Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரை நூற்றாண்டு கண்ட அற்புத நூலகம்!
Page 1 of 1
அரை நூற்றாண்டு கண்ட அற்புத நூலகம்!
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு நூலகம் எவ்வளவு முக்கியம்
என்பதை இன்று எல்லோரும் உணர்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனாலும், நகரங்களில்
உள்ள அளவுக்கு நூலகத்தின் அறிமுகமும் பயன்பாடும் இன்னமும் கிராமங்களில்
முழு அளவை எட்டவில்லை. ஆனால், வெறும் விவசாயத்தை மட்டுமே அறிந்திருந்த
கீழத் தஞ்சை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் அருகில் இருக்கும்
மேலப்பாதியில் 1946-ம் ஆண்டிலேயே நூலகம் ஒன்று திறக்கப்பட்டு இன்று வரை
இயங்கிவருகிறது என்பது எவ்வளவு ஆச்சர்யமான விஷயம்.
மேலப்பாதி திரு.வி.க. நூலகம் என்றால், திரு.வி.க., மு.வரதராஜனில்
ஆரம்பித்து இன்று இருக்கிற தமிழறிஞர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.
திரு.வி.க. நூலகம் அர்ப்பணிப்பின் அடையாளம். அந்த அர்ப்பணிப்புக்கு
சொந்தக்காரர் சு.பாலகிருஷ்ணன் என்ற 87 வயது முதியவர்.
நூலகத்தின் கீழ்த்தளம் துள்ளிக் குதித்தோடும் சிறுவர்களின் தொடக்கப்
பள்ளியாகத் திகழ... அழகான அந்தக் கட்டடத்தின் மேல்தளத்தில் காற்றோட்டம்
நிறைந்த சூழலில் அமைந்து இருக்கிறது நூலகம். தன்னுடைய ஆராய்ச்சி
படிப்பைப் பற்றி பாலகிருஷ்ணனிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்
மயிலாடுதுறையில் இருந்துவந்த ஒரு பெண்மணி. அதைக் காதுகொடுத்துக் கேட்ட அந்த
முதியவர் பெண்மணியை அழைத்துச் சென்று ஒரு அலமாரியில் இருந்து பல
நூல்களையும் எடுத்துத் தருகிறார். ''இவை எல்லாமே உன்னுடைய ஆராய்ச்சிக்கு
உதவும்'' என்கிறார். இத்தனைக்கும் பாலகிருஷ்ணன் படித்திருப்பது எட்டாம்
வகுப்பு வரைதான்.
வரலாறு, அரசியல், பொதுவுடமை, கதைகள், சிறுகதைகள், நாவல்கள், வாழ்க்கை
வரலாறு, தொழில் என்று எல்லாவிதமான தலைப்புகளிலும் படிக்கக் கிடைக்கின்றன
புத்தகங்கள். பூம்புகார் கல்லூரி, தருமபுர ஆதீன கல்லூரி, ஏ.வி.சி. கல்லூரி
என்று சுற்றுவட்டாரக் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பள்ளி
ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களுக்காக இங்குதான்
வருகிறார்கள்.
''
இளம் பிராயத்தில் எங்கள் வீட்டில் நானும் என் நண்பர்களான கோவிந்தராஜன்,
மாரியப்பன் ஆகிய மூவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருப்போம். நாங்கள்
எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள். அப்போது வந்துகொண்டு இருந்த நாளிதழ்களான
தினமணி, நவசக்தி, சுதேசமித்திரன் ஆகியவற்றை வாங்கிப் படிப்போம்.
செம்பனார்கோவிலில் இருந்த சிட்ஃபண்ட் ஒன்றில் நான் வேலை பார்த்ததால் நிறைய
மனிதர்கள் பழக்கமானார்கள். அவர்களிடம் இருந்து கதைப் புத்தகங்கள்
வாங்கிவந்து படிப்போம். இங்கே ஒரு நூலகத்தை அமைத்தால் எல்லோரும் படிக்க
உதவியாக இருக்குமே என்று முடிவு செய்து எங்கள் வீட்டு திண்ணையில் 1946-ம்
ஆண்டு நூலகத்தைத் தொடங்கினோம். அப்போது எங்களிடம் இருந்த புத்தகங்கள் 46
மட்டுமே. கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகம் சேர ஆரம்பித்தது. தெரிந்தவர்களின்
பிறந்த நாள், திருமணம், நினைவு தினம் அன்று அவர்களைப் புத்தகங்கள்
வாங்கித்தரச் சொன்னோம். சுதந்திர தினம், குடியரசு தினம் என்று விழாக்கள்
வந்தாலும் அதற்குப் புத்தகப் பரிசுதான்.
காந்தி பிறந்த நாள் வந்தால், காந்தி நூலகத்தில் 75 சதவிகித கழிவில்
புத்தகம் தருவார்கள். அண்ணா பிறந்த நாளுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
50 புத்தகங்கள் இலவசமாகத் தருவார்கள். சமயங்களில் பாதி விலைக்கும்
தருவார்கள். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்களில்
புத்தகங்கள் இலவசமாகவும் கழிவிலும் தருவார்கள். எதிர்பார்த்து இருந்து
சரியான நேரத்துக்குப் போய் அதைவாங்கி வருவோம். அதுதவிர நர்மதா பதிப்பகம்,
பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர், புத்தகங்கள் தந்து இருக்கிறார்கள்.
இன்று 19,000 புத்தகங்கள் இருக்கின்றன'' என்று மூச்சு விடாமல் சொல்லி
முடித்தார்.
1946-ல்
ஆரம்பித்த தன்னுடைய பயணத்தை இன்னும் நிறுத்தவே இல்லை இவர். எட்டாம்
வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராகப் பணியில் சேர்ந்த
பாலகிருஷ்ணன், பின்பு பதினொன்றாம் வகுப்புத் தேர்வையும் எழுதித் தேர்ச்சி
பெற்றார். பள்ளி, நூலகம் இரண்டும்தான் அவருடைய வாழ்க்கை. மனைவி
இருக்கும்வரை மேலப்பாதியில் தங்கி இருந்த இவர் இப்போது மயிலாடுதுறையில்
இருக்கும் தன்னுடைய மகன் வீட்டில் தங்கி இருக்கிறார்.
இந்த நூலகத்தைப் பற்றிப் பாராட்டாதவர்களே இல்லை. ஐ.நா. பண்பாட்டுக்
கழகம் வெளியிட்டு இருக்கும் நூலக இதழில்கூட இந்த நூலகத்தினைப் பற்றிய
குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. நூலகத்தில் உள்ள லெட்டர் பேடில்
திரு.வி.க. தன்னுடைய கையெழுத்தைப் போட்டு தந்திருக்கிறார். நூலகத்துக்கு
வந்த டாக்டர் மு.வ-வும் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதனும் இவருடைய மூத்த
மகனுக்கு பாரதி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
மற்ற இரண்டு நண்பர்களும் இறந்துபோனபின்பும் தன்னுடைய உறுதி இழக்காமல்
இன்றுவரை அறிவுக் கோயிலைப் பாதுகாத்து வருகிறார். இந்தக் கருத்துப்
பெட்டகம் காலம் கடந்து நிலைத்து இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும்
இல்லை!
- கரு.முத்து
நன்றி :http://en.vikatan.com/article.php?aid=23917&sid=671&mid=33

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அண்ணா நூற்றாண்டு நூலகம் படங்கள்
» அற்புத காக்கிகளின் அற்புத செயல்களின் படங்களும்,செய்தியும்
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா ஸ்பெஷல் - எம்.ஜி.ஆர் ஆல்பம்!
» இந்திய நூற்றாண்டு விழா ஸ்பெஷல் - கமல் ஆல்பம் 2!
» யாழ் நூலகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum