Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரித்தானியர் வரும் முன்னர் ஒன்று பட்ட இந்தியா என்ற ஒன்று இருந்ததா? ...வைகோ
Page 1 of 1
பிரித்தானியர் வரும் முன்னர் ஒன்று பட்ட இந்தியா என்ற ஒன்று இருந்ததா? ...வைகோ
பிரித்தானியர்
வரும் முன்னர் ஒன்று பட்ட இந்தியா என்ற ஒன்று இருந்ததா? வலிமையான நடுவண்
அரசு வேண்டுமென்று சொல்கிறார்கள். மெளரியப் பேரரசு கூடத் தான் வலுவான
நடுவணரசோடு இருந்தது. அதனால் என்றைக்கும் நீடிக்க முடிந்ததா? அதற்குப்
பிறகு குப்தர்கள் பேரரசு; அப்போது வலிய நடுவணரசு இருக்கத்தான் செய்தது. அது
விழாமல் நிலைத்து நின்றதா ? அடுத்து செங்கிஸ்கான் வந்தான், முகலாயப்
பேரரசும் வந்தது. இவ்வேளையில் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த
சஞ்சீவ்ரெட்டி அவர்களுடைய கூற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். “அசோகன்
காலத்திலும் சரி; ஒளரங்கசீப் காலத்திலும் சரி; இந்த பூபாகம் ஒன்றுபட்டு
இருக்கவில்லை. பிரித்தானியர்களின் தடிகளும், துப்பாக்கிகளும் தான்
இந்தியாவை ஒன்றுபடுத்தின” என்று அவர் சொல்லியிருக்கிறார். அப்போது
கல்கத்தா, பம்பாய், மதராஸ் என மூன்று இராஜதானிகள் இருந்தன. நடுவண்
ஆட்சியில் அதிகாரங்கள் அனைத்தும் குவிந்து கிடக்கிற நிலை கர்சன் பிரபு
காலத்தில் தான் இந்தியாவில் உச்ச கட்டத்திற்குப் போனது. பின்னர் மிண்டோ
பிரபு, இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக (வைஸ்ராயாக) இருந்தபோது, இலண்டனில்
(பிரித்தானிய அரசில்) இந்தியாவுக்கான அமைச்சராக இருந்தார். மார்லி பிரபு
அரச ஆணையம் ஒன்றை (இராயல் கமிஷன்) அமைத்தார். இதுதான் அதிகாரப் பரவலை
நோக்கி எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை.
1919 இல் வந்த மாண்டேகு -
செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் சமஷ்டி ஆட்சி கருக்கொண்டது. இவையெல்லாம்
கிராண் வில்லி ஆஸ்டின் அவர்களது கூற்றுகளாகும். அவர் இந்திய அரசியல் நிர்ணய
சபையில் நடந்த விவாதம் ஒன்றில் திரு கே.சந்தானம் அவர்கள் “மாண்டேகு-செம்ஸ்
போர்டு சீர்திருத்தம், இந்திய அரசியல் முறைக்குச் சிறிதளவே தான் மாகாணத்
தன்னாட்சி (self government ) விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற தேவையை
இந்தியாவில் உருவாக்கிவிட்டது. எனவே, இப்போது பொதுப் பட்டியலில்
உள்ளனவெல்லாம் பத்துப் பதினைந்து ஆண்டில் தாமாகவே நடுவணரசு பட்டியலுக்குப்
போய் விடும் என்று நம்பலாம்” என்று கூறினார். அரசியல் சட்ட ஏழாவது
அட்டவணையில் நடுவண் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியலில்
உள்ள இனங்களைத் திருத்தி அமைக்க வேண்டும் என்பது குறித்து தனி நபர்
மசோதாவின் மீது விவாதம் நடைபெறுவது இதுவே முதல் தடவை என்பதை நான் சொல்ல
விரும்புகிறேன். சுருக்கமாகச் சொன்னால் நான் தந்துள்ள சட்ட முன்வடிவில்,
நடுவணரசுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று
நான்கு இனங்களைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளேன்.
முதலாவது
இனம், 84 ஆம் பதிவைக் குறித்ததாகும். இப்பிரிவு மனிதர்கள் அருந்துவதற்கான
போதை பானங்கள் கஞ்சா, அபின் மற்றுமுள்ள போதை மருந்துகள் தவிர்த்த புகையிலை
மற்றுமுள்ள தயாரிக்கப்பட்ட பொருள்கள் மீது சுங்கத் தீர்வை விதிப்பது
பற்றியதாகும். ஆனால், இப்பதிவின் இரண்டாவது உப பத்தியில் குறிப்பிடப்
பட்டுள்ள போதைப் பொருட்களையோ, பிற பொருட்களையோ கொண்ட மருத்துவப்
பொருட்களும், கழிப்பறை சுத்திகரிப்புப் பொருட்களும் இதில் அடங்கும்.
இரண்டாவது கூறு 87 ஆவது பதிவு ஆகும். வேளாண் கழனிகள் தவிர்த்த சொத்துகள்
மீது தோட்ட வரி விதிப்பதாகும். மூன்றாவது கூறு 88 ஆவது பதிவு பற்றியதாகும்.
இது வேளாண் கழிவுகள் தவிர்த்த பிற சொத்துகள் மீதான வாரிசு உரிமை
ஆயத்தீர்வையாகும். நான்காவது கூறு 97 ஆவது பதிவு ஆகும். இது மிக
முக்கியமானது. இது இரண்டாம் அல்லது மூன்றாம் பட்டியலில் குறிப்பிடப்படாத
வேறு எந்தப் பொருளையும் பற்றியதாகும். இந்தப் பட்டியல்களில்
குறிப்பிடப்படாத வரிகளும் இப்பதிவில் அடக்கம். இவைதாம் மிச்ச அதிகாரங்கள்
அல்லது எஞ்சிய அதிகாரங்கள் எனப்படுகின்றன.
சமஷ்டி அரசியல் சட்டம்
என்று நாம் பேசும்போது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகியவற்றையும் ஓரளவு
அயர்லாந்தையும்தான் குறிப்பிடுகிறோம். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் எஞ்சிய
அதிகாரங்கள் மாநிலங்களுக்கும் போகின்றன. ஆஸ்திரேலியாவிலும் இவை
மாநிலங்களுக்கே போகின்றன. கனடாவைப் பொறுத்தோ எஞ்சிய அதிகாரங்கள் நடுவண்
அரசிடம் உள்ளன. எஞ்சிய அதிகாரங்களை யாருக்கு ஒதுக்குவது என்ற விவாதம் மிக
முக்கியத்துவம் பெறுகிறது. இதற்குக் காரணம் இரண்டு கூட்டமே. வலிமையான ஒரு
கூட்டம் எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடமே இருக்க வேண்டுமென்று கோருகிறது.
மிக மிக வலிமையான இன்னொரு கூட்டமும் உள்ளது. நான் எந்த வகுப்புவாத வண்ணமும்
பூச வரவில்லை. இதைப்பற்றி இன்னும் அறிய அக்கறையுள்ளோர் வரலாற்றின்
பக்கங்களைப் புரட்டிப் பார்க்கட்டும். எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களுக்கே
போக வேண்டும் என்று கேட்போர் யார் யார்? நடுவண் அரசுக்கே போகட்டும் என்போர்
யார் யார்? என்பதை அறியட்டும்.
இந்தியா ஒரு முழுமையான
கூட்டாட்சி நாடாகத் திகழ வேண்டுமெனில், மாநிலப்பட்டியலில் இருக்க வேண்டிய
அதிகாரங்களைப் பறிக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி 2001 ஆம் ஆண்டு நவம்பர் 25
ஆம் நாள், பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மக்களவையில் அரசியல்
சட்டத்திருத்தத் தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்தார். அவையின் அனைத்துக்கட்சி
உறுப்பினர்களையும் ஈர்த்த பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் உரையின் முக்கிய
பகுதிகளிலிருந்து.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இனி வரும் காலங்களில் இந்தியா ஒன்றாக இருக்காது. வைகோ எச்சரிக்கை!
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
» அடுத்த இசைப்பிரியாவாக மாறு முன்னர் காப்பாற்றுங்கள்: வைகோ !
» எண்பத்தைந்து வயதான போவசர் என்ற போ பழங்குடிப் பெண் இறந்துபோனாள். உலகின் மாபெரும் சோக நிகழ்வுளில் ஒன்று
» சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19
» இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
» அடுத்த இசைப்பிரியாவாக மாறு முன்னர் காப்பாற்றுங்கள்: வைகோ !
» எண்பத்தைந்து வயதான போவசர் என்ற போ பழங்குடிப் பெண் இறந்துபோனாள். உலகின் மாபெரும் சோக நிகழ்வுளில் ஒன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum