Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Page 1 of 1

சென்னை,
செப்., 10 : கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது காவல்துறையினர் நடத்திய
தடியடி தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து வைகோ செய்திக் குறிப்பில்,
கூடங்குளம் அணுமின் நிலையம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அந்தப்
பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், இடிந்தகரையில், ஓராண்டுக்கும்
மேலாக அமைதி வழியில், அறவழியில், பட்டினிப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இம்மாதிரி ஒரு போராட்டம், ஒரே இடத்தில், ஓராண்டுக்கும் மேலாக, அறவழியில்
நடந்த வரலாறு, இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது.
சாதி, மதம்,
கட்சி எல்லைகளைக் கடந்து, அம்மக்கள் போராடினர். 1988 ஆம் ஆண்டு, நவம்பர்
மாதம், கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி
அறிவித்த நாளில் இருந்து, இப்பகுதி வாழ் மக்கள், குறிப்பாக மீனவ
சமுதாயத்தினர் போராடி வருகின்றனர். குறிப்பாக ஜப்பானில் புகுஷிமா அணு உலை
விபத்து நேர்ந்ததற்குப் பின்னர், உலகத்தில் பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூட
முடிவு செய்து உள்ள நிலையில், இடிந்தகரைப் போராட்டம், மாபெரும் மக்கள்
போராட்டம் ஆகியது.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அணு
உலையை இயக்கியே தீருவோம் என்றதோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்,
மேலும் அணு உலைகளை அங்கே அமைக்கப் போவதாக அறிவித்தது.
தமிழ்நாட்டில் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம், கூடங்குளம் அணு உலை
மூலமாக மின்சாரம் கிடைக்கும் என்ற பிரச்சாரத்தை, மத்திய அரசும், மாநில
அரசும் மேற்கொண்டன. இந்தியாவில், மொத்தம் 21 அணு உலைகள் தருகின்ற
மின்சாரம், நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில், 2.7. விழுக்காடு மட்டுமே
ஆகும்.
கூடங்குளம் அணு உலையால், தமிழ்நாட்டுக்கு அதிகபட்சம், 250
மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கும். மின் வாரியத்தைச் சீர்படுத்துவதன்
மூலம், இயற்கை எரிவாயு மூலமும், புனல் மின் நிலையங்கள், அனல் மின்
நிலையங்கள் மூலம், சூரிய வெப்பத்தின் மூலமும், நமக்குத் தேவையான
மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம்.
கூடங்குளத்தில்
உற்பத்தியாகும் மின்சாரத்தை, கொலைகார சிங்களவனுக்குக் கொண்டு போய்க்
கொடுக்க, கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கும் வேலையும் வேகமாக நடக்கின்றது.
இடிந்தகரையில் நடந்த போராட்டத்தில்,
மாற்றுத்திறனாளிகளும், கன்னியாஸ்திரீகளும் ஆயிரக்கணக்கான தாய்மார்களும்,
365 நாள்கள் தொடர்ந்து, உண்ணாநிலை அறப்போர் நடத்தினர். இத்தனைக்குப் பிறகு,
தமிழகத்தின் முதல் அமைச்சர், அணு உலையால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று
செப்டெம்பரில் அறிவித்தவர், கடற்கரையோர மக்களின் கொந்தளிப்பைக் கண்டு,
அவர்களின் அச்சம் தீரும்வரை, அணு உலையை இயக்க மாட்டோம் என்று உறுதி
கொடுத்தார். ஆனால், அந்த உறுதிக்கு மாறாக, அணு உலையை இயக்குவதற்கு அனுமதி
அளித்தார்.
மக்களின் போராட்டத்தை நசுக்கி விடலாம் என்று கருதி,
மத்திய அரசு, அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் வேலையைத்
தொடங்கியது. இவர்களது நோக்கம் எல்லாம், இங்கே கிடைக்கும் புளுடோனியத்தை,
அணுகுண்டுக்குப் பயன்படுத்துவதற்காகத்தான். எனவே, நேற்றைய தினம்,
இடிந்தகரை, கூடங்குளம், வைராவிக்குளம், கூட்டப்புளி பகுதிகளைச் சேர்ந்த
மக்கள், அணு உலையைத் திறக்கக்கூடாது என்று அமைதிவழியில், அறப்போர்
நடத்தினர்.
இன்று, அவர்களை, காவல்துறையினர் அச்சுறுத்தி மிரட்டி,
போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று, தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகை வீசினர்.
இதில் மீனவர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர்.
இடிந்தகரையில்,தேவாலயத்துக்கு உள்ளே காவல்துறையினர் நுழைந்தது அக்கிரமமான
செயல். அதுமட்டும் அல்ல, இவ்வளவு காலமும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த
இடத்தில் இருந்த போர்டுகளை போலீசார் உடைத்து நொறுக்கியதோடு, உண்ணாவிரத
மேடையில், அச்சில் ஏற்ற முடியாத விதத்தில், கீழ்த்தரமாக நடந்து கொண்டனர்.
கூடங்குளத்தில் தெருவில் போவோர் வருவோரையெல்லாம், போலீசார் கடுமையாகத்
தாக்கி உள்ளனர். கடற்கரை நெடுகிலும் பதற்றம் ஏற்பட்டதற்கு, காவல்துறையின்
நடவடிக்கைகளே முழுக்காரணம் ஆகும் என்பதால், மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்க
அனுமதிக்கக் கூடாது. அப்பகுதி வாழ் மக்கள் மீது போடப்பட்டு உள்ள அனைத்து
வழக்குகளையும், காவல்துறை திரும்பப் பெற வேண்டும். மேலும் அடக்குமுறையைப்
பயன்படுத்த நினைத்தால், அது எரிமலையின் சீற்றத்தைக் கைகளால் அடக்க முயலும்
விபரீதம் ஆகி விடும் என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
» நவநீதம்பிள்ளையின் பயணம் நீதியை வழங்குமா என உலகத் தமிழர்கள் எதிர்ப்பார்த்திருப்பதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
» தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும்படி ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தத் துளிகளின் பெயரால் வேண்டுகிறேன் -ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ
» அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி: விஜயகாந்த் கண்டனம்
» கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது தடியடி - நீதி விசாரணை நடத்தக்கோரிய மனு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum