Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு செய்து வரும் அடக்குமுறையைக் கண்டித்து பூந்தமல்லியில் போராட்டம்: வைகோ அறிவிப்பு!
Page 1 of 1

உலகத்தின் பல நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் ஈழத் தமிழர்களுக்கு
அந்த நாடுகளில் இத்தகைய துன்புறுத்தலோ அடக்குமுறையோ இல்லை. ஆனால்,
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாகரிகத்தாலும், இரத்த பந்தத்தாலும் உறவுகளான
கோடானு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் அவர்களைக் கைது செய்வதும்
முகாம் சிறைகளில் பூட்டுவதும் குருதி வடியும் ஈழத் தமிழர்கள் நெஞ்சில்
ஈட்டியைப் பாய்ச்சுவதாகும்.என்று தெரிவித்துள்ளார் ம தி மு க பொது செயலாளர்
வைகோ
இன்று அவ்ர் வெளியிட்ட ஓர் அறிக்கையில்,””தங்களின் பூர்வீகத் தமிழ்ஈழத்
தாயகத்தில் கொலைபாதக சிங்களப் பேரினவாத அரசுகளால் வதைபட்டு இரத்தச்
சொந்தங்களைச் சிங்களர் கொடுங்கரங்களில் பலிகொடுத்து தாய்த் தமிழகம் தங்கள்
மனக்காயங்களுக்கு மருந்து போடும்; இரணங்களைப் போக்கி நிழல் கொடுக்கும்
என்று நம்பி உரிமையோடு தமிழகம் வந்த நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்
தமிழர்கள் குறிப்பாக வாலிபப் பருவத்தினர் இங்கு தமிழகத்தில் போலீசார்
விசாரணை என்ற பெயரால் துன்புறுத்தப்படுவதும் புலிகள் மீதான தடையை
நியாயப்படுத்துவதற்காக பொய்வழக்குகள் புனையப்பட்டு சிறையில்
அடைக்கப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடரப்படும் வாடிக்கையாகி விட்டது.
தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தங்கள் பெற்றோர் – உற்றாருடன் அகதி முகாம்களில்
உடன்வாழும் ஆறுதலை இழந்து சிறைகளிலும் சிறப்பு முகாம்கள் எனப்படும் மன
உளைச்சல் கூடாரங்களிலும் அடைக்கப்படுவது மனித உரிமைகளுக்கும், மனித
நேயத்துக்கும் முற்றிலும் எதிரான அடக்குமுறையாகும்.
இப்படித் துன்பப்படும் ஈழத் தமிழ் அகதிகள் நீதிமன்றங்களில் முறையிட்டு
வழக்காடி பிணை விடுதலைப் பெற்றாலும் தமிழகத்தின் உளவுத்துறை கியூ பிரிவு
போலீஸார் மேலும் பொய் வழக்குகள் போட்டு சிறப்பு முகாமெனும் கொட்டடிகளில்
பூட்டுவது அநீதியானது. இரக்கமற்ற அடாத செயலாகும்.
உலகத்தின் பல நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் ஈழத் தமிழர்களுக்கு அந்த
நாடுகளில் இத்தகைய துன்புறுத்தலோ அடக்குமுறையோ இல்லை. ஆனால், ஆயிரக்கணக்கான
ஆண்டுகளாக நாகரிகத்தாலும், இரத்த பந்தத்தாலும் உறவுகளான கோடானு கோடித்
தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் அவர்களைக் கைது செய்வதும் முகாம் சிறைகளில்
பூட்டுவதும் குருதி வடியும் ஈழத் தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியைப்
பாய்ச்சுவதாகும்.
இப்படி அடைக்கப்பட்டவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தம்மை வருத்திக் கொண்டு
அறவழி உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர். சாகவும் துணிந்து ஜூன் 16 முதல்
ஜூலை 5 வரை 21 நாள் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் காலவரையற்ற பட்டினிப்
போர் நடத்தினர்.
அனைவரையும் விடுவித்து திறந்தவெளி அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி
வைப்பதாக தமிழக அரசின் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் வாக்குறுதி
தந்தனர். ஆனால், கண்துடைப்பாக ஒரு சிலரை மட்டும் விடுவித்து விட்டு
மற்றவர்களை விடுவிக்காமல் கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றத் தவறி
விட்டனர்.
ஈழத் தமிழரான செந்தூரன் எனும் இளைஞர், எங்களை விடுவிக்காவிடில் நான்
உயிர் விடுவேன் என உறுதியாக உண்ணாநிலைப் போரைத் தொடர்ந்தபோது நான் உள்ளிட்ட
பலரும் மருத்துவமனையில் இருந்த அவர்களைத் தமிழக அரசு எப்படியும்
விடுவிக்கும் எனச் சொல்லிப் பட்டினிப்போரை நிறுத்துமாறு வற்புறுத்தி
கேட்டுக் கொண்டதால் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஈழ வாலிபர் செந்தூரனை தேவக்கோட்டையில் கைது செய்து ஆவணங்கள் இல்லாமல்
இந்தியாவுக்கு வந்தார் என வழக்கு பதிவு செய்து 2011 ஜூலை 18 இல்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தனர்.
ஆறு மாதம் கழித்து 2012 ஜனவரி 16-இல் தமிழக கியூ பிரிவு போலீசார் அவரைக்
கேரளாவுக்குக் கொண்டு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்றார் என
கேரள சிறையிலே காவல் வைக்க ஏற்பாடு செய்தனர். இரண்டு மாதங்கள் கழித்து
மார்ச் 14-ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டவரை கேரள போலீசார் தங்களிடம்
ஒப்படைக்க வேண்டுமெனக் கேட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
இது தமிழக கியூ பிரிவு போலீசாரின் அக்கிரமமான நடவடிக்கை ஆகும். கடந்த
ஜூன் 3-ஆம் தேதி அன்று சட்டவிரோதமாக தப்ப முயன்றார்கள் என்று கேரளத்தின்
கொல்லம் போலீசாரால் கைது செய்யப்பட்ட 151 பேரில் 14 பேர் கேரளத்தில் சிறை
வைக்கப்பட்டனர்.
மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு தமிழகத்தின் திறந்தவெளி
முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். நேற்றைய தினம் கொல்லம் முதல் வகுப்பு
நீதிபதி 12 பேரை விடுதலை செய்து விட்டார். இன்னும் இரண்டு பேர் விடுதலை
செய்யப்பட உள்ளனர். அவர்களைச் சிறையிலே இருந்து வெளியே கொண்டு வந்து
உறவினர்கள் சந்திக்கின்ற வகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பதினான்கு பேர்களும் செந்தூரனைப் போல ஆவணமின்றி இந்தியாவுக்கு
வந்தவர்கள்.தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் செல்ல விரும்புவதால்
அப்படி அனுப்பிவைக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது. காவல்துறை
அடக்குமுறையால் சிறையில் வாடும் செந்தூரனை உடனடியாக விடுதலை செய்ய
வேண்டும்.
திறந்த வெளிமுகாமிலோ அல்லது இலங்கைகே செல்ல விரும்பினாலோ அங்கே
அனுப்புவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை,
அடக்குமுறையை எதிர்த்து தமிழக மக்களின் மனச்சாட்சியைத் தட்டுவதற்காக கடந்த
ஆறாம் தேதி முதல் உணவை மறுத்து வருத்திக் கொண்டு செந்தூரன் உண்ணாநிலை
அறப்போரை பூவிருந்தவல்லி சிறப்பு முகாமில் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த முறை அவர் 21 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தபோது
விடுவிப்போம் என்ற கூறிய தமிழக அரசு அதற்கு மாறாக வஞ்சகமாக செங்கல்பட்டு
சிறப்பு முகாமில் இருந்து பூவிருந்தவல்லி சிறப்பு முகாமில் அடைத்தனர்.
இந்தக் கொடுமைகளைக் கண்டித்து தான் உயிரைத் துறப்பதே மேல் என்று முடிவு
செய்து நாளை (20.08.2012) முதல் சொட்டுத் தண்ணீரும் பருகாமல், தியாக தீபம்
திலீபனின் வழியில் அறப்போரைத் தொடர்வேன் என்று அறிவித்துவிட்டார்.
அவர் உயிருக்கு ஊறுநேருமானால் அதற்கு தமிழக காவல்துறையும், தமிழக அரசும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
எனவே ஈழத்து இளைஞர் செந்தூரனை உடனடியாக விடுவித்து திறந்த வெளிமுகாமிற்கு அனுப்பிவைக்க தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தூரனையும், பூவிருந்தவல்லி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வதைபடும்
தமிழ் ஈழ இளைஞர்களையும் விடுவிக்கக் கோரி 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை
10 மணி அளவில் பூவிருந்தவல்லி சிறப்பு முகாமை முற்றுகையிடும் போராட்டம்
மதிமுக சார்பில் நடத்தப்பெறும். அதற்கு, தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க
அன்புடன் வேண்டுகிறேன்.- என்று் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» " பூந்தமல்லி சிறப்பு முகாமில் 8வது நாளாக பட்டினிப் போராட்டம் நடத்தும் ஈழத் தமிழர்!- கண்டு கொள்ளாத தமிழக அரசு"
» தமிழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது !
» மத்திய அரசைக் கண்டித்து மே 15 முதல் போராட்டம்: பாஜக அறிவிப்பு
» சிங்கள அராஜக அரசுக்கு எதிரான தமிழ் மக்கள் தீர்ப்பு ஆனால், மாகாண சபை ஈழத் தமிழர்களுக்கு தீர்வைத் தராது - வைகோ
» அரசு பணிக்கு எந்த பட்டங்கள் சமமான படிப்புகளாக கருதப்படும்?: தமிழக அரசு அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum