Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகா பகீரத முயற்சி
Page 1 of 1

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்தும், எல்லை பிரச்னை
குறித்தும், மீண்டும் கர்நாடகா பிரச்னை கிளப்பி இருப்பதோடு, இது குறித்து
உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகா மனு தாக்கல் செய்ய இருப்பதாக, அம்மாநில நீர்
வளத்துறை அமைச்சர் பசவராஜ் தெரிவித்துள்ளார். எல்லை பிரச்னைக்கு ஏற்கனவே
முடிவு எட்டிய நிலையில், மீண்டும் பிரச்னை கிளப்புவது, தேவையற்ற சர்ச்சையை
ஏற்படுத்தி, இரு மாநில உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான, ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி,
இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் சிறுமலை
மற்றும் சினிபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளை, 2005ல் கர்நாடக வனத்துறையினர்
தங்களுக்குரிய பகுதி என, கூறி பிரச்னையை கிளப்பினர்.
சர்வே: பின் இரு மாநிலங்களுக்கும் இடையில் சர்வே செய்யப்பட்டது.
அதன் பின் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டு
குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடக அரசு ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை எழுப்பி
வருகிறது. கடந்த, 25ம் தேதி கர்நாடக மேலவையில் கேள்வி நேரத்தின் போது,
உறுப்பினர் அஸ்வத் நாராயணன் கேள்விக்கு, பதில் அளித்த, அம்மாநில அமைச்சர்
பசவராஜ் பொம்மை, "ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் மாற்றம்
செய்திருப்பதாகவும், எல்லைகள் அதிகப்படுத்தபட்டுள்ளது. இத்திட்டத்துக்குரிய
இடம் விவாதத்துக்குரியது. மத்திய அரசு கூட்டு சர்வே செய்ய அக்கறை
காட்டவில்லை. எனவே சட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என,
கூறியுள்ளார். எல்லை பிரச்னைக்கு, 2005ம் ஆண்டு இரு மாநில வனத்துறையினர்
கூட்டாக சர்வே பணி முடித்துள்ளனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி
நடக்கும் பகுதி முழுவதும் தமிழக எல்லைக்குள் வருகிறது. தமிழகத்தில் காவிரி
நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் இருந்து, 64 கி.மீ., தூரம் தமிழக,
கர்நாடகா எல்லை வனப்பகுதி உள்ளது. ஒரு கரைப்பகுதி தமிழக பகுதியான ராசிமணல்,
பிலிகுண்டுலு, ஊட்டமலை, கூத்தப்பாடி, ஒகேனக்கல் ஆகிய பகுதிகள் உள்ளன. மறு
கரைப்பகுதியில் கர்நாடக மாநில கிராமங்களான மாறுகொட்டாய், ஜம்புபட்டி,
செங்கம்பாடி ஆகிய கிராமங்கள் உள்ளன. காவிரியின் ஒரு கரைப்பகுதி
தமிழகத்துக்கும், மறு கரைப்பகுதி கர்நாடக மாநிலத்துக்குமாக பிரித்து,
பிரிட்டிஷ் அரசு வன நீர் பரப்பு எல்லையாக வரையறுத்துள்ளது.
பிரிவினை: நீர் பரந்து விரிந்து வரும் கரைக்கு இடைப்பட்ட பரப்பு,
இரு மாநிலத்துக்கும் சரி சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு கரைக்கும்
இடைப்பட்ட நீர் பரப்பு பகுதியானது, 50 கி.மீ., தூரத்தில், 500 மீட்டர்
முதல், 2,000 மீட்டர் இடைவெளியில் உள்ளது. இந்த பரப்பும் சரிசமமாக இரு
மாநிலங்களுக்கும் பிரித்து, பிரிட்டிஷ் ஆட்சியில் வனத்துறை வரைபடம்
தயாரிக்கப்பட்டுள்ளது. ஊட்டமலையில் இருந்து வரும் காவிரி நீர் பெரிய
நீர்வீழ்ச்சி அருகே, இரு பிரிவாக பிரியும் மையப்பகுதியில் பாறை பரப்பாக
உள்ளது. கடந்த, 2005ம் ஆண்டு இரு மாநில வனத்துறையினர், பிரிட்டிஷ் வனத்துறை
சர்வே அடிப்படையில் ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
வைத்துள்ள நிலையில், மீண்டும் கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும்
தகவல்கள் முரண்பாடாக உள்ளன. பிரிட்டிஷ் வரைபட அமைப்பு படியும், உபயோக
அடிப்படையிலும், கர்நாடக மாநில அமைப்புகள் உரிமை கோரும் பகுதி அனைத்தும்
தமிழக எல்லையில் உள்ளது. ஆனால், தேவையற்ற எல்லை பிரச்னையை, கர்நாடக மாநில
அமைச்சர் பசவராஜ் பொம்மை கிளப்பி வருவது, இரு மாநிலங்களுக்கு இடையே
தேவையற்ற சர்ச்சையை கிளப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை: கர்நாடக அரசு
கூறுவது போல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியில் எந்த மாற்றமும்,
விரிவுப்படுத்தவும் இல்லை. பணி துவங்கப்பட்ட போது திட்டமிட்டப்படியே பணி
நடந்து வருகிறது. இத்திட்டத்தால், கர்நாடக மாநிலத்துக்கு எந்த பாதிப்பும்
கிடையாது.கடந்த, 1998ம் ஆண்டு பெங்களூரு குடிநீர் திட்டமும், ஒகேனக்கல்
குடிநீர் திட்டமும், இரு மாநில அரசுகளால் ஒப்பு கொள்ளப்பட்டவை. 2002ம்
ஆண்டு, பெங்களூரு குடிநீர் திட்டத்தை, உலக வங்கி நிதியுதவியுடன் கர்நாடக
அரசு நிறைவேற்றியது. கடந்த, 1998ம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியின்
போது, பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை காரணமாக, ஜப்பான் பன்னாட்டு வங்கி
நிதியுதவி தடைபட்டதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு
பணியோடு நின்றன. குடிநீர் பெறுதல் என்பது அடிப்படை மனித உரிமை. இதை
தடுப்பது மனிதநேயமற்ற செயல். சர்வதேச சட்ட மரபுக்கும், இந்திய அரசியல்
சாசனத்துக்கும் மாறானது. மேலும், காவிரி நதி நீர் பங்கீடு குறித்த
பிரச்னையுடன், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அணுக கூடாது. குடிநீர் பிரச்னை
வேறு, நதி நீர் பங்கீடு வேறு என்பதை கர்நாடக அரசு உணர வேண்டும்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறுத்த காங்கிரஸ் மனு
» இறுதி கட்டத்தில் "மெகா' குடிநீர் திட்டம் : விறுவிறுப்படையும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
» ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு: தமிழக எல்லையில் இன்று முழுஅடைப்பு
» மேட்டூர் அணை நீர்பரப்பில் குடிநீர் எடுக்கும் கர்நாடகா
» ஸ்ரீமலையில் தண்ணீர் தட்டுப்பாடு: மேட்டூர் அணையில் குடிநீர் எடுக்கும் கர்நாடகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum