ்ந்தால் ஆச்சரியமில்லை.

நிருபர்:- தமிழ்நாட்டில் இப்போது நிலைமை எவ்வாறு உள்ளது?

எம்.ஜி.ஆர்:- என் கட்சிக்காரர்கள் தாக்கப்படுகிறார்கள். பீதி நிலைமை நீடிக்கிறது.

நிருபர்:- தமிழ்நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு?

எம்.ஜி.ஆர்:- 1,000க்கு 999 பேர் என் பக்கம். ஒருவர் தி.மு.க. பக்கம்.

நிருபர்:_ இவ்வளவு பலம் பொருந்திய நீங்கள் ஏன் அவர்கள் (தி.மு.க.) தாக்குவதாக புகார் செய்கிறீர்கள்?

எம்.ஜி.ஆர்:- அந்த 1,000 பேரில் ஒருவர், ஆட்களுடன் வந்து தாக்குகிறார்கள்.

நிருபர்:- மதுரை தி.மு.க. மாநாட்டில் நீங்கள் மக்களைப் பார்த்து,
"தி.மு.க.வில் ஊழல் இருக்கிறதா?" என்று கேட்டதற்கு, "ஊழல் இல்லை" என்று
பதில் அளித்தார்களே. இப்போது திடீர் என்று எப்படி ஊழல் வந்தது?


எம்.ஜி.ஆர்:- மந்திரிகள் மீது ஊழல் உண்டா என்று கேட்டதற்கு மக்கள் சும்மா
இருந்தார்கள். "என்னைப்போன்றவர்கள் மீது ஊழல் உண்டா?" என்று கேட்டதற்கு,
"இல்லை" என்று பதில் சொன்னார்கள்.

நிருபர்:- பொதுக்குழுவில் காட்டப்படவேண்டிய குற்றச்சாட்டை பொது மேடையில் பேசியது, கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல்தானே?

எம்.ஜி.ஆர்:- என்னை பொதுக்குழுவிற்கு வரவிடாமல் அவர்கள் தடுக்கப்போவதாக முன்னரே அறிந்து, நான் முந்திக்கொண்டேன்.

நிருபர்:- தங்களிடம் நிறைய கறுப்புப்பணம் இருப்பதாக கேள்விப்படுகிறோமே?

எம்.ஜி.ஆர்:- இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய வருமான விவரம்,
வருமானவரி அதிகாரிகளிடம் உள் ளது. நான் தற்போது சர்க்காருக்கு கடனாளியாக
இருக்கிறேன்.

நிருபர்:- உங்கள் கட்சிக்கு வருபவர்கள், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதுகிறீர்களா?

எம்.ஜி.ஆர்:_ எனது கட்சியில், சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள
ஊழியர்கள்தான் பெரும் அளவில் இருக்கிறார்கள். எனது கட்சிக்கு வந்துள்ள
தி.மு.க. தலைவர்கள், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள். இதை மக்களிடம் நாங்கள்
நிரூபிப்போம். அவர்கள் கட்சிக்கு வரும்போதே, அவர்களது சொத்து பற்றியும்,
வருமானம் பற்றியும் எங்களுக்கு தெரியும். ஒரு வருடம் கழித்து மீண்டும்
அவர்களது சொத்துக்களை கணக்கிட்டு அதிக சொத்து சேர்த்தார்களா, இல்லையா
என்பதை கண்டுபிடிப்போம்.

நிருபர்:- நீதி விசாரணை நடந்தால், அந்த விசாரணையில் உங்களையும் ஈடுபடுத்திக் கொள்வீர்களா?

எம்.ஜி.ஆர்:- என் கட்சியில் சேருவதின் மூலம், யாரும் விசாரணையில் இருந்து
தப்ப முடியாது. மந்திரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் பங்கு
கொண்டயாராக இருந்தாலும் நான் உள்பட விசாரணையை சந்திக்கத்தான் வேண்டும்.

நிருபர்:- நீங்கள் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டீர்களா?

எம்.ஜி.ஆர்:- அது நான் விரும்பாத பதவி. நான் விரும்பி இருந்தால், அண்ணா
காலத்திலேயே மந்திரி ஆகி இருப்பேன். மந்திரி பதவியை நான் ஏற்க
மறுத்ததால்தான், மந்திரி பதவிக்குரிய அந்தஸ்து கொண்ட சிறுசேமிப்பு
துணைத்தலைவர் பதவியை எனக்கு கொடுத்தார்."

மேற்கண்டவாறு எம்.ஜி.ஆர். பதில் அளித்தார்...


பிறகு டெல்லியிலிருந்து எம்.ஜி.ஆர். மாலையே விமானம் மூலம் சென்னை
திரும்பினார். சென்னையிலும் அவரை சூழ்ந்துக் கொண்ட
நிருபர்களிடம்,””"டெல்லியில்
ஜனாதிபதியைச் சந்தித்து மனு கொடுத்தேன். அவர் பதில் கொடுப்பதற்கு கால
நிர்ணயம் எதையும் கோரவில்லை. அப்படி கேட்பது முறையானது அல்ல. என்னுடைய
கட்சியினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.

அதை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக, வருகிற 10ந்தேதி கவர்னர்
மாளிகைக்கு ஊர்வலமாகச் செல்வோம். என் கட்சிக்காரர்கள் மீது நடக்கும் அடக்கு
முறையைத் தடுக்க கவர்னர் தவறினால், பிறகு மாநிலம் முழுவதற்கும்
"அர்த்தால்" நடத்துவோம்." என்று மட்டும். கூறினார்.....


இதற்கிடையில் தமிழ்நாடு வலதுசாரி கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்
எம்.கல்யாணசுந்தரம் ஜனாதிபதி கிரியை சந்தித்து, தமிழக அரசு பற்றிய
புகார்கள் அடங்கிய மனு ஒன்றை கொடுத்தார். புகார் பற்றிய விசாரணை
நடத்தப்படவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரும்,
எம்.கல்யாணசுந்தரமும் கொடுத்த புகார் மனுக்களை பிரதமர் இந்திரா காந்திக்கு
ஜனாதிபதி அனுப்பி வைத்தார்.

அந்த புகார் மனுக்களை முதல் அமைச்சர்
கருணாநிதிக்கு இந்திரா காந்தி அனுப்பி, அதற்கு விளக்கம் கேட்டிருந்தார்.
மந்திரிசபை மீது எம்.ஜி.ஆர். 32 புகார்களையும், கல்யாணசுந்தரம் 20
புகார்களையும் கூறி இருந்தனர். கருணாநிதி பதில் ஒவ்வொரு புகாருக்கும்
கருணாநிதி பதில் அளித்து, "அவை பொய்யானவை ஆதாரம் அற்றவை" என்று மறுத்து
இந்திரா காந்திக்கு பதில் எழுதினார். புகார்கள் 67 பக்கமும், அதற்கான
பதில்கள் 286 பக்கமும் இருந்தன.

இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி ,
அன்புள்ள பிரதம மந்திரிக்கு, 15.11.1972ந்தேதி தாங்கள் எனக்கு எழுதிய
கடிதத்தின்படி, என் மீதும், என் மந்திரிசபையில் உள்ள சிலர் மீதும் மற்றும்
சிலர் மீதும் எம்.ஜி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.யும், எம்.கல்யாணசுந்தரம்
எம்.பி.யும் கொடுத்திருந்த புகார் மனுவை எனக்கு அனுப்பி இருந்தீர்கள்.

பிரதமர் என்ற முறையில், அந்த புகார் மனுவுக்கான பதிலை என்னிடம் நீங்கள் கேட்டதை சரியான நடவடிக்கை என்று ஒப்புக்கொள்கிறேன்.

இத்துடன் புகார் மனுவுக்கான விரிவான பதிலை அனுப்பி உள்ளேன். அதில் உள்ள
சில அடிப்படையான, முக்கிய கருத்துக்களை இந்த கடிதத்தில் கூற
விரும்புகிறேன்.

விரோதத்தின் காரணமாக புகார் மனுவில்
கூறப்பட்டிருந்த வெறுப்பூட்டக்கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பதில்
எழுதுகையில் நான் எவ்வளவு வருந்தியிருப்பேன் என்பதை இங்கு விளக்கத் தேவை
இல்லை.

என் பதிலைப் படித்த பிறகு, இந்த குற்றச்சாட்டுகள்
கொஞ்சமும் ஆதாரமற்றவை என்பதை நீங்களும் உணர்வீர்கள். தமிழக மந்திரிசபை மீது
விசாரணை நடத்த ஒரு விசாரணை கமிட்டி நியமிக்க வேண்டும் என்று,
மனுக்கொடுத்தவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

நம்முடைய அரசியல் சட்டத்தின்படி, நமது ஆட்சி முறை, சுதந்திரமாக இயங்கும் மாநிலங்களைக்கொண்ட "கூட்டாட்சி" ஆகும்.

மாநில மந்திரிசபை மீது விசாரணை நடத்த மத்திய அரசாங்கத்திற்கு உரிமை உண்டு என்று நம் அரசியல் சட்டத்தின் எந்த விதியும் கூறவில்லை.

ஆகவே மாநில மந்திரிசபையின் மீது விசாரணை நடத்த மத்திய அரசாங்கம் ஒரு
விசாரணைக்குழுவை அமைக்குமேயானால், அது நம் அரசியல் சட்டத்தையும், அரசாங்க
அமைப்புகளையும் அழிப்பது போன்றதாகும்.

இருந்தபோதிலும் மனுவில்
கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவேண்டியது என் கடமையாகும்.
ஆகவே புகார் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும், அதற்கான என்
விரிவான பதிலையும் இத்துடன் அனுப்பி உள்ளேன்.””என கருணாநிதி தன்
கடிதத்தில் கூறி இருந்தார்..

அத்துடன் புகார் பட்டியலையும், அதற்கான பதில்களையும் கருணாநிதி சட்டசபையிலும் தாக்கல் செய்தார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by Tamil Sun May 12, 2013 2:02 pm

நன்றி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by mmani Sun May 12, 2013 7:37 pm

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் 917304
பிரபாகரன் wrote:நன்றி
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம் Empty Re: கணக்கு கேட்ட எம் ஜி ஆர் @ கழகம் பிளந்த தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மார்ச் 6; திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியைக்கைப்பற்றிய தினம் இன்று.. (1967)
» தமிழ்நாட்டில் தினம் தினம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர்
» 'காதலர் தினம்' பற்றி தெரிந்தவர்களுக்கு 'தாய்மொழி தினம்' தெரியவில்லை
» எச்சரிக்கும் சர்வதேச அணு சக்திக் கழகம்! அலட்சியம் காட்டும் இந்திய அணு சக்தித் துறை!!
» தமிழகத்தில் கூடுதல் மின்வெட்டு ஏன்? மின் உற்பத்திக் கழகம் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum