Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அதிமுக செயற்குழுக் கூட்டம் : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்
Page 1 of 1

சென்னை, ஆக., 27 :
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில்,
அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமயகத்தில் இன்று மதியம்
நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் அமைச்சர்
பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம், 1. பல்வேறு நலத்திட்டப் பணிகளை வழங்கிய தமிழக அரசினைப் பாராட்டி, நன்றி தெரிவிப்பது.2.
திருச்சிராப்பள்ளி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை ஆகிய சட்டமன்றத்
தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கு பாராட்டுத்
தெரிவித்தும், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல். 3.
ஆட்சியில் இருக்கும் போது இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு காரணமாக
இருந்துவிட்டு, ஆட்சியில் இல்லாத போது இலங்கைத் தமிழர்களின் உரிமைப்
பாதுகாப்பு என்ற போர்வையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க. தலைவர்
கருணாநிதிக்கும், தி.மு.க-விற்கும் கடும் கண்டனம்!2009-ஆம்
ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது, மத்திய
கூட்டணி அரசை தாங்கிப் பிடித்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த தி.மு.க.
தலைவர் கருணாநிதி, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி
இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசை வற்புறுத்தாமல்,
தமிழர்களை ஏமாற்றும் வகையில் காலை சிற்றுண்டி உண்ட பின், உண்ணாவிரதம்
மேற்கொண்டு, மதிய உணவு நேரம் வந்தவுடன், “இலங்கையில் போர் முடிந்துவிட்டது”
என்ற பொய்யான தகவலைக் கூறி மூன்று மணி நேரத்தில் “சாகும் வரையிலான” தனது
உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார். கருணாநிதியின் இந்த அறிவிப்பினை நம்பி,
பதுங்கு குழிகளில் இருந்து வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது
இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிந்தது. இந்தக் கொடூரத் தாக்குதலில் 50
ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் மாண்டனர். அந்தத் தருணத்தில்,
இது குறித்து வாய் திறக்காத கருணாநிதி, தற்போது இலங்கை அரசு தன்னை
ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். இதிலிருந்து, இலங்கையில், கொத்துக்
கொத்தாக தமிழர்கள் உயிரிழந்ததற்கு தன்னுடைய உண்ணாவிரதம் தான் காரணம் என்பதை
கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பது தெளிவாகிறது. ஆட்சியில்
இருந்தால், தன் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவதையும், ஆட்சியில்
இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை செலுத்துவது போல
நாடகமாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர்
கருணாநிதியும், தி.மு.க-வும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க
கூட்டம் என்ற போர்வையில் கபட நாடகம் நடத்தியதை இந்தச் செயற்குழு வன்மையாகக்
கண்டிக்கிறது.4. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை
கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறும், கச்சத்
தீவினை மீட்டெடுக்குமாறும், இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில்பயிற்சி
அளிப்பதை கைவிடுமாறும் மத்திய அரசை வலியுறுத்தல்!தமிழக
மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு அவர்களது
வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும்,
கொடுமைப்படுத்துவதையும், சிறைபிடிப்பதையும், அவர்களுடைய படகுகள் மற்றும்
வலைகளை சேதப்படுத்துவதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாகக்
கொண்டிருக்கிறது. இதே போன்று, இலங்கை வாழ் தமிழர்களுக்கான உரிமைகளை
அளிக்கவும் இலங்கை அரசு மறுத்து வருகிறது.தங்களின்
வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள்
இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவது கண்டிப்பாக தடுத்து
நிறுத்தப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள்
நிகழக் கூடாது என்றும் இலங்கை அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்; கச்சத்
தீவை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர்,
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால்
தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, கச்சத்
தீவினை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்;
தற்போது வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும்
இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் பெங்களூருவில் பயிற்சி பெற்று
வரும் இலங்கை விமானப் படை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும்;
இனி வரும் காலங்களில் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி
அளிப்பது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்தச்
செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.5.
தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெயை அளிக்கவும், கூடங்குளம் அணுமின்
நிலையத்தின் இரண்டு அலகுகளில் இருந்து உற்பத்தியாக இருக்கும் 2000 மெகாவாட்
மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தல்!தமிழகத்தின்
மாதாந்திரத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயின் அளவை படிப்படியாக
மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. கடந்த மே மாதம் 2011-ஆம் ஆண்டு
52,806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மத்திய அரசால் தமிழகத்திற்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டது. இது, 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 39,429 கிலோ லிட்டராக
குறைக்கப்பட்டுவிட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய
கடிதத்தைத் தொடர்ந்து மண்ணெண்ணெயின் அளவை 42,460 கிலோ லிட்டராக மத்திய அரசு
உயர்த்தியுள்ளது. இருப்பினும், இந்த ஒதுக்கீடு தமிழ் நாட்டின் தேவைக்கு
வெகு குறைவாகவே உள்ளது. மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக
ஏழை, எளிய கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,
தமிழகத்திற்கு தேவையான ஒதுக்கீடான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை
மாதந்தோறும் வழங்குமாறும்;தமிழகத்தில் நிலவி வரும் மின்
பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட 925 மெகாவாட்
என்பதற்கு பதிலாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டு அணு உலைகளில்
இருந்து உற்பத்தியாக இருக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தையும்
தமிழகத்திற்கே முழுமையாக வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை இந்தச்
செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.6. மாநில அரசின்
அதிகாரங்களை பறிக்கும் வகையிலும், மாநில அரசின் திட்டங்களுக்கு குந்தகம்
ஏற்படுத்தும் வகையிலும் செயல்படும் மத்திய அரசுக்கு கண்டனம்! 7.
“தானே” புயல் தமிழகத்தில் உள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைத்
தாக்கிய போது, அதற்கான மீட்புப் பணிகளையும், மறுவாழ்வுப் பணிகளையும்
போர்க்கால அடிப்படையில் மேற்கொண்ட தமிழக முதலமைச்சருக்கு பாராட்டும்,
நன்றியும் தெரிவிப்பது. 8. முல்லைப் பெரியாறு நதிநீர்ப்
பிரச்சனையை திறமையுடன் கையாண்டு உச்ச நீதிமன்றத்தில் இருந்து தமிழ்
நாட்டிற்கு சாதகமான ஆணையைப் பெற்றுத் தந்த தமிழக முதலமைச்சருக்கு
பாராட்டு. 9. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக
ஆக்கும் குறிக்கோளுடன், தொலைநோக்கு திட்டம் - 2023 என்ற ஆவணத்தை வகுத்துத்
தந்த முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும்! 10. கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்திய கழகப் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும்! 11.
நாட்டின் கனிம வளங்களான மணல் மற்றும் கிரானைட் ஆகியவற்றை சட்டவிரோதமான
முறையில் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ள தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும்12. ஏழை,
எளிய மக்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில்
இந்தியாவிற்கே முன்னுதாரணமாக விளங்கும் கழகப் பொதுச் செயலாளர், தமிழக
ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும்.13. அரசு மற்றும் அரசு
நிறுவனங்கள் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இளைய
சமுதாயத்தினருக்கு உருவாக்கிக் கொடுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு
பாராட்டும், நன்றியும். 14. காவிரி நதிநீர் ஆணையத்தைக்
கூட்ட மத்திய அரசை வலியுறுத்தல். காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால
மற்றும் இறுதித் தீர்ப்பின்படி, காவேரியில் தமிழ் நாட்டிற்கு உரிய பங்கினை
கர்நாடகம் விடுவிக்காமல் தனது கோடைக்கால பாசனத்திற்கு அந்த நீரை கர்நாடகம்
பயன்படுத்திய சூழ்நிலையில், காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்ற
முதலமைச்சரின் கோரிக்கைக்கு பதில் அளிக்காமல் இருக்கும் மத்திய அரசுக்கு
கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, உடனடியாக காவேரி நதிநீர் ஆணையத்தை
கூட்டுமாறும், அதுவரை சம்பா பயிர் சாகுபடி செய்யத் தேவையான தண்ணீரை தமிழ்
நாட்டிற்கு திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கமாறும் மத்திய
அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.15.
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை
நிறுத்தி, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிகாட்டியாக விளங்கிய கழகப் பொதுச்
செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டும், நன்றியும்.16.
தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஓர் அரசியல் கட்சியும் அடைந்திராத
சாதனையான 21 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டை ஆட்சி புரியும் பெருமையை
அதிமுகவுக்கு ஏற்படுத்திய முதலமைச்சருக்கு கோடானு கோடி நன்றிகள்.மேற்கண்ட 16 தீர்மானங்களும் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
» அதிமுக கூட்டணி 135 இடங்கள்; அதிமுக மட்டும் 131 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!
» அதிமுக கூட்டணி 165 இடங்கள்; அதிமுக மட்டும் 157 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!
» 200/200 மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரம்
» "தமிழர்களுக்கென டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள்"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum