Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வேட்பாளர் 'கான்வாயில்' 75 கார்கள் : தேர்தல் அதிகாரிகள் மிரட்சி
Page 1 of 1
வேட்பாளர் 'கான்வாயில்' 75 கார்கள் : தேர்தல் அதிகாரிகள் மிரட்சி
: வேட்பாளர் கன்வாயுடன் 75க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து சென்றதால்
தேர்தல் அதிகாரிகள், வாகனங்களின் எண்களை, வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க.,வினர்
மனு தாக்கலுக்கு முன்பாக, பென்னாகரம் அரசு மகளிர் பள்ளி அருகே, ஈ.வெ.ரா.,
சிலைக்கு மாலை அணிவித்தனர். கட்சியினர் முதலில் குரல் எழுப்பினாலும்,
பள்ளி அருகில் சற்று அமைதியை காத்தனர். பிறகு அங்கிருந்து மெயின்ரோடு
வழியே, தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றனர். தேர்தல் விதிமுறையின்படி,
வேட்பாளர் "கான்வாயுடன்' மூன்று கார்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட
நிலையில், 75க்கும் அதிகமான கார்களை பார்த்த, தேர்தல் அதிகாரிகள்
மிரண்டனர். போலீசாரும் கண்டு கொள்ளாதால், அனைத்து வாகனங்களின் எண்களையும்,
தேர்தல் அதிகாரிகள், வீடியோ மூலம் பதிவு செய்தனர்.
தேர்தல்
விதிமீறல் குறித்து மாவட்ட கலெக்டர் அமுதா கூறியதாவது: "கான்வாயுடன்'
மூன்று வாகனம் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகப்படியான
வாகனங்கள் வந்ததாக கூறப்படுகிறது. அவற்றில் கட்சிக் கொடி, சின்னம் ஏதாவது
இடம் பெற்றுள்ளதா என, வீடியோபதிவு செய்ய உத்தரவிடப்பட்டு, தாசில்தாரிடம்
விவரமும் கேட்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவில், விதிமீறல் தெரிந்தால்,
கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், பள்ளியின் அருகே ஈ.வெ.ரா.,
சிலைக்கு மாலை அணிவித்த போதும், வீடியோ பதிவில் மாணவர்களுக்கு இடையூறு
ஏற்படும் விதத்தில் சம்பவம் இருந்தால், அதுவும் தேர்தல் விதிமீறலாக வழக்கு
பதியப்படும். இவ்வாறு அமுதா கூறினார்.
தி.மு.க - பா.ம.க - தே.மு.தி.க., கட்சிகள் மனு தாக்கல்:
பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தலில்,நேற்று, தி.மு.க., - பா.ம.க., -
தே.மு.தி.க., கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். பென்னாகரம்
தொகுதிக்கான மனு தாக்கல் கடந்த 3ம் தேதி துவங்கியது. அ.தி.மு.க.,
வேட்பாளர் அன்பழகன் உள்ளிட்ட எட்டு பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று, தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்,
12.07 மணிக்கு, தேர்தல் அலுவலர் மகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தார்.
அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், வேலு, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் தமிழ்செல்வன்
ஆகியோர் உடனிருந்தனர். தி.மு.க., சார்பில், மறைந்த பெரியண்ணன் மனைவி
ஜானகி, தாமரைசெல்வன் எம்.பி., பேரூர் செயலர்கள் சண்முகம்
(பாப்பாரப்பட்டி), தமிழ்செல்வன் (பென்னாகரம்) ஆகிய நான்கு பேர், மாற்று
வேட்பாளராக மனு தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து,
12.35க்கு பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் தேர்தல் அலுவலர்
மகேஸ்வரியிடம், மனு தாக்கல் செய்தார். உடன், முன்னாள் மத்திய அமைச்சர்
அன்புமணி, பா.ம.க., தேர்தல் பணிக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.,
மாது, மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர். பா.ம.க.,
சார்பில், மாவட்ட பொருளாளர் சந்திரா மாற்று வேட்பாளராக மனு தாக்கல்
செய்தார். மதியம் 2.55க்கு, தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மன், தேர்தல்
அலுவலர் மகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தார். மாநில துணைச் செயலர்
இளங்கோவன், தேர்தல் பிரிவு செயலர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலர்கள்
இளங்கோ (தர்மபுரி), பார்த்திபன் (சேலம்) ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்பசேகரன் சொத்து எவ்வளவு?
பென்னாகரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரனின் குடும்ப சொத்தாக
ரொக்க பணம் 17 லட்சம் ரூபாயும், 140 சவரன் நகை மற்றும் பல லட்சத்துக்கு
அசையும், அசையா சொத்துகள் இருப்பதாக மனுவில் கூறியுள்ளார். மனுவில்,
சொத்து விவரங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்புகள் வருமாறு:
இன்பசேகரன் பெயரில் ரொக்க பணம் 10 லட்ச ரூபாய், வங்கி இருப்பு தொகை
பென்னாகரம் தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கியில் 5,000 ரூபாய், ரிலையன்ஸ்
ஷேர் 3,989, எச்.டி.எப்.சி., ஷேர் 25 ஆயிரம் ரூபாய், டிப்பர் லாரி
(ஆந்திரா பதிவு எண்) 7 லட்சத்து 51 ஆயிரத்து 104 ரூபாய், நகை 30 சவரன்
மற்றும் வங்கி கடன் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். இன்பசேகரனின் மனைவி
பிரவீனாவிடம் ரொக்க பணம் 3 லட்சம், பெங்களூரில் ஆந்திர வங்கியில் 20
ஆயிரம் ரூபாய், நகை 60 சவரன், "ஸ்கார்பியோ' கார் மதிப்பு 5 லட்சத்து 2
ஆயிரம் ரூபாய். இன்பசேகரனின் தாய் ஜானகியிடம் ரொக்க பணம் 4 லட்சம் ரூபாய்,
காரிமங்கலம் இந்தியன் வங்கியில் இரு வங்கி கணக்கில் 4 லட்சம் ரூபாய்
மற்றும் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் 3,170
ரூபாய், "டாமின்' காப்பு தொகை 5 லட்சம் ரூபாய் மற்றும் 50 லட்சத்து 77
ஆயிரம் மதிப்பு கம்பரசர், 50 சவரன் நகை உள்ளது. ஏனைய சொத்துகள்
விவரங்களில் இன்பசேரன் பெயரில் 3 லட்சம் ரூபாயும், பிரவீனாவுக்கு 2 லட்சம்
ரூபாயும், ஜானகி பெயரில் 4 லட்சம் ரூபாயும் உள்ளது. அசையா சொத்துகள்,
இன்பசேகரன் மற்றும் அவரது தாய் ஜானகி பெயரில் பருவதனஅள்ளியில் கால் ஏக்கர்
நிலம் மற்றும் 12.5 சென்ட் காலி நிலம், 2,400 சதுர அடியில் ஆஸ்பெட்டாஸ்
சீட் கொண்ட வீடு, சாலைக்குள்ளாத்திரம் பட்டியில் குடிசை வீடு ஒன்று
உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்க்குமரன் சொத்து விவரம்:
பென்னாகரம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரனுக்கு அசையும் மற்றும்
அசையா சொத்துக்கள் ஒரு கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 701 ரூபாய்
மதிப்பிலும், 22 லட்சத்து 79 ஆயிரத்து 60 ரூபாய் கடன் உள்ளதாகவும் மனுவில்
குறிப்பிட்டுள்ளார்.
காவேரிவர்மன் சொத்து விவரம்:
பென்னாகரம் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மனுக்கு, 27 லட்சத்து
35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளதாக மனுவில்
குறிப்பிட்டுள்ளார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மக்கி மண்ணாகும் அரசு வி.ஐ.பி., கார்கள்: வாடகை கார்களை நாடும் சுயநல அதிகாரிகள்
» அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் வெற்றி
» டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால்
» சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் 2010: தமிழர் கூட்டமைப்பின் முழு வேட்பாளர் பட்டியல்
» அதிகாரிகள் மாற்றம் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது: தேர்தல் ஆணையம்
» அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் வெற்றி
» டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால்
» சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் 2010: தமிழர் கூட்டமைப்பின் முழு வேட்பாளர் பட்டியல்
» அதிகாரிகள் மாற்றம் ஆணையத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது: தேர்தல் ஆணையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum