TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1

Go down

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1  Empty ’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1

Post by மாலதி Tue Sep 18, 2012 5:03 pm

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1
’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1  403274_416442938405706_1360665208_n
முன்குறிப்பு:


என்னடா இது இவர்களுக்கு வேலையே இல்லையா ?.. யாரையாவது திட்டிக் கொண்டு
இருப்பதே இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.. கடைசியாக தேசப் பிதா
காந்தியையும் கூட விட்டுவைக்காமல் விமர்சிக்க வந்துவிட்டார்களே என்று
வருத்தப்பட்டு கொள்ளாதீர்கள். இந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்
அனைத்து விவரங்களும், நிகழ்வுகளும் காந்தியின் நேர்கானல்கள் மற்றும்
அவருடைய ஹரிஜன் இதழில் அவரே கைபட எழுதியவற்றிலிருந்தே
எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இன்று வரை “ ஆகா … காந்தீ .. மகானே..“
என்று காந்தியை மனதில் உயர்த்தி வைத்திருந்தவர்கள் கோபப்படாமல் சற்று
நிதானமாக முழுமையாக வாசியுங்கள். இனி கட்டுரைக்குள் செல்லலாம்.

காலனியாட்சி காலத்தில்:


இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி போட்ட தாளத்தில்
மக்கள் ஆடிய டப்பாங்குத்து ஆட்டம் என்றும் அந்த ஆட்டத்திற்கு மயங்கித்
தான் வெள்ளைக்காரன் இங்கிருந்து வெளியேறிவிட்டான் என்பதுமாகவே இங்கு
‘வரலாறு’ ’உருவாக்கப்பட்டிருக்கிறது’
ஆனால் உண்மை என்ன ? காலனியாட்சி காலத்தில் மக்களின் தன்னெழுச்சியான
போராட்டங்கள் தாம் இந்திய ’விடுதலை’க்கு முதல் காரணமாகின. வெள்ளைக்காரன்
ஒன்றும் காந்தியின் உண்ணாவிரததிற்கு இரக்கப்பட்டு கொண்டு
வெளியேறிவிடவில்லை. காலனியாதிக்கத்திற்கெதிராக பீரிட்டெழுந்த பல இலட்சம்
மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் ஆட்சியாளர்களாலும், மக்கள்
போராட்டங்களை மழுங்கடிப்பதையே எப்போதும் வேலையாகக் கொண்டிருந்த
காந்தியாலுமே கட்டுப்படுத்தவியலாத வன்முறையை நோக்கி பயணித்த காரணத்தாலும்,
இரண்டாம் உலகப் போரில் பொருளாதார ரீதியில் வாங்கிய அடியாலும் தான்
வெள்ளைக்காரன் வெளியேறினான். அப்போதிருந்த தேசிய சர்வதேசிய நிலைமையில்
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் யோக்கியவானாக, ‘ஜனநாயகப்பூர்வமாக’ நடந்து
கொள்வதாக உலக மக்களுக்கு முன்பு நாடகம் ஆடியது. புற நிலையாக உள்நாட்டில்
அதிகரித்த வன்முறைப் போராட்டங்கள், அக நிலையாக உலகப்போரில் ஏற்பட்ட
பொருளாதார அடி, இவை இரண்டும் தான் பிரிட்டனை ’பெயரளவிற்காவது’
இந்தியாவிலிருந்து வெளியேற நிர்பந்தித்தது. இந்த நிலைமையின் கீழ் தான்
உள்நாட்டு நிலைமை மேலும் மோசமாகி அதிகாரம் வன்முறையாளர்களின் கைகளுக்கு
போய் விடுவதற்கு முன்னால் வெள்ளைக்காரன் நமது நாட்டிலிருந்து முடிந்தவரை
சுருட்டிக் கொண்டு தனக்கு ஆதரவான கைக்கூலி கும்பலிடம் ஆட்சியை ஒப்படைத்து
விட்டு வெளியேறினான். அதாவது கத்தியின்றி இரத்தமின்றி என்று
பிதற்றுகிறார்களே அந்த வெட்கமின்றி பெற்ற ’சுதந்திரம்’ இப்படித் தான்
வந்தது. போகும் போதும் அவன் ஒன்றும் சும்மா போகவில்லை, இன்று அமெரிக்க
ஏகாதிபத்தியம் எப்படி தன் சொல்படி ஆடும் பொம்மை ஆட்சியை ஆப்கனில்
வைத்திருக்கிறதோ அதே போன்று தான் அன்று பிரிட்டனும் இங்கு தனது சாட்டைக்கு
ஆடும் பொம்மை அரசை நேரு தலைமையிலும் காந்தியின் மேற்பார்வையிலும் நிறுவி
விட்டு போனது. இது தான் இந்த மகாத்மாக்கள் சுதந்திரம் பெற்றுத்தந்த
லட்சணத்தின் பின்னால் உள்ள அரசியல்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களும் காந்தியின் துரோகங்களும் :

அது என்ன தன்னெழுச்சி போராட்டங்கள்? சரி, அதற்கும் காந்திக்கும் என்ன
சம்மந்தம்? அவரை குறை சொல்லுவதற்கான காரணம் என்ன ? அவர் அப்படி என்ன தான்
துரோகம் செய்தார் ?

இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழலாம்.

நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் சுதந்திரப் போராட்டம் என்பது வெறும்
காந்தி மற்றும் காங்கிரசின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை போராட்டங்கள்
மட்டுமே அல்ல. பல வீரம் செறிந்த போராட்டங்கள் நமது இந்திய சுதந்திரப்
போராட்ட வரலாற்றில் ’திட்டமிட்டே’ மறைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான
வீரம் செறிந்த போராட்டங்களில் முக்கியமான சிலவற்றையும் அப்போராட்டங்கள்
பற்றி நமது தேசப்பிதா விடுத்த ஸ்டேட்மெண்ட்களையும் அவருடைய வாயாலேயே
கேட்போம்.

சிட்டகாங் , பெஷாவர் மக்கள் எழுச்சியும் காந்தியின் அதிகார வெறியும்:

1930ம் ஆண்டு வடகிழக்கின் சிட்டகாங் நகரிலும் மேற்கிலுள்ள பெஷாவரிலும்
மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றன. சிட்டகாங்கில்
புரட்சிகர மானவர் இயக்கங்களைச் சேர்ந்த ’ஹிந்துஸ்தான் குடியரசுப் படையினர்’
பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்கள் என்ற
மக்கள் குழுவினர் பிரிட்டீஷ் படைக்கு எதிராக துப்பாக்கிச் சண்டையில்
ஈடுபட்டனர். பெஷாவரில் சண்டையிட்ட அனைவரும் ’இஸ்லாமியர்கள்’.
அக்காலகட்டத்தில் ’கார்வாலிப் படையினர்’ என்றொரு படைப்பிரிவு பிரிட்டிஷ்
இராணுவத்தில் இருந்தது. மக்கள் எழுச்சியை அடக்க இந்த கார்வாலிப் படையினரைத்
தான் அனுப்பியது. இவர்கள் அனைவரும் ’ஹிந்து’க்கள். இந்த கார்வாலிப்
படையினரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் தாம். தமது சொந்த மக்களுக்கு
எதிராக துப்பாக்கி ஏந்த முடியாது என்று அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர்
ஆயுதங்களை திருப்பிக் கொடுத்தனர். மீதிப்பேர் போராடிய மக்களுடன் இணைந்து
கொண்டனர். இதனால் பிரிட்டீஷ் இராணுவத்திற்கு மிகப் பெரும் பின்னடைவு
ஏற்பட்டது.

இந்தப் பின்னடைவினால் பெஷாவர் நகரே ஏப்ரல் 25 முதல் மே
4 வரை மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் வான் படைத் தாக்குதல்
மூலமும் பிற பகுதிகளிலிலிருந்து இறக்கிய படைக் குவிப்பின் காரணமாகவும்
அந்நகரம் மீண்டும் பிரிட்டிஷ் படைகளின் கைகளுக்கு சென்றது.


மேற்கூறிய சம்பவத்தில் நடந்திருப்பது என்ன ? காலனியாட்சிக்கெதிராக போராடும்
சொந்த நாட்டு மக்களை கொன்றொழிக்க ஆயுதம் ஏந்த முடியாது என்று பிரிட்டீஷ்
இராணுவத்தில் இருந்தாலும் இந்திய சிப்பாய்கள் தேசப்பற்றுடன்
மறுத்திருக்கிறார்கள், அத்துடன் வெள்ளையாட்சிக்கெதிராக போராடும் மக்களோடும்
தங்களை இணைத்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஆணைப்படி
இயந்திரங்களை போல துப்பாக்கிகளின் விசையை தட்டிவிட்டு போராடும் மக்களை
கொல்லுவது அகிம்சையா அல்லது மக்களை கொல்ல மறுத்து ஆயுதங்களை கீழே போட்டது
அகிம்சையா? எது அகிம்சை? இது நம்மைப் போன்ற சாதாரண ஆத்மாக்களுக்கே தெரியும்
போது மகாத்மாவுக்கு தெரியாதா என்ன ? ஆனால் அகிம்சா மூர்த்தி ’மகாத்மா’
காந்தி கூறியது என்ன ? கீழ் கண்டவாறு தான் கூறினார்.

”இராணுவ
சிப்பாயாக வேலைக்கு சேர்ந்த பிறகு இராணுவ அதிகாரி யாரை சுட்டுக் கொல்லச்
சொன்னாலும் சுட வேண்டும் அது தான் அவனது கடமை. அப்படி செய்யவில்லை என்றால்
அவன் கீழ்படிய மறுத்த பெருங்குற்றத்தைச் செய்தவன் ஆவான். அப்படி சுட்டுக்
கொல்லச் சொன்ன பிறகும் அதை செய்ய மறுக்குமாறு நான் ஒரு போதும் கூற
மாட்டேன். ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும் போது இதே அதிகாரிகளையும்
சிப்பாய்களையும் நான் பயன்படுத்திக் கொள்ள நேரிடலாம். இப்பொழுது நான்
அவர்களை அவ்வாறு சுட மறுக்குமாறு கற்பித்தால் பின்னர் நான் அவர்களை சுடச்
சொல்லும் போதும் இவர்கள் இதே போல கிழ்படிய மறுக்க நேரிடும் என
அஞ்சுகிறேன்’’.

- (ஆதாரம்: பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சார்லஸ்
பெட்ராஷ், கார்வாலிப் படை வீரர்கள் பற்றிக் கேட்ட கேள்விக்கு மகாத்மாவின்
பதில்: மாண்ட்,பிப்ரவரி 20,1932)

மக்களை சுட மறுத்த இராணுவ
வீரர்கள் தமது ’கடமை’யை செய்திருக்க வேண்டும், அதாவது வெள்ளையாட்சியை
எதிர்த்து போராடிய மக்களை சிப்பாய்கள் துப்பாக்கியால் சுட்டு
பொசுக்கியிருக்க வேண்டும் என்று கூறுகிற ஒரு காலனியாட்சியின் கைக்கூலியையா
நீங்கள் மகாத்மா என்றும் தேசப்பிதா என்றும் அழைப்பீர்கள் ? இதற்கு பெயரா
அகிம்சை ? இதற்கு பெயர் அடிவருடித்தனம், கைக்கூலித்தனம் என்கிறோம் நாங்கள்.
இல்லை இல்லை.. என்று மறுப்பீர்களானால் இந்த செயலுக்கு வேறு என்ன பெயரிட்டு
அழைக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் கூற வேண்டும் …

கப்பற்படை எழுச்சியும் அயோக்கியத் திருவுருவின் அறிக்கையும்:-

1946 ம் ஆண்டு கப்பற்படை வீரர்களிடம் மாபெரும் எழுச்சி ஏற்பட்டது.
தொழிலாளர்களும், மாணவர்களுமாக கிட்டத்தட்ட 30000 பேர் அந்த நிகழ்வுக்கு
ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்ததில் ஈடு பட்டிருந்தனர், ஏறத்தாழ 20000
கப்பற்படை வீரர்கள் மும்பை நகரின் வீதிகளில் செங்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
செய்தனர். “புரட்சி ஓங்குக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக!” என்று
விண்ணதிர முழங்கினர். கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள்
முற்றுகையிட்டனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த போராட்டத்தை அடக்க
இராணுவத்தை ஏவி விட்டது. ஆனால் இராணுவ வீரர்கள் கப்பல் படை வீரர்களை சுட
மறுத்து விட்டனர். பிரிட்டிஷ் அட்மிரல் காட்பிரே “அரசாங்கத்தில் உள்ள
அதிகபட்ச சக்தியை உபயோகப் படுத்துவேன். இதனால் கப்பற்படையே அழிந்தாலும்
கவலை இல்லை” என்று கொக்கரித்தான்.முஸ்லீம் லீக் தலைவர்களும் காங்கிரஸ்
தலைவர்களும் போராட்டக் காரர்களைச் சாடுவதிலேயே குறியாக இருந்தனர்.

காந்தி ‘மகான்’ “இந்துக்களும் முஸ்லீம்களும் ‘புனிதமற்ற ஒரு கூட்டில்
சேந்ததாக’ மக்களை சாடினார். அந்த எழுச்சியைக் கண்டு பயங்கரமாக அதிர்ச்சி
அடைந்த தொடை நடுங்கி காந்தி அந்தப் போராட்டத்தை அடக்க தன்னாலான அனைத்து
முயற்சிகளையும் முன்னெடுத்தார்.

இது குறித்து தனது ஹரிஜன் இதழில் இந்த அகிம்சாவாதி எழுதியவை பின்வருமாறு:

”அந்தப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அது நாட்டைக் காலிகளின்
கையில் கொடுத்திருக்கும். அந்த முடிவைக் காண்பதற்கு நான் 125 ஆண்டுகள் வாழ
விரும்பவில்லை. மாறாக தீயிலிட்டு என்னை அழித்துக் கொள்வேன்” (ஆதாரம் :
ஹரிஜன்: ஏப்ரல் 2, 1946).

காலனியாட்சியை எதிர்த்து விடுதலைக்காக
போராடிய மக்களைப் பார்த்து ’காலி’கள் என்று கூறிய இந்த அயோக்கியரைத் தான்
தேசப் பிதா என்று நமக்கு வரலாறு சொல்லித்தருகிறார்கள், எனினும் ஆளும்
கும்பலால் சொல்லப்படுபவை மட்டுமே வரலாறு அல்ல, வரலாறு என்றைக்கும் ஒன்றாக
மட்டுமே இருந்ததும் இல்லை. மேற்கூறியது தான் உண்மையான வரலாறு. நாளை இந்த
வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ளும் இந்த நாட்டின் இளைய தலைமுறை
தேசப்பிதாவை வெள்ளைக்காரனின் கைக்கூலி என்று சரியான அடைமொழியுடன் அடையாளம்
கண்டு கொள்ளும்.

பகத்சிங்கை தூக்கிலிட நாள் குறித்த நல்லவர் :

மக்களை சுட்டுப்பொசுக்கு அது தான் உனது கடமை எனவே கடமையை செய் என்று
வெள்ளைக்கார துரையை போல சிப்பாய்களுக்கு கட்டளையிட்ட இந்த அகிம்சா மூர்த்தி
தான் பகத் சிங்கைத் தூக்கிலிட இர்வின் பிரபுவுக்கு நாள் குறித்துக்
கொடுத்தார். அதாவது பகத் சிங்கைத் தூக்கிலிடுவதாக இருந்தால் லாகூர்
மாநாட்டிற்கு முன்பே தூக்கிலிட்டு விடுமாறு இர்வினுக்கு கடிதம் எழுதியவர்
தான் இந்த பாபுஜி. இந்த சம்பவத்தை காந்தியின் முதல் வாழ்க்கை வரலாறு நூலை
எழுதிய பட்டாபி சீதாராமையா (காங்கிரஸ்) (காந்தியால் நேதாஜியை எதிர்த்து
காங்கிரஸ் தலைமைக்கு களமிறக்கப்பட்டவை) தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை அறிந்த பஞ்சாப் மக்கள் காந்தியை எதிர்த்து பல
ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். காந்திக்கெதிராக நடந்த இந்த ஒவ்வொரு
ஆர்ப்பாட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து இர்வின் கீழ்கண்டவாறு கூறினான்

” மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக்கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்” . (ஆதாரம்: Earl Of Birhenhead P. 305).

பிரிட்டிஷாரின் காலை நக்கியதை கையால் எழுதிய காந்தி:

முதல் உலகப்போரின் போது இந்த மகாத்மா தான் பிரிட்டிஷ் படைக்கு
ஆட்சேர்ப்புக்கான கவுரவ தூதராக செயல்பட்டார் என்பது உங்களில் எத்தனை காந்தி
ரசிகர்களுக்கு தெரியும் ? வெள்ளையனுக்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்திய போது
அதை வன்முறை என்றும், அவர்களை காலிகள் என்றும் விஜயகாந்த் கணக்காக முகம்
சிவந்து கூச்சல் போட்ட இந்த யோக்கியர் தான் வெள்ளைக்காரனுக்காக நமது நாட்டு
மக்களை துப்பாக்கி தூக்கி போராடச்சொன்னார் ! இது கதையல்ல உண்மை, மேலும்
வரலாறு. எனில் அந்த செயலுக்கு என்ன பெயர் வைக்கலாம் ? இதற்கு பெயர் தான்
மாமா வேலை என்பது ! இது குறித்து காந்தி மாமா கூறிய வசனம் பின்வருமாறு

”ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு, பயன்படுத்திக் கொள்ளுங்கள்“

இவ்வாறு துண்டுப் பிரசுரங்களின் மூலம் பிட்டீஷாருக்காக தனது மாமா வேலையை செய்தார் இந்த அகிம்சாமூர்த்தி.

அடுத்ததாக இரண்டாம் உலகப் போரில் தனது பிரிட்டிஷ் கைக்கூலித்தனத்தை பின்வருமாறு வெளிப்படுத்திக்கொண்டார்.

”நான் அவருக்கு(பிரிட்டிஷ் வைசிராய்) பிரிட்டிஷ் பாராளுமன்றமும்
அமைச்சரவைத் தலைமையகமும் அழிக்கப்படக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை
விளக்கிய போது நெஞ்சுருகிப் போனேன்” இவ்வாறு நெக்குருகி எழுதியுள்ளார் தனது
ஹரிஜன் இதழில் (ஹரிஜன், செப்.5, 1939).

இதே காலகட்டத்தில் இவர்
உதிர்த்த முத்துக்கள் “ நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களுடைய
சுதந்திரத்தைத் தேடவில்லை”. அது தவிர பிரிட்டன் நியாயத்திற்காக
போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக்
கொண்டார்.

”ஆகையால் நான் எப்போதும் சுதந்திரத்தைப் பற்றி
நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் பிரிட்டனும்
பிரான்சும் வீழ்ந்து விட்டால் என்ன ஆகும் ?” – (ஹரிஜன் – செப்.9, 1939)

இப்படி வாயை திறந்தாலே காலனியவாதிகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு
எதிராகவுமே வார்த்தைகளை துப்பிக்கொண்டிருந்த காந்தி தான் நமக்கு
தேசப்பிதாவா ? இப்படிப்பட்ட ஒர் வெள்ளை ஆட்சியின் அடிமையா நமக்கு
தேசத்தந்தை ? இப்பேர்பட்ட ஒரு மாமாவா நமக்கு சுதந்திரத்தை
பெற்றுத்தந்திருக்க முடியும் ?

மேலும் சில நற்செய்திகள் :

காந்தி உண்ணாவிரதம் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதிகப்
பட்சம் எத்தனை நாட்கள் இருந்திருப்பார் ? இன்றைய கருணாநிதியைப் போன்று ஒரு
சிறு நாடகம் நடத்துவார். அதற்குப் பெயர் தான் உண்ணாவிரதம். காந்தி
எப்பொழுதெல்லாம் உண்ணாவிரதம் இருந்தார் என்று உற்று நோக்கினால் மிகத்
தெளிவாகத் தெரிவது ஒன்று தான். எப்பொழுதெல்லாம் மக்கள் போராட்டம் அவர்
கையை மீறி கட்டுக்கடங்காமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் அதை நீர்த்துப் போக
வைக்க அங்கேயே உடனடியாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிப்பார்.
உண்ணாவிரத பந்தலிலேயே காந்தி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவார்.
மக்களோ காந்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து போய் போராட்டங்களை
கைவிட்டுவிட்டு இந்த கைக்கூலிக்காக காத்திருப்பார்கள். பிறகு காந்தி
விடுவிக்கப்படுவார். மீண்டும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள்
வெடிக்கும் உடனே காந்தி மறுபடியும் பந்தலுக்கு வந்து விடுவார், காவலர்களும்
கைது செய்து மீண்டும் சிறையிலடைப்பார்கள். மக்களும் போராட்டங்களை
கைவிட்டுவிட்டு காந்திக்காக காத்திருப்பார்கள். கடைசி வரை இதே கதை தான்.
காந்தியின் இந்த பித்தலாட்டம் செல்லுபடியாகாமல் அம்பலப்பட்டுப்போனது
கப்பற்படை எழுச்சியின் போது தான்.

உண்ணாவிரதம் என்று நாம்
அறிந்த வரையில் மேற்கண்ட வகையில் உலகத்தையே ஏமாற்றி வந்த காந்தியின்
உண்ணாவிரதம் ஒன்று, இன்னொன்று இன்று வரைக்கும் ஓட்டுப்பொறுக்கிகள்
இருக்கும் உண்ணாவிரதம். இவை இரண்டைத் தவிர வேறு உண்மையான உண்ணாவிரதத்தைப்
பற்றி எங்காவது எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா அல்லது படித்திருக்கிறீர்களா ? இல்லை என்றால் இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டிருந்த போது அவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான உண்ணாவிரதப்
போராட்டம் ஒரு வீர காவியம். உண்ணாவிரதம் இருப்பதிலும் கூட காந்தி எப்படி
ஊரை ஏமாற்றிய ஏமாற்றுக்காரர் என்பதை அறிய வேண்டுமானால் தோழர்களின்
உண்ணாவிரதத்தை பற்றி நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதம்
இருப்பது என்று முடிவு செய்த பிறகு ஒவ்வொரு தோழரும் குறைந்தது பத்து
நாட்கள் வரை சோறு தண்ணியின்றி கிடக்கிறார்கள். அதற்கு மேல் உடல் நிலை
ஒத்துழைக்காமல் பல தோழர்கள் சுய நினைவை இழக்கிறார்கள். தோழர் ஜதீந்திர நாத்
தாஸ் மட்டும் தொடர்ச்சியாக 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சுய நினைவை
இழந்து இறுதியில் 13.09.1929 அன்று காலமாகிறார். அன்று தோழருடைய இறுதி
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கை (அன்றைய இந்திய மக்கள்
தொகையுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்) கிட்டத்தட்ட 7 லட்சம் பேர். இறுதி
ஊர்வலத்தின் போது காந்திக்கெதிரான முழக்கங்களும், கோஷங்களும்
வின்னைப்பிளந்தன. அன்று அவருடைய புகழைப் பாடாத பத்திரிக்கைகளே இல்லை. ஆனால்
இந்த அகிம்சாமூர்த்தி காந்தியோ அவரைப் பற்றி ஒரு இரங்கல் அறிக்கை கூட
வெளியிடவில்லை . வெள்ளைக்காரனுக்கு காலை நக்க நாக்கை வெளியே தொங்க விடும்
இந்த நாய் சுதந்திரப் போராட்ட வீரனுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

காந்தி என்கிற இந்த நரியால் நீர்த்துப் போகச் செய்யப்பட்ட போராட்டங்கள்
தான் எத்தனை எத்தனை ? காட்டிக் கொடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிகள் தான்
எத்தனை எத்தனை ?..

1946 ஜனவரியில் நடந்த விமானப் படை எழுச்சி
,கப்பற்படை எழுச்சி, ஜபல்பூர் சிப்பாய்கள் கலகம், பெஷாவர் கார்வாலிப் படை
எழுச்சி, தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் என நீண்டு கொண்டே போகும்.

சுதந்திரம் வந்தது:

2ம் உலக போரால் சிதறி சின்னாபின்னமான ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தனது இராணுவ
பலத்தை முற்றிலும் இழந்திருந்தது. காலனியாட்சிக்கெதிராக பிரிட்டீஷ்
இராணுவத்திற்குள்ளேயே இருந்த இந்திய வீரர்கள் தமது முழு எதிர்ப்பையும்
காட்டினர். மக்கள் தன்னெழுச்சியாக வீதியில் இறங்கி போராடினர். நிலைமையைக்
கட்டுக்குள் கொண்டு வர பிரிட்டிஷ் அரசால் முடியவில்லை. இது குறித்து
அப்போதைய கிழக்கிந்திய பிராந்தியத் தளபதியாக இருந்த லெப். ஜெனரல்
சர்.பிரான்ஸ் டகர் என்பவன் தனது “ நினைவிருக்கும் வரை, பக்.518 ”
புத்தகத்தில் “நமது நாட்டின் (இங்கிலாந்து) தொழில் தேவையை விட அதிகமாக நமது
இராணுவக் கடமை இருந்ததையும், போண்டியாகிப் போன நமது நாட்டின் பலத்தை
மீறியதாக இது இருந்ததையும் நாம் இறுதியில் கண்டோம். இந்தியாவை விட்டு
வெளியேறியதற்கு அதுவும் விரைவாக வெளியேறியதற்கு இது மிக முக்கியமான மற்றொரு
காரணமாகும்” என்று குறிப்பிட்டிருப்பது கத்தியின்றி இரத்தமின்றி
வெட்கமின்றி பெற்ற சுதந்திரத்திற்கு மற்றுமொரு சான்றாகும்.


மக்களின் தன்னெழுச்சியைக் கண்டு அஞ்சி அலறிய மவுண்ட் பேட்டனின் இந்தியப்
படைத் தளபதி லார்டு இஸ்மாய் கூறுகையில் “ 1947 மார்ச்சில் இந்தியா இருந்த
நிலைமை வெடி குண்டுகளால் நிறைக்கப் பட்டு நடுக்கடலில் இருக்கும் ஒரு
கப்பலில் தீப்பிடித்துக் கொண்டதை போல இருந்தது. நெருப்பு அந்த குண்டுகளை
நெருங்கும் முன் அதை அனைக்க வேண்டிய பிரச்சனை முன்னே நின்றது. எனவே நாங்கள்
செய்ததைத் தவிர வேறு மாற்று செய்வதற்கில்லை.” என்று கூறினான்.


இத்தகைய சூழ்நிலையில் தான் அதிகாரத்தை தனது இந்திய ஏஜண்டுகளான கங்கிரஸ்
துரோகக் கும்பலின் கையில் கொடுத்து விட்டு சென்றனர் ஆங்கிலேயர்கள்.

மேற்கூறியவை அனைத்தும் காலனியாட்சி காலத்தில் நிகழ்ந்த கொடுமைகளில்
கடுகளவு மட்டுமே. ஒரு நெல்லிக்கனி அளவுக்கு தெரிய வேண்டுமானால்
“கீழைக்காற்று” வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ”காந்தியும்
காங்கிரசும் – ஒரு துரோக வரலாறு” என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

காந்தியின் அரசியல் வாழ்க்கையை அம்பலப் படுத்தினாலே இவ்வளவு வருகிறதே,
அவரது சொந்த வாழ்க்கை வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறினால் காறி உமிழத் தான்
தோன்றும். இன்னும் அவர் சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கும்,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்த கொடுமைகளைச் சொன்னால் பக்கங்கள் பத்தாது.

இனிமேலாவது இந்தியாவின் விடுதலைப்போராட்ட வரலாறு குறித்த முடிவுகளை, உண்மைகளை பாட புத்தகங்களில் தேட மாட்டீர்கள் என்று நம்புகிறோம்


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1  Empty Re: ’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1

Post by மாலதி Tue Sep 18, 2012 5:07 pm

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு ! பாகம் 9

மகான் அல்ல; மக்கள் விரோதி

வடகிழக்கில் சிட்டகாங் நகரிலும், மேற்கில் பெஷாவரிலும் போர்க் குணமிக்க
போராட்டங்கள் இந்நாட்களில் (1930) தோன்றின. சிட்டகாங்கில் புரட்சிகர மாணவர்
இயக்கங்களைச் சார்ந்த இந்துஸ்தான் குடியரசுப் படையினர் பிரிட்டிஷ் ஆயுதக்
கிடங்கைச் சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்களுக்கும் போலீசாருக்கும்
துப்பாக்கிச் சண்டை நடந்தது.
முழு எதிர்காலத்துக்கும் மிகப்
பொருட்செறிவுள்ள நிகழ்ச்சி, பெஷாவரில் நடந்த கார்வாலிப் படைவீரர்களின்
கலகமாகும். களத்திலிருந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து
ஆத்திரமுற்ற மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம்
அனுப்பப்பட்டது; ஒரு இராணுவ ஆயுத வண்டி எரிக்கப்பட்டது; அதில் இருந்தவர்கள்
தப்பிவிட்டார்கள். அதன் பேரில், கண்மூடித்தனமாகக் கூட்டத்தின் மீது
இராணுவம் சுட்டது; நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். பதினெட்டாவது அரசு கார்
வாலித் துப்பாக்கிப் படையின் இரண்டாம் அணியின் ஒரு பிரிவினர் எல்லோரும்
இந்துக்கள், கூட்டத்தினர் முசுலீம்கள் ஆணையை மீறிச் சுட மறுத்துவிட்டனர்.
அணியிலிருந்து விலகிக் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டனர். சிலர் தங்கள்
ஆயுதங்களையும் கொடுத்து விட்டனர். உடனே அங்கிருந்த இராணுவமும் போலீசும்
முற்றிலும் பின் வாங்கப்பட்டன. ஏப்ரல் 25 முதல் மே 4 வரை பெஷாவர் நகர்,
மக்கள் வசம் இருந்தது; பின் மிகப்பெரிய பிரிட்டிஷ் படையையும், விமானக்
குண்டு வீச்சுத் தாக்குதலையும் கொண்டு அந்நகரம் அரசினால் பின்னர்
கைப்பற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை ஒட்டி “அகிம்சாமூ ர்த்தி’
காந்தியார் கூறிய கருத்துக்கள் அவருடைய அகிம்சைத் தத்துவத்தின் உண்மைச்
சொரூபத்தை உலகுக்கு நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. தீரமிக்க கார்வாலிப்
படைவீரர்கள் மக்களைச் சுடமறுத்த “அகிம்சை’ச் செயலுக்காக கார்வாலிப் படை
வீரர்களை காந்தியார் கண்டித்தார்.

“சுடுமாறு ஆணையிடப்பட்ட
படைவீரன் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தால், அவன் தான் செய்த
பிரமாணத்துக்கு எதிராக நடப்பதோடு, கீழ்ப்பணிய மறுத்த பெரும் குற்றமும்
செய்தவனாவான். அதிகாரிகளையும், வீரர்களையும் கீழ்ப் பணிய மறுக்குமாறு நான்
ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில், நான் அதிகாரத்தில் இருக்கையில் அதே
அதிகாரிகளையும் படைவீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள நேரலாம்.
கீழ்ப்படிந்து நடக்க மறுக்குமாறு நான் அவர்களுக்குக் கற்பித்தால், அதே
மாதிரி நான் அதிகாரத்தில் இருக்கும் போதும் செய்யக்கூடும் என அஞ்சுகிறேன்.”

(பிரெஞ்சுப் பத்திரிகையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படைவீரர்களைப்
பற்றிக் கேட்ட கேள்விக்கு காந்தியின் பதில்; மாண்ட், பிப்ரவரி 20, 1932)
இரண்டாம் உலகப் போரின் போது அட்டூழியங்கள் புரிந்த நாஜிகள் மீது
நியூரம்பர்க் எனுமிடத்தில் சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது நாஜிகள்
சாராம்சத்தில் காந்தியின் வாதத்தைத்தான் முன்னிறுத்தினர். “நாங்கள்
குற்றவாளிகள் அல்ல. ஏனெனில் மேலதிகாரிகள் உத்தரவைத்தான் நாங்கள்
நிறைவேற்றினோம். அவர்கள் போடும் உத்தரவை நிறைவேற்றுவோம் என்று சபதம்
ஏற்றிருக்கிறோம்” என்றனர். காந்தியின் வார்த்தைப்படி நிச்சயமாக இவர்கள்
குற்றவாளிகளல்ல. ஆனால் சர்வதேச நீதிமன்றம் அவர்களுடைய வாதத்தை நிராகரித்து
விட்டது. மேலதிகாரிகள் போடும் அக்கிரமமான, அநியாயமான, சட்ட விரோதமான
உத்தரவுகளைச் சிப்பாய்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அது மட்டுமல்ல, அதை
நிறைவேற்றுவதும் ஒரு குற்றமாகும் எனத் தீர்ப்புக் கூறியுள்ளது.


நியூரம்பர்க் நீதிமன்றத் தீர்ப்பையும் காந்தியின் தீர்ப்பையும் ஒப்பிட்டுப்
பார்த்தால் காந்தியின் நயவஞ்சகத் துரோகம் அப்பட்டமாகத் தெளிவாகிறதல்லவா?
“அரசாங்கத்தைத் தொல்லைப்படுத்த ஒரு சத்தியாக்கிரகி ஒருக்காலும்
முயலமாட்டான்” எனக் கூறிய காந்தி, பஞ்சாப்பில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக்
படுகொலையின் போது தான் ஒரு மக்கள் விரோதி என்பதை அம்மணமாகக் காட்டிக்
கொண்டார். ஜாலியன் வாலாபாக் எனுமிடத்தில் 20,000க்கும் மேலாகக் கூடிய
அமைதியான மக்கள் கூட்டத்தின் மீது ஜெனரல் டயர் என்பவன் வெறிகொண்டு 1600
முறை சுட்டான். மொத்தம் 379 பேர் இறந்தனர். படுகாயமுற்ற 1200 பேர் இரவு
முழுவதும் கவனிப்பாரற்று மைதானத்திலேயே கிடந்தனர். “கூட்டத்தில்
இருந்தோருக்கு மட்டுமல்ல, குறிப்பாக பஞ்சாப் மக்கள் அனைவருக்கும் இடையில்
ஒரு பயஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற இராணுவக் கண்ணோட்டத்தோடு” தான்
சுட்டதாகக் கூறிய டயர் “ரவைகள் மட்டும் தீர்ந்திராவிடில் இன்னும் மக்களைச்
சுட்டு வீழ்த்தியிருப்பேன்” எனக் கொக்கரித்தான்.

மிருகத்தனமாக
மக்களைச் சுட்டுப் பொசுக்கிய ஜெனரல் டயரை காந்தி ஒருபோதும் கண்டிக்கவில்லை.
ஆனால் இந்தப் படுகொலை நடப்பதற்குச் சில நாட்கள் முன்பாக மக்கள் ஒரு சில
ஐரோப்பியரைக் கொன்றதையும் நேஷனல் பாங்க் கட்டிடத்திற்குத் தீ வைத்ததையும்
கடுமையாகச் சாடினார். அமிர்தசரசு மாநாட்டில் பஞ்சாப் மக்களின்
கோபாவேசத்தைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தார். ஆலோசனைக் கமிட்டி இதை
ஏற்க மறுத்தது. ஏமாற்றமடைந்த காந்தி “மகாஜனங்கள் பாஞ்சால நாட்டில்
கோபாவேசத்தில் செய்யப் புகுந்த அதிக்கிரமங்களைக் கண்டிக்க காங்கிரசு மகாசபை
இணங்காவிடில் நான் மகாசபையை விட்டு வெளியேறி விடப் போவதாக” மிரட்டினார்.
“கோப ட்டப்பட்ட பாஞ்சால ஜனங்கள் செய்த அதிக்கிரமங்களுக்காக மகாசபை மிகுந்த
வருத்தமுறுவதாக”த் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது “இந்த மகாசபை முன்
கொணரப்பட்ட தீர்மானங்களனைத்திலும் இதுவே தலைசிறந்தது”


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1  Empty Re: ’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1

Post by மாலதி Tue Sep 18, 2012 5:10 pm

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு ! பாகம் 10

பகத்சிங்கின் தூக்கும் காந்தியின் துரோகமும்

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம்,
பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை
சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு
வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு
அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்
போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது.
இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான
இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
(காந்தி இர்வின் ஒப்பந்தம்)

இவ்வொப்பந்தப்படி "சுயராச்சியம்'
சம்பந்தமான சில சரத்துக்களையும், "இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான
ஒதுக்கீடுகள்' எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை
பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால்
புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.

இந்த
ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம்
சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய
குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட
மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது மட்டுமின்றி
பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த
கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி
கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு
இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட
எழுப்பவில்லை.

பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச்
சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப்
பேட்டியளித்தார். "பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள
மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?'' என ஒரு நிருபர் கேட்ட
கேள்விக்கு "என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான்
ஒன்றும் கூறமுடியாது'' எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட
முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார். "முதலாவதாக, வைசிராயின்
விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி
இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்... இதுபோன்ற
ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும்
முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது
இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.'' ஆம்;
பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!

காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப்
மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர். கராச்சியில்
காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில்
தூக்கிலிடப்பட்டார். ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான
ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர்
கலந்து கொண்டனர். "பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும்
தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்'' என இர்வினுடைய
வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்
ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே
அறிந்திருந்தனர். "மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக
நசுக்க ஆயத்தமாயிருந்தனர்'' என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of
Birhenhead P.305)

மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல்
சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும்
அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக
இருந்திருக்க வேண்டும். 1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின்
ஒப்பந்தம் இதன் ­மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில்
காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா
இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1  Empty Re: ’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1

Post by மாலதி Tue Sep 18, 2012 5:12 pm

காந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு ! பாகம் 5

1838இல் வங்கத்தில் தோன்றிய வங்க நில உடைமையாளர் சங்கமும், அதைத்
தொடர்ந்து ஏற்பட்ட பிரிட்டிஷ் இந்தியச் சங்கமும், “அரசியல் நிறுவனம்’ என்ற
வரையறுப்புக்கு உட்பட்டவை எனலாம். வெள்ளையனின் முதல் விசுவாச
அமைப்புக்களாகத் தோன்றிய இவ்வமைப்புக்கள் 1851இல் ஒன்றாக இணைந்தன. இதே
போன்ற சங்கங்கள் சென்னை, பம்பாய் போன்ற பல்வேறு நகரங்களில் நிறுவப்பட்டன.
ஆட்சியாளர்கள் மீது நல்லெண்ணம், நீதியுணர்வு, விசுவாசம் ஆகியவற்றை மக்கள்
கொள்வது, “மாட்சிமை பொருந்திய’ வைசிராய், கவர்னர்கள் போன்றோரிடம் கோரிக்கை
மனு கொடுத்துத் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கு மக்களுக்குக் கற்றுக்
கொடுப்பது இச்சங்கங்களின் நோக்கம். அப்போது கலெக்டராக இருந்தவரும்,
பிற்காலத்தில் காங்கிரசுத் தலைவருமான தாதாபாய் நவ்ரோஜி பம்பாய்ச்
சங்கத்தில் உறுப்பினர்.

அரசியல் தேவையை நிறைவு செய்ய
உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள் வெள்ளையர்கள் எதிர்பார்த்தவாறு செயலாற்ற
முடியவில்லை. அதேசமயம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் வாழ்வை முன்னேற்றிக்
கொள்ள மக்களும் தயாராக இல்லை. இதே கால கட்டத்தில் பயங்கரப் பஞ்சமாக
உருவெடுத்த பொருளாதாரத் துயரங்கள் மக்கள் கலகங்களாய் வடிöவடுத்தன. இந்த
மக்கள் கலகங்கள் எப்படியிருக்கும், அதன் தன்மை என்ன என்பதை அப்போது நாடு
முழுவதும் இருந்து வந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நிருபர்களின்
தகவல்களை குறிப்புக்களை வெட்டர்பர்ன் ஆதாரமாகக் கூறுகிறான்:


“இப்போது உள்ள நிலைமையில் நிராசையுற்ற இந்த ஏழை மக்கள் பட்டினி கிடந்து சாக
வேண்டியதாகும் என்று திகில் கொண்டு “ஏதாவது’ செய்ய வேண்டும் என விழைவதையே
அக்குறிப்புகள் எல்லாம் காட்டின… அந்த “ஏதாவது’ என்பது “வன்முறையே’! பழைய
வாள்களையும், ஈட்டிகளையும், தீக்குச்சி, வெடித் துப்பாக்கிகளும் ரகசியமாகப்
பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும், தேவைப்படும்போது தயாராக இருக்கும்
என்பதையும் எண்ணற்ற குறிப்புக்கள் காட்டின.”(மேற்படி புத்தகம், பக்: 80)

நெருக்கடியான இந்நேரத்தில்தான் ஹியூமும், அவனுடைய இந்திய ஆலோசகர்களும்
ஊக்கமாக இவ்விசயங்களில் தலையிட்டனர். எதிர்வரும் ஆபத்தின் தன்மையைத்
துல்லியமாக ஹியூம் உணர்ந்திருந்தான். “மிகப் பயங்கரமானதொரு புரட்சியின்
பெருத்த அபாயத்தில் நாம் உண்மையாகவே இருக்கிறோம் என்பதைப் பற்றி அப்போதோ
அல்லது இப்போதோ எனக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்பட்டதில்லை” என ஆட்சியாளர்களை
எச்சரித்த ஹியூம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் மிகத் தெளிவாகக்
கூறினான்.

“இந்திய மக்களிடையே அதிருப்தியுற்றவர்கள் 1857ஆம் ஆண்டு
நடைபெற்ற சுதந்திரப் போரினைக் காட்டிலும் தீவிரமான ஒரு எழுச்சியில்
பிரிட்டனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என, எனக்கு நம்பகமான தகவல்
கிடைத்துள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நீடிப்பதற்கு மிகப்
பெரும் அச்சுறுத்தலாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையை இல்லாதொழிக்க
வேண்டுமானால் பிரிட்டனுக்குப் பாதுகாப்பு வால்வைப் (குச்ஞூஞுtதூ ஙச்டூதிஞு)
போல செயல்படக்கூடிய இந்திய மேல் தட்டு வர்க்கங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது மிகமிக
அவசியம்.”

தன் திட்டத்தைச் செயல்படுத்த ஹியூம், தேர்ந்த
அரசியல்வாதியான வைசிராய் டப்பரின் பிரபுவைச் சந்தித்தான். இவர்கள்
சந்திப்பின் எதிரொலியாய்ப் பிறப்பெடுத்த காங்கிரசின் கதையை அதன் முதல்
தலைவன் டபிள்யூ.சி. பானர்ஜி தன்னுடைய “இந்திய அரசியலின் அறிமுகம்” என்ற
நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
“டப்பரின் பிரபு இவ்விசயத்தில் மிகுந்த
அக்கறை காட்டினார். சிறிது காலம் சிந்தித்த பிறகு அவர் ஹியூமை அழைத்தார்.
ஹியூமின் திட்டத்தால் பயனேதும் இராது என்பதே தம் கருத்து என்று கூறினார்.
இங்கிலாந்தில் அரசியின் எதிர்க்கட்சி ஆற்றும் பணியை இந்நாட்டில் ஆற்றக்
கூடிய குழுக்கள் ஏதுமில்லை… இந்திய அரசியல்வாதிகள் வருடத்துக்கொரு முறை
கூடி, “நிர்வாகத்தில் எவ்விதக் குறைகள் உள்ளன; அவற்றைத் திருத்த வழி என்ன’
என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற அவர், தம் கருத்துப்படி கூடுகிற
கூட்டத்திற்கு அங்குள்ள கவர்னர்கள் தலைமை வகிக்கக் கூடாது என்றும், ஏனெனில்
கவர்னருக்கு முன்னிலையில் மக்கள் மனம்விட்டுப் பேசமாட்டார்கள் என்றும்
உரைத்தார். டப்பரின் பிரபுவின் யோசனை
திரு. ஹியூமுக்கும் திருப்தி தந்தது….”

ஏகாதிபத்திய எஜமானர்களிடம் சோரம் போய்ப் பெற்றெடுக்கப்பட்ட காங்கிரசு
இவ்வாறுதான் இந்திய அரசியல் மேடையில் அரங்கேறியது. தாராள குணம் படைத்த
ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியக் கொள்கை இங்கே தெளிவாகிறதல்லவா? “வன்முறையை
அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர நிலைமைக்கு’ எதிரான ஒரு கருவியாக
“தேசிய’ காங்கிரசு செயல்பட வேண்டும். அதிகார வட்டத்தின் இந்நோக்கம் ஏதோ
பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று அல்ல; ஏகாதிபத்தியத்தின் தொடக்க காலத்திலேயே
ஏற்பட்ட ஒன்று. கீழ்கண்ட மேற்கோள் இதை மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது:


“1857க்குப் பின், அதாவது காங்கிரசுத் தோற்றத்துக்கு முந்தைய சில ஆண்டுகள்
மிக மிக அபாயகரமானவை. வரவிருந்த அபாயத்தை உணர்ந்து அதை தடுக்க முயன்றவர்
ஆங்கில அதிகாரிகளில் ஒருவரான ஹியூம்… ஒரு அகில இந்திய அமைப்புக்கான காலம்
முற்றிலும் கனிந்திருந்தது. ஒரு விவசாய எழுச்சி படித்த வகுப்பாரின்
அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்றிருக்கலாம். அதனிடத்தில் புதிய பாரதத்தைப்
படைப்பதற்குப் புதிதாய்த் தோன்றிய வகுப்பினருக்கு அது ஒரு தேசிய மேடையை
அளித்தது. வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரமான நிலைமை மீண்டும்
தோற்றுவிக்கப்படுவதைக் காலப் போக்கில் தடுத்தது என்பதால் எல்லாம்
நன்மைக்கே எனக் கொள்ளவேண்டும்.”(ஆண்ட்ரூஸ், முகர்ஜி; “இந்தியாவில் காங்கிரசுத் தோற்றமும், வளர்ச்சியும்’ பக். 1289)

1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால்
துவக்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும்
வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப்
புரட்சியை ஒழித்துக் கட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே
உண்மை. தாதாபாய் நவ்ரோஜி, திலகர், கோகலே, காந்தி, நேரு, சுபாஷ்போஸ் எவருடைய
தலைமையின் கீழும் காங்கிரசு மக்கள் போராட்டங்களைத் தடுத்து ஏகாதிபத்திய
எஜமானர்களுக்குச் சேவை செய்யும் நாயாகவே செயல்பட்டுள்ளது. மக்களைச் சாதி,
மத அடிப்படையில் பிரித்து மோதவிட்டுத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள
வேறு சில அடிவருடிக் கட்சிகளும் தேவைப்பட்டன. 1901இல் முசுலீம் லீக்கும்
1918ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1  Empty Re: ’மாகாத்மா’ காந்தி – துரோகத்தின் வரலாறு...பாகம் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்...மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!
» மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!
» இந்திய சுதந்திரம் தனியே மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் அகிம்சை வழியில் மட்டும் பெறப்படவில்லை. அதற்குப் பின்னால் கண்ணீரால், குருதியால், வியர்வையால் எழுதப்பட்ட வீரம் செறிந்த போராட்ட வரலாறு உள்ளது. ஆதலினால் ஆயுதம் எந்தி போராடியவர்களயும் வணங்குவோம்
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரின் தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
»  ஒரு துரோகத்தின் முன்னால்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum