TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்.

Go down

இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய். Empty இலங்கை அரசுடன் போரின் போது இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!- அருந்ததி ராய்.

Post by ஜனனி Sat Aug 04, 2012 4:26 pm

இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட
தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின்
இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய்
குற்றஞ்சாட்டுகிறார்.
இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன்
உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை
எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய ‘தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்’
தமிழ் மொழிபெயர்ப்பு நூலான – ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ – வெளியீட்டுக்காக
சென்னை வந்திருந்த அருந்ததியைச் சந்தித்தேன்.

அவரின் நேர்காணலில் முக்கியமான சில பகுதிகளை இங்கு தருகிறோம்:

கேள்வி. அரச பயங்கரவாதம்,
சுதந்திரம் குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால், இலங்கையின் பின்னின்று ஒரு
போரை இந்திய அரசு நடத்தியபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?”


பதில் - இலங்கைப்
போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன
பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்?
உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன்
இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல
அரசியல்!

இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள்
முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி
இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே
விட்டுவிடுகிறேன்.”

கேள்வி: இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?

பதில்: நான் ஒரு வயதுக்
குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத்
திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு
மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று சொல்ல
வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம்.
இப்படித்தான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனது.

கேள்வி: உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்..?

பதில்: அப்பா ஒரு
குடிநோயாளி. என்னுடைய 20 வயதில்தான் அவரைப் பார்த்தேன். அதுவரை அப்படி
ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்குக் கிடையாது. ஆனால், நான் பார்த்த
உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. அப்பாவைவிட்டுப் பிரிந்து வந்த
பிறகு, ஊட்டியில் ஒரு சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே
வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த
வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், ‘உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க
மாட்டார்கள்… நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம்
கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும்
அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

கேள்வி: இப்போது நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா?

பதில்: ஆமாம். நான்
செயல்படும் முறைக்கு அளவற்ற சுதந்திரம் தேவை. அது திருமண வாழ்க்கையில்
கிடைக்காது என்பதை என்னுடைய மண வாழ்க்கைகளின் மூலமும் தெரிந்துகொண்டேன்.
எனக்குக் குழந்தைகள் கிடையாது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான்
விரும்பியதும் இல்லை. என் முதல் கணவருக்கு இரு குழந்தைகள் உண்டு.
அவரைவிடவும் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். நான் நேசித்தவர்களை இன்னமும்
நான் நேசிக்கிறேன். ஆனால், ஒரு சுதந்திரப் பெண்ணால் இன்னொருவர்
விதிமுறைக்குக் கீழ் வாழ முடியாது. சமயத்தில் 10 நாட்கள் சாப்பிடாமல்,
தூங்காமல் எழுதுவேன். குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு இது எல்லாம்
சரிப்படாது!

கேள்வி: இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?

பதில்: இந்தியா என்கிற
வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை.
தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற நாடு
உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து. அப்படிப் பிரிவினையால் உருவான ஒரு
நாடு காலனி ஆதிக்கச் சக்திபோலத்தான் செயல்படுகிறது.

மக்கள் போராட்டத்தை அடக்க இராணுவத்தை
அனுப்புவது ஆகட்டும், மற்ற நாடுகளிலும் பிரிவினையை உருவாக்குவது ஆகட்டும்.
தேசியம் என்பது தவறு அல்ல. ஆனால், அதில் நியாயம் இருக்க வேண்டும்.

வரைபடத்தில் என்னுடைய நாட்டின் அளவு
பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. ஆனால்,
நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறையும்
ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்.

கேள்வி: இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?

பதில்: அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்.

கேள்வி: மோடி – ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

பதில்: எவ்வளவு மோசமான நாடு இது… (சிரிக்கிறார்). இருவருமே பெரும் சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டுவருவார்.”
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!!
» இலங்கை அரச படைகள் போரின் போது மிகக் கொடூரமான மீறல்களைப் புரிந்தன: - ஐ நா மீது கனேடிய ஊடகம் காட்டம்!
» நான் மாவோயிஸ்டுகளின் பக்கம்: அருந்ததி ராய்
» டிசம்பர் 13- நாடாளுமன்ற தாக்குதல்-அப்சல் தூக்கு: அருந்ததி ராய் எழுப்பிய 13 கேள்விகள்!
» இலங்கை வரும் இந்திய பாராளுமன்றக் குழுவில் தமிழக எம்பிக்கள் இல்லை?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum