Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வயிற்றுப்போக்கு நிற்க
Page 1 of 1
வயிற்றுப்போக்கு நிற்க
[You must be registered and logged in to see this image.]
1. மூலிகையின் பெயர் :- இலந்தை.
2. தாவரப்பெயர் :- ZIZYPHUS JUJUBA.
3. தாவரக்குடும்பம் :- RHAMANACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பட்டை. வேர்பட்டை பழம்ஆகியவை
5.
வளரியல்பு :- இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது.
இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன்
முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம்.
தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை.
சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.
இதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date
என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச்
சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம்
காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா
ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் A, B2, C, கால்சியம்,
பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன்
இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள்
:- இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும்.
வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை
மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி,
இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக்
குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.
இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன்
படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில்
பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய்
வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில்
காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.
இலந்தை இலை 1
பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள்
கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.
இலந்தைப்
பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர்
நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து
வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.
இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.
துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.
Re: வயிற்றுப்போக்கு நிற்க
[You must be registered and logged in to see this image.]
1. மூலிகையின் பெயர் :- அத்தி.
2. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE.
3. தாவரக்குடும்பம் :- MORACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.
5.
வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும்.
மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு மரவகை. அத்தி கல்க
மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச்
சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது அதனால் இதை காணாமல் பூப்
பூக்கும் கண்டு காய்காய்க்கும். என்ற விடுகதையிலும் சொல்வர்.
அடிமரத்திலும் மற்றும் கிழைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும்.
துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணையாகும்.
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதில் உள்ள முக்கிய வேதியப்
பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின்
மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும்,
பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும் உண்டு. விதை மற்றும் பதியம் மூலம்
இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
6. மருத்துவப்பயன்கள் :- அத்தியின்
பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும்
மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம்
பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு
இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும்.
இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால்
ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.
அத்திப்பால் 15 மில்லியுடன்
வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த
வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப்
பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.
அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.
முருங்கை
விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக
இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை
மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.
அத்திப்பட்டை,
நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5
கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை
கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.
அத்திப்
பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து
வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக்
காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம்,
வயிற்றுப்போக்கு தீரும்.
அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.
அத்திப்பழத்தை
அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு
பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு
சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு
சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண்
மலடும் அகலும்.
அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது
துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின்
நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும்.
தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும்.
தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து
வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு
நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல்
வனப்பு பெறும்.
இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50
மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண்
குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.
அத்தி
மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை
எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம்,
வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.
அத்திப்பிஞ்சை
பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம்,
குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில்
சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.
Re: வயிற்றுப்போக்கு நிற்க
[You must be registered and logged in to see this image.]
நுணா.
1. மூலிகையின் பெயர் -: நுணா.
2. தாவரப்பெயர் -MORINDA TINCTORIA.
3. தாவரக்குடும்பம் -: RUBIACEAE.
4. வேறு பெயர்கள் -: மஞ்சணத்தி, மஞ்சள் நீராட்டி என்பன.
5. இன வேறுபாடு -: வெண்நுணா. MORINDA CHITRIPOLIA
6.பயன்தரும் பாகங்கள் -: துளிர்,இலை, பழுப்பு, காய, பட்டை, வேர் ஆகியவை மரத்துவப் பயனுடையது.
7.
வளரியல்பு -: எல்லா வித நிலங்களிலும் வளர்க்கூடிய சிறுமரம். தமிழகமெங்கும்
வளர்கிறது.மா இலை போன்றும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு
கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும்
கருப்பு நிறப் பழங்களையும்உடைய மரம். சுமார் 15 அடி உயரம் வரை வளரும்.
மரத்தின் உடபுறம் மஞ்சள் வண்ணமாயிருக்கும். அதனால் மஞ்சணத்தி
என்றழைக்கப்பட்டது. பட்டைகள் தடிப்பாக இருக்கும். விதைகள் மூலம் இனப்
பெருக்கம் செய்யப்படுகிறது.
8. மருத்துவப் பயன்கள் -: வெப்பம்
தணிக்கும். வீக்கம் கரைக்கும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத்
தீர்க்கும். பசியைத் தூண்டும். தோல் நோயகளைக் குணமாக்கும். துணிகளுக்கு
நிறமூட்டும்.
‘ பட்டை கரப்பனொடு பாரச்சி லேஷ்மசுர
மொட்டிநின்ற புண்கிரந்தி யோட்டுங்காண்-மட்டலரை
யெந்து நுணாவி ளிலைமாந்தத் தீர்த்துநல்ல
காந்திதரு மேகமடுங் காண். ’
நுணாப் பட்டையானது கரப்பான்,கபசுரம் புண், கிரந்தி இவற்றையும், இலையானது மந்தம் மேகம் இவற்றையும் விலக்கும். ஒளியைத் தரும் என்க.
முறை
-: இதன் இலை நடுவிலிறுக்கின்ற ஈர்க்குகளை எடுத்து அதனுடன் துளசி,
கரிசிலாங்கண்ணி, மிளகு, சுக்கு முதலியவற்றைச் சேர்த்துக் கியாழமிட்டு
வடித்துக் குழந்தைகளின் வயது கேற்றபடி கால் அரை சங்கு அளவாக விட்டுக்
கொண்டு வர மாந்த பேதி நிற்கும். இதன் இலையை அரைத்துப் புண் சிரங்கு, ரணம்
இவற்றிற்கு வைத்துக் கட்ட ஆறும். இதன் இலையை இடுத்துப் பிழிந்து எடுத்துச்
சாற்றை இடுப்பு வலிக்குப் பூச நீங்கும்.
பூதகரப்பான் பட்டை,
பூவரசம் பட்டை, இசைப்பைக் கட்டி இவற்றை சமனெடையாகச் சுட்டுக் கரியாக்கி
நல்லெண்ணையில் குழைத்துக் கரப்பான் மேற்றடவ நீங்கும். நுணாக் காய்களை ஒரு
வீசை அளவிற்றுச் சேகரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் 10 பலம்
சோற்றுப்புக் கூட்டி ஒரு மட்பாண்டத்தில் போட்டு அடுபிலேற்றிச் சிறு தீயாக
எரித்து வருக்கவும், காய்கள் கரியான சமயம் கீழே இறக்கி ஆற வைத்து
அரைத்துச் சீசாவில் பத்திரப் படுத்துக. இதனைக் கொண்டு தந்த சுத்தி செய்து
வரப் பல்லரணை, பல்லாட்டம், ஈறுகளில் இரத்தம் சீழ் சொரிதல், பல் கூச்சம்
முதலியன குணமாகும்.
நுணா இலைச்சாறு ஒரு பங்கும், உந்தாமணி, நொச்சி,
பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒருபங்கு கலந்து 3,4 வேளை கொடுத்து வரச் சகல
மாந்தமும் தீரும்.
ஆறு மாதகுழந்தைக்கு -------------------- 50 சொட்டுக்கள்
ஒரு வயது முதல் இரண்டு வயது வரை 15 மி.லி.
மூன்று வயதிற்றகு மேல் ------------------ 30 மி.லி.
வெகு எளிதாகச் செரிக்கக் கூடிய உணவு கொடுக்க வேண்டும்.
நுணாத்தளிர்,
இலை, பழுப்பு சமன் சேர்த்து 35 கிராம் காட்டுச் சீரகத்துடன் ஒரு தேங்காய
அளவு அரைத்து, ஒரு லிட்டர் நல்லெண்ணையில் மெழுகு பதமுறக் காய்ச்சி
எண்ணெயைப் பிரித்து பக்குவப் படுத்தவும். கல்கத்தை சுண்டையளவு காலை, மாலை
பாலுடன் கலந்து கொடுக்க வயிற்றுக் கோளாறு தீரும். எண்ணெயை வெண்மேகத்தில்
தடவ 6-18 மாதங்களில் குணமாகும்.
நுணாக்காயையும், உப்பையும் சமன்
அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும்
பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும் , பல் வலி,பல்லரணை, வீக்கம்,
குரிதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும். சிறந்த பற்பொடியாகும்.
நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும்.
ஒரு
கிலோ நுணாப் பட்டையை இடித்து நான்கு படி நீரில் போட்டு அரைப்படியாகச்
சுண்டக் காய்ச்சவும். இத்துடன் அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும்.
இந்தக் கலவையில் ஒரு லிட்டர் எள் நெய் சேர்த்துச் சுண்டக் காயச்சி வடித்து
வைக்கவும். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி, தலைக்கும்
தேய்த்து அரைமணி நேரம் சென்று குளித்து வரவும். உடலில் தோன்றும் கழலைக்
கட்டிகள், அரையாப்பு கட்டிகள் மேகப்புண் ஆகியன குணமாகும். முறைசுரம்,
பித்தகுன்மம், படை நோய்களும் குணமாகும்.
நுணாப் பட்டையக் கொதி
நீரில் போட்டு ஊறவைத்தால் சாயம் இறங்கிவிடும். வெண்மையான துணிகளுக்குக்கு
காவி நிறம் ஊட்டலாம். இந்த காவி ஆடை உள் நோயைத் தீர்க்கும்.
வெண்நுணாவிலிருந்து
குளர் பானம் தயார் செய்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதை
சென்னையில் ஒரு நிறுவனம் செய்து வருகிறது. இந்தப்பனம் மருத்துவ குணம்
வாய்ந்தது.
Re: வயிற்றுப்போக்கு நிற்க
[You must be registered and logged in to see this image.]
அழிஞ்சில்.
1. மூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.
2. தாவரப்பெயர் -: ALANGIUM LAMARCKII,
3. தாவரக்குடும்பம் -: ALANGIACEAE.
4. இன வேறுபாடு -: கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்களையுடையவை வேறுபடும்.
5. பயன் தரும் பாகங்கள் -: வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை முதலியன.
6.
வளரியல்பு -: அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். (
15-20 அடி உயரம் )நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள
பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே
வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள்
உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக்
கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
7.
மருத்துவப் பயன்கள் -: நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு
பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல்
காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும்
மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி,
வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட
வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.
வேர்ப்பட்டையை
உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து
வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண்,
வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.
அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.
சிவப்பு
அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய்,
சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில்
குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.
அழிஞ்சில்
விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள்
குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.
‘ அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சூழாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்ட மெனவறிந்து தேர். ‘
அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும்.
‘ பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்க-ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம். ’
அங்கோலம்
என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால்
நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவை போம்.
அழிஞ்சில்வேர்
விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள்
நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை
செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில்
வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு
வர விரைவில் ஆறும்.
அழிஞ்சி வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும்,
குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம்,
விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய்,
விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு
பிடிப்புகளுக்கு நன்று.
அழிஞ்சில் வித்து-
‘ நிகருமிடை மெல்லியலே யித்தரையில்
அழிஞ்சில் வித்த தனாற் சாறுபல-மென்னவெனில்
மறையு மஞ்சனமு மாகும் சன வசியம்
அது செய்திடவே நன்று.’
நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும் உலக வசியமும் உண்டாகும்.
இந்த
இனத்தில் சாதாரண அழிஞ்சலுடன் கறுப்பு அழிஞ்சில் என்கிற ஓர் இனமுண்டு. காய்
இலை நரம்பு இவற்றில் கறுப்பு நிறமோடியிருக்கும். இதுவே விசேஷமானது. இதன்
உபயோகத்தைப் பற்றி அனுபவ சித்தியுள்ள பெரியாரிடமிருந்து கை முறையாக நேரில்
கற்றுணர வேண்டியது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள அவா இருப்பின் புலிப்பாணி
முதலான மஹரிஷிகளால் கூறப்பட்டுள்ள ஜாலகாண்டங்களில் கண்டறியவும். இதன்
வித்துத் தைலத்தைச் சர்ம ரோகத்திறுகும் பூச ஆறும். உள்ளுக்குக் கொடுக்க கப
வாதத்தையும் குட்டத்தையும் நீக்கும்.
அழிஞ்சில்.
1. மூலிகையின் பெயர் -: அழிஞ்சில்.
2. தாவரப்பெயர் -: ALANGIUM LAMARCKII,
3. தாவரக்குடும்பம் -: ALANGIACEAE.
4. இன வேறுபாடு -: கறுப்பு, வெள்ளை, சிவப்புப் பூக்களையுடையவை வேறுபடும்.
5. பயன் தரும் பாகங்கள் -: வேர்ப்பட்டை, இலை, மற்றும் விதை முதலியன.
6.
வளரியல்பு -: அழிஞ்சில் எல்லா நிலங்களிலும் வளர்க் கூடிய சிறு மரம். (
15-20 அடி உயரம் )நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம். செம்மஞ்சள் நிறமுள்ள
பழங்களையுடையது. தமிழகமெங்கும் புதர் காடுகளிலும் வேலிகளிலும், தானே
வளர்கிறது. இதில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை முதலிய பூக்களையுடைய மரங்கள்
உண்டு. இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக்
கருதப்படுகிறது. இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
7.
மருத்துவப் பயன்கள் -: நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு
பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல்
காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும்
மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி,
வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட
வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.
வேர்ப்பட்டையை
உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து
வரக் கடி விஷங்கள் (பாம்பு, எலி, வெறிநாய் ) தொழுநோய், கிரந்தி, புண்,
வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும்.
அழிஞ்சி இலையை அரைத்து 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி, குன்மம், கப நோய்கள் தீரும்.
சிவப்பு
அழிஞ்சில் வேர் பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு, சாதிக்காய்,
சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில்
குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும்.
அழிஞ்சில்
விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடவி வரத் தோல் நோய்கள்
குணமாகும். ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம்.
‘ அழிஞ்சிலது மாருதத்தை பையத்தைத் தாழ்ந்து
மொழிஞ்சபித் தத்தை யுயர்த்தும் - விழுஞ்சூழாங்
குட்டமெனு நோயகற்றுங் கூறுமருந் தெய்திடில்
திட்ட மெனவறிந்து தேர். ‘
அழிஞ்சில் மரமானது வாத கோபம், கப தோஷம், சீழ்வடியும் பெருநோய் இவற்றை நீக்கும். ஆனால் பித்தத்தை உபரி செய்யும்.
‘ பொல்லா விஷக்கடியும் போராடும் பேதிவகை
செல்லாக் சிரந்திரணம் சேர் நோய்க-ளெல்லாமும்
அங்கோலங் காணில் அரந்தை செய் நோய்களெல்லாம்
பொங்கோல மிட்டோடிப் போம். ’
அங்கோலம்
என்று சொல்லப்பட்ட அழிஞ்சி கபத்தினால் ஜீவ ஜந்துக்களின் பற்கடியால்
நேர்ந்த எல்லா விஷ தோஷங்களும், பேதி, கிரந்தி, வீரணம் ஆகியவை போம்.
அழிஞ்சில்வேர்
விழுதி வேர் இவற்றைச் சமனெடையாகக் கொண்டு சிறு துண்டாக நறுக்கி 5-6 நாள்
நிழலில் உலர்த்தி அடியில் பெரிய மட்கலத்தில் போட்டு வாய் மூடி ஏழு சீலை
செய்து முறைப்படி குழித்தைலமிறக்கவும். இத்தைலத்தை வடிகட்டி சீசாவில்
வைத்துக் கொண்டு புறை கொண்ட ரணத்தில் செலுத்திக் கட்டுக் கட்டிக் கொண்டு
வர விரைவில் ஆறும்.
அழிஞ்சி வேர்ப்பட்டைப் பொடியில் கசப்பும்,
குமட்டலும், காரமும் உண்டு. இரத்த அதிகாரம், கிருமி ரோகம், குட்டம்,
விரணம், தோல்ரோசம், சுரம், விடாச்சுரம், வயிற்று உப்பிசம், வயிற்று நோய்,
விசக்கடி முதலியன போக்கும். வேர்பட்டை சூரணம் குட்டம், வாதரோகம், மேகவாயு
பிடிப்புகளுக்கு நன்று.
அழிஞ்சில் வித்து-
‘ நிகருமிடை மெல்லியலே யித்தரையில்
அழிஞ்சில் வித்த தனாற் சாறுபல-மென்னவெனில்
மறையு மஞ்சனமு மாகும் சன வசியம்
அது செய்திடவே நன்று.’
நாளறிந்து காப்பிட்டு எடுத்த அழிஞ்சில் வித்தினால் அஞ்சன மறைப்பு மையும் உலக வசியமும் உண்டாகும்.
இந்த
இனத்தில் சாதாரண அழிஞ்சலுடன் கறுப்பு அழிஞ்சில் என்கிற ஓர் இனமுண்டு. காய்
இலை நரம்பு இவற்றில் கறுப்பு நிறமோடியிருக்கும். இதுவே விசேஷமானது. இதன்
உபயோகத்தைப் பற்றி அனுபவ சித்தியுள்ள பெரியாரிடமிருந்து கை முறையாக நேரில்
கற்றுணர வேண்டியது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள அவா இருப்பின் புலிப்பாணி
முதலான மஹரிஷிகளால் கூறப்பட்டுள்ள ஜாலகாண்டங்களில் கண்டறியவும். இதன்
வித்துத் தைலத்தைச் சர்ம ரோகத்திறுகும் பூச ஆறும். உள்ளுக்குக் கொடுக்க கப
வாதத்தையும் குட்டத்தையும் நீக்கும்.
Re: வயிற்றுப்போக்கு நிற்க
[You must be registered and logged in to see this image.]
நந்தியாவட்டை.
1) மூலிகையின் பெயர் -: நந்தியாவட்டை.
2) தாவரப் பெயர் -: ERVATAMIA CORONRIA.
3) தாவரக்குடும்பம் -: APOCYANACEAE.
4) வேறு பெயர்கள் -: Pinwheel flower, Moon beam, East Indian roseby, & crepe jasmine.
5) பயன் தரும் பாகங்கள் -: பூ மற்றும் வேர்.
6)
வளரியல்பு -: நந்தியாவட்டை ஒரு செடியினம்.இதன் இலைகள் எதிரடுக்கில்
அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக இருக்கும்.
மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. பூசைக்கு உரிய
மலர்களானதால் திருக்கோயில் நந்தவனங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும்
வளர்க்கப் படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளர்க்கூடியது. இதன்
பிறப்பிடம் வட இந்தியா. இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகுப் பூஞ்செடியாக
வளர்க்கிறார்கள். இது 3 - 5 அடி உயரங்கூட வளரும். இது முக்கியமாக கண்
நோயிக்கான மருந்தாகப் பயன் படும். இனப் பெருக்கம் விதைகள் மூலமும் கட்டிங்
மூலமும் செய்யப்படுகின்றது.
7) மருத்துவப்பயன்கள் -:
நந்தியாவட்ட வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக்
கடுப்பு நீங்கும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்
படுகின்றது.இதை நிறதிற்கும் பயன் படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார்
செய்கிறார்கள்.
நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1
பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயை மூழ்க ஊற்றி 20 நாள்கள் வெயிலில் வைத்து
வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல
வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.
‘காசம் படலங் கரும்பாவைத் தோஷமெனப்
பேசுவிழி நோய்கடமைப் பேர்ப்பதன்றி-யோசைதரு
தந்திபோ லேதெறிந்துச் சாறு மண்டை நோயகற்று
நந்தியா வட்டப் பூ நன்று.’
நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும்.
இதில்
ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே
குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு
மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும் இதன்
வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும். இதன் பூவும் தேள்
கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக்
கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும். சண்பகப்பூ 60, கார்
எள்ளுப்பூ 100, நந்தியாவட்டப் பூ 100 இவற்றைச் சுத்தமாக தூசி மண் முதலியவை
இல்லாமல் இதழ்களைச் சுத்தமான கல்வத்தில் போட்டு அதனுடன் துளசி வேர்,
சங்குப் பொடி, மண்டைஓட்டுப் பொடி வகைக்குக் கழஞ்சி 1, மயில் துத்தமை
கழஞ்சி 2, கூட்டிப் புளியம் பூச் சாற்றில் எலுமிச்சம் பழச்சாற்றிலுமாக
அடைத்துப் பல்பக் குச்சை போல் திரட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு
தாய்பாலில்உரைத்துக் கண்களுக்குத் தீட்டி வரக் கண்வலி, பூவீழ்தல்,
சதைவாங்கி முதலியன போம்.
நந்தியாவட்டப்பூ காம்பு நீக்கியது பலம் 2,
சிறு களாப்பூ பலம் 2, இவை இரண்டையும் ஒரு சுத்தமான வெள்ளைப் புட்டியில்
போட்டு இந்தப் பூக்கள் மூழ்க நன்றாகக் கழுவிச் சுத்தி செய்த எள்ளைச்
செக்கிலாட்டியெடுத்து நல்லெண்ணை 3 சேர் விட்டுப் புதிய சடை கார்க்கால்
அழுத்தமாக அடைத்து உள்ளே சலம் செல்லாமல் மெழுகினால் சீலை செய்து மண்
தரையான பசுவின் தொழுவத்தில் ஓரடி ஆழத்தில் 40 நாள் புதைத்து வைத்து
எடுத்து ரவி முகத்தில் 21 நாள்கள் வைத்த பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்க.
இந்த தைலத்தைக் கண்களுக்கு 1 - 2 துளி வீதம் தினம் இரண்டு வேளை காலை,
மாலை, விட்டுக் கொண்டு வர கண்களில் உண்டாகும் பூ, சதை வளர்ச்சி, பலவித
கண்படலம் ரோகங்களுக்கு இன்றியமையாததாகும்.
Re: வயிற்றுப்போக்கு நிற்க
[You must be registered and logged in to see this image.] வாலுழுவை.
1) மூலிகையின் பெயர் -: வாலுழுவை.
2) தாவரப்பெயர் -: CELASTRUS PANICULATUS.
3) தாவரக்குடும்பம் -: CELASTRACEAE.
4) வேறு பெயர்கள் -: வாலுழுவை அரிசி.
5) தாவர அமைப்பு -:
வாலுழுவை ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. காடு மலைகளில் சுமார் 200 மீட்டர்
முதல் 600 மீட்டர் வரை கடல் மட்டதுதிலிருந்து இயற்கையாக வளரக் கூடியது.
இதன் கொடி 25 செ.மீ. விட்டத்திலும், இலைகள் 6 - 10 செ.மீ. நீளத்திலும்,
பூக்கள் 5 - 20 எம். எம். மும், பழம் 1 - 2 செ.மீ. விட்டமாகவும், விதை 3 -
6 ஆரஞ்சு நிரத்திலும் இருக்கும். இது வட அந்தமான் மற்றும் மத்திய
அந்தமானிலும் காணப்படும். இது மலேசியா, தாய்லேண்டு, இந்தோ சைனா, சைனா
மற்றும் தாய்வானிலும் பரவியுள்ளது. சிறிய பூக்கள் மஞ்சள் கலந்த பச்சையாகத்
தென்படும். ஆண் பூ,பெண் பூ என்றும் உள்ளது. பூக்கள் தன்
மகரந்தச்சேர்க்கையால் விதைகள் உற்பத்தியாகும், மரக்கலராக இருக்கும்.
இதிலிருந்து எண்ணெய் எடுத்து மருத்துவத்தில் பயன்படுத்திகிறார்கள். இது
கசப்பாக இருக்கும். இது திகட்டும் நெடியாக இருக்கும். இதில் புரோட்டின்,
கார்போஹைட்ரேட், வைட்டமின் சி , சோடியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும்
இரும்பு சத்திக்கள் உள்ளன. வாலுழுவை கட்டிங் மூலமும், விதைமூலமும் இனப்
பெருக்கம் செய்யப் படுகிறது. வீடு, பூங்காக்களில்அழகுக் கொடியாகவும்
வளர்க்கிறார்கள்.
6) பயன் படும் பாகங்கள் -: இலை மற்றும் விதை மட்டும்.
7) மருத்துவப் பயன்கள் -:
வாலுழுவை எண்ணெயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வறை நல்ல ஞாபக சக்தியை
உண்டாக்கக் கூடியது. புண்களைக் குணப்படுத்தும், குடல் புண் மற்றும்
வாதத்தைப் போக்கும். குஸ்டம், தலைவலி,தோல் வியாதியைக் குணப்படுத்தும்.
'வயிற்றுக் கடுப்புவலி மாறாக் கிராணி
பயித்தியங் காசமல பந்தஞ் - சயிக்க வொணாச்
சூதிகா வாதமும் பேரந்தவல் வாலுழுவை விதைக்
கோதிவைத்த நல் மொழியை யோர்'
குணம்- :வாலுழுவை அரிசிக்கு வயிற்றுப் பிடுங்கல் கடுப்பையுடைய ரத்தபேதி, பித்தம், இருமல், மலக்கட்டு, அசிர்கரம் போம்.
உபயோகிக்கும்
முறை -: இதன் சூரணத்தை வேளைக்கு 5 - 7 குன்றி எடை சரக்கர்யுடன் கூட்டி
தினம் மூன்று வேளை சாப்பிடவும். அல்லது கால் அல்லது அரை விராகனெடை
அரிசியைப் பசுவின் பாலில்அரைத்துப் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை
சாப்பிடவும், இப்படிச் சில தினம் உட்கொள்ள இழமைப் போல் மேனி
உண்டாகும்.மேற் கூறப் பட்டநோய்களும் குணமாகும் வாலுழுவையரிசி, மரமஞ்சள்,
கடுகுரோகனி, அதிவிடயம், சித்திரமூல வேர்ப் பட்டை, வட்டித்திருப்பி
(செடிஇலை) இவற்றைச் சமனெடையாக இடித்து சூரணம் செய்து வேளைக்குத் திரிகடிப்
பிரமாணம் சர்கரை கூட்டித் தினம் இரண்டு வேளை சாப்பிட்டுவர
இரைப்பையிலுண்டான பல பிணிகள் போம். இதன் இலையை ஈரவெங்காயத்திடன்
சேர்த்துஅரைத்து ஆசன வாயில் தடவினால் மூலம் குணமாகும்.
Similar topics
» நடைப்பயணத்தின் இடையில் திடீர் மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு. இருந்தாலும் பயணத்தை தொடர்ந்த வைராக்கிய வைகோ.
» விக்கல் நிற்க...
» சீத பேதி நிற்க
» இரவில் விந்து கழிதல் நிற்க......
» முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
» விக்கல் நிற்க...
» சீத பேதி நிற்க
» இரவில் விந்து கழிதல் நிற்க......
» முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum