TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சுதந்திர நாட்டின் ஜனநாயக படுகொலைகள்,உண்மைகளை திரும்பிப் பார்க்கிறேன்.

2 posters

Go down

சுதந்திர நாட்டின் ஜனநாயக படுகொலைகள்,உண்மைகளை திரும்பிப் பார்க்கிறேன். Empty சுதந்திர நாட்டின் ஜனநாயக படுகொலைகள்,உண்மைகளை திரும்பிப் பார்க்கிறேன்.

Post by sakthy Wed Aug 15, 2012 5:52 pm

இன்று அதிகாலை எழுந்து இன்று சுதந்திர தினம், என்ன செய்திகள் என பார்க்க முற்பட்ட போது, என் தங்கையிடம் இருந்து வந்த மின் அஞ்சலே முன்னால் வந்து நின்றது. கறுப்புக் கொடியுடன் இன்று தமிழர்களுக்கு துக்க தினம் என்ற செய்தியும், இந்திய தமிழச்சியாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்றும் முடிக்கப்பட்டிருந்தது. இது இன்று பலருடைய மனங்களிலும் இருந்து வரும் குமுறுலாகவே இருக்கிறது. சோனியா காங்கிரஸ் ஆட்சி தமிழர்களுக்கு தந்த சுதந்திரம் இன்றைய பரிதாப நிலை தான். இதற்கு சோனியா காங்கிரஸ் மட்டுமல்ல அதற்கு துணை போபவர்களும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

சமீபத்தில் செய்திகளும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில், இந்தத் தளத்தில் சில செய்திகள் வந்த போது களிப்புற்றேன்.. செய்திகளை நாம் படிக்கிறோம்,கேட்கிறோம்.ஆனாலும் அந்த செய்திகளை அன்றைய செய்தியாக படித்து விட்டு கண்களை மூடி விடுகிறோம். இதனால் சில உண்மைகளை, சினிமா பிளாஸ்பக் போல் காட்டினால் மறந்து விட்ட உண்மைகளை நாம் மீட்டெடுப்பதுடன்,செய்து விட்ட துரோக செயல்களை மறந்து விட்டு புனிதர்களாக உலா வரும் சில பக்த கோடிகளை இனம் காண முடியும்.

டெசொ மாகாநாட்டில் சில அருவருக்கத்தக்க சம்பவங்கள் நடந்து முடிந்தன என்பது உங்களுக்கு தெரிந்ததே. இலங்கையில் இருந்து வந்த விக்கிரமபாகுவின் பேச்சுக்கு தடை வந்ததும்,ஈழத் தமிழர்கள் சிலர் தி.மு.க.வினரால் தடுக்கப்பட்டதும்,ஈழத் தமிழர்களுடன் கனிமொழி வாக்குவாதப்பட்டதும் இவற்றுள் சில.கருணாநிதியின் வேசம்
பலருக்கு தெரிந்திருந்தாலும் கூட சிலருக்கு இப்போதும் அவர் புனிதராகவே காட்சி தருகிறார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.அவர் அறிஞர் அண்ணாவிற்கும்,எம்.ஜி.ஆருக்கும் செய்த துரோகங்களை காலம் மறந்துவிட முடியாது.ஏன், நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக வந்த ஒரு தாயை திருப்பி அனுப்பி,ஜெயலலிதா மேல் குற்றத்தை சுமத்தி விட்டு,தான் நல்லவராக காட்டியவர் எப்படி ஈழ மக்களின் வாழ்வாதாரம் பற்றி பேச முடியும் என்று தெரியவில்லை. இவரைப் பற்றி பேசுவதே இழுக்காயினும் கூட அவரை புனிதராக நினைப்பவர்கள் புரிந்து கொள்ளவே இந்த செய்தி ஆகும்.

சமீபத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதாக சிறை நிரப்பும் போராட்டங்களூம்,ஈழத் தமிழர்களையும் தமிழக தமிழர்களையும் திசைதிருப்பி, ஏமாற்ற டெசோவும் நடத்தி அதனால் அரசியல் சுயலாபம் அடைய திட்டம் போட்ட கருணாநிதியும் இப்போது நம் கண் முன்னே வரத்தான் செய்கிறார்.இந்த புனிதரின் கடந்தகால சம்பவங்களை சிறிது திரும்பிப் பார்த்தால்........
யார் சட்டம் ஒழுங்கை மீறினார்கள்,நீதியை ஏமாற்றினார்கள் என்பது தெரிய வரும்.

இவை எல்லாவற்றையும் நாம் மறப்பதனால்தான் அரசியல்வாதிகளும் சாமியார்களும் தங்களை புனிதர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள்.ஆட்சிக்கு திரும்பவும் வந்து அப்பாவி மக்களின் இரத்தத்தை உறிஞ்ச தொடங்கி விடுகிறார்கள்.
இந்த நிலையில் தனக்காக கருணாநிதி செய்த கொலை ஒன்றை உங்கள் முன் வைக்கின்றேன். என்கவுண்டரும் ஒரு விதத்தில் ஜனநாயக கொலை தான்.

2010 ஒக்டொபெர் 29ல் கோவையில் மஸ்கன்,ரித்திஷ்(10,7) என்ற இரண்டு குழந்தைகளை கடத்தி சென்று கொலை செய்த மோகன்ராஜ் என்பனை நாம் மறந்திருக்க முடியாது. அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் மரண தண்டனைக்கு எதிராக மனிதநேய ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் இன்றைய நாளில், காவல்துறை சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு என்கவுண்டரில் கொலை செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இந்த என்கவுண்டர் தி.மு.க. ஆட்சியில் நடந்த 30 வது கொலையாகும்.சட்டம் நீதி என்ற கட்டுக் கோப்புகள் உள்ள ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நாட்டில், நடந்த ஜனநாயக கொலை சரியானது தானா என்று சட்டத்தை நீதியை மதிப்பவர்கள் கேள்வி எழுப்புவதில் தவறு எதுவும் இருக்க முடியாது.

இருப்பினும் இந்த என்கவுண்டர் எதற்காக நடத்தப்பட்டது என பார்த்தால், உண்மையில் மோகனராஜ் என்ற மோகனகிருஸ்னன் செய்த கொடும் செயலுக்காகவா அல்லது தப்பி ஓட முயற்சித்த போது தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காவல்துறை எடுத்த முடிவா என்று பார்த்தால்,இவை எதுவும் சரியாக ஒத்துப் போகவில்லை.தங்களை உலகின் சிறந்த காவல்துறை என சொல்லிக் கொள்ளும் தமிழ் நாடு காவல்துறை,கொலைக் குற்றவாளியை கைவிலங்கு இன்றியும் பாதுகாப்பு இன்றியும் தனியாக அழைத்து சென்றது ஏன்? அந்த பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு என்கவுண்டர் தான் சரியானது என்றால்,வேறு மூன்று தாயின் மூன்று குழந்தைகள் வினோத்குமர்,கோபினாத்,முத்துராமலிங்கம் 2007 மே 9ல் மதுரை தினகரன் அலுவலகத்தில் எரிந்து தீக்கிரையானார்களே,அதற்கு காரணமான அழகிரி ஏன் என்கவுண்டரில் கொல்லப்படவில்லை என்று சிலர் கேட்கத்தான் செய்கிறார்கள்.

ஆனாலும் இந்த மோகன்ராஜை என்கவுண்டரில் போட்டுத்தள்ள முதலில் திட்டமிடப்படவில்லை.அதற்குப் பதில் நக்கீரன் பத்திரிகை உதவியுடன்(06.11.2010) போலி செய்தியை வெளியிட்டு, கபிரியேல் என்ற வேலூரில் உள்ள ஆயுட் கைதியை என் கவுண்டரில் கொல்லவே முடிவு செய்யப்பட்டதாகவும்,முடியாமல் போகவே இந்த மோகன்ராஜ் சிக்கிக் கொண்டார் என்றும் தெரிகிறது. இந்த என்கவுண்டரின் காரணம் கருணாநிதிக்கு எதிராக பல குற்றச் சாட்டுக்கள் வந்த நிலையில் அதை திசை திருப்பி, சட்டசபை கூட்டத் தொடரில்(08.11.2010) வேறு பிரச்சனைகள் எதுவும் வராமல் தடுக்கவே எடுக்கப்பட்டதாக கூறப்படுவதுடன், சட்டம் நீதி அனைத்தையும் புறம்தள்ளி சுயநலத்திற்காக செய்யப்பட்ட கொலை எனவும் கூறப்படுகிறது.இன்று சட்டம் நீதி குலைந்து விட்டதாக கூக்குரலிடும் கருணாநிதி,அவரின் ஆட்சியில் நடத்தப்பட்ட இது போன்ற 30 என்கவுண்டர்களையும் மறந்து விட்டாரா இல்லை நாம் மறந்திருப்போம் என எண்ணி நம்மை முட்டாள்களாக,பைத்தியக்காரர்களாக்கி விட்டாரா?இல்லை உனக்குத்தான் உபதேசம் எனக்கில்லை என்கிறாரா?

தற்போதய ஜே ஆட்சியிலும் இப்படியான என் கவுண்டர் கொலை நடந்தது நினைவிருக்கலாம்.

எது எப்படி இருப்பினும் நீதி விசாரணை எதுவும் இன்றி காவல்துறை சட்டத்தையும்,தண்டனை கொடுப்பதையும் கையில் எடுத்து, சட்டத்தையும்,நீதியையும் அவமதிப்பது சரியானது தானா?விசாரணை இல்லாது என்கவுண்டர் மூலம் தண்டனை கொடுப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் உண்டென்றால் நீதிமன்றங்கள் ஏன்?காவல்துறை பொதுமக்களின் பாதுகாவலர்களா இல்லை கொலைகாரர்களா என்ற பல கேள்விகள் மனித நேயம் உள்ளவர்களிடம்,சமூக ஆர்வலர்களிடம் எழவே செய்கிறது. சுதந்திரம் என்பது மக்களைப் பாதுகாக்கவா இல்லை மக்களை மிருகங்களாக கொன்று போடுவதற்கா என்ற கேள்வியை கேட்டால் சமீபகாலமாக நடந்து வரும் எந்த செயலுக்கும் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இறுதியாக,
---கட்சியில் என் வேலையை சரியாக செய்கிறேன்.கட்சிக்கு இருந்த இக்கட்டை உணர்ந்து பதவி வேண்டாண்னு முடிவு செய்தேன்...கனிமொழி..விகடன் பேட்டி.

---ஆனால் 2009 ல் நீரா ராடியாவின் காலில் பதவிக்காக விழுந்தேன்.....நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்.
சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சுதந்திர நாட்டின் ஜனநாயக படுகொலைகள்,உண்மைகளை திரும்பிப் பார்க்கிறேன். Empty Re: சுதந்திர நாட்டின் ஜனநாயக படுகொலைகள்,உண்மைகளை திரும்பிப் பார்க்கிறேன்.

Post by ஜனனி Wed Aug 15, 2012 7:02 pm

உங்களின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்று சுதந்திர நாட்டின் ஜனநாயக படுகொலைகள்,உண்மைகளை திரும்பிப் பார்க்கிறேன். 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum