Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமராவதி பாசனம் பாலைவனமாகும் அபாயம்: அலற வைக்குது கேரள அரசின் ரகசிய "பிளான்'
Page 1 of 1

உடுமலை, அமராவதி அணை பாசனப்பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு
காரணமாக, விவசாய சாகுபடி பரப்பு, நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இந்நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் திணறும் நிலையில்,
அடுத்ததாக ஒரு சோதனையை அளிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது கேரள
அரசு. ஆம், தமிழக எல்லையை நோக்கிப் பாயும் முக்கிய ஆறுகளில் அணை கட்டி,
தண்ணீரை தடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால், அமராவதி பாசனப்பரப்பு பாலைவனமாக
மாறும் அபாயம் எழுந்துள்ளதாக, விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அமராவதி அணை: அமராவதி ஆறு, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி, கரூர் மாவட்டம் முக்கூடலில் காவிரியில்
கலக்கிறது. மன்னர் காலத்திலேயே அமராவதி ஆற்றில் மண் தடுப்பணைகள் கட்டி,
கரூர் வரை ஆற்றின் கரையோரங்களில் நெல் சாகுபடி செய்து வந்தனர்.
மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக சென்ற தண்ணீரை மறித்து அணை
கட்டி விவசாய சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில்
விளைநிலங்களை சேர்க்கவும் கட்டப்பட்டதே அமராவதி அணை.
பாசன திட்டம்: அமராவதி அணைக்கு முக்கிய நீர் வரத்து அளிக்கும்
ஆறுகள் அனைத்தும் கேரள மாநிலத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி பகுதிகளில்
உருவாகிறது. பாம்பாறு: அமராவதி அணைக்கு அதிகளவு நீர் வரத்து அளிக்கும்
மூணாறு மற்றும் ரவிகுளம் வனப்பகுதி மலைத்தொடர்களில் உருவாகி மேல்வாகுராரை
என்ற பகுதி வழியாக கோவில்கடவு பகுதியில் ஆறாக மாறுகிறது. பின்னர், தூவானம்
அருவியாக 140 கி.மீ.,க்கும் அதிகமான தூரம் பயணித்து அமராவதி அணைக்கு
வருகிறது.
சின்னாறு: இந்த ஆறு மங்கைவார்குடி, மூணாறு ரோடு வழியாக வரும் சிறிய ஓடைகள் இணைந்து ஆறாக மாறி பாம்பாற்றுடன் கலக்கிறது.
தேனாறு: மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதியில்
அமைந்துள்ள கரசம்பட்டி, தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கீழானவயல் ஆகிய பகுதிகளில்
உருவாகும் சிற்றாறுகள் தளிஞ்சி பகுதியில் இணைந்து தேனாறாக மாறுகிறது.
அமராவதி அணையின் மொத்த நீர்ப்பிடிப்புபகுதி 838.36 சதுர கி.மீ., ஆகும்; 70
சதவீத நீர்ப்பிடிப்பு பகுதிகள் முழுவதும் கேரள மாநில வனப்பகுதியில்
அமைந்துள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்துவரும் தண்ணீர் அமராவதி அணையில் தேக்கப்பட்டு, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும், புதிய
ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறந்து
விடப்படுகிறது. பதினைந்து அணைக்கட்டுகள், 6 மண் தடுப்புகள், 25 பாசன கால்வாய்கள் மூலமாக 29
ஆயிரத்து 387 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதியை பெறுகிறது. தவிர, 62.80
கி.மீ., தூர பிரதான கால்வாய் மூலம் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25 ஆயிரத்து
250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
நீர் நிர்வாகம்:
அமராவதி அணை ஆண்டுக்கு மூன்று முறையும், தென்மேற்கு
மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களிலும் நீர் வரத்து நிலவும் அணையாகவும்
உள்ளது. அணையின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 4 ஆயிரத்து 47 மில்லியன் கன அடி.
இங்கு, 4.டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேக்க முடியும். ஆனால், மூன்று போக
நெல் சாகுபடி, 500க்கும் அதிகமான கூட்டுக்குடிநீர் திட்டங்கள்
ஆகியவற்றிற்காக 12 முதல் 15 டி.எம்.சி., தண்ணீர் தேவையாக உள்ளது. பருவமழை
குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் கடந்த 22 ஆண்டுகளாக அணைக்கு சராசரியாக 6
டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால், மூன்று போக நெல்
சாகுபடி இரண்டு போகமாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீர் குறைவாக
தேவைப்படும் பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்யமுடியுமென்ற நிலைமை
ஏற்பட்டுள்ளது.
மிரட்டும் கேரளா: அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அதிகளவு
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதியில் அமைந்துள்ளது. விதிமுறைகளை மீறி
மூணாறு, மறையூர் பகுதிகளில் அமராவதி அணை நீர் வரத்து ஆறுகளை சிறிய
தடுப்பணைகள் கட்டி விவசாயத்திற்கு அம்மாநில அரசு பயன்படுத்துகிறது. இதனால்,
கடந்த 2010 ம் ஆண்டு பாம்பாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு
நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், 230 கோடி ரூபாய் செலவில் பாம்பாற்றின்
குறுக்கே அணை கட்டி 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில்
அம்மாநில அரசு பணிகளை துவக்கியது. இதற்கு அமராவதி பாசனப்பகுதி
விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க.,- ம.தி.மு.க.,
உள்ளிட்ட கட்சிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும்
நடத்தின. இதையடுத்து, அத்திட்டத்தை கேரள அரசு கைவிட்டது. தற்போது, "இடுக்கி
பேக்கேஜ்' என்ற பெயரில், 300 கோடி ரூபாய் செலவில், இடுக்கி மாவட்டத்தில் ஏழு அணைகளை கட்ட கேரள அரசு
திட்டமிட்டுள்ளது. அமராவதி அணைக்கு முக்கிய நீர் வரத்து
அளிக்கும் பாம்பாறு மற்றும் தேனாறு ஆகிய ஆறுகளுடன் இணையும் உபநதிகளின்
குறுக்கே இந்த அணைகள் கட்டப்படவுள்ளன. தலையாறு எனப்படும் திட்டத்தில்,
அப்பர்சட்டு மூணாறு, லோயர்சட்டுமூணாறு, தலையாறு மற்றும் செங்கல்லாறு
திட்டத்தில் காந்தலாறு பகுதியில் அணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது. அணைகள் கட்டப்பட்டால்
அமராவதி அணைக்கு தற்போது ஆண்டுக்கு சராசரியாக கிடைத்து வரும் 6 டி.எம்.சி.,
தண்ணீர் பாதியாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர்
பற்றாக்குறையால் பரிதவித்து வரும் அமராவதி பாசனப் பரப்புகளில் விவசாய
சாகுபடி முற்றிலுமாக காணாமல் போகும் நிலை ஏற்படும். "இடுக்கி பேக்கேஜ்'
திட்டத்திற்கான பூமி பூஜையை வட்டவடா என்ற பகுதியில் கேரள அரசு
நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. . எனவே விரைவில் அணைகள் கட்டுமான
பணிகள் துவங்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
கைகோர்க்கும் விவசாயிகள்: கேரள அரசின் இடுக்கி பேக்கேஜ் அணை
திட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய போராட்டங்கள் குறித்து கரும்பு
பயிரிடுவோர் சங்கம், பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விரைவில், அனைத்து விவசாய சங்க அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட
திட்டமிட்டுள்ளன.
ம.தி.மு.க., போராட்டம்: அமராவதி அணைக்கான நீர் வரத்தை முடக்க
நினைக்கும் கேரள அரசை கண்டித்து ம.தி.மு.க., போராட்டத்தில் குதிக்கிறது.
இப்பிரச்னை குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
வரும் 24 ம் தேதி அமராவதி அணையில் துவங்கி கரூர் மாவட்டம் சின்னதாராபுரம்
வரை வாகன பேரணி நடக்கிறது. பேரணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை
வகிக்கிறார்.
கேரளா அரசுக்கு கண்டனம்: மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ.,வும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க
பொதுச் செயலாளருமான சண்முகவேலு கூறுகையில், ""கேரள அரசின் "இடுக்கி
பேக்கேஜ்' திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து அரசின்
கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.
- பெ.செந்தில்ராம் -

Similar topics
» பாம்பாற்றில் தடுப்பணை: அமராவதி ஆற்றுக்கும் ஆபத்து! கேரள அரசின் அடு
» அமராவதி அணை... சப்தமில்லாமல் தமிழர்களிடம் விளையாடும் கேரள அரசு...! ஒரு அலசல்...!
» முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் மனு நிராகரிப்பு
» பறிபோகிறது பரம்பிக்குளம் அணை? கேரள அரசின் அடுத்த "அட்டாக்'
» சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாடு கடந்த அரசு சிக்கும் அபாயம்! மக்களே விழித்தெழுவீர்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum