Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம்... : ஜீனியர் விகடன்
Page 1 of 1
மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம்... : ஜீனியர் விகடன்
மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம்... : ஜீனியர் விகடன்
08 09 12
எதிர்வரும் திங்கட்கிழமை (செப் 10) ஜெனீவா- ஐக்கியா நாடுகள் மனித உரிமைச்
சபையின் 21வது கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இக்கூட்டத் தொடர்
அமர்வில் சிறிலங்கா தொடர்பில் இந்தியா வகிக்கபோகும் நிலைப்பாடு குறித்த
கவனம் தமிழக மட்டத்தில் எழுந்துள்ளது.
சிறிலங்காவின் தொடர்பிலான
மீளாய்வு ஐ.நா மனித உரிமை அமர்வில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் சிறிலங்கா
தொடர்பிலான மீளாய்வின் கடிவாளம் இந்தியா உட்டப பெல்ஜியம மற்றும் பெனின்
ஆகிய நாடுகளின் கைகளில் உள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில்
இந்தியா தொடர்பிலான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழர் தரப்பு
எதிர்பார்புகள் குறித்த தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஜீனியர் விகடன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் முழுவிபரம் :
இதே நாட்களில்,
அதாவது செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை மட்டக்களப்பில் 'நீர்க்காகம்
3, 2012’ என்ற இலங்கை ராணுவத்தின் போர்ப்பயிற்சி, வெளி நாட்டுப் படைகளுடன்
நடக்கவுள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு போன்ற
நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இது மறைமுகமாக ஐ.நா-வுக்கு
இலங்கை கொடுக்கும் நெருக்கடி என்கிறார்கள். செப்டம்பர் 22-ம் தேதி
ஜெனீவாவில் இலங்கை பற்றிய மனித உரிமை விவகாரங்கள் விவாதிக்கப்பட இருக்கும்
நிலையில், செப்டம்பர் 21-ம் தேதி ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதற்கான
மறைமுகக் காரணமே இதுதானோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
ஏனென்றால்
இந்தக் கூட்டத் தொடரில், மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கும் சில
நாடுகளின் உள்நாட்டு மனித உரிமைப் பிரச்னைகள், மேம்பாடு மற்றும்
செயல்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப் படும். இந்தமுறை ஆய்வுக்கான
நாடுகளில் இலங்கையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த
ஆய்வு தொடர்பாக ஏற்கெனவே 400 பக்க அறிக்கையை இலங்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்து தேவையான முடிவு எடுக்கும் பொறுப்பை,
இந்தியா (ஆசியா), ஸ்பெயின் (ஐரோப்பியா), பெனின் (ஆப்பிரிக்கா) ஆகிய மூன்று
நாடுகளிடம் ஒப்படைத்துள்ளது ஐ.நா. சபை. இந்த மூன்று நாடுகளுமே கடந்த முறை
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில்,
தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்.
இதுதொடர்பாக, நாடு கடந்த
தமிழீழ அரசின் ஊடகத்துறை அமைச்சர் சிவ குருநாதன் சுதர்சனிடம் பேசியபோது,
''இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மனிதஉரிமை மீறல்
குற்றங்கள் நடக்கின்றன என்ற நிலைப் பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். இதை,
ஐ.நா சபையில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தெற்காசியப் பிராந்திய
விவகாரங்களில் இந்தியாகொண்டுள்ள முக்கியப் பாத்திரம் என்பதற்கு அப்பால்,
இலங்கைத் தீவுக்கு மிகநெருக்கமாக உள்ள நாடு என்ற அடிப்படையிலும், அங்கு
காலம், காலமாக சிங்கள அரசுகளால் தமிழர்கள் சந்தித்துவரும் அவலங்கள்
குறித்து அக்கறைகொள்ள வேண்டியதும் இந்தியாவின் கடமை'' என்றார்.
முடிவு எடுக்கும் நாடுகளாக ஸ்பெயின், பெனின் போன்றவை இருந்தாலும்
இந்தியாவின் நிலையைக் கொண்டே இலங்கை மீதான இந்த நாடுகளின் தீர்ப்பு அமையும்
என்கிறார்கள் மனித உரிமை நோக்கர்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு
வந்து அதன் ஆட்சியாளர்களைச் சந்திப்பது நல்லது என்று ராஜபக்ஷே
முடிவுசெய்தார். அதற்காகவே சில விழாக்கள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
மாமன்னர் அசோகரின் மகள் சங்கமித்திரை புத்த மதத்தைப் பரப்புவதற்காக
இந்தியாவில் இருந்து இலங்கை சென்றதை நினைவுகூரும் ஓவியத்தை டெல்லியில் உள்ள
இலங்கைத் தூதரகத்தில் பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்துப்
பேசிய போது, 'செப்டம்பர் 21-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி
நகருக்கு ராஜபக்ஷே வருகிறார்’ என்ற தகவலைத் தெரிவித்தார். புத்தர் ஞானம்
பெற்றதன் 2600-வது ஆண்டு விழாவை முன்னிட்டு புத்தமதம் தொடர்பான கல்வி
மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக ராஜபக்ஷே வருவதாகக் கூறினார். இது,
தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'சாஞ்சிக்கு வரும்
ராஜபக்ஷேவை அங்கேயே வந்து மறிப்போம்’ என்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
வைகோ அறிவித்தார்.
செப்டம்பர் 17-ம் தேதி அண்ணா நினைவிடத்தில்
இருந்து இவர்கள் பேருந்தில் கிளம்புகிறார்கள். ராஜபக்ஷேவின் வருகையை
எதிர்த்து கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் சுஷ்மா
ஸ்வராஜை எதிர்த்து, தொல். திருமாவளவன் பேனர் பிடித்தபடி நின்றார். இந்தக்
காட்சிகள் பி.ஜே.பி.க்கு சிக்கலை ஏற்படுத்தியது. 'மத்தியப் பிரதேச
அரசாங்கம்தான் ராஜபக்ஷேவை அழைத்து வருகிறது’ என்று சமாதானம் சொன்னார்
சுஷ்மா. ஆனாலும், கொந்தளிப்பு அடங்கவில்லை.
வைகோவிடம் பேச சுஷ்மா முயற்சிக்க, வைகோ அவரிடம் பேச விரும்பவில்லை.
இதுகுறித்துப் பேசிய தமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணன், ''ராஜபக்ஷேவை இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும்
அழைக்கக் கூடாது என்பதுதான் தமிழக பி.ஜே.பி-யின் கருத்து. நான் சுஷ்மா
ஸ்வராஜிடம் இதுகுறித்துப் பேசியபோது, 'ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருகை தருவது
மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்தான். எதிர்க்கட்சியைச் சேர்ந்த
ஒருவர், எப்படி ஒரு நாட்டின் அதிபரை அழைத்து வர முடியும்’ என்று கேள்வி
எழுப்புகிறார்.
அதனால் இது காங்கிரஸ் கட்சியின் அழைப்புதான். இதை
எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதையும் கண்டனம் தெரிவிப்பதையும்
விட்டுவிட்டு, தி.மு.க. தன் ஆதரவைத் திரும்பப் பெறலாமே?'' என்றார்.
இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காக ராஜபக்ஷே வருவதே, இந்தியாவில் பிரச்னை ஆகி விட்டது!
- மகா.தமிழ்ப் பிரபாகரன்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வில் மீண்டும் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
» ஐ.நா பதவிக்கு மீண்டும் போட்டியிடும் பான் கீ மூன் : இலங்கை விவகாரம் செல்வாக்கு செலுத்துமா?
» ராஜபக்ஷே டைரக்ஷனில் 'டூப்ளிகேட் புலி'! --விகடன்
» தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்!- விகடன்
» தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்: மன்மோகனிடம் ராஜபக்ஷே புது யோசனை
» ஐ.நா பதவிக்கு மீண்டும் போட்டியிடும் பான் கீ மூன் : இலங்கை விவகாரம் செல்வாக்கு செலுத்துமா?
» ராஜபக்ஷே டைரக்ஷனில் 'டூப்ளிகேட் புலி'! --விகடன்
» தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்!- விகடன்
» தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்: மன்மோகனிடம் ராஜபக்ஷே புது யோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum