Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிங்கள வீரர்களை உபசரிக்கும் மத்திய அரசின் தொடர் துரோகம் : வைகோ
Page 1 of 1

சென்னை, ஜூலை 16 :
சிங்கள வீரர்களை இந்தியாவுக்கு அழைத்து உபசரிக்கும் மத்திய அரசின் தொடர்
துரோகத்தக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது
குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈழப் போரில் ஈடுபடாத, ஆயுதம்
ஏந்தாத தமிழர்களை - குழந்தைகள், தாய்மார்கள், வயது முதிர்ந்தோர் உட்பட
இலட்சக் கணக்கானவர்களை சிங்கள விமானப்படையும், இராணுவமும் கொன்று
குவித்தது. ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான்கீ மூன் அமைத்த மூவர் குழுவின்
அறிக்கை இந்த உண்மையை ஆதாரங்களோடு வெளியிட்டது. மாவீரர் திலகம் பிரபாகரன்
அவர்களின் வீரத்தாய் பார்வதி அம்மையார் சடலம் எரியூட்டப் பட்ட சிதையில்,
மூன்று தெரு நாய்களை சுட்டுக்கொண்டுவந்து, சிங்கள இராணுவத்தினர் அந்தச்
சிதையில் வீசிய கொடுமை உலகில் எங்கும் நடைபெறாதது ஆகும்.உலக
நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ, இந்தத் தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக்
குற்றவாளியான காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி, அரசு கொடியவன் இராஜபக்சேவையும், அவனது அமைச்சர்களையும்
இந்தியாவுக்கு அழைத்து வந்து விருந்து வைக்கிறது. சிங்கள இராணுவத்தினரையும்
அழைத்து வந்து பயிற்சி கொடுக்கிறது.சிங்கள அரசுக்குப்
பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில்
நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக சிங்கள அரசுக்கு,
இந்திய அரசு பல துறைகளிலும் உதவி வருகிறது. இலங்கைக்கு மின்சாரம் வழங்க
கடல் வழியில் கேபிள்களைப் பதிக்கிறது.சிங்களவனுக்கு உதவவே
தமிழ் நாட்டில் பெரம்பூரில், தமிழர்களின் வியர்வையில் தயாரிக்கப்படும்
இரயில் பெட்டிகளை அனுப்பி வைக்கிறது. அண்மையில் சிங்கள விமானப்
படையினருக்கு தாம்பரத்தில் பயிற்சி கொடுப்பதை அறிந்த மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகம், அப்படையினரை இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று
உடனடி முற்றுகைப் போராட்டம் நடத்தியது. தமிழக முதலமைச்சரும் வெளியேற்ற
வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆணித்தரமாகத் தெரிவித்தார். பல
அமைப்புகளும் போராடின.இதன்பின்னர் சிங்கள விமானப் படையினரை தமிழ்
நாட்டிலிருந்து, பெங்களூருக்குக் கொண்டுசென்று எலகங்கா தளத்தில் பயிற்சி
அளிக்கின்றனர். இது மத்திய காங்கிரஸ் அரசின் ஆணவத்தின் அராஜகபோக்கின்
வெளிப்பாடாகும்.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில், குன்னுரை
அடுத்த வெலிங்டனில் இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரியில், ஒரு
கருத்தரங்கத்தில் பங்கெடுக்க சிங்கள இராணுவத்தின் ஒரு கடற்படை
அதிகாரியையும், தரைப்படை உயர் அதிகாரியையும் இந்திய அரசு வரவழைத்து ஐந்து
நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து விருந்தும் கொடுத்தது. செய்தி அறிந்தவுடன்
அவர்களை வெளியேற்றச் சொல்லி, அறப்போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி
தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.நமது தொப்புள் கொடி
உறவுகளான ஈழத் தமிழர்களை சித்தரவதை நடத்தி படுகொலை செய்த சிங்கள
அரசுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் இந்திய அரசு பெருமளவில் உதவி வருவது,
கண்ணீர் வடிக்கும் தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலை திணிப்பதுபோல் உள்ளது.
சிங்கள இராணுவத்தினரை இங்கே வரவேற்பதும், உபசரிப்பதும் இந்திய அரசு
தமிழர்களுக்குச் செய்கின்ற மன்னிக்க முடியாத துரோகங்கள் ஆகும்.நமது
தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் வந்து தாக்குவதும்,
சுட்டுக்கொல்வதும் எண்ணற்ற முறை நடந்த போதிலும் இந்திய அரசும், இந்திய
கடற்படையும் அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. அதனால்தான்
நேற்றைக்குக்கூட இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் சிங்கள
கடற்படையினரால் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டப்பட்டு உள்ளனர்.தங்கள்
தாயகமாம் தமிழ் ஈழ விடுதலைக்கு மகத்தான தியாகம் செய்து போராடிய தமிழ் ஈழ
விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டையும் பிரித்து ஈழம் அமைக்க முயன்றனர் என்ற
அபாண்டமான பொய்யை மய்யமாக்கி புலிகளின் மீதான தடையை இந்திய அரசு
நீட்டித்துள்ளது. தமிழ்க் குலத்திற்கு இந்திய அரசு செய்து வரும் அனைத்துத்
துரோகங்களுக்கும் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்
அங்கம் வகிக்கும் கட்சிகளும் நிரந்தரப் பொறுப்பாளிகள் ஆவார்கள். தாய்த்
தமிழக மக்களின் உணர்வுகளை உதாசீனம் செய்துவிட்டு, நம் தலையிலேயே மிதிப்பது
போன்ற மத்திய அரசின் அராஜகப் போக்கை நீண்ட காலத்திற்கு இனியும் மூடி மறைக்க
முடியாது. வரலாறு மன்னிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சிங்கள அரசின் இணையத்தளங்கள் மீது தொடர் தாக்குதல் !
» சிங்கள அரசின் மிருகவெறி அராஜகம் யாழ் மாணவர்களுக்கு சித்ரவதை ! திரு. வைகோ கண்டன அறிக்கை
» மத்திய அரசின் துரோக முகம் மேலும் அம்பலப்படுகிறது: - வைகோ
» ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் அகங்காரமான திமிர் - மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கண்டனம்.
» இந்தியக் கடற்படைத் தளபதி இலங்கை பயணமும், கோத்தபய ராஜபக்சேயின் இந்தியப் பயணமும், மத்திய அரசின் ரகசிய சதி வேலை - தலைவர் வைகோ அவர்கள் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum