TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள் பவளப்பாறைகள் ! இந்திய பெண் விஞ்ஞானி

Go down

ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள் பவளப்பாறைகள் ! இந்திய பெண் விஞ்ஞானி  Empty ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள் பவளப்பாறைகள் ! இந்திய பெண் விஞ்ஞானி

Post by அருள் Tue Jun 26, 2012 12:30 pm

கடலில் பவளப்பாறைகளை தொடர்ந்து அழித்தால் மீன்வளம் மட்டுமல்லாமல் மனித இனமும் அழியும் அபாயம் உள்ளது.
ஆணுறைகளால் அழியும் அரியவகை ஆமைகள் பவளப்பாறைகள் ! இந்திய பெண் விஞ்ஞானி  Anitha+George


கடலில் மிதக்கும் ஆணுறைகளால்
அரியவகை ஆமைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று இந்திய கடல் ஆராய்ச்சி
பெண் விஞ்ஞானி அனிதா ஜார்ஜ் அதிர்ச்சி அளிக்கும் தகவல் தெரிவித்தார்.


முதுகில் சிலிண்டர், முகத்தில்
மாஸ்க் போட்டுக்கொண்டு ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்யும் சவாலான பணியில்
ஈடுபட்டு வரும் பெண் கடல் ஆராய்ச்சியாளர் அனிதா ஜார்ஜ். இவரது சொந்த ஊர்
நாகர்கோவில்.


இந்தியாவின் முதல் பெண் கடல்
ஆராய்ச்சியாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர், நெல்லை மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பத்துறையில் எம்.பில்.
மற்றும் ''இந்தியாவின் தென்மேற்கு, தென்கிழக்கு கடலோர பகுதிகளில் உள்ள கடல்
பஞ்சுகள்'' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
ஆசியா, ஐரோப்பா, வட-அமெரிக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று
ஆராய்ச்சி செய்து வருகிறார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில்
முட்டம், மன்னார் வளைகுடா, கேரள மாநிலம் விழிஞ்ஞம், லட்சத்தீவு, கோவா,
இலங்கை, அமெரிக்கா போன்ற நாட்டுகளிலுள்ள ஆழ்கடல் பகுதியில் 1997-ம்
ஆண்டிலிருந்து கடல் பஞ்சுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வு
செய்து வருகிறார். இதுவரை 61 வகையான கடல் பஞ்சுகளை அறிமுகம் செய்துள்ளார்.
இந்த வகை கடல் பஞ்சுகள் கேன்சர், எய்ட்ஸ் உள்பட பல்வேறு நோய்களை
குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.


குறிப்பாக வங்காளவிரிகுடா,
மன்னார் வளைகுடா, அரபிக்கடல் பகுதியில் உள்ள கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடல்
பகுதியில் புதிய வகை உயிர்காக்கும் அரிய மருத்துவ குணம்கொண்ட கடல் பஞ்சுகள்
இருப்பதையும் கண்டுப்பிடித்து இருக்கிறார். கடல் விசிறி, பவளப்பாறைகள்
பற்றியும் இவரது ஆய்வு தொடர்கிறது.


இவர் நாகர்கோவிலில் அமெரிக்க நிதி
உதவியுடன் செயல்படும் கடல் ஆராய்ச்சி நிறுவனமான, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி
மற்றும் சமூக கல்வி நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருக்கிறார். முன்பு
லட்சத்தீவில் உள்ள டபிள்ï.டபிள்ï.எப்-இந்தியா நிறுவனத்தின் கவுரவ கடல்
ஆராய்ச்சியாளராக இருந்தார்.


மன்னார் வளைகுடாவில் 150 மீட்டர்
ஆழம் வரை சென்று கடல் ஆராய்ச்சி செய்து பல சாதனைகள் படைத்ததால், இவருடைய
ஆர்வத்தை பாராட்டி அமெரிக்காவில் உள்ள கன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த உலக
ஆழ்கடல் ஆராய்ச்சி குறித்த மாநாட்டில் இந்தியா சார்பில் அவர் கலந்து
கொண்டது குறிப்பிடத்தக்கது.


கடல் ஆராய்ச்சி பற்றி அனிதா ஜார்ஜ் நமது நிருபரிடம் கூறியதாவது:-


இறைவன் நமக்கு அளித்துள்ள கடலில்
இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. கடலில் லட்சக்கணக்கான உயிரினங்கள்
வாழ்கின்றன. இவற்றில் மீன்களை மட்டுமே நாம் அதிகம் பயன்படுத்துகிறோம்.
மீதமுள்ள வளங்களை பயன்படுத்துவதில்லை. கடலில் பவளப்பாறைகளில்தான் மீன்கள்
அதிகம் வாழ்கின்றன.


துறைமுகத்திற்கு வரும்
கப்பல்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகள், மீனவர்கள் வீசி எறியும்
வலைகள், தொழிற்சாலை கழிவுகள் போன்ற பல காரணங்களால் பவளப்பாறைகள் அழிந்து
வருகின்றன. சுனாமி வருவதற்கு முன்பும், வந்த பின்னும் கடலில் அகழ்
ஆராய்ச்சி செய்தபோது பவள பாறைகள் பெருமளவு சேதமடைந்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. பவளப்பாறை அதிகம் காணப்பட்ட சிதம்பரம்-பிச்சாவரம்
பகுதியில் சுனாமி பாதிப்பு அதிகமில்லை. அப்பகுதியில் மாங்குரோவ் காடுகளும்,
பவளப்பாறைகளும் அதிகம் இருப்பதே அதற்கு காரணம்.


மிக்சி, கிரைண்டரைக்கூட கடலில்
போடுகிறார்கள். ஆணுறைகளும் (காண்டம்) கடலுக்குள் கிடக்கின்றன. ஆணுறைகளை,
சில அரியவகை ஆமைகள் மீன்கள் என்று தவறாக நினைத்து சாப்பிட்டுவிடுகின்றன.
இதனால் அந்த இனம் அழிந்து வருகிறது. இது, மிகவும் சோகத்திலும் சோகமாக
உள்ளது.


லட்சத்தீவில் பிளாஸ்டிக் உள்பட
கண்ட பொருட்களைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் அந்த கடல்பகுதி
மாசு இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. கடல் ஆராய்ச்சிக்கு இந்த பகுதி
மிகவும் ஏற்ற இடமாகும்.


அதேபோல் தாய்லாந்து, ஹாங்காங்
கடல் பகுதியில் கடல் விசிறியும், கடல் குச்சியும், மத்திய கிழக்கு
நாடுகளில் உள்ள ஓமன் கடல், அரேபியன் கடல் பகுதியில் அபூர்வ வகை
பவளப்பாறைகளும் உள்ளன. கடலுக்கு அடியில் மீன்கள், பிற உயிரினங்களின் பயணம்,
செடிகள், பாசிகள் அடங்கிய தோட்டங்களை காண கண்கோடி வேண்டும்.


இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும்
கடலை, மாசுபடுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். பவளப்பாறைகளை அழித்தால்
மீன்வளம் மட்டுமல்லாமல் மனித இனமே அழியும் அபாயம் ஏற்படும். கடல் வளத்தை
காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை ஆகும்.


இவ்வாறு அனிதா ஜார்ஜ் கூறினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நிர்வாண கோலத்தில் திமிங்கில ஆய்வு நடத்திய ரஷ்ய பெண் விஞ்ஞானி
» இந்திய விஞ்ஞானி கண்டுபிடித்த கருங்குழி மர்மம் நீங்குமா?
» பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல்!- அசத்திய இந்திய விஞ்ஞானி
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்.-3 சித்தன்னவாயில் + பெண் விஞ்ஞானி ஐரீன்.
» மூளையுடன் கூடிய ரோபோட் – இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum