Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
லண்டன் ஒலிம்பிக் பூங்கா வாயிலில் இலங்கைத் தமிழர் உண்ணாநிலை! -ஏன்?
Page 1 of 1

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புவியின் எட்டு திசைகளில் இருந்தும் அனைத்து
நாடுகளின் விளையாட்டு வீரர்கள், பல்வேறு பந்தயங்களில் பங்கு ஏற்கும்
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், இந்த 2012-ல் நடைபெறுகின்ற லண்டன்
மாநகரின் ஒலிம்பிக் பூங்காவுக்கு எதிரில், உயிரையும் தாரைவார்க்க
துணிந்துவிட்ட ஈழத்து வீர இளைஞர் சிவந்தன், நேற்றைய தினம் (ஜூலை 22) உணவு
அருந்தா அறப்போரை தொடங்கி விட்டார்.
இந்த வீரவேங்கைதான், அனைத்து உலக மனசாட்சியை ஈர்க்க, ஐ.நா.வின் மனித
உரிமைக் கவுன்சில் கூட்டம் நடைபெற்ற ஜெனீவாவை நோக்கி லண்டன் நகரில் இருந்து
நடந்து சென்றவர்.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள ஜூலை 27-ம் நாள் லண்டன் ஒலிம்பிக்
பூங்காவுக்கு எதிரே, நீதி கேட்கும் ஈழத்தமிழரின் குரல் விண்ணை எட்டட்டும்.
எமனது இனிய இளவல், கோபி சிவந்தனின் அறப்போர் வெல்லட்டும்”என்று அதில்
குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக இந்த கோபி சிவந்தனின் அறிக்கை ஒன்று நம் மெயிலுக்கும் வந்தது. அது இதோ:
விடுதலை என்ற இலட்சியத் தீயை தம் இதயங்களில் சுமந்து வீழ்ந்த வீரர்களின்
பாதார விந்தங்களை பணிந்து, சுதந்திரமானதும், கௌரவமானதுமான தமிழ்மக்களின்
வாழ்வுக்கான இன்னுமொரு சத்தியப் பயணத்தை தொடங்குகிறேன்.
தமிழ்த் தேசியப் போராட்ட அரங்கில், அதி முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் யூலை மாதமும் ஒன்று.
1958 ஆம் ஆரம்பமான நேரடியான இன அழிப்புப் படலம் மெல்ல மெல்ல நகர்ந்து,
1983ம் யூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை தொட்டது. இதனை, நேரடியான இனஅழிப்பின்
தீவிர ஆரம்பப்புள்ளி எனலாம். சிங்கள அரச பயங்கரவாதத்தின் முதலாவது
பெருமெடுப்பிலான இன அழிப்பில் சுமார் 3500 அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள்
மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இத்தருணத்திலேயே, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டடிருந்த போராளிகளான குட்டிமணி-தங்கத்துரை உட்பட்ட 53 தமிழ்
அரசியல் கைதிகளும் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இத்தகையதொரு மாதத்திலேயே, 29 வருடங்கள் கழித்து, மீண்டுமொரு படுகொலையை
சிங்கள அரசபயங்கரவாதம் திட்டமிட்ட முறையில் நடாத்தியுள்ளது. இதில் கணேசன்
நிமலரூபன் என்ற போர்க் கைதி காட்டுமிராண்டித்தனமாக
படுகொலைசெய்யப்பட்டதுடன், இன்னுமொரு போர்க்கைதி மிலேச்சத்தனமான தாக்குதலால்
கோமா நிலைக்குள்ளாக்கப்படடுள்ளார்.
இவ்வாறான தருணத்திலேயே, புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளில்
முக்கிய தளமாக விளங்கும் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளது.
இதனால், உலகின் பார்வை லண்டன் மீது குவிந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்தி, நீதி மறுக்கப்பட்டுள்ள இனத்திற்கு நீதி கிடைக்கக் கோரி உலகின்
ஆரதவை திரட்டும் முகமாக யூலை 22 தொடக்கம் ஓகஸ்ட் 12 வரை பின்வரும் ஐந்து
அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளேன்.
1. இனஅழிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் சிறீலங்கா
அரசாங்கம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவது நிறுத்தப்படல் வேண்டும்.
மனிதாபிமான விழுமியங்களை கட்டிக் காக்க முற்படும் ஒரு போட்டியில்,
சிறீலங்கா அரசாங்கத்தை பங்குபற்ற அனுமதிப்பதென்பது, லண்டன் ஒலிம்பிக்
போட்டிகிளின் தார்ப்பரியத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கை என்பதை
ஒலிம்பிக் போட்டி ஒருங்கமைப்பாளர்கள் உணர்ந்து, அதற்கேற்ற வகையில்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2. சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட
போர்க்குற்றம், மானுடகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு
தொடர்பாக சர்வதேச ரீதியாக சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதற்கான
முனைப்புக்களை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும்.
3. எமது தேசத்தின் நிலங்களை இராணுவமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல்
ஊடாக ஆக்கிரமித்து, எமது மக்களை மேலும் அவலவாழ்வுக்குள் தள்ளி, எமது
சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையினை வலுவற்றதாக்க எடுக்கும் நடவடிக்கைகள்
நிறுத்தப்பட வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் எமது தேசத்தின் பாதுகாப்பு கவசங்கள் மௌனிக்கப்பட்ட
சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழர் தேசத்தின் நிலங்களை அபகரிக்கும்
சிங்களப் பேரினவாதத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப் படவேண்டும். சுமார் 19000
சதுரகிலோ மீற்றரை கொண்ட தமிழீழத்தின் நிலப்பரப்பில் சுமார் 7000
சதரகிலோமீற்றர் நிலப்பரப்பு கடந்த மூன்றுவருடத்துக்குள்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
சிங்கள குடியேற்றம் தீவிரமாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, தமிழ் மக்கள்
அவர்களது பூர்வீக நிலப்பரப்புகளிலிருந்து விரட்டியடிக்கப்படுவதுடன்,
அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், தமிழ்மக்களது மீள்குடியேற்றம்
தடுக்கப்பட்டுள்ளது அல்லது தாமதிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழர்களின்
அடையாளங்களில் முக்கியத்துவமான பண்பாட்டு சின்னங்கள் அழிக்கப்படுவதுடன்,
எமது மக்களினால் தமது இதயக்கோவில்களில் வைத்து உன்னதமாக போற்றி
பூசிக்கப்படும் மாவீரர் துயிலம் இல்லங்கள், அத்திபாரங்களே இனம்காண
முடியாதவாறு அழிக்கப்பட்டுள்ளன.
தமிழர் தேசத்தை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தும் நோக்கோடு,
பௌத்தமக்களே இல்லாத இடங்களில் புத்தபெருமானின் சிலைகளும், பௌத்த
விகாரைகளும் துரிதகதியில் அமைக்கப்படடு வருகின்றன. இன அழிப்பில் முக்கிய
பரிமாணத்தைக் கொண்ட இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்துவதற்கான
செயற்பாடுகளில் சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட வேண்டும்.
4. சிறீலங்காவின் தடுப்பு முகாம்கள், சித்திரவதைக் கூடங்கள் மற்றும்
சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் போர்க்கைதிகளும்
எந்தவித நிபந்தனையுமின்றி விரைவாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. தமிழ்மக்கள் தமது தாயகத்தில் இனஅழிப்பினை எதிர்கொண்டு வருகின்ற சூழலை
கருத்தில் கொண்டு, அரசியல் தஞ்சம் கோரும் தமிழ்மக்களை சர்வதேசம் திருப்பி
அனுப்பக் கூடாது. திருப்புமுனையான காலகட்டத்திலுள்ள எமது சுதந்திரப்
போராட்டத்தில், மேற்குறித்த ஐந்து விடயங்களையும் முன்வைத்து போராட்ட
சக்கரத்தை முன்னகர்த்துவது காலத்தின் தேவையாக மாற்றமடைந்துள்ளது. மக்கள்
மயப்பட்ட போராட்டமே, அதன் இலக்கை விரைவாக அடைய துணைபுரியும்.
ஆகவே, அதனை கருத்தில கொண்டு, சத்தியத்தை வென்றெடுப்பதற்கான உண்ணாநிலை
போராட்டத்துக்கு ஆதரவு நல்குங்கள் என பாசத்திற்குரிய தமிழ்மக்களை
அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
கோபி சிவந்தன்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» லண்டன் ஒலிம்பிக் அரங்கம் அருகேயுள்ள பூங்கா வாசலில் உண்ணாநிலை போராட்டம் ஆரம்பித்து விட்டார் சிவந்தன் கோபி .
» லண்டன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்ற இலங்கைத் தமிழ் மாணவர் தேர்வு
» லண்டன் ஒலிம்பிக் பாடலில் தமிழ்!
» லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!
» ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள லண்டன் சென்ற இலங்கை குழு அங்கு சாதித்தவைகள் என்ன என்பதை படத்தில் காணலாம்..........PHOTO

Permissions in this forum:
You cannot reply to topics in this forum