Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
உலகக் கடலோடிகளுக்கு, நமது முன்னோர்கள் தாம் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது புரிகின்றது. கடல் ஆய்வாளர் பாலு அவர்கள் தாயகத்தில் திரு.அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
Page 1 of 1
உலகக் கடலோடிகளுக்கு, நமது முன்னோர்கள் தாம் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது புரிகின்றது. கடல் ஆய்வாளர் பாலு அவர்கள் தாயகத்தில் திரு.அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
இந்தியப்
பெருங்கடலில் உருவாகின்ற நீரோட்டங்கள், உலகம் முழுமையும் செல்கின்றன. அதன்
வழியாக, பெரு நாட்டில் இருந்து ஒரு ஆமை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா வழியாக
இங்கே வந்து முட்டை இடுகின்றது. ஜப்பானில் இருந்து புறப்படுகின்ற ஆமை
போர்னியோ தீவுகள், பிலிப்பைன்ஸ், அந்தமான் வழியாக நமது கடற்கரைக்கு
வருகின்றன. அதில் குறிப்பிடத் தக்கவை, ‘பச்சை ஆமைகள்’ மற்றும் ‘பங்குணி
ஆமைகள்’ (Green Ridley, Olive Ridley ). ஆப்பிரிக்காவில் இருந்து வரக்
கூடியது லெதர்பேக், தோனி ஆமைகள். அவை, கடல் நீரோட்டத்தைச் சரியாகப்
பிடித்துக்கொண்டு, மிக எளிதாக
நீந்தி வருகின்றன. இங்கே வந்து முட்டை
இட்டு, 56 நாள்கள் அடை காத்து, குஞ்சு பொரித்து, அந்தக் குஞ்சுகளையும்
தன்னுடனேயே திரும்ப அழைத்துச் செல்கின்றன. அங்கே வளருகின்ற குஞ்சுகள்,
மறுபடியும் தன்னுடைய இனப்பெருக்கத்துக்காக, இங்கே எப்படித்திரும்பி
வருகின்றன என்பதை, ஆமைகளுடைய முதுகிலேயே அதன் தடத்தைக் கண்டு அறிகின்ற
கருவியைப் பொருத்தி ஆராயும்போது, அவை கடல் நீரோட்டம் வழியாகத்தான்
வருகின்றன என்பதைக் கண்டு அறிந்தார்கள்.
இந்தக்கருவிகளைப்
பழுதுபார்க்கும் வேலையில் தான் நான் ஒரிஸ்ஸாவில் பணி புரிந்து வந்தேன்.
நான் கடலில் மீனவர்களோடு பயணிக்கையில், ஒரு பாசியைப் பார்த்தால், அந்த
மீனவர் சொல்லுவார்; ‘சார், இது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தது’ என்று.
5,000 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள
ஆஸ்திரேலியாவில் இருந்து கடல்
நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட பாசி அது. ஜப்பான் சுனாமியால் ஏற்பட்ட
இடிபாடுகள், அழிவுகள், ஆறு மாதங்கள் கழித்து அமெரிக்கா,கனடாவின் மேற்குக்
கடற்கரையில் போய் ஒதுங்கின. பசிபிக் கடற்கரை நீரோட்டத்தின் விளைவு அது.
நம்முடைய தமிழகத்து மீனவர்கள், சாதாரணப் படகுகளிலேயே இங்கிருந்து சீனா
வரையிலும் எளிதாகச் சென்று விடுவார்கள். ‘சார், இங்கிருந்து முதலில்
அந்தமான் போவோம்; அங்கிருந்து மலாக்கா வழியாக தாய்லாந்து; அடுத்து சைனா
போய் விடுவோம்’ என்கிறார்கள். கடல் நீரோட்டம் அவர்களுக்குத் தெரிந்து
இருக்கின்றது. இது நமது பழைய கடல் வழி. அதே போல, கேரளாவில் இருந்தும்
ஆஸ்திரேலியாவுக்குப் போவதற்கு ஒரு பழைய கடல் வழி இருக்கின்றது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள், பாக் நீரிணை வழியாக வந்தால், 10
ஆவது கோணத்துக்குள் எளிதாக வந்து விடலாம். தொண்டி, நாகப்பட்டினம் வழியாக,
நேராக, அந்தமான், நிகோபாருக்கு, நான்காவது நாள் காலையில் போய்ச் சேர்ந்து
விடலாம். நான் அவர்களோடு பயணித்தேன். சாதாரண மின்விசைப் படகுதான், 12 கிலோ
மீட்டர் வேகத்திலேயே போகும். கழிப்பு அறைகள் இருக்காது. பின்புறம் உள்ள
பலகையில் அமர்ந்து கொள்ளலாம். வீலர் ஸ்கேலில் ஐந்து பேர் படுத்துக்
கொள்ளலாம். உணவைச் சமைத்துக் கொள்ளலாம். பத்து டிகிரி சேனல்
நீரோட்டத்திலேயே கொண்டு போய் விடுகிறது. அந்தமான் தீவுகளின் வட பகுதியில்
இருந்து பர்மாவில் உள்ள கோகோ தீவு 40 கிலோ மீட்டர்கள் தொலைவு தான்.
தென்பகுதி எல்லையில் இருந்து, இந்தோனேசியாவின் அக்ஷா கரை, 270 கிலோ
மீட்டர்கள் தான். இரண்டு நீரோட்டங்களையும் இணைக்கின்ற ‘பாலி’ என்ற தீவில்
இருந்து, மலேசியாவின் பினாங்கு 140 கிலோமீட்டர்கள் தான். இந்த மூன்று
பகுதிகளையும் எளிதில் அணுக முடியும். அங்கிருந்து மலாக்கா நீரிணை வழியாக,
சீனாவுக்கு எளிதில் சென்று விட முடியும்.
தென்மேற்குப்பருவக்காற்றின்
தொடக்கத்தில் பயணம் புறப்பட்டால், வடகிழக்குப் பருவக்காற்றின்போது
திரும்பி வந்து விடலாம். அதாவது மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, காற்று கிழக்கு
நோக்கி வீசும். அதன்பிறகு, மேற்கு நோக்கி வீசும். மீனவர்களுக்கு வலிமை தேவை
இல்லை. இலாகவம் இருந்தால் போதும். நுணுக்கம் தான் (Tactics) தேவை. கடலில்
எப்படிப் போவது என்று, வயதான சேலாளி மீனவர்கள் அதைச் சொல்லித் தருவார்கள்.
பெரிய கப்பல்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை, அரசாங்கமே வகுத்துக்
கொடுத்து விடும். அந்த வழியில் தான் அவர்கள் போக முடியும். எனவே,
அவர்களுக்கு அதற்கு அப்பால் உள்ள கடலைப் பற்றி அதிகமாகத் தெரிந்து
கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. கடல் கொள்ளைக்காரர்களுக்கு கடலைப் பற்றி
நன்றாகத் தெரியும். எந்தெந்த வழியாக, எப்படிச் செல்லலாம் என்பதை அறிந்து
வைத்து இருப்பார்கள். கட்டு மரங்களில் செல்பவர்களுக்கு, ஐம்பது மீட்டர்
ஆழம் வரையிலும் தெளிவாகத் தெரியும். ஒரு லாஞ்சில் செல்பவர்களுக்கு, 100,
150 மீட்டர்கள் ஆழம் வரையிலும் தெரியும். ஒரு டிராவ்லரில் செல்பவர்களுக்கு,
500 மீட்டர்கள் வரையிலும் தெரியும்; பாய்மரக் கப்பல்களில் செல்பவர்களுக்கு
3000 மீட்டர்கள் ஆழம் வரையிலும் தெரியும். வானியல் ஆய்வுகள் குறித்தும்
மீனவர்களிடம் இருந்து நிறையத் தெரிந்து கொண்டேன்.
அடையாறு
கே.வி. சர்மா ரிசர்ச் பவுண்டேசனில், வானியல் தொடர்பான அனைத்து நூல்களும்
உள்ளன. அதைப் படித்துப் பார்த்து, மீனவர்களிடம் அதைப் பற்றி விவாதிப்பேன்.
கோள்களின் நிலை, விண்மீன்களின் நகர்வு போன்றவற்றைக் கணித்துப் பார்ப்பேன்.
நமது முன்னோர்கள், 16 திசைகளையும், 16 நீரோட்டங்களையும் வகுத்து
இருக்கின்றார்கள். அந்த நுணுக்கங்களை எல்லாம் பார்க்கின்ற
போது, உலகக் கடலோடிகளுக்கு, நமது முன்னோர்கள் தாம் முன்னோடிகளாக இருந்திருக்கின்றனர் என்பது புரிகின்றது.
கடல் ஆய்வாளர் பாலு அவர்கள் தாயகத்தில் திரு.அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.
நன்றி :- சங்கொலி
—
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.
» நம் டெலடாவை பாலைவனமாக்க நமது பகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் திரு T.R.பாலு அவர்களிம் அதிகாரபூர்வ பக்கத்தில்( Official Site)ல் இருந்து எடுக்கப்பட்டது.
» திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது
» நெடுமாறன் அய்யா அவர்களுக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் எழுதிய கடிதத்தின் பிரதி
» இயற்கை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் சிறகு இதழிற்கு அளித்த நேர்காணல்-Video
» நம் டெலடாவை பாலைவனமாக்க நமது பகுதியில் வேட்பாளராக நிற்கிறார்.தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் திரு T.R.பாலு அவர்களிம் அதிகாரபூர்வ பக்கத்தில்( Official Site)ல் இருந்து எடுக்கப்பட்டது.
» திரு உருத்திரகுமாரன் அண்ணா அவர்களுக்கு பரமேஸ்வரன் எழுதிக்கொள்வது
» நெடுமாறன் அய்யா அவர்களுக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் எழுதிய கடிதத்தின் பிரதி
» இயற்கை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் சிறகு இதழிற்கு அளித்த நேர்காணல்-Video
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum