TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா

2 posters

Go down

இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா Empty இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா

Post by ஜனனி Thu Aug 16, 2012 9:54 am


இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா TN_Flag_Hoist



சென்னை கோட்டை கொத்தளத்தில் புதன்கிழமை நடைபெற்ற
விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார் முதல்வர்
ஜெயலலிதா.


சென்னை,
ஆக. 15: இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த
இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப்
பெறுவதற்கும் அந்த நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று
முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.மேலும், தமிழகத்தில் பொது
மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் விதத்தில் செயல்படுவோர் யாராக
இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.நாட்டின் 66-வது சுதந்திர
தினம் வழக்கமான உற்சாகத்துடன் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி,
சென்னையில் தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி
வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:தமிழகத்தை இந்தியாவிலேயே
முதன்மை மாநிலமாக ஆக்குவது மட்டுமல்லாமல், விரைந்த வளர்ச்சி எய்தும்
நடுத்தர வருவாய் நாடுகளுக்கு இணையாக தமிழகத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும்
என்பதே எனது லட்சியம். இந்த லட்சியத்தை எய்தும் வகையிலும், நாட்டின் மொத்த
வளர்ச்சி ஆண்டுக்கு 11 சதவீதம் அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்ற
அடிப்படையிலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற
மொத்த வளர்ச்சியைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும்
என்ற நிலையிலும் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அனைத்துத்
துறைகளிலும் சிறப்பு: வேளாண்மைத் துறையில் உணவு தானிய உற்பத்தியின் அளவு
கடந்த நிதியாண்டில் சாதனை அளவாக 106 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
காவிரியில் நமக்குரிய பங்கினை உரிய நேரத்தில் கர்நாடகம் விடுவிக்கவில்லை.
இதனால், குறுவை சாகுபடி பரப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது.ஆனாலும்,
டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிய காரணத்தால்
1.37 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பயிர்
சாகுபடி வழக்கமான பரப்பில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.கடந்த
15 மாதங்களில் மட்டும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு
லட்சத்து 70 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது. அவற்றில்
பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. மீதமுள்ள இடங்கள் ஒரு சில
மாதங்களில் நிரப்பப்படும்.விலையில்லாத திட்டங்கள்: வறுமைக்
கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகள் பயன்பெறும் வகையில் விலையில்லாத
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் 25 லட்சம்
மின்விசிறிகள், மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் 35 லட்சம் பயனாளிகளுக்கு இவை வழங்கப்படும். விலையில்லாத
கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. இதுவரை 17 ஆயிரம் பயனாளிகளுக்கு பசுக்களும், 1.70 லட்சம்
பயனாளிகளுக்கு 6.80 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.இணையான
உரிமைகள்: சுதந்திரத் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்,
நம் உறவுகளாகிய இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த
இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான
உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை
வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்த
தருணத்தில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.கடும்
நடவடிக்கை: சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆனால், அந்தச்
சுதந்திரம் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். எல்லா விதத்திலும் கண்ணியம்
மற்றும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அதுதான் உண்மையான
சுதந்திரம். இந்த உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற
நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.எனக்குச்
சுதந்திரம் இருக்கிறது என்று அடுத்தவரின் சுதந்திரத்தை, உரிமையை,
வாழ்வாதாரத்தைப் பறிக்கும் விதத்திலோ, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்
விதத்திலோ யாரேனும் செயல்பட்டால், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள்
மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா
எச்சரித்தார்.தியாகிகள் ஓய்வூதியம் ரூ.7 ஆயிரமாக அதிகரிப்புசுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.7 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுதந்திர தின விழா உரையில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:சுதந்திரப்
போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் இந்த வேளையில்,
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து
ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும் அவர்களுக்கான மருத்துவப்படி
ரூ.100-லிருந்து ரூ.500 ஆக அதிகரிக்கப்படும். அவர்களின் வாரிசுதாரர்களுக்கு
வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.2,500-லிருந்து ரூ.3,500 ஆக
உயர்த்தப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா Empty Re: இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா

Post by அருள் Thu Aug 16, 2012 3:24 pm

இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா 28284 இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும்: ஜெயலலிதா 28284
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா
»  சோனியா காந்திக்கு எதிராக லண்டனில் இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
» இந்தியாவின் பூந்தமல்லி முகாமில் இலங்கைத் தமிழர்கள் ஒன்பது பேர் உண்ணாவிரதம்!
» ஜேர்மனியில் வாகன விபத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்!
» தமிழக மாநிலம் முழுவதும் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குறித்து கணக்கெடுப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum