TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு.

Go down

3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு. Empty 3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு.

Post by மாலதி Sat Aug 18, 2012 7:57 am

3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு.
3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு. 404153_513270302033001_541162633_n
என்றும் எங்கள் மனதின் மறக்க முடியா நினைவில் நிறைந்து நிற்கும் மூத்த அரசியல்வாதி கருணாநிதி அவர்களுக்கு!

உங்கள் நலம், மற்றும் உங்கள் சித்தம் நாம் நன்றாக அறிவோம். இருந்தும், இன்னும் நீங்கள் உங்கள் குடும்பங்களுடன் இனிதே நீண்ட காலம்

வாழவேண்டும் என்பதே எமது ஆவல்!. அதற்கு நீங்கள் ஒளித்து கும்பிட்டு வணங்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக!..

இன்றைய சூழலில் நீங்கள் வேசமிட்டு பாசாங்கு செய்து நிமிடத்துக்கு நிமிடம்
மாறுவேடமிட்டு நடித்து, ஒளித்து மறைக்கும் ஈழம் பற்றிய உங்கள் புதிய நாடக
செய்திகள் பலவற்றை, உங்களுக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் விபரணப்படுத்திக்
கொண்டிருக்கவேண்டிய தேவை இருப்பதாலும், புதிதாக நீங்கள் மூட்டிக்கொண்ட
டெசோ என்ற புகை மூட்டத்தினுள் மறைக்க முயலும் முக்கியமான சில உண்மைகளை
விபரித்து சொல்லவேண்டிய கட்டாயம் இருப்பதாலும், இந்தப்பதிவை எழுதி
உங்களுக்கும், எனது அன்பான தமிழினத்திற்கும் பகிரங்கப்படுத்தவேண்டிய
சூழ்நிலையில், இந்தப்பதிவு மூலம் உங்கள் கறைபடிந்த வரலாற்று பாதையின் சில
பகுதியினை சத்தியத்துடன் பதிவு செய்து கொள்ளுகின்றேன்!.


உங்கள்மீது, எனக்கோ எனது இனத்துக்கோ தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.
உங்களை விரோதியாக பார்க்கவேண்டிய தேவையும் அடிப்படையில் எங்களுக்கு
இருந்ததில்லை. ஆரம்பகாலங்களில் உங்களை ஒரு கதாநாயகனாக விரும்பி
வரவேற்றவர்கள்தான் ஈழத்தமிழர்கள். காலமாற்றமும் உங்கள் நடத்தையும்
அனைத்தையும் புரட்டி போட்டிருக்கிறது. இன்று ஈழத்தமிழினம் உங்களை
துரோகியாகவே உருவகப்படுத்திவிட்டது.. டெசோ மாநாடுகள் மட்டுமல்ல நீங்கள்
தூக்கு போட்டு செத்து நியாயப்படுத்தி காட்டினாலும் இனி வரும் காலத்தில்
எவரும் உங்களுக்காக கவலைப்படப்போவதுமில்லை உங்களை நம்பப்போவதுமில்லை.
நீங்கள் தியாகி முத்துக்குமரனின் மரணத்தின்போது கூறியதுபோலவே கருணாநிதிக்கு
ஏதோ கெட்ட நோய் பிடித்து விட்டதால் தூக்கில் தொங்கி செத்துப்போனார் என்றே
கூறுவர்.

சில பத்து வருடங்களாக உங்கள் சுயநலம் சார்ந்த
சூழ்ச்சி அரசியல், எங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி இதயம்
புண்ணாக்கியிருக்கிறது, தேவையில்லாமல் உங்கள் சுயநலச் சதி எங்கள்
சமுதாயத்தை கொடுமைப்படுத்தியிருக்கிறது.
எதிரியான சிங்களவனின் செயற்பாட்டை நேரிடையாக நாங்கள் எதிர்கொண்டாலும்,
உங்களது துரோகத்தனமான சூழ்ச்சிக்கு தப்பிப்பதே எங்களுக்கு பெரும்
போராட்டமாகிவிட்டது. உங்கள் அந்திம காலத்திலும் அது தொடர்கதையாக
தொடர்வதுதான் எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தியா - தமிழ்நாட்டின், மொழி, அரசியல்-பொருளாதார, மற்றும் குடிமக்களின் சிறுமை நிலைக்கு நீங்கள்தான் முழு மூல காரணகர்த்தா.

என்றும், மொழிப்பெயராலும், இனப்பெயராலும் ஏமாற்றி அரசியல் செய்து உலகத்தர
பணக்கார குடும்பங்களின் தலைவன், உலகப்பிரசித்தி பெற்ற மகா ஊழல்வாதி
என்றும் பல ஆதார தரவுகள் மூலம் உங்கள்மீது பெருவாரியான குற்றச்சாட்டு
உண்டு, உள்ளூர் ஊடகங்கள் மட்டுமல்லாது முன்னணியிலுள்ள VICKI LEEKS,
WASHINGTON POST, NEW YORK TIMES, GUARDIAN , BBC, போன்ற சர்வதேச
ஊடகங்களும் அவற்றை அவ்வப்போது ஆதார பூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றன.

இன்றைக்கும் நீங்கள் மக்களை குழப்பி தூண்டிவிடும் தந்திர அரசியலை
சாதுரியமாக செய்து உங்கள் அழுக்குக்களை மறைக்கவே முன்னுரிமை கொடுத்து
வருகிறீர்கள். உங்கள் கேள்வி பதில், மற்றும் உ பி கடிதங்கள், அறிக்கைகள்
மூலம் சகலரும் உங்கள் மனநிலையை நன்கு அறிவர். உங்களுக்கு அந்த செயற்பாடுகள்
ஒரு மன நிறைவை தந்தாலும் பொதுவில் அவை நகைச்சுவையாகி இருக்கின்றன.
அவைபற்றி நான் விலாவாரியாக அறிந்திருந்தாலும் எனக்கு நேரடியான பாதிப்பு
அனுபவம் இல்லாதமையினால் அதுபற்றி ஆழமாக தொட்டு செல்லுவதை
விரும்பாவிட்டாலும், உங்கள் சுயநல ஊழல் சூழ்ச்சி அரசியல், கடல் கடந்து
எங்களையும் எங்கள் தேசத்தையும் மோசமாக பாதித்துக் கொண்டிருக்கிறது,


நீங்கள் உங்கள் உள்நாட்டு அரசியலை எப்படிச்செய்தாலும் பரவாயில்லை, அதில்
ஓரளவு நியாயங்களும் இருக்கக்கூடும், பல வருடங்களாக பாதிக்கப்பட்டு
நொந்துபோய் ரணமாக இருக்கும் எங்கள்மீது நீங்கள் இடைவிடாது இனிப்பு கலந்து
நஞ்சு தெளிப்பதும், சிரித்துக்கொண்டு தீயால் சுடுவதும், எவராலும்
தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்கள் சுய ரூபம் அனைவரும் அறிந்து கொண்டு
விட்டார்கள். உங்கள் கிலிசகேடான சூழ்ச்சி வஞ்சக அரசியலால் எனது இனம்
எவருக்கும் மண்டியிடாமல் கணிசமான அளவு முள்ளிவாய்க்கால் முட்டுக்குள் உயிரை
விட்டு செத்து அழிந்து போய்விட்டது,. இருக்கும் மிச்சம் சொச்சமும் உங்கள்
சூழ்ச்சிக்குள் மூழ்கி அழிக்கப்பட்டுவிடுமோ, தேவையற்ற இடைச்செருகலான
நீங்கள் ஏலம் கூறி எங்கள் அடையாளங்களையும் உரிமைகளையும் எங்களையும்
விற்றுவிடுவீர்களோ என்ற பயம் ஒவ்வொரு ஈழத்தமிழனிடமும்
தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பேரபாயத்தை எதிர்நோக்கிய பயமே வெளிப்படையான இந்த பதிவு.

நீண்டகாலமாக உங்கள் பதவிவெறி, குடும்ப நலன் காப்பதற்காக நீங்கள் நடத்தும்
கபட சூழ்ச்சி அரசியல், அதற்காக உங்கள் வஞ்சக வலையை எங்கள்மீது வீசி
வந்தபோதும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், அவர்கள்
உங்கள் பிறவிக் குணமறிந்து முரண்படாத வகையில் எங்கள் அரசியல்த்தளத்தை
உங்கள் சதி வலையில் சிக்காதவண்ணம் தப்பித்து எடுத்துச்செல்லவே முயன்று
வந்திருக்கிறார். இருந்தும் உங்கள் கூட்டாளியான இந்திய மத்திய அரசின்
விஷமமான வெளியுறவு சதி, மற்றும் உங்கள் தலைமையிலான தமிழக அரசின்
திட்டமிட்ட சதித்திட்டத்தால், இறுதியில் சர்வதேச அரசியற் களம் உங்கள்
சதிவலையிலும் எங்களை சிக்க வைத்ததுண்டு, அந்த நேரங்களில் குறிப்பாக
முள்ளிவாய்க்கால், முற்றுகையின்போது தமிழீழ மக்களின் மோசமான அவல உயிர்
அழிவுக்கும், தமிழ் ஈழ எழுச்சி போராட்டத்தின் வீழ்ச்சிக்கும், நீங்கள்தான்
முக்கிய காரணி என்பதை உலகம் அறியும், நாங்களும் வேதனையுடன் நினைவு
கூருகிறோம்.

அதுபற்றி பல நலன் விருப்பிகள் பலமுறை உங்களிடம் கருணை
கோரிக்கை வைத்து ஏமாந்ததும் உண்டு!. இன்னும் பலர் நிதர்சனத்தை எடுத்து
சொல்லி உங்களை நியாயமாக நடக்கும்படி கேட்டு பல வேண்டுகோள் வைத்து உங்கள்
செயலுக்காக காத்து ஏமாந்து போனதுமுண்டு!. பலர் அழுதும், திட்டியும்
தீர்த்திருக்கின்றனர். தமிழ் நாடே கொதித்து போராடி தோத்துப்போனதும் நீங்கள்
மறந்திருக்க முடியாது. தெருத்தெருவாக தீக்குளித்து உயிர் விட்டவர்களை
நீங்கள் மனிதர்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை, இன்று நான்
மட்டுமல்லாது முன்பே பல தமிழகத்து அரசியல் அறிஞர்களும், கல்விமான்களும்
அதுபற்றி நேரடியாகவே சான்றுகளுடன் கடுமையான கண்டனமாக அவற்றை
பதிவுசெய்திருக்கின்றனர். அதை மூடிமறைக்க நீங்கள் பற்பல அவதாரங்கள் எடுத்து
புதிய சூழ்ச்சிகள் மூலம் எத்தனை நாடகங்கள் ஆடினாலும் இனியும் தமிழினம்
ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனம்,. அதனால் ஒட்டுமொத்த
தமிழினத்தின் வெறுப்புக்கும் வெட்க்கக்கேடான பழிப்புரைக்கும் நீங்கள்
ஆளாகியிருக்கிறீர்கள். மாபெரும் சூழ்ச்சிக்காரன், பச்சோந்தி தனமான மனிதன்
கருணாநிதி என்றே இன்றைக்கு அகில உலக தமிழ் இனம் நம்புகிறது.

இன்று மட்டும் புதிய டெசோ என்ற மயக்க புகையை மூட்டி குறளிவித்தை காட்ட இந்த வயதிலும் உங்களால் எப்படி முடிகிறது. உங்களுக்குள்
இருக்கும் இதயம் மனிதனுக்குரியதுதானா என்ற கேள்வி எவரிடமும் எழுவது தவறென்று எவராவது வாதாட முடியுமா?

தமிழ் ஈழ மக்களின் தொன்மையான வரலாற்று விபரமறிந்த பலர் தமிழகத்திலிருந்தும், தமிழ் ஈழத்திலிருந்தும், ஈழமக்களின் விபரிக்க முடியாத
இன்னல்களையும் எங்கள் அரசியல் சூழ்நிலைகளையும் முக்கியமான சமையங்களில்
உங்களை நம்பாவிட்டாலும் சம்பிரதாய முறைக்கேனும் நீங்கள் ஒரு அரசியல்
வியாதி என்ற முறையிலும் அப்போதய முதலமைச்சர் என்ற முறையிலும் உங்களுக்கு
தெரியப்படுத்தியே வந்திருக்கின்றனர். தவிரவும் செய்தி ஊடகங்களும்
தொலைக்காட்சிகளும் ஈழத்து மக்களின் முள்ளிவாய்க்கால் அவலநிலையை
பதட்டத்துடன் நிம


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்...!
» பயணத்தின் ஓர் புதிய பரிமாணம்-ஹைப்பர்லூப் ரயில்!
» நோக்கியா வின் புதிய பரிமாணம் - Nokia (HumanForm)
» மில்லின் கணக்கில் வீடியோக்களை அள்ளி கொடுக்கும் விக்கியின் புதிய பரிமாணம் Qwiki .
» அகில உலகத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் பதிவு.( படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டியது)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum