TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்..........

2 posters

Go down

ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்.......... Empty ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்..........

Post by sakthy Sat Aug 11, 2012 10:41 pm

ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்..........

உலகில் நடக்கும் நிகழ்வுகள் சரித்திரத்தில் பொறிக்கப்படும் என கூறுவார்கள்.ஆனாலும் பல சரித்திர நிகழ்வுகள் திரிவு படுத்தப்பட்டு,மாற்றப்பட்டு, மறைக்கப்பட்டு விடுகின்றன என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.மணற் திட்டுக்கள் இராமர் பாலம் ஆனது என நாசா தெரிவித்தும்,இராம கதைகள் வெறும் கதைகளே என சொல்லியும்,தாஜ்மகால் காதலின் சின்னமல்ல என்று ஆதாரங்களுடன் காட்டியும் நாம் நம்பத் தயங்குகிறோம் என்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
எனவே தான் ஈழத்தில் நடந்த, நடக்கும் கொடூர சம்பவங்களை தொடர்ந்து நினைவு படுத்துவதும், போராட்டங்களை நடத்துவதும் அவசியம் என்கிறார்கள் இன உணர்வாளர்கள்.எதுவுமற்றவர் வாய் சொல் அருளீர் என்பதற்கு ஏற்ப நாம் போராடா விட்டாலும் முடிந்தவரை நினைவு படுத்துவதும் ஒரு வகையில் ஒரு போராட்ட வடிவமே தான். லண்டனில் நடந்த ராஜபக்சேக்கு எதிரான போராட்டமும்,தற்போதய சிவந்தனின் உண்ணாவிரதமும் போராட்டங்களின் சில வடிவங்களே. சிந்தனைக்களம் போன்ற சில இணையத் தளங்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக் கொணரவும்,நினைவு படுத்தவும் முனைவது வரவேற்கக் கூடிய செயல்களாகும்.
இந்த நிலையில் சமீபத்தில் நான் படித்த, Margaret Trawick என்ற ஐரீஷ் பெண்மணியின் ஆராட்சிக் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழச்சி அடைகின்றேன்.

இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் ஈழப் பகுதியிலும்,தமிழ் நாட்டிலும் வாழ்ந்து கண்ட அனுபவங்களை நூல்கள் மூலமும், ஆராட்சிக் கட்டுரைகள் மூலமும் வெளியிட்டிருக்கிறார். இவரின் நூல்களில்,Notes on Love in a Tamil Family,Enemy Lines போன்ற நூல்களும் ஒட்டாவா சர்வதேச கருத்தரங்கில் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையும் வரவேற்பை பெற்றதுடன், Enemy Lines பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது.தமிழர்களுக்கு சார்பாக எழுதுவதாக குற்றம் சாட்டப்பட்ட போதும்,Lancy போன்றவர்களுடனான கருத்து மோதல்களூக்கு இடையிலும்,எந்தவித அச்சமும் சளைப்பும் இன்றி பதில்களை கொடுத்ததுடன்,வந்து பாருங்கள்,சென்று பாருங்கள் என்று கூறி, உண்மைகளை நிலை நாட்டியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அமெரிக்கா,நியு சீலண்ட் இல் பேராசிரியராக பணி புரிந்த, இவரைப் போன்ற பல வெளி நாட்டவர்கள் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக் கொணர்ந்து குரல் கொடுக்கும் போது, நாம் எவ்வளவு வேகமாக செயல்பட வேண்டும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

சித்திரவதை,கடத்தல்,பாலியல் பலாத்காரம்,கொலை,வாய்ப்பூட்டு,போர்குற்றம் இப்படி பல மனித உரிமை மீறல்களுக்கிடையில் வாழும் அந்த பாவப்பட்ட மக்களுக்காக, அவற்றை மீள் கொணருவதால், நம் உணர்வுகள் அழிந்து விடாது தொடர்ந்து குரல் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையினால், இதோ சில அழியா வடுக்கள்,காயங்கள்,தொடர்ந்து வடியும் இரத்தக் காயங்கள்....

தொடர்ந்து வந்த இனக் கலவரங்களும், அதனால் ஏற்பட்டகல்வி சீரழிவு, சொத்துக்கள் சூறையாடப்பட்டது,கற்பளிப்பு,பாலியல் பலாத்காரங்கள் போன்றவை தான் அமைதியும், பண்பும்,அடக்கமும் கொண்ட ஈழத் தமிழ் பெண்களை போராளிகளாக்கியது என்று கூறும் Trawick, தான் கண்ட, ஆய்வு செய்த நிகழ்ச்சிகளையும் தந்து கண்களை கலங்க வைக்கிறார்.

1983 ஜூலையில் நடந்த மோசமான இனக் கலவரமும்,அதைத் தொடர்ந்து 1987 ல் அமைதிப் படை என்ற பெயரில் தமிழர்களுக்கு பாதுகாப்பாக வந்த,இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களால் படு மோசமடைந்தது.

வயது வந்த இளம் பள்ளி மாணவியுடன் வாழ்ந்து வந்த இளம் தாயின் சோகக் கதை இது.
நவெம்பர் 12 ம் திகதி காலை 8 மணியளவில் திடீரென வந்த இந்திய இராணுவத்தினர்,எனது மகளை ஒரு அறைக்கு இழுத்து சென்று பூட்டி வைத்தார்கள்.தேடுதல் செய்கிறோம் என்று சொன்ன அவர்கள்,எங்களிடம் இருந்த நகைகள் பொருட்களை சுருட்டிக் கொண்டு சென்று விட்டனர். சிறிது நேரத்தில் வேறு மூவர் வீட்டின் பின் பக்க வழியால் வந்தனர். என் பெற்றொரை அறையில் பூட்டி வைத்து விட்டு என்னை தொடர்ந்து மாறி மாறி கற்பழித்தனர். சத்தமிட்டால் என் பெற்றொர்களை சுட்டுக் கொன்று விடுவதாக பயமுறுத்தினர். என் குழந்தையுடன் மறு நாள் தப்பி வந்து விட்டேன். இது பற்றி வெளி ஊரில் இருக்கும் என் கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்த போது கவலைப் படாதே விரைவில் வந்து விடுகிறேன் என்றார். என் கணவர் என்னை மீண்டும் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறீர்களா.என் குழந்தைக்காக நான் வாழ வேண்டிய நிலை என்ற அவர் கண்களில் நீர் ஆறாய் பாய்ந்தது.

இது ஆயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்று தான்.வெளி நாடுகள் போலல்லாது இவர்களில் பலர் எதையும் வெளியே சொல்லாது விட்டு விடுகிறார்கள்.இப்படியான சம்பவங்களால் மன நோய்க்கு ஆளான பலரையும்,தற்கொலை செய்து கொண்டவர்களையும் நாம் எண்ணிப் பார்க்கிறோம்.
இந்திய இராணுவத்தாலும், அரச பயங்கரவாதத்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் இன்றும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பாமலே,திரும்ப முடியாமலே வாழ்கிறார்கள். விதவைகளாக,பிள்ளைகளை இழந்து,உற்றாரை,உறவினைரை இழந்து, கட்டிக் காத்து வந்த சொத்துக்களை இழந்து,நிலங்களை இழந்து, கல்வியை இழந்து, எத்தனையோ கற்பனைகளை சுமந்து வாழ்ந்த இவர்கள் வாழ்வே கற்பனையாக கானல் நீராகி விட்டதை எண்ணிப் பார்க்க இந்த உலகம் இன்னமும் முயலவில்லை.

இது தவிர கிழக்கில் உள்ள செங்கலடி,துறைநீலாவணை, வீரமுனை பகுதிகளில் 1990 ஆகஸ்ட் 12,15,18 திகதிகளில் இராணுவத்துடன் இணந்து செயல்படும் முஸ்லீம் ஹோம் காட்(muslim home guard)களால்
90,95,91 என்ற எண்ணிக்கைகளில் அப்பாவி பொது மக்கள் சுடப்பட்டும்,உயிருடன் எரியூட்டப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.இதற்கு சில தினங்களுக்கு முன், ஆகஸ்ட் 3 ல் காத்தங்குடி முஸ்லிம் பள்ளிவாசலில் 113 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அதே ஆக்ஸ்ட் 11 ல் ஏறாவூரில் 110 முஸ்லிம் பெண்கள்,குழந்தைகள் உட்பட படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலைகள் அனைத்தும் விடுதலைப் புலிகள் மீது வழக்கம் போல் சுமத்தப்பட்டு, இலங்கை இராணுவம் தன் பக்கத்திற்கு சாட்சியங்களை வலுவாக்கிக் கொண்டது.ஆனால் அப்போது காத்தாங்குடியில் மத போதகராக இருந்த பாவா என்பவர்,அவரின் மகன் தற்போது வெளி நாட்டில் வசிக்கிறார், புலிகள் எந்த விதத்திலும் இதில் தொடர்பு கொண்டிருக்க முடியாது என்றும்,இராணுவத்தினரே தமிழில் பேசி விடுதலைப் புலிகள் என நம்ப வைத்து இந்தப் படுகொலைகளை நடத்தி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

இத்துடன் யாழ்ப்பாணத்தில் தபால் அதிபர் ஒருவர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த வீட்டை இந்திய இராணுவத்திற்கு கொடுக்க இணங்காததால், அன்று இரவே தூக்கில் தொங்க வைத்த இராணுவத்தினர்,அவரது மனைவியையும் கற்பளித்து விட்ட சோகத்தை, அவர்கள் பிள்ளைகள் முன்னால் நடந்த இந்த கொடுமையை எங்கு காண முடியும்? அமைதியாக வாழ்ந்த அந்தக் குடும்பம் சிக்கி சிதறிய சோகத்தை யாரால் ஈடு செய்ய முடியும்?

உலகின் பல நாடுகளிலும் நடந்த வரலாற்று சம்பவங்கள் சொல்லித் தந்த பாடம்,என்றுமே பெரும்பான்மையினர் சிறுபான்மை இனத்திற்கு நீதியான உரிமைகளை வழங்கியதில்லை.எப்போதும் ஏமாற்றப்பட்டே
வந்திருக்கிறார்கள். பெரும்பான்மையினர் வெற்றியாளர்களாகவும்,சிறுபான்மையினர் தோல்வியாளர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். இதைவிட எப்போதுமே பெரும்பான்மையினருக்கு சார்பாகவே உலகம் செயல்பட்டு வந்திருக்கிறது. தங்கள் உரிமைகளை கேட்ட ஒரு இனம் பயங்கரவாதிகளாகவே காட்டப்பட்டு வந்துள்ளனர்.இப்படி காட்டப்படுவதால் பெருபான்மையினருக்கு எப்பொதுமே உலகம் சார்ந்தும்,போராடும் இனத்திற்கு பயங்கரவாதிகள் என்ற பட்டத்தை சூட்டி ஒடுக்கி விடவுமே முயற்சிக்கிறது.இந்த நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி போராடுவதும் பிரிந்து வாழ்வதும் தான்.



avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்.......... Empty Re: ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்..........

Post by ஜனனி Sun Aug 12, 2012 7:14 am

ஈழத் தமிழச்சியின் கண்ணீரில் இருந்து சில துளிகள்.......... 917304நீங்கள் கூறுவது முற்றிலயும் உண்மை .......
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................
» ஐ.நா.வில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த "இலங்கையின் கொலைக்களம்"! சனல்4 திரைப்படம்
» "சவுதி அரேபியாவில் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு சாலை ஓரமாக வாழும் 300 ஈழத் தமிழர்கள் " ராஜன் தொடர்பு எண் : 00966533724554
» நம்புங்கள் இது தமிழ்நாடுதான்.. இனப்படுகொலையில் இருந்து தப்பி அடைக்கலம் தேடி வந்த பல ஈழத் தமிழர்கள் பூந்த மல்லி எனும் இடத்தில் இப்படித்தான் பல வருடங்களாக அடைத்து வைக்கபபட்டுள்ளார்கள்..
»  ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஈழத் தமிழ் இளைஞன் தீக்குளித்து உயிர்த் தியாகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum