Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சாஞ்சியில் வேதம் ஓதிய சைத்தான் மகிந்த ராஜபக்ச..!
Page 1 of 1

இந்திய மத்திய பிரதேசம், சாஞ்சி நகரில், சாஞ்சி பல்கலைக் கழக அடிக்கல்
நாட்டு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்ச பிரதம அதிதியாக செப்ரம்பர் 22ம்
நாள் கலந்து கொண்டார். பிற மதத்தவரிடம் வெறுப்புக் காட்டக் கூடாது என்று
அப்போது அவர் அறிவுரை கூறினார்.
“பிற மதத்தவரிடம் பகைமை,
வெறுப்பைக் காட்டினால் அது வன்முறையில் முடிந்து விடும். இந்தப் போக்கைக்
கைவிட்டு, எல்லோரும் சகிப்புத் தன்மையுடன் இருப்பது அமைதிக்கு வழிவிடும்”
என்று அவர் தனது ஆசியுரையில் குறிப்பிட்டார்.
இலங்கையில் இந்துக்
கோயில்கள் இடிக்கப்படுவதையும் அதே இடத்தில் புத்த விகாரைகள்
கட்டப்படுவதையும் பாரதீய ஜனதாக் கட்சி தெரிந்தும் தெரியாதது போல்
இருக்கிறது. இந்தக் கட்சியின் மதவாதம் இந்தியாவின் இந்து மக்களின் தேர்தல்
வாக்குகளைப் பெறுவதற்காக மாத்திரம் உதவுகிறது.
அனைத்துலக இந்து
மதப் பாதுகாவலனாக தன்னை வர்ணிக்கும் விஸ்வ இந்து பரிசத் இலங்கையில் இந்து
கோவில்கள் இடிக்கப்படுவதையும் இந்து மதம் இழிவு படுத்தப் படுவதையும்
கவனத்தில் எடுக்காமல் இருக்கிறது.
இலங்கையின் சிங்கள பவுத்த
பேரினவாத அரசு அந்த நாட்டின் மூன்று முக்கிய மதங்களான இந்து கிறிஸ்தவ,
முஸ்லிம் மதங்களுக்கு எதிரான அரசியற் கொள்கையை நடைமுறைப் படுத்துகிறது.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியல் சாசனம் பவுத்த மதத்தின்
மேலாதிக்கத்தை உறுதி செய்கிறது.
அமெரிக்காவின் இராஜங்கச் செயலக
அறிக்கை கிறிஸ்தவ தேவாலயங்கள் சிங்கள பவுத்தர்களால் சேதப்
படுத்தப்படுவதையும் கிறிஸ்தவ மதத்தினர் அச்சுறுத்தப் படுவதாகவும் அறிக்கை
வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களின் வணக்கத் தலங்களும்
தாக்கப்படுவதாகவும் அதே அறிக்கை குறிப்பிடுகிறது. தம்புல்ல என்ற மத்திய
இலங்கை மலை அடிவாரப் பகுதியில் புத்த மதக் குகைக் கோவில்கள்
காணப்படுகின்றன. அவற்றிற்குப் பக்கத்தில் பழம் பெரும் மசூதிகளும்
இருக்கின்றன.
தம்புல்ல மசூதிகளை அகற்றும் திட்டத்தை இந்த வருடம்
ராஜபக்ச அரசு ஏவிய வன்முறைக் கும்பல்கள் நடைமுறைப் படுத்தின. தமிழக
முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுக் கடும்
ஆட்சேபம் தெரிவித்தன.
சிங்கள பவுத்த பேரினவாதம் இந்து மதத்தின்
மீது நேரடிக் தாக்குதல் நடத்துகிறது. தமிழ் மொழி வளர்ச்சியையும்
தமிழினத்தையும் அழித்தொழிக்கும் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்து
மதத்தின் மீதான தாக்குதல் முன்னெடுக்கப்படுகிறது.
அருணகிரிநாதரின்
திருப்புகழில் பாடப்பட்ட கதிர்காம முருகன் ஆலயம் இன்று முருகபக்தர்கள்
சென்று வழிபட முடியாதவாறு புத்த பிக்குகளின் பிடியில் வந்துள்ளது.
துட்டகெமுனு என்ற சிங்கள மன்னனின் தளபதி ஒருவனின் கல்லறை தான் கதிர்காம
முருகன் கோவில் என்ற புதிய கதையை அரசு சிருட்டித்துள்ளது.
துட்டகெமுனு என்பவன் வேறு யாருமில்லை. எல்லாளன் என்ற தமிழ் மன்னனை வஞ்சகப்
போரில் கொன்றவன் தான் துட்டகெமுனு. சிங்களவர்களின் வேத நூலான மகாவம்சத்தின்
கதாநாயகனாக துட்டகெமுனு வைக்கப்பட்டுள்ளான். தமிழர்களுக்கு எதிரான போரில்
பல இலட்சம் பேரை துட்டகெமுனுவின் படைகள் கொன்றன.
இதைக் கூறும்
மகாவம்சம் தமிழர்களைக் கொல்வது பாபச் செயல் அல்லவென்று கூறுகிறது. புத்த
மதத்தைச் சேராதவர்கள் மனிதப் பிறவிகள் அல்லர் என்ற செய்திதையும் மகாவம்சம்
கூறகிறது.
சிங்களவர்களின் சிந்தனை, செயல், தேசியக் கருத்தியலில்
மகாவம்சம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதை ஆயாயஎயஅளய ஆநவெயடவைல என்று
குறிப்பிடுவார்கள்.
புத்தரின் ஐந்து மெய்ஞானக் கொள்கைகளில்
முதலாவது கொல்லாமையை வலியுறுத்துகிறது. ‘பானாத்தி பாத்தா வேறமணி சிக்கா
பதம் சமாதியாமி’ உயிர் வதைக்கும் கொலைகளை நான் செய்ய மாட்டேன்’ என்பது இதன்
பொருள். உயிர்களை கொல்லாதே என்று தானே சொன்னார் ஆனால் தமிழர்களைக்
கொல்லாதே என்று புத்தர்; சொல்லவில்லையே என்கிறார் ஒரு பிக்கு.
சிங்கள இராணுவத்தின் ஒரு தாக்குதல் அணிக்கு துட்டகெமனுவின் பெயரால் கெமுனு
வாட்ச் (புநஅரரெ றுயவஉh) என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழின அழிப்பில் இந்த
அணி முக்கிய பங்கு வகித்தது.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடும்
மகிந்த ராஜபக்ச சாஞ்சியில் மதச் சகிப்புத் தன்மை பற்றிப் பேசுகிறார்
என்றால் அதைக் கேட்போரின் மதியீனத்தை என்னவென்பது.
கதிர்காமம்
முருகன் கோவிலுக்கு நடந்த சீரழிவு மட்டக்களப்பு மாவட்டம், கோறாளைப்பற்றுப்
பிரதேசத்தின் குடும்பிமலை முருகன் கோவிலுக்கும் நடந்துள்ளது. இந்தக் குன்று
மேவிய முருகனின் சிலை அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலை
நாட்டப்பட்டுள்ளது.
கதிர்காமக்; கோவிலைப் போல் குடும்பிமலை
முருகன் கோவிலும் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அது
மாத்திரமல்ல குடும்பிமலையைச் சுற்றியுள்ள 5 ஏக்கர் நிலம் புனித நிலமாகப்
பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு சிங்களக் குடியேற்றமும் நடைபெறுகிறது.
2012 ஏப்ரல் 2ம் நாள் கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் சிவன்
கோவிலுக்குள் சீருடை தரித்த சிங்களப் படையினர் கருவறை வரை சென்றுள்ளனர்.
காலில் அணிந்திருந்த பூட்சை அகற்றும்படி கேட்ட அர்ச்சகர் கடுமையாகத்
தாக்கப்பட்டார். பழைய புத்த கோவில் இருந்த இடத்தில் இந்தச் சிவன் கோவில்
கட்டப்பட்டிருக்கிறது என்று அந்தச் சிப்பாய்கள் கூறுகின்றனர்.
உருத்திரபுரம் சிவன் கோவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரை
கட்டப்படும் ஆபத்து நெருங்கிவிட்டது. முல்லைத்தீவு மாவட்டம், கொக்குளாய்
விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் இராணுவத்தின்
மேற்பார்வையில் ஒரு புத்த விகாரை எழும்புகிறது.
தமிழீழத்தில்
இப்படிப் பல சம்பவங்கள் அடுக்கடுக்காக நடக்கின்றன. ஒரு புத்த மதத்தினனும்
இல்லாத வல்வெட்டித்துறையில் ஒரு பிரமாண்டமான புத்த விகாரை கட்டப்படுகிறது.
தேசியத் தலைவர் பிறந்த நகரில் சிங்கள பவுத்தப் பேரினவாதத்தின்
மேலாதிக்கத்தைக் காட்டுவதற்காக இந்தக் கட்டுமானம் நடைபெறுகிறது.
http://eelampresse.com/

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மகிந்த ராஜபக்ச குடும்பம் தப்பியோட பிரத்தியேக விமானம் தயார்
» அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு !
» மகிந்த ராஜபக்ச மீது அதிமுக வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு?
» மகிந்த ராஜபக்ச தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பாரா?- பா.அரியநேத்திரன் எம்.பி சவால்
» ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் வழக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum