TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நீதி கதை

3 posters

Go down

நீதி கதை  Empty நீதி கதை

Post by ஜனனி Tue Sep 18, 2012 7:23 am

ஒரு
காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும்,
தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும்
பயமுறுத்தி வந்தது.
நீதி கதை  558663_347401115354968_1490379505_n
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு அருகே செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது. அதைப்
பார்த்ததும் சிங்கம் கோபமடைந்து கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால்
கடித்துக் குதறுவேன், நகங்களால் பிறாண்டுவேன், நசுக்கிப் பொசுக்கிப்
போடுவேன்’ என்றது.


அதற்கு ஈ யோ நீ
பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.
ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே
நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும்
செய்வேனாக்கும்" என்று சிரித்த படியே கூறியது..

இதைக் கேட்ட
சிங்கம் கோபத்துடன் முடிந்தால் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து
சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. உடனே ஈ முதுகில் அமர்ந்த
போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம்
தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில்
அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன்
நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை
நன்றாக இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

கடசி வரை சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாமையை நினைத்து வெட்கப்பட்டது.

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான்

உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப்
படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன்
அச்சாணியே)
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by ஜனனி Tue Sep 18, 2012 7:25 am

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன.
நீதி கதை  399056_347403952021351_218954520_n
நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன.

சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருப்பணி வேலைகள் ஆரம்பமானது.


அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி யதாயிற்று..

புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.

அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன.

கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட
நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில்
அமர்ந்தன.

தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன்
திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு
அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம்
கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

அதனால்
கடுப்பான வேடன் நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து
விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார்
செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை
காத்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப்
பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில
மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று
தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை
பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து
கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை
விரித்து பறக்க ஆரம்பித்தது.

வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.

இதனைக் கண்ட வேடன், "அய்யய்யோ... புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான்
கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே...'' என்று புலம்பிக் கொண்டே,
பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும்
போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, "எங்களது வலிமையால்தான்
நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக
அடித்து பறக்கவில்லை என்றால்... அவ்வளவுதான்'' என்று கூறின.

உடனே
வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, "நாங்கள்தான் வலிமையோடு
பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது'' என்று
கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன.


இப்படி வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின்
பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன்
சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி
விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் "ஒற்றுமை நீங்கியதால் அனை
வருக்கும் தாழ்வு" என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி'' என்று
புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத்
தொடங்கினான்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by அருள் Mon Mar 03, 2014 8:35 am

குழந்தைகளுக்கு மிகவும் பயன்தரும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by logu Fri Mar 07, 2014 10:18 pm

"நீதிக்கதை"

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by logu Tue Apr 22, 2014 8:52 pm

நீதி கதை  10288734_1407796589495970_3986037652477814425_n
ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு. உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.
குரு கேட்டர் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. என்றார் குரு.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by logu Tue Apr 22, 2014 9:02 pm

நீதி கதை  10150692_1407818762827086_3054913990908186722_n

முன்னொரு காலத்தில் ஒர் உப்பு வியாபாரி இருந்தான். 


அவன்தினந்தோறும்ஒருகழுதையின்மீதுஉப்புமூட்டைகளைஏற்றிஊருக்குள்போய்வியாபாரம்செய்துவருவான்.போகும்வழியில்ஒருஆறுஇருந்தது.அந்தஆற்றைக்கடந்துதான்ஊருக்குள்போகவேண்டும். 


ஒருநாள்உப்புவியாபாரிவழக்கம்போலகழுதையின்முதுகில்உப்புமூட்டைகளைஏற்றிக்கொண்டுவியாபாரத்திற்குகிளம்பிச்சென்றான்.வழியில்உள்ளஆற்றைகழுதைகடந்தபோதுஎதிர்பாராமல்கழுதையின்கால்கள்வழுக்கிவிட்டது.எனவே,கழுதைதடுமாறிஆற்றுக்குள்விழுந்துவிட்டது. 


கழுதைதவறிவிழுந்ததால்அதன்முதுகில்இருந்தஉப்புமூட்டைநனைந்துவிட்டது.கழுதையைவியாபாரிமெல்லதூக்கிவிட்டான்.ஆனால்,நீரில்மூழ்கியதால்உப்புமூட்டைநனைந்ததுஅல்லவா?
அதுஒருசிலநிமிடத்தில்அப்படியே,தண்ணீரில்கரைந்துபாதிமூட்டையாகிவிட்டது. 


எனவே,கழுதைமுதுகில்இருந்தஉப்புமூட்டைவெறும்சாக்குப்போலஎடையில்லாதபடிஆகிவிட்டது.ஆஹாஎன்னஆச்சரியம்இப்போதுகழுதைமுதுகில்சுமையேதெரியவில்லை.
 
கழுதைக்குமிகுந்தசந்தோஷம்.ஆனால்வியாபாரிக்குபெரியநஷ்டம்.உப்புவியாபாரியும்உப்புவியாபாரம்செய்யவழியில்லாமல்கழுதையைஓட்டிக்கொண்டுவீட்டிற்குதிரும்பினான். 
மறுநாளும்வழக்கம்போலவியாபாரிஉப்புவியாபாரத்திற்குகிளம்பினான்.கழுதைமுதுகில்இருந்தஉப்புமூட்டைகழுதைக்குகனமாகஇருந்தது.கழுதைமெல்லநடந்துஆற்றுப்பாலம்அருகேவந்தது.திடீரெனஅதற்குமுந்தையநாள்நினைவுவந்தது.எனவே,மெல்லதடுமாறுவதுபோலசெய்துசட்டென்றுஆற்றுக்குள்விழுந்தது. 
அடுத்தநிமிடம்கழுதைமுதுகில்இருந்தஉப்புமூட்டைநீரில்கரைந்துவிட்டது.இன்றும்கழுதைக்குமுதுகில்சுமைஇல்லாதுபோய்விட்டது. 
கழுதைதனதுதந்திரத்தால்தொடர்ந்துஇதையேசெய்தவந்தது.இதனால்தினமும்வியாபாரத்திற்குப்போகமுடியாமல்வியாபாரிதொடர்ந்துசிரமம்கொண்டான். 
ஒருநாள்வியாபாரிவழக்கம்போலகழுதையின்முதுகில்உப்புமூட்டைகளைஏற்றிக்கொண்டுவியாபாரத்திற்குகிளம்பிச்சென்றான்.செல்லும்வழியில்கழுதைகொண்டுவருகின்றஉப்புஎப்படிகாணமல்போன்கின்றனஎன்றுயோசித்துக்கொண்டேகழுதையின்நடவடிக்கைகளைகவனித்தான். 
கழுதைவேண்டுமென்றேஆற்றுக்குள்விழுந்தது.அவனுக்குமெல்லமெல்லகழுதையின்தந்திரம்புரிந்தது.எனவே,அதற்குஒருநல்லபாடம்கற்பிக்கநினைத்தான். அன்றுகழுதைமுதுகில்வழக்கம்போலஉப்புமூட்டையைஏற்றவில்லைவியாபாரி.மாறாக,பஞ்சுநிறைந்தஒருசாக்குமூட்டையைகழுதைமுதுகில்ஏற்றினான்.கழுதைவழக்கம்போலஆற்றுபாலத்தின்அருகேவந்தது.எதிர்பாராமல்கால்தடுமாறுவதுபோலதடுமாறிஆற்றிற்குள்விழுந்தது. மூட்டையில்இருந்தபஞ்சுநீரில்நனைந்தது.அடக்கஷ்டமே!கழுதையின்முதுகில்இருந்தபஞ்சுமூட்டைமுன்பைவிடஅதிகமாககனத்தது.கழுதையும்மிகவும்கஷ்டப்பட்டுஆற்றைக்கடந்துகரைக்குவந்துசேர்ந்தது. 
தனதுஏமாற்றுவேலைஇவ்வளவுநாள்தன்னைக்காப்பாற்றிவந்தவியாபாரிக்குத்தெரிந்துவிட்டத்தைஎண்ணிவெட்கப்பட்டது.இனிநேர்மையாகநடக்கமுடிவெடுத்தது. 
நீதி:நாமும்.நம்மைநம்பியவர்,நம்பாதவர்யாரையும்ஏமாற்றக்கூடாது.அப்படிசெய்தால்ஒருநாள்நம்செயல்அவர்களுக்குத்தெரியவரும்.அன்றுஅவமானம்அடையும்நிலைவரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by logu Tue Apr 22, 2014 9:09 pm

ஒரு ஆலயத்தின் பக்கத்திலே பழக்கடை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தார் ஒரு பக்தர். தினமும் அங்கே வரும் ஒரு ஏழைச் சிறுவன் அவருக்கு தெரியாமல் இரண்டு பழங்களைத் திருடிச் செல்வது வழக்கம். திருடிய பழங்களில் ஒன்றை கோவில் வாசலில் இருக்கும் ஒரு வறியவருக்குக் கொடுத்து மற்றதைத் தானும் உண்டு தனது பசியைத் தீர்த்துக்கொள்வான்;. ஒரு நாள் அவன் பழங்களைத் திருடும் போது கடைக்காரரிடம் வகையாக மாட்டிக் கொண்டான். பையனிடம் வினவியபோது தான் இரண்டு பழங்கள் தான் திருடுவதாகவும்,அதில் ஒன்றை கோவிலிலிருக்கும் வறியவருக்கும கொடுப்பதாகவும் கூறினான். பழங்களைத் திருடியவனோ ஒரு சிறுவன் என்று நினைத்து அந்தச் சிறுவனைத் தண்டிப்பதில் கடைக்காரருக்கு அவ்வளவு விருப்பமில்லை. எனினும் அவனைத் தண்டிக்காமல் விடுவது அவனது வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று முடிவு செய்தார். அதன்படி ”கோவிலை நூறு முறை சுற்றிவருவதுதான் உனக்கு தண்டனை” என்று கூறினார். பையனும் சுற்றிவர ஆரம்பித்தான். அவன் சுற்றி வருவதைக் கடைக்காரர் கண்காணித்துக்கொண்டு இருந்தபோது ஒரு சுற்றில் அந்தச் சிறுவன் தெரிந்தால் மறுசுற்றில் சிறுவனுக்குப் பதிலாக பகவான் கிருஷ்ணர் தெரிவார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. அன்றிரவு கடைக்காரர் கனவில் தோன்றிய பகவான் ” அந்தச் சிறுவன் தினமும் உனது கடையில் திருடிய இரண்டு பழங்களில் ஒன்றை எனக்கல்லவா தந்துவிடுகிறான். அதுதான் நீ கொடுத்த தண்டனையில் பாதிப்பங்கு எனக்கும் உண்டென்று ஐம்பது சுற்றுக்கள் நானும் சுற்றினேன்.” என்றார். (நற்சிந்தனை)
எப்பொழுதும் எந்த நேரத்திலும் எழைகளை அரவணைத்து வாழ்பவரையே, இறைவனுபம் அரவணைக்க விரும்புவான். (எமர்சன் ஹில்)
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by logu Tue Apr 22, 2014 9:11 pm

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.
கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.
மாறாக, ஆத்திரத்தில், “நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்” என்று கேட்டான்.
அதற்கு கடவுள், “பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே” என்றார்.
“கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்” என்று பிடிவாதமாக கேட்டான்.
இதனைக் கேட்ட கடவுள், “சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது” என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.
“தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்”, என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.
உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.
சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. “அய்யோ கடவுளே காப்பாற்று!” என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.
இந்தக் கதையில் வரும் பக்தனுக்கு அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் தான் வேலை செய்தது. அது அழிவைத் தந்தது. எனவே, கோபத்தை தவிருங்கள். அன்புடனும், அமைதியுடனும் வாழுங்கள்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by ஜனனி Mon Apr 28, 2014 6:48 pm

நீதி கதை  10314720_1410619922546970_3533192580264639219_n
மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.
அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அதற்கு மீன் பிடிப்பவன், தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.
'அது எப்படி செயல் படுகிறது..??' என்று கேட்டான்.
''சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்...!'' என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.
இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.
வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான், 'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. இப்படி தான் நீ மீன் பிடிப்பாயா..? அது சரி, இன்று இந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்..?
மீனவன் சொன்னான்....
''இன்று நீ ஆறாவது...!!''
இப்படித்தான் நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி..??” கோடீஸ்வரர் ஆவது எப்படி..??” சிறப்பாக தொழில் செய்வது எப்படி..??” என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர்...!!!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by அருள் Thu May 15, 2014 6:58 am

"நீதிக்கதை"
கடமையை செய் ! கடமைக்கு செய்யாதே...
ஒரு கட்டிடத்தில் சிற்பி ஒருவர் சிலையை செதுக்கி கொண்டு இருந்தார்.அந்த வழியே போன ஒருவர் அவர் செதுக்குவதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்.அருகில் இன்னொரு சிலை இப்பொழுது செதுக்கும் சிலை போலவே இருப்பதை பார்த்து இரண்டு சிலை ஒரே மாதிரி செதுக்க சொல்லி சொன்னார்களா என்று கேட்டார்.
ஒரு சிலை தான் செதுக்க சொன்னார்கள் அந்த சிலையில் சின்ன குறை இருக்கிறது அதனால் வேறு ஒரு சிலை செதுக்குகிறேன் என்றார்.வந்தவரும் அந்த சிலையை அதிக நேரம் உற்று பார்த்தார் ஆனால் அவரால் எந்த குறையும் கண்டு பிடிக்கமுடியவில்லை.இதில் எந்த குறையும் இருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லையே என்று சிற்பியிடம் சொன்னார்.
சிலையை நான் முழுவதுமாக முடித்துவிட்டேன் கடைசி நேரத்தில் சின்னதாக ஒரு கீரல் விழுந்து விட்டது, சிலையின் மூக்கு பகுதியில் உற்று பாருங்கள் சின்னதாக ஒரு கீரல் விழுந்துள்ளது தெரியும் என்று சிற்பி சொன்னார்.வந்தவரும் அந்த சிலையை நன்கு உற்று பார்க்கும்போது அந்த கீரல் தெரிந்தது.
இந்த சிலையை எங்கே வைக்க போகிறீர்கள் என்று கேட்டார்.அதோ இருக்கிறதே 20 அடி தூண் அதன் மேலே வைக்கப்போகிறோம் என்று சிற்பி சொன்னார்.
அவ்வளவு மேலே வைக்கும் போது இந்த கீரல் யாருக்கும் தெரியாதே அந்த சிலையையே வைத்து இருக்கலாமே என்று வந்தவரும் சொன்னார்.
’மேலே இருப்பவர்க்கு’ தெரியும் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர ஆரம்பித்தார் சிற்பி.
நீதி: எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.கடமையை செய்யுங்கள்,கடமைக்கு செய்யாதீர்கள்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by ஜனனி Sun Aug 17, 2014 8:16 pm

ஓர் அறிஞருக்கு இலக்கண சுத்தமாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். மாற்றிப் பேசுபவர்களைக் கண்டால் கோபப்படுவார்.

ஒருநாள் இரவில், அவர் ஒரு கிணற்றில் விழுந்து விட்டார். உள்ளே தண்ணீர் இல்லை. அடிப்பாகத்தில் மணல் கிடந்ததால், காயமில்லாமல் தப்பி விட்டார். ஆனால், வெளியே வரும் உபாயம் தெரியவில்லை.

“யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஓலக்குரல் இட்டார். இதை அவ்வழியாகச் சென்ற ஒருவன் இதைக் கேட்டான்.

கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். அவனால் தனியாக மீட்க முடியாதென புரிந்து விட்டது. “ஐயா! சற்றுப் பொறுங்கள். ஊருக்குள் சென்று உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறேன். இருளாகவேறு இருக்கிறது. விளக்கிற்கும் ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

ஆபத்தில் கிடந்தவர், “நன்றியப்பா! விரைந்து வா,” என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. யாரிடம் என்ன சொல்வது என்று இல்லாமல், “தம்பி! நீ பேசியதில் இலக்கணப் பிழை இருக்கிறது. ‘ஆட்களைக் கூட்டி வருகிறேன்’ என்பது நிகழ்காலம் ‘கூட்டி வருவேன்’ என்றால்தான் எதிர்காலம். எதிர்காலத்தில் நடக்கப் போவதை நிகழ்காலமாக்கிவிட்டாயே,” என்றார்.

“சரி சாமி! முதலில், எப்படி பேச வேண்டும் என்று இலக்கண வல்லுநர்களிடம் போய் கற்றுக்கொண்டு, அதன் பிறகு ஆட்களைக் கூட்டி வருகிறேன்,” என சொல்லி விட்டு போயே போய்விட்டான்.

எந்த நேரத்தில் என்ன தேவையோ, அதைத் தான் பேச வேண்டும். உங்கள் கற்பனை குதிரையைத் தட்டிவிடுங்கள்.

நன்றி; கண்ணன்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நீதி கதை  Empty Re: நீதி கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum