Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கருணாநிதியின் குடும்பத்தினர் சொத்து வாங்கும் வித்தை எப்படி? -எம்.ஜி.ஆர். தெரிவித்த ருசிகர தகவல்!
Page 1 of 1

கே: சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களுக்கு அ.தி.மு.க.வில் வரவேற்பு இருக்குமா?
பதில்:
அமரர் அண்ணாவின் உடன் இருந்து அண்ணா தொடங்கிய தி.மு.க.வை உருவாக்கிய மூத்த
தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் திரு. ஈ.வி.கி.சம்பத்
அவர்கள். அப்படிப்பட்டவருக்கு அண்ணாவின் திமுகவில் எப்படி வரவேற்பு
இல்லாதிருக்கும்! அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி
மரியாதை அ.தி.மு.க.வில் இருந்தே தீரும்.
கே: “அரசியலில் எம்.ஜி.ஆரைவிட நான் சீனியர்” என்று சிவாஜி கணேசன் கூறியுள்ளாரே, அதற்குத் தாங்கள் அளிக்கும் பதில் என்ன?
பதில்:
ஏன் இருக்கக்கூடாது? அவர் அப்படிப்பட்டவராக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி
அடைவேன். எதிர்காலத்திலாவது அவருடைய ’சீனியாரிடி’க்கு தகுந்தவாறு அவரது
அரசியல் நாகரிகம் அவருக்கு உதவுமானால்...!
கே: கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்கள் யார் சொத்து வாங்கினாலும் அதன் விலை நாற்பத்தி ஜயாயிரம் ரூபாயாகவே இருக்கிறதே. இது ஏன்?
பதில்: அவர்கள் கொடுப்பது தான் ஒரு அளவுக்குள் இருக்கிறது. ஆனால் வாங்குவது ஒரு அளவுக்குள் இல்லை என்று சொல்கிறார்களே என்ன செய்வது?
கே: உங்களால் முன்னுக்கு வந்தவர்கள் தங்களைத் தூற்றுவது ஏன்?
பதில்: கோடரிக் காம்புகள்.
கே: கண்ணதாசன் அரசியல் எத்தகையது?
பதில்:
கண்ணதாசன் அவர்களுடைய அரசியலைப் பற்றி ஒரு புதிய அகராதியை அவரே
தயாரித்தால்தான் அவருடைய அரசியல் என்ன என்பதை மக்களால் புரிந்துகொள்ள
முடியும்.
கே: தங்களுக்கு அரசியல் தெரியாது என்று கூறும் சிவாஜி கணேசனைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
பதில்: நல்ல ஒரு நகைச்சுவை.
கே: பெருந்தலைவர் காமராஜர் உங்களை ‘நாடகமாடி’ என்கிறார். உண்மையில் யார் நாடகமாடுகிறார்கள் என்று காமராஜருக்கு தெரியாதா?
பதில்:
கலைவாணர் அவர்கள் ரஷ்யாவிற்குப் போய் வந்து சோஷலிஸக் கொள்கையைப் பற்றிப்
பொதுமேடையில் கருத்து வெளியிட்டார். அன்று கலைவாணரை, பெருந்தலைவர் காமராஜர்
கோமாளி என்று கேலி பேசினார். ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு காமராஜர்
ரஷ்யாவுக்குப் போய்வந்த பிறகு கலைவாணர் என்ன சொன்னாரோ அதையே திரும்பச்
சொன்னார்.
கே:
தங்களால் அறிமுகப்பட்ட நகைச்சுவை நடிகர் ஒருவரும்; தங்களால் வளர்ந்த வேறு
இரண்டு நகைச்சுவை நடிகர்களும் உங்களைத் தாக்கும் வகையில் படங்களில்
சிலேடையாக வசனம் மூலமாகவும்; பத்திரிகை வாயிலாகவும் தாக்குகிறார்களே?
பதில்:
சினிமாவிலே பேசப்படுகின்ற உரையாடல்கள் பெரும்பாலும் நடிகர்களது சொந்தக்
கற்பனை அல்ல; ஆசிரியரால் எழுதப்படுவது. திருமதி பத்மினி 1967 தேர்தலின்போது
காங்கிரஸ் கட்சியின் சார்பாக மக்களிடம் தன கருத்தை வெளியிடும்போது என்
தொகுதியிலும் எனக்கு வாக்களிக்க்க் கூடாது என்றும், காங்கிரஸ்
வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்றும் அழுத்தமாகப் பேசினார்கள். 67
தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது? எவ்வளவு வேகமாக காங்கிரஸ் கட்சிக்கு
வந்தேரோ, அதைவிட வேகமாகக் கட்சியை விட்டுப் போய்விட்டார்.
கே:
மூதறிஞர் இராஜாஜியிடன் நீங்கள் ஆசிபெற சென்றபோது அவர் “பல ஆண்டுகளுக்கு
முன்பே நீங்கள் இதைத் துவங்கியிருக்க கூடாதா?” என்று உங்களிடம் கேட்டதற்கு
என்ன பதில் கூறினிர்கள்?
பதில்: “தாமதாமகிவிட்டாலும் தகுந்த முறையில்
உங்கள் ஆசியோடு எனது தொண்டுகளை செய்ல்படுத்துவேன்” என்று சொன்னேன்.
’வாய்மையே வெல்லும்’ என்று ஆசி கூறினார்.
கே: சென்னை நகரில் நவீன வசதிகளுடன் ஒரு தியேட்டர் கட்டுவீர்களா?
பதில்:
இல்லை. ஏனெனில், அண்ணா அவர்கள் தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகளில்
ஒன்று, படக்கொட்டகைகளை அரசுடைமையாக்குவது. வெகுவிரைவில் அந்த நிலை
வரவேண்டும்; வரப் போகிறது என்று நம்பும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவன் எப்படி
இதில் ஈடுபட முடியும்?
கே: கருணாநிதி, மதுரை முத்து, அன்பழகன் போன்றவர்கள் மனந்திருந்தித் தவறை உணர்ந்து அ.தி.மு.க.வுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா?
பதில்: ’திருந்துவது’ வேறு; செய்த தவறுக்குப் ‘பிராயச்சித்தம்’ தேடுவது வேறு.
கே: கலைஞர் கருணாநிதியைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்த சில வரிகள்...?
பதில்: எனக்குத் தெரிந்தது, சில வரிகளுக்குள் அடங்காது.
கே:
1971 தேர்தலின்போது ‘கம்பம் நகருக்கு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு,
பிறகு ஒரு மிரட்டல் கடிதத்துக்குப் பயந்து நீங்கள் வைகை அணையிலேயே
தங்கிவிட்டதாகக் தி.மு.க.வினர் கூறுகிறார்களே... உண்மையா?
பதில்: பொய்யை
மெய்யாக்க விரும்புபவர்கள் எதையும், எப்படியும் திரித்துக் கொள்வார்கள்.
ஆனால், அன்று நடந்தது இதுதான். வைகை அணைக்கு நான் வந்து கொண்டிருக்கும்போது
எனது வண்டி நகர்ந்து வரமுடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். என்னைக்
காணவேண்டுமென்ற ஆர்வத்தில் பெரியவர்களும், தாய்மார்களும் ஓடி வந்தபோது
ஒருவர் தவறி விழுந்து கால் எலும்பு முறிந்துவிட்டது. அவருக்கு சிகிச்சை
அளிப்பதற்காக என் வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று
அவருக்கு சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவருக்கு பயன்படத்தக்க
வகையில் 500 ரூபாய் கொடுத்துவிட்டு வருவதற்குள் இருட்டிவிட்ட்து. அதோடு
மழையின் கொடூர தாக்குதல். அந்த இருட்டிலும் மழையிலும் மேலும் சென்று மக்களை
அவதிக்குள்ளாக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் விளைவாக மேற்கொண்டு பயணத்தை
தொடர விரும்பவில்லை. இதுதான் உண்மை. அந்த நேரத்தில் கால் முறிந்து விழுந்த
அன்பரே இந்த உண்மைக்கு போதுமான சாட்சி.
கே: ‘நாடு நலம் பெற வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்துக்காக ஒரு நாட்டை ஆள்பவன் சர்வாதிகாரியாக மாறுவதைத் நீங்கள் விரும்புவீர்களா?
பதில்:
மகாத்மா காந்தி, வினோபா பாவே, அமரர் அண்ணா இவர்கள் மூவரும் ஜனநாயகத்தின்
அடிப்படையில் ஜந்து ஆண்டுக் காலத்துக்குச் சர்வாதிகாரியாக மாறவேண்டுமென்று
விரும்பிச் செயல்பட்டார்களானால், நாடு நலம் பெறலாம்!
கே: உங்களை, தி.மு.க.விலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்தபோது என்ன நினைத்தீர்கள்?
பதில்: கொடுமையாளர்கள் கையிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன்னென்று.
கே: ‘அண்ணாவை மதிக்காதவர் எம்.ஜி.ஆர்’ என்று கூறும் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு தங்கள் பதில் என்ன?
பதில்: ஒரு பதிலும் இல்லை.
கே: உங்களைத் தாக்கி எழுதும் தமிழ்வாண்னைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?
பதில்: வல்லவர், திறமையாளர், வியாபார ரகசியம் நன்கு தெரிந்தவர்! ஆனால் எடுப்பார் கைப்பிள்ளை!
கே: உங்கள் வாழ்க்கையில் இன்றுவரை மறக்க முடியாத சம்பவம் இருக்கிறதா?
பதில்: நான் இன்னும் உயிரோடு இருப்பது!
கே:
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மலையாளிகளுக்குத்தான் முக்கியத்துவம்
கொடுப்பீர்கள் என்று பேசப்படுகிறதே... இதற்கு தங்கள் பதில் என்ன?
பதில்: யார் பேசியது அப்படி என்று சொல்ல வேண்டாமா?
கே:
வாலிபப் பருவம் முதல் சம்பாதிக்க ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் பட்ட இன்ப
துன்பங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த கருணாநிதி, திடீரென உங்களைப்
புறக்கணிக்க ஆரம்பித்தற்கு காரணம், உங்களின் மாபெரும் வளர்ச்சியே என்பது
உண்மையா?
பதில்: வளர்ச்சி, தளர்ச்சி, இவைகளின் அளவுகோல்கள் அவரவர்களுடைய
மனத்தின் துணிவையும் பலவீனத்தையும் பொறுத்து உருவாகிறது. ஒருவருக்குத்
தளர்ச்சியாக இருப்பது, பிறருக்கு வளர்ச்சியாக தோன்றலாம், நீங்கள்
குறிப்பிட்டுள்ள என் நன்பர் ஒரு தலைவராகவா, ஒரு முதல்வராகவா அல்லது
தொண்டராகவா –இவைகளில், எந்தக் கோணத்திலிருந்து அவருடைய நோக்கு என்னைச்
சந்தித்தது என்பது அவரைப் பற்றிய திறனாய்வில் அல்லவா வெளிப்படும்.
கே:
நீங்கள் ஜெயிலுக்குப் போகாத காரணத்தால், ‘கட்சிக்காகத் தியாகம்
செய்யாதவர்’ எனத் தி.மு.க.வால் சொல்லப் படுகிறதே; ஜெயிலுக்கு போனவரெல்லாம்
தியாகியா?
பதில்: ஜெயிலுக்குப் போனவரெல்லாம் தியாகி என்றால் தியாகி என்ற சொல்லுக்கே இழுக்கு ஏற்பட்டுவிடும்.
கே:கவிஞர் கண்ணதாசன் உங்களுக்கு நண்பர்தானே?
பதில்:
நிச்சயமாக. எதிரிகள், அதாவது எதிர்க்கிற தொழிலைக் கொண்டவர்கள் எந்த
அளவுக்கு நம்மைப் பலவீனமாகக் கருதுகிறார்களோ, அந்த அளவுக்கு நல்ல பலமும்
வெற்றியும் வளர்ச்சியும் நமக்குக் கிடைக்கும்.
கே: அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமாக எதை வைப்பீர்கள்?
பதில்: மக்கள் உள்ளத்தை!
கே: சிவாஜி ரசிகர்கள் நடத்தும் இதழ்கள் உங்களை படுமட்டமாக கார்ட்டூன் போட்டு தாக்குகிறதே?
பதில்: மன்னிக்கவும், ஒட்டகத்தின் கோணலை நிமிர்த்த முயற்சிப்பது முட்டாள்தனம்.
நன்றி:
எஸ்.கிருபாகரன் (இந்த கேள்வி பதில்கள் அனைத்தும் 1973ம் ஆண்டு வெளிவந்த
புரட்சியார் ரசிகன் பத்திரிகையில் இருந்து தொகுக்கப்பட்டவை)

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கருணாநிதியின் சொத்து மதிப்பு : 1967-ல் ரூ.1.08 லட்சம்... தற்போது ரூ.92.88 கோடி - தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கிடைத்த அதிர்ச்சி தகவல்.
» இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.
» நீண்ட நாள் வாழ்வது எப்படி?- 112வது பிறந்தநாள் கொண்டாடிய இங்கிலாந்து பாட்டி ருசிகர தகவல்
» ஜெகன்மோகன் ரெட்டிக்கு 365 கோடி ரூபாய் சொத்து : சொத்து பட்டியலில் மலைக்க வைக்கும் பகீர் தகவல்
» ராமஜெயம் குடும்பத்தினர் பொய்யான தகவல் அளித்தனரா? போலீசார் சந்தேகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum