TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"வெள்ளி' நாயகன் சுஷில்! * மல்யுத்தத்தில் மீண்டும் அசத்தல் * தங்கப்பதக்க வாய்ப்பு நழுவியது

Go down

"வெள்ளி' நாயகன் சுஷில்! * மல்யுத்தத்தில் மீண்டும் அசத்தல் * தங்கப்பதக்க வாய்ப்பு நழுவியது Empty "வெள்ளி' நாயகன் சுஷில்! * மல்யுத்தத்தில் மீண்டும் அசத்தல் * தங்கப்பதக்க வாய்ப்பு நழுவியது

Post by மாலதி Mon Aug 13, 2012 7:56 am

"வெள்ளி' நாயகன் சுஷில்! * மல்யுத்தத்தில் மீண்டும் அசத்தல் * தங்கப்பதக்க வாய்ப்பு நழுவியது Sushil-336_78



லண்டன்: லண்டன்
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அசத்திய இந்திய நட்சத்திர வீரர் சுஷில் குமார்
வெள்ளிப்பதக்கம் வென்றார். பைனலில் தோற்ற இவர், தங்கம் வெல்லும் வாய்ப்பை
கோட்டைவிட்டார். கடந்த முறை பீஜிங்கில் வெண்கலம் வென்ற இவர், அடுத்தடுத்த
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற
சரித்திர சாதனை படைத்தார்.
லண்டன் ஒலிம்பிக் ஆண்களுக்கான
மல்யுத்தம் "பிரீஸ்டைல்' 66 கி.கி., எடைப்பிரிவு போட்டியில் இந்தியா
சார்பில் சுஷில் குமார் பங்கேற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுஷில்
குமார், துருக்கியின் ரமஜான் சாஹினை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
*
காலிறுதியில் சுஷில் குமார், உஸ்பெகிஸ்தானின் இக்தியார் நாவ்ருசோவை
சந்தித்தார். இதில் சுஷில் குமார் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று
அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
* அரையிறுதியில் இந்திய வீரர்,
கஜகஸ்தானின் அக்சுரக் டனாடரோவை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய சுஷில்
குமார் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம்
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற
புதிய சாதனை படைத்தார்.
* முக்கியமான பைனலில் சுஷில் குமார்,
ஜப்பானின் டாட்சுஹிரோ யோனேமிட்சுவை எதிர்கொண்டார். முதல் சுற்றை இந்திய
வீரர் 0-1 என இழந்தார். பின் இரண்டாவது சுற்றில் ஆக்ரோஷமாக ஆடிய ஜப்பான்
வீரர், சுஷில் குமாரை அப்படியே தூக்கி மைதானத்தில் போட 3 புள்ளி கிடைத்தது.
உடனடியாக எழுச்சி கண்ட சுஷில் குமார், ஜப்பான் வீரருக்கு எதிராக ஒரு
புள்ளி மட்டுமே பெற்றார். இதனால் 2வது சுற்றை இந்திய வீரர் 1-3 என
கோட்டைவிட்டார். இறுதியில் சுஷில் குமார் 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து
வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார்.
இதன்மூலம் லண்டன்
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6வது பதக்கம் கிடைத்துள்ளது. தவிர இது
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த நான்காவது பதக்கம்.
முன்னதாக ஜாதவ் (1952, வெண்கலம்), சுஷில் குமார் (2008, வெண்கலம்),
யோகேஷ்வர் தத் (2012, வெண்கலம்) ஆகியோர் பதக்கம் வென்றனர்.
முதல் இந்தியர்
கடந்த
பீஜிங் (2008) ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், இம்முறை
வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில்
தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு
படைத்தார்.
* தவிர இவர், ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் பைனலுக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
ஆறு பதக்கம்
கடந்த
பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்று பதக்கம் (ஒரு தங்கம் + 2
வெண்கலம்) கிடைத்தது. ஆனால் இம்முறை லண்டன் ஒலிம்பிக்கில் நம்மவர்கள் அசத்த
அதிகபட்சமாக மொத்தம் 6 பதக்கம் (2 வெள்ளி + 4 வெண்கலம்) கிடைத்துள்ளது.
இதன்மூலம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 26 பதக்கங்கள் (9 தங்கம் + 6 வெள்ளி
+ 11 வெண்கலம்) கிடைத்துள்ளது.
13 பிரிவு...81 வீரர்கள்
இம்முறை
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல்,
டென்னிஸ், பாட்மின்டன், குத்துச்சண்டை, ஹாக்கி, ஜூடோ, தடகளம், நீச்சல்,
பளுதூக்குதல், மல்யுத்தம், படகுப் போட்டி, டேபிள் டென்னிஸ் என 13 பிரிவு
போட்டிகளில் பங்கேற்றனர்.
* இதற்காக மொத்தம் 81 பேர் கொண்ட இந்திய அணி லண்டன் சென்றது.
*
ஆனால் துப்பாக்கி சுடுதல் (2 பதக்கம்), மல்யுத்தம் (2 பதக்கம்),
பாட்மின்டன் (ஒரு பதக்கம்), குத்துச்சண்டை (ஒரு பதக்கம்) என நான்கு
பிரிவுகளில் மட்டும் பதக்கம் கிடைத்தது.
120 கோடி
இந்தியாவின்
மக்கள் தொகை 120 கோடிக்கு மேல் உள்ளது. ஆனால் லண்டனில் நடந்த 30வது
ஒலிம்பிக் போட்டிக்கு வெறும் 81 வீரர், வீராங்கனைகளை மட்டும் இந்தியா
சார்பில் பங்கேற்றனர். நம்மை விட மக்கள் தொகையில் பின்தங்கி உள்ள அமெரிக்கா
சார்பில் அமெரிக்கா 100 பதக்கங்களுக்கு மேல் பெற்றுள்ளது. அதிக மக்கள்
தொகை கொண்ட சீனா சார்பிலும் நிறைய பதக்கம் கைப்பற்றப்படுகிறது.
31வது ஒலிம்பிக்
லண்டனில்
30வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பின்
ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமை பிரேசிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தலைநகர் ரியோ டிஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளது.
1.5 கோடி பரிசு
லண்டன்
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த இந்திய
வீரர் சுஷில் குமாருக்கு ரூ. 1.5 கோடி பரிசு வழங்கப்படும் என, அரியானா
மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். தவிர சோனேபாட் என்ற
இடத்தில் மல்யுத்த அகாடமி துவங்க சுஷில் குமாருக்கு நிலம் வழங்கப்
போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பைனலில் வீழந்தது ஏன்
அரையிறுதி
முடிந்ததும் சுஷில் குமாருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது.
உடலில் நீரின் அளவும் குறைய, மிகவும் சோர்வடைந்துள்ளார். கழுத்து வலியும்
அதிகரிக்க, நிலைமை சிக்கலானது. அரையிறுதி முடிந்த மூன்று மணி நேரத்தில்
பைனல் நடந்ததால், பிரச்னையில் இருந்து விரைவில் மீள முடியவில்லை.
இது
குறித்து அணியின் மானேஜர் ராஜ் சிங் கூறுகையில்,""பைனலுக்கு முன் மூன்று
முறை வாந்தி எடுத்தார். "டாய்லெட்டுக்கு' ஆறு முறை சென்றார். மிகவும்
பலவீனமாக இருந்தார். சாப்பிட்ட உணவில் ஏதோ பிரச்னை இருந்திருக்கிறது.
அரையிறுதியின் போது இவரது தோள்பட்டை பகுதியில் காயம் வேறு ஏற்பட்டது.
மொத்தத்தில் பைனலை சந்திக்கும் நிலைமையில் அப்போது சுஷில் இல்லை,''என்றார்.
அடுத்து தங்கம்
சுஷில்
கூறுகையில்"" அரையிறுதி முடிந்தவுடன் என் உடலில் தண்ணீரின் அளவு
குறைந்துவிட்டது. வயிற்றில் பிரச்னை உண்டானது. ஆனாலும் வெள்ளி வென்றேன்.
கடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றேன். நல்ல முறையில் முன்னேற்றம்
அடைந்துவருவதாக உணர்கிறேன். அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல
முயற்சிப்பேன்'' என்றார்.பஸ் டிரைவர் மகனின்
சாதனை பயணம்...
இந்தியாவில்
மல்யுத்த போட்டிக்கு புத்துயிர் கொடுத்த சுஷில் குமார், 29, மிகவும்
சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை திவான் சிங், டில்லி போக்குவரத்து
கழகத்தில் டிரைவராக பணியாற்றினார். "குஸ்தி' என்ற பாரம்பரிய மல்யுத்தத்தில்
ஆர்வம் கொண்ட இவரும் ஒரு பயில்வான் தான். தந்தை வழியில் மல்யுத்தத்தில்
களமிறங்கிய சுஷில், சர்வதேச அளவில் தொடர்ந்து அசத்தி வருகிறார்.
டில்லியில்
உள்ள பாப்ரோலா என்ற கிராமத்தில் 1983, மே 26ம் தேதி பிறந்தார் சுஷில்
குமார். 14 வயதில் களிமண் களத்தில் மல்யுத்தம் கற்க துவங்கினார். இவரது
உறவினர் சந்தீப், பயிற்சியில் பட்டை தீட்டப்பட்டார். போதிய வருமானம்
இல்லாததால், குடும்பத்தில் இருவர் மல்யுத்தத்தில் ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து சந்தீப், விலகினார். சுஷில் குமார் சர்வதேச அளவில் திறமை
நிரூபித்தார். இதன் உச்சக்கட்டமாக 2008, பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம்
வென்றார். 2010ல் டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம்
கைப்பற்றினார். தற்போது லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர்,
ரயில்வேயில் துணை மானேஜராக(வர்த்தகம்) பணிபுரிகிறார்.
2005ல் அர்ஜுனா விருது வென்ற இவர், விளையாட்டின் மிக உயர்ந்த ராஜிவ் கேல் ரத்னா விருதையும் (2008-09) பெற்றார்.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டெக்கான் சார்ஜர்ஸ் அசத்தல் வெற்றி *அரையிறுதியில் சென்னையுடன் மோதல் *வாய்ப்பு இழந்தது டில்லி
» வாட்சன் விளாசல்: ஆஸி., அசத்தல்! * தென் ஆப்ரிக்கா மீண்டும் தோல்வி
» யுவராஜ், ஸ்ரீசாந்திற்கு மீண்டும் வாய்ப்பு *இந்திய அணி அறிவிப்பு
» இந்திய அணிக்கு மீண்டும் "அடி': இங்கிலாந்து அசத்தல் வெற்றி
» 10 அமைச்சர் களுக்கு ‘சீட்’ இல்லை; 17 பேருக்கு மீண்டும் வாய்ப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum