Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நெஞ்சில் "உரம்' வேண்டும்!
Page 1 of 1
நெஞ்சில் "உரம்' வேண்டும்!
இந்த ஆண்டின் நெல் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால்
சாதாரண நெல் ரூ.1250 (சென்ற ஆண்டு ரூ.1080), சன்ன ரக நெல் ரூ.1280 (சென்ற ஆண்டு
ரூ.1180) என மத்திய அரசு ஜூன் 15-ம் தேதி அறிவித்தது.
உரங்களின் விலை சென்ற ஆண்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில் இந்தக்
குறைந்தபட்ச விலையிலான உயர்வால் விவசாயிக்கு எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை.
பிரதமருக்குத் தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், "50 கிலோ எடையுள்ள டிஏபி
உரம் ரூ.910லிருந்து ரூ.1200 ஆகவும், எம்ஒபி உர மூட்டை விலை ரூ.650 லிருந்து ரூ.840
ஆகவும் உயர்ந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விலை நிறுவனங்கள்
அறிவித்திருக்கும் விலைதானே தவிர, நடைமுறையில் இந்த உரங்களின் விலை இன்னும்
மேலதிகமாக இருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
ஊட்டச்சத்து சார்ந்த உரமானியக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு, சில
உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட்ட பிறகு, உரவிலை உயர்வு ஆண்டுதோறும் நிகழ்ந்து
வருகிறது. இதற்கு நிறுவனங்கள் சொல்லும் காரணம், உற்பத்திச் செலவு, இறக்குமதிச் செலவு
மற்றும் மானியம் குறைப்பு ஆகியவற்றைத்தான். இவையெல்லாமே விலையை உயர்த்தக் கூறப்படும்
நொண்டிச் சாக்குகள்தானே தவிர நிஜமல்ல.
ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் ஜூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி,
ஏப்ரல் 2012ல் நம்மிடம் இருப்பில் உள்ள யூரியா 19.24 லட்சம் டன். இறக்குமதி
செய்யப்பட வேண்டிய அளவு 1.8 லட்சம் டன் மட்டுமே. அதேபோன்று டிஏபி உரம் கையிருப்பு
8.72 லட்சம் டன். இறக்குமதி செய்யப்பட வேண்டிய அளவு 3.02 லட்சம் டன்தான். இது ஒரு
மாதத்திற்கான புள்ளிவிவரம். இறக்குமதி செய்யப்பட வேண்டிய அளவைக் காட்டிலும் உரங்கள்
கைவசம் இருக்கும் நிலையிலும் விலையை மட்டும் உயர்த்திக்கொண்டே போவது ஏன் என்று உர
நிறுவனங்களைக் கேள்வி கேட்க ஆளில்லை.
மானியம் குறைக்கப்பட்டதும், அல்லது முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்டதும்தான்
உர விலை உயர்வுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், ரசாயன மற்றும் உரங்கள் துறை
அமைச்சகம் ஏப்ரல் 30ம் தேதி வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, உரங்களுக்காக
கொடுக்கப்பட்டுள்ள மானியத்தின் அளவு 2011-12 நிதியாண்டில் ரூ.74170 கோடி. இது
2010-11 நிதியாண்டைக் காட்டிலும் 10,000 கோடி அதிகம். அதாவது உரமானியமும்
அதிகரித்துக்கொண்டே போகிறது. உரத்தின் விலையும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால்
எப்படி?
ஒன்று மட்டும் நிச்சயம். எங்கேயோ தவறு நடந்துகொண்டிருக்கிறது. இதில் யாரோ
கொழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் உர நிறுவனங்களா, அரசியல்வாதிகளா
இல்லை இருவருமேதானா என்பதுதான் கேள்வி.
உரங்களுக்கான மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்யாமல், உர
நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாகக் கொடுக்கும் போக்கினால்தான் மானியம் கொடுத்தும்கூட
உரங்களின் விலை கட்டுப்படாமல் உயர்ந்துகொண்டே இருக்கிறது. மத்திய அரசு இதைப் பற்றிக்
கவலைப்படவோ, இந்த விலை உயர்வைத் தடுத்து நிறுத்தவோ தயங்குகிறது. அதன் பின்னணிதான்
மர்மமாக இருக்கிறது.
உரத்தின் விலையை உர நிறுவனங்கள் தீர்மானிப்பது ஒருபுறம் இருக்க, இதன்
பதுக்கலும், அதன் காரணமாகச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதும்
தடுக்கப்பட்டாலேகூடப் போதும், விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.
உரங்களின் விலை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இந்த நிலையை
மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. குறுவை சாகுபடி தொடங்கும்
நேரத்தில் எந்தெந்த உரத்துக்கு என்ன விலை என்பதைப் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலம்
தமிழக விவசாயிகள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். உரக் கடைகளில்
விலைப்பட்டியல் போடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இந்தப் பட்டியலுக்கு அதிகமாக
விலை கேட்கும் உர முகவர்களைக் கைது செய்து, வழக்கு தொடுப்பதும், பதுக்கப்படும்
உரங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதும் மட்டுமே இந்தப்
பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும்.
மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவது ஒருபுறம் இருக்க, தமிழக அரசே உரங்களை
நேரடியாக இறக்குமதி செய்து, தரப்படுத்தி, விவசாயிகளுக்கு விற்பனை செய்தால் என்ன?
இதில் அரசு ஈடுபட்டால் நிச்சயம் நஷ்டத்தில்தான் இயங்கும். ஆகவே இதில் அரசு ஒரு
சிறிய பங்குதாரராகவும், பெரும்பகுதி பங்குகள் தமிழக விவசாயிகள் அனைவரையும்
உள்ளடக்கியதாகவும் இருக்கும் வகையில், விவசாயிகளே இயக்குநர்களாக இருக்கும் வகையில்,
ஒரு உர நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்கவும், உரங்களின் விலையைத் தமிழக விவசாயிகளே
நிர்ணயிக்கவுமான நிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிட இயலாதா?
உர மானியம் தொடரும் என்றால், மற்ற தனியார் நிறுவனங்களுக்குக் கிடைப்பதைப்
போலவே, விவசாயிகள் நடத்தும் உர நிறுவனத்துக்கும் நேரடியாக ஒட்டுமொத்தமாக மானியம்
கிடைத்துவிடும். மானியம் நிறுத்தப்பட்டாலும், வியாபாரிகளின் கொள்ளை லாபத்திற்குப்
பலியாகாமல், தாங்களே தங்கள் உரத்துக்கு விலை நிர்ணயம் செய்துகொள்ளவும் முடியும்.
மின்தேவைக்காக மாநில அரசு பல திட்டங்களைத் தொடங்கும்போது, உரத்தட்டுப்பாட்டை
நீக்கவும், உர விலையை கட்டுப்படுத்தவும், விவசாயிகளே தங்கள் தேவையை நிர்ணயிக்கும்
நிலைமை உருவாக வழிகோலக் கூடாதா? டாஸ்மாக் நடத்தி அரசு லாபம் கொழிக்கிறதே,
விவசாயிகளின் துயர் துடைக்க விவசாயிகளின் உர நிறுவனம் தொடங்க அரசு உதவக் கூடாதா?
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நெஞ்சில் ஈரமில்லை
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» மின்னும் மகிழ்வு நெஞ்சில் நிறையும்
» நெஞ்சில் வலி தரும் இன்றைய செய்திகள்.
» 10 பாடங்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா !
» பிஞ்சு நெஞ்சில் நஞ்சு...!!
» மின்னும் மகிழ்வு நெஞ்சில் நிறையும்
» நெஞ்சில் வலி தரும் இன்றைய செய்திகள்.
» 10 பாடங்கள்...நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum