Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நவம்பரில் 2 ஜி அலைக்கற்றை ஏலம்
Page 1 of 1
நவம்பரில் 2 ஜி அலைக்கற்றை ஏலம்
புது
தில்லி, ஆக. 7: ""2ஜி அலைக்கற்றைத் தொகுப்பை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்
ஏலத்தில் விடவேண்டும் என்று விதிக்கப்பட்ட கெடுவை நவம்பர் மாதம் வரை
நீட்டிக்க வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மத்திய
அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது. மத்திய தொலைத் தொடர்புத்
துறைக்கான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் ப.
சிதம்பரம் தலைமையில் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக்
கூட்டத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர்
சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் கபில் சிபல் கூறியது:""2
ஜி அலைக்கற்றைத் தொகுப்பை ஏலத்தில் விற்பனை செய்ய "டைம்ஸ் இண்டெர்நெட்'
என்ற நிறுவனத்தைத் தொலைத்தொடர்புத் துறை தேர்வு செய்துள்ளது. அந்த
நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தியதில் "2 ஜி' அலைக்கற்றை ஏலம் விட ஆகஸ்ட் 31-ம்
தேதி வரை விதிக்கப்பட்ட அவகாசம் போதாது எனத் தெரிகிறது. அந்த
நிறுவனம் கூடுதல் அவகாசம் கோருகிறது. இதனால், "2 ஜி' ஏலம் விடுவது தொடர்பாக
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை உச்ச
நீதிமன்றத்தில் விளக்குவது என்று முடிவு செய்துள்ளோம். இது குறித்து
மத்திய அமைச்சர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டது. அப்போது, ஆகஸ்ட் 31-ம்
தேதி வரை விதிக்கப்பட்ட கெடுவை நவம்பர் மாதம் வரை நீட்டித்தால்
பிரச்னையின்றி "2 ஜி' ஏலம் விட முடியும். அதனால், கால நீட்டிப்பு வழங்க
வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரத்துக்குள் மனு தாக்கல்
செய்யப்படும்'' என்று கபில் சிபல் கூறினார். "2 ஜி' ஏல நடவடிக்கை குறித்து
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சக உயரதிகாரி கூறியது:""2ஜி
அலைக்கற்றையை ஏலம் விடுவதற்குத் தனியார் நிறுவனம் தேர்வு செய்த தகவலை
அரசிதழில் மத்திய அரசு வெளியிட வேண்டும். அதன் பிறகு, ஏலம் எடுக்க தகுதி
வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்க வேண்டும்.
அவற்றிலிருந்து ஏலம் ஒதுக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றுவது உள்பட 13
கட்ட நடவடிக்கைகளை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்யும் மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம்
கால நீட்டிப்பு வழங்கினால், நவம்பர் முதல் வாரத்தில் ஏலம் நடத்த முடியும்''
என்றார் அந்த அதிகாரி."2 ஜி' அலைக்கற்றை பெற்றுள்ள தனியார் தொலைத்
தொடர்பு நிறுவனங்களின் உரிமம் செப்டம்பர் 7-ம் தேதி வரை செல்லுபடியாகும்
என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், ஏலம் நடத்தப்படாமல்
2008-ம் ஆண்டில் "2 ஜி' அலைக்கற்றை பெற்றுள்ள சிஸ்டெமா ஷ்யாம், யூனிநார்,
விடியோகான் உள்ளிட்ட நிறுவனங்கள், இப்போது ஏலம் நடத்தப்படும்போது, அதில்
பங்கேற்க வேண்டும். அப்போது, அந்நிறுவனங்கள் ஏற்கெனவே ஒதுக்கீடு பெற்ற
தொலைத் தொடர்பு வட்டாரங்களில் சேவை நடத்த வாய்ப்பு கிடைக்குமா என்பது
கேள்விக் குறி. இது பிரச்னைகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இது போன்ற
நிறுவனங்களைக் கருத்தில் கொண்டே ஏலம் விடுவதற்கான அவகாசத்தை
நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றத்திடம் கோர மத்திய அமைச்சர்கள் குழு முடிவு
செய்துள்ளதாகத் தொலைத் தொடர்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அலைக்கற்றை மீண்டும் ஏலம் விடப்படலாம்: அமைச்சர் கபில் சிபல்
» கன்னித்தன்மையை ஏலம் விட்ட நியூசி பெண் – 36,000 டாலருக்கு ஏலம் போனார்!
» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை
» 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விவாதம்: ராசா எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்தது
» 2ஜி அலைக்கற்றை முறைகேடு: கனிமொழி மனு மீது இன்று விசாரணை
» கன்னித்தன்மையை ஏலம் விட்ட நியூசி பெண் – 36,000 டாலருக்கு ஏலம் போனார்!
» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை
» 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விவாதம்: ராசா எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்தது
» 2ஜி அலைக்கற்றை முறைகேடு: கனிமொழி மனு மீது இன்று விசாரணை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum