TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:25 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்

Go down

நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல் Empty நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல்

Post by logu Sat Jun 23, 2012 7:45 am

பெங்களூரு: ""நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய பல அதிரடி தகவல்களை,
ஆர்த்திராவ் விரைவில் வெளியிடுவார்,'' என, அவரின் தந்தை சேதுமாதவராவ்
கூறினார். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, ஸ்வர்ணா கன்னட
"டிவி' சேனல் மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், ஆர்த்திராவ். நேற்று,
அவரின் தந்தை சேதுமாதவராவ், பெங்களூரு பிரஸ் கிளப்பில் நிருபர்களிடம்
கூறியதாவது:
நித்யானந்தாவின் அந்தரங்கம் பற்றிய அதிரடி தகவல் Tamil_News_large_492105
தீவிர பக்தை: நித்யானந்தா, 2004ல் சென்னையில் ஒரு நிகழ்ச்சி
நடத்தியபோது, நான், என் மனைவி, மகள் ஆர்த்தி மூவரும் கலந்து கொண்டோம்.
அப்போது, எங்கள் குடும்பத்தை பற்றி விசாரித்தார். பிடதி ஆஸ்ரமத்தில்
நடக்கும், "எனர்ஜி தரிசனம்' நிகழ்ச்சிக்கு வருமாறு கூறினார். நாங்கள்
மூவரும் ஆஸ்ரமம் சென்றோம். அவரது வழிபாடுகள் எங்களுக்கு மிகவும்
பிடித்திருந்தன. அவ்வப்போது, ஆஸ்ரமத்தில் நடக்கும் வகுப்புகளுக்கு சென்று
வந்தோம். ஒரு முறை, "இங்கேயே தங்கிவிடுங்கள்' என, நித்யானந்தா கூறினார்.
நானும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதால், 2005 பிப்ரவரி முதல் 2006
ஏப்ரல் வரை, ஆஸ்ரமத்திலிருந்து நித்யானந்தாவுக்கு சேவை செய்தேன். பின்,
எனது பணிகள் காரணமாக, ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். ஆனால், என்
மகள் ஆர்த்திராவ், நித்யானந்தாவின் தீவிர பக்தையாக மாறி விட்டார்.

மன வேதனை: அவர், நித்யானந்தாவின் பப்ளிகேஷன் நிர்வாகத்தை
பார்த்து வந்தார். சில காலம் கழித்து, நித்யானந்தாவின் தனி செயலராக
செயல்பட்டார். ஆஸ்ரமத்தில் நிரந்தரமாக தங்காமல், அமெரிக்காவிலிருந்து
அவ்வப்போது வந்து, சென்று கொண்டிருந்தார். என் வீட்டில், நித்யானந்தா
படத்தை வைத்து பூஜை செய்து வந்தேன். 2010ல் நித்யானந்தாவுடன் நடிகை
இருப்பது போன்ற சி.டி., வெளியானபோது, நான் மன வேதனை அடைந்தேன். என்னிடம்
பலரும் போன் செய்து கேட்டனர். இந்து மதத்தை இழிவுப்படுத்துவதற்காக மாற்று
மதத்தினர் பொய் பிரசாரம் செய்கின்றனர் என கூறினேன். ஒரு முறை அமெரிக்கா
சென்றபோது, என் மகள் ஆர்த்தியிடம் கேட்டபோது, அவர் சொன்ன வார்த்தைகள், இடி
போல் விழுந்தது. "நித்யானந்தா செய்த தவறுக்கு, நானே சாட்சியாக இருக்கிறேன்'
என கண்ணீருடன் கூறினார்.

உண்மை தெரிந்தது: குரு போன்று நினைத்தவர், இழிவான செயலில்
ஈடுபட்டுள்ளாரே என, நினைக்கும் போதும், இப்படிப்பட்டவருக்கு பலமுறை பாத
பூஜை செய்ததை எண்ணும் போதும், மனம் வேதனை அடைகிறது. "ரஞ்சிதாவுடன்
சி.டி.,யில் இருப்பது, நான் இல்லை' எனக் கூறி வந்த நித்யானந்தா, சி.டி.,
வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், சி.டி,யை வெளியிடாமல் இருக்க மீடியா,
பத்திரிகை 60 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக புகார் கூறுகிறார்.
ஆரம்பத்திலேயே, சி.ஐ.டி., போலீசாரிடம் கூறவில்லையே.

ஆஸ்ரமத்திற்கு நஷ்டம்: நித்யானந்தா மீது, 2010ல் ஆர்த்தி புகார்
கூறியுள்ளார். ஆர்த்தி புகார் கூறியதால், அமெரிக்காவில் நித்யானந்தா
தரப்பில் புகார் செய்யப்பட்டது. புகாரில், ஆஸ்ரமத்தில் யோகா, தியானத்தை
படித்துக் கொண்டு, வெளியே தனியாக வகுப்பு நடத்துவதால், ஆஸ்ரமத்துக்கு, 10
மில்லியன் டாலர் (55 கோடி ரூபாய்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது என
குறிப்பிட்டிருந்தனர்.

வர முடியவில்லை: சென்னையில், எங்கள் மீது பொய் புகார் கூறி,
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனால், ஆர்த்தி
வெளியில் வர முடியவில்லை. வழக்கறிஞர் ஆலோசனையின்படி, பாதுகாப்பான இடத்தில்
உள்ளார். விரைவில் ஆர்த்தி வெளியே வந்து, நித்யானந்தாவின் முறைகேடுகளை
வெளிப்படுத்துவார். ஆர்த்திக்கு, ஹெச்.ஐ.வி., போல் எச்சில் மூலம் பரவும்
வியாதி உள்ளது என, நித்யானந்தா கூறுவது பொய். அவர், மருத்துவப்
பரிசோதனைக்கு தயாராக உள்ளார். குழந்தை பருவத்தில் உள்ளேன். ஆணும் அல்ல,
பெண்ணும் அல்ல என, நித்யானந்தா கூறினார். ஆனால், சி.ஐ.டி., போலீசார், 2010
முதல் ஏழு முறை நோட்டீஸ் கொடுத்தும், மருத்துவப் பரிசோதனைக்கு வரவில்லை.
அமெரிக்காவில் ஆர்த்தி மீது தொடர்ந்த வழக்குக்காக, இதுவரை, 16 ஆயிரம் டாலர்
(30 லட்ச ரூபாய் ) செலவு செய்து விட்டார்.

கோபிகா எங்கே? நித்யானந்தாவின் தனி செயலராக இருந்த நித்யகோபிகா,
கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்குள்ளார் என விவரம் தெரியவில்லை. வழக்கு
விசாரணைக்கு அவர் தேவை என, போலீசார் கூறுகின்றனர். அவர் உயிருடன் உள்ளாரா
என்றே தெரியவில்லை. தனக்கு ஏற்பட்ட அநியாயம் வேறு யாருக்கும் ஏற்பட்டு
விடக்கூடாது என்பதற்காகவே, நித்யானந்தாவின் முறைகேடுகளை வெளியே கொண்டு வர
முடிவு செய்தார். அவரை போல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள்
குடும்ப சூழ்நிலை கருதி, அவர்கள் வெளியே வருவதில்லை. ஆஸ்ரமத்தில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆஸ்ரமத்தில்
இருந்தபோது, லாரிகளில் சாமி சிலைகள் வந்து இறங்குவதை பார்த்துள்ளேன்.
இவ்வாறு சேதுமாதவராவ் கூறினார்.

நித்யானந்தாவுக்கு எதிராக தர்ம யுத்தம்: "நித்யானந்தாவுக்கு
எதிராக, தர்ம யுத்தம் நடத்தி வருகிறேன். அனைவரும் கிருஷ்ணர் போல் உதவ
வேண்டும்' என, ஆர்த்திராவ் தந்தை வெளியிட்ட சி.டி.,யில், ஆர்த்திராவ்
உருக்கமாக பேசியுள்ளார்.

பெங்களூருவில், ஆர்த்திராவ் தந்தை, நேற்று சி.டி., ஒன்றை வெளியிட்டார்.
அதில், ஆர்த்திராவ் பேசியுள்ளதாவது: என் மீது, நித்யானந்தா சீடர்கள்,
ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தில், தலைமறைவாக உள்ளேன்.
உங்களை (நிருபர்களை) நேரில் கண்டு பேச முடியாததற்கு, என்னை மன்னிக்க
வேண்டுகிறேன். போலி சாமியார் நித்யானந்தாவால், என் வாழ்க்கை சீரழிந்தது.
இது போல், வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான்,
நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். என் வழக்கறிஞர்கள் அறிவுரைப்படி,
முன்ஜாமினுக்கு மனு செய்துள்ளேன். குற்றப் பத்திரிகையில் நான் கூறியுள்ள
புகார் அனைத்தும் உண்மை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போது, இதை
நிரூபிப்பேன். நித்யானந்தா தன்னை கால பைரவர், ரட்சகர், என்று கூறிக்
கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறார். எனக்கு, ஹெச்.ஐ.வி., உள்ளதாகவும்,
ஹெச்.ஐ.வி., சிகிச்சைக்காக, பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாகவும், என் மீது
குற்றம் கூறியுள்ளார். ஆன்மிக சேவைக்காக, ஆசிரமம் சென்றேன். ஜெயேந்திரரே
அவரை கண்டித்துள்ளார். 2010ல், போலீசாரிடம் நித்யானந்தாவுக்கு எதிராக
புகார் அளித்தேன். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும்,
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை அறிந்த நித்யானந்தா,
அமெரிக்காவிலிருந்த என் மீது, அவரது சீடர்களை வைத்து, குற்றம் சாட்டி
வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கிடைத்தவுடன், உங்கள்
முன் வருவேன். எனது புகாரை ஏற்றுக்கொண்டு, நித்யானந்தா மீது நடவடிக்கை
எடுத்த, முதல்வர் சதானந்தா கவுடா, பா.ஜ., அரசு, ரிஷிகுமார் சுவாமிகள்,
பத்திரிகையாளர்கள், டி.வி., சேனல்கள், கன்னட அமைப்பாளர்களுக்கு, நன்றி
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் பேசியிருந்தார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum