TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


"செயற்கரிய' சாதனை!

Go down

"செயற்கரிய' சாதனை! Empty "செயற்கரிய' சாதனை!

Post by logu Fri Jun 22, 2012 7:39 am


"செயற்கரிய' சாதனை! Edits





ஓவ்வொரு
குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது,
அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு
சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது
குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும்
குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய
பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச்
சந்தேகம் எழுகிறது.கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக
இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும்
அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சாதாரணமாக, குடியரசுத் தலைவர்களாகப்
பதவி வகித்தவர்கள் அனைவருமே, கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவின் மீது
முடிவெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை காட்டி வந்திருக்கிறார்கள். முந்தைய
குடியரசுத் தலைவர்களில் கே.ஆர். நாராயணன் ஒரு குற்றவாளிக்குக்கூட மன்னிப்பு
வழங்கவில்லை. அப்துல் கலாம் இரண்டு பேருக்கு மட்டும் மரண தண்டனையை ரத்து
செய்யக் கையொப்பமிட்டார்.குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின்
சாதனை, இதுவரை பதவி வகித்த எந்தவொரு குடியரசுத் தலைவரும் செய்யாத சாதனை,
கடந்த 28 மாதங்களில் 30 தூக்குத் தண்டனைக் கைதிகளுக்குக் கருணை
அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாகச்
சுருக்கி இருப்பதுதான். இதுவரை சுதந்திர இந்திய சரித்திரத்தில் கருணை
அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனைக் கைதிகளில் 90
விழுக்காடு பேர் பிரதிபா பாட்டீலுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
உண்மையிலேயே செயற்கரிய சாதனைதான் இது!பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு
வழங்கப்பட்டிருக்கும் தூக்குத் தண்டனைக் கைதிகள் எப்படிப்பட்டவர்கள் என்று
பார்த்தால் அதைவிடத் திடுக்கிட வைக்கிறது அவர்களது குற்றமும், பின்னணியும்.
பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் 30 பேரில் 22 பேர்
கொடூரமான கூட்டுப் படுகொலை, கதறக் கதறக் கற்பழிப்பு, குழந்தைகளை ஈவு
இரக்கமின்றிக் கொல்வது, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவும், கிரிமினல்
குற்றங்களுக்காகவும் சிறைச்சாலைக்குப் போவதைப் பொழுதுபோக்காகக் கொள்வது
போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகைச்
சேர்ந்த ஒன்பது வயது பாலகன் சிர்க்கு பேஸ்ரா. அவனைக் காணவில்லை என்று
பெற்றோர் தேடிக் கொண்டிருக்க, 1996-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி சுசீல்
முர்மு என்பவன் அந்தச் சிறுவனைக் கடத்திக் கொண்டுபோய், காளி தேவிக்குப் பலி
கொடுத்துப் பூஜை நடத்தி இருக்கிறான். பிறகு அந்தச் சிறுவனின் சடலத்தை ஒரு
சாக்குப் பையில் கட்டி ஒரு ஏரியில் வீசி எறிந்திருக்கிறான். இது ஒன்றும்
முர்முவுக்கு முதல் கொலை அல்ல. அவன் ஏற்கெனவே தனது சகோதரனையே காளிக்குப்
பலி கொடுப்பதற்குக் கொன்றிருப்பவன்.2004-ஆம் ஆண்டு உச்ச
நீதிமன்றத்தால் "இது மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம்' என்று
குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட சுசீல் முர்முவின் தூக்குத் தண்டனையை கடந்த
பிப்ரவரி 9-ஆம் தேதி, பிரதிபா பாட்டீல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி
ரத்து செய்திருக்கிறார்.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர
யாதவ் 15 வயது சிறுமி ஒருத்தியைக் கற்பழிக்க முயற்சித்திருக்கிறான். அவள்
தப்பி ஓடிவிட்டாள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நரேந்தரும் அவனது நண்பன்
தர்மேந்திர சிங்கும், 1994-இல் அந்தக் குடும்பத்தையே கொன்று குவித்து
விட்டனர். அந்த 15 வயது சிறுமியும் பெற்றோரும் தலை வேறு உடல் வேறாக
வெட்டிச் சாய்க்கப்பட்டனர். அந்தச் சிறுமியின் 10 வயது சகோதரன் உயிருடன்
எரிக்கப்பட்டான். கொலைகாரர்கள் இருவருக்கும் குடியரசுத் தலைவர் பிரதிபா
பாட்டீல் ஜூன் 2010-இல் மன்னிப்பு வழங்கிப் புண்ணியம் கட்டிக்
கொண்டிருக்கிறார்.பிரதிபா பாட்டீலால் தூக்குத் தண்டனையிலிருந்து
காப்பாற்றப்பட்டிருக்கும் பெருவாரியான பேர்கள் நமது ரத்தத்தை உறைய வைக்கும்
கொடூரமான கொலைகளை ஈவு இரக்கமில்லாமல் செய்திருப்பவர்கள். இவர்களுக்குக்
கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கக் குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு
என்பதற்காக, 28 மாதங்களில் 30 கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்து
செய்திருக்க வேண்டுமா என்ன?ஒரு குற்றத்தின் பல்வேறு அம்சங்களையும்,
சாட்சிபூர்வமான ஆதாரங்களையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதுடன்
நீதிமன்றத்தின் வேலை முடிந்து விடுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின்
சிபாரிசின் பேரில்தான் குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மன்னிப்பு
வழங்குகிறார் என்றாலும், மன்னிப்பு வழங்காமல் தவிர்க்கும் உரிமை
நிச்சயமாகக் குடியரசுத் தலைவருக்கு இருக்கத்தானே செய்கிறது.அரசியல்
சட்டத்தில் 72-வது சட்டப் பிரிவு, தூக்குத் தண்டனை உள்ளிட்ட எந்தவொரு
தண்டனையையும் நிறுத்தி வைக்கவோ, குறைக்கவோ, ரத்து செய்யவோ, மன்னிப்பு
வழங்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. அப்படியானால்,
குடியரசுத் தலைவரோ அவருக்கு வேண்டியவர்களோ, விலைபேசப்பட்டு அந்த அதிகாரம்
தவறாகப் பயன்படுத்தப்பட்டால் கேள்வி முறையே கிடையாதா? ஏன் கிடையாது?
நிச்சயமாக உச்ச நீதிமன்றத்துக்கு அதற்கான அதிகாரம் உண்டு. குடியரசுத்
தலைவர் பிரதிபா பாட்டீலால் மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் கருணை மனுக்கள்
தொடர்பான எல்லா ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் கோரி இருப்பதாகத் தெரிகிறது.
குடியரசுத் தலைவரேயானாலும் மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டால், அதைக்
கேள்வி கேட்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கும், மக்கள் மன்றத்துக்கும்
உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.மிக அதிகமான
கொலைகாரர்களுக்கும், சமூகவிரோதிகளுக்கும் தூக்குத் தண்டனையிலிருந்து கருணை
அடிப்படையில் மன்னிப்பு வழங்கி சாதனை புரிந்திருக்கும் பிரதிபா பாட்டீல்,
நிச்சயமாக நினைவுகூரப்படுவார். இதற்காகவாவது...
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum