Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன்
Page 1 of 1
சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன்
நண்பர்களே!
சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ
விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் என்றழைக்கப்படும் அதன் அதன்
கடற்படைப் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார்
.வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக்
கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில்
உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 – 18 ல் மரணமடைந்தார்.
சூசை 1963 ஒக்டோபர் 16ல் பிறந்தவர், இவர் வட இந்தியாவில் பயிற்சி பெற்ற
புலிகளின் முதல் தொகுதி ஆட்சேர்ப்பாளர்களில் ஒருவர். கடந்த நூற்றாண்டின்
எண்பதுகளில் வடமராட்சி பிரதேசத்தின் எல்.ரீ.ரீ.ஈ யின் தலைவராக கிட்டு
என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் கீழ் பணியாற்றி வந்தார்.
சூசை 1991 முதலே கடற்புலிகள் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார்,முதலில் ஒரு
தளபதியாகவும் பின்னர் விசேட தளபதியாகப் பொறுப்பு வகித்தார்
.தொடர்பாடல்களுக்காக பயன்படுத்தப்படும் சூசையின் சங்கேதக் குறியீடு “சீ
ஒஸ்கார்” என்பதாகும்.
சூசை படிப்படியாக கடற்புலிகள் பிரிவில் ஏறக்குறைய தனது ஆளுமையை நிலை
நிறுத்திக் கொண்டார். கடற்புலிகளை, “நான் வளர்த்த புலிகள்” என்று சொல்லிக்
கொள்வதில் சூசை அதிக விருப்பமுள்ளவராக இருந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் பழைய
காலத்தவர்களில் ஒருவரான சூசை, யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு எல்.ரீ.ரீ.ஈ
யின் வலிமைமிக்க கோபுரங்களில் ஒன்றாகத் தன்னை நிரூபித்துக் காட்டியவர்.
மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் கரையோர சமூகத்தவர்கள், அது ஒரு நுட்பமான
தொழில் என்பதால் கடற்புலிகளுக்குள் நன்கு கலந்திருந்தனர். யாழ்ப்பாணக்
குடாநாட்டின் கரையோரக் கிராமமான பொலிகண்டியிலிருந்து வந்தவரான சூசை, இந்த
மக்களின் பொதுவான பாரம்பரியம் மற்றும் பச்சாத்தாபம் என்பனவற்றை அவர்;களோடு
பகிர்ந்து கொண்டார். அவர் சாதாரண மக்களோடு நெருக்கமான தொடர்பு
கொண்டிருந்ததோடு, சாதாரண மக்கள் உண்மையாக விரும்பும் ஒரு சில புலித்
தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். முன்னாள் தமிழ் நாட்டு முதலமைச்சர்
எம்ஜி ராமச்சந்திரனை அழைப்பது போல மக்களிடையே பிரபலமான சூசையையும் “மக்கள்
திலகம்” என்றே அழைத்தனர்.
இந்திய இராணுவத்தினரோடு போரிட்டபோது சூசை காயமடைய நேர்ந்தது. குணமடையாமல்
இருந்து வந்த காயங்கள் தொடர்ந்தும் அவருக்கு தொல்லை கொடுத்து வந்தது.
பின்னர் ஒஸ்லோவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தம்
இடம்பெற்ற காலத்தின்போது சூசை இதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றார்.
2004 ஒக்டோபரில் சூசை, தில்லையம்பலம் சிவநேசன் என்கிற பெயரில் உள்ள, என்
13565685 என்கிற கடவுச் சீட்டைக் கொண்டு, எயார்பஸ் 330 ரக ஸ்ரீலங்கா
விமானசேவைக்குச் சொந்தமான யுஎல் 316 விமான இலக்கத்தைக் கொண்ட விமானத்தில்
சிங்கப்பூருக்குப் பறந்தார். அவருடன் வன்னியில் இருந்த மருத்துவரான
ஞ}னசேகரம் கமிலஸ் தர்மேந்திரா என்பவரும், குயின்ரஸ் சகாயரத்னராஜா, மற்றும்
கோபாலப்பிள்ளை சத்திய முகுந்தன் என்கிற இரண்டு மெயப்பாதுகாவலர்களும்
துணையாகச் சென்றனர். சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் இருந்த பின் அவர்
கிளிநொச்சிக்கு திரும்பி வந்தார்.
நான் த ஹிந்து மற்றும் புரொண்ட் லைன் ஆகிய பத்திரிகைகளின் கொழும்புச்
செய்தியாளராக பணியாற்றிய சமயத்தில் 1986ல் சூசையைச் சந்தித்துள்ளேன்.
அப்போது தொண்டமானாறு, செல்வச்சந்நிதி, முருகன் கோவில் சுற்றாடலில்
புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே ஒரு மோதல் நடைபெற்றுக்
கொண்டிருந்தது. ஒரு உண்மையான போராட்டத்தைக் காணவேண்டும் என்று நான் எனது
ஆவலை வெளிப்படுத்தியபோது, எல்.ரீ.ரீ.ஈ யின் யாழ்ப்பாணத் தளபதியாக இருந்த
சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் என்கிற கேணல் கிட்டு, ‘சுக்லா’ என்கிற ஒருவரை
அழைத்து - எனது எண்ணப்படி அவர் மரியநேசன் என்பவராக இருக்க வேண்டும் -
சண்டை நடைபெறும் இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டுக்
கொண்டார்.
திடீரென தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட கிட்டு சூசையை அழைத்தார். பின்னர்
கிட்டு சூசையை எனக்கு அறிமுகம் செய்து விட்டு சூசையைப் பற்றிச் சொன்னது,
”இவர் அவதானமாகவும், பொறுமை மற்றும் பொறுப்புடனும் நடப்பவர்,இவர் உங்களை
பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பக் கொண்டுவந்து விடுவார்” என்று.பின்னர்
எங்களுக்கு நல்வாழ்த்து கூறி விடை பெற்ற அவர் சூசையிடம் கூறிய ஒரே
வார்த்தை “கவனம்” என்பது மட்டும்தான். பின்னர் சூசை எனது இளமஞ்சள்
நிறத்திலான எனது மேல்சட்டையை அகற்றும்படி கூறியதையும் டெனிம்
கால்சட்டையுடன் போரைக் காண்பதற்காக புலிகளின் வௌ;வேறு நிலைகளை நோக்கி
அவருக்கு பின்னால் ஊர்ந்து சென்றதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த
அனுபவத்தின் பின்னர் கிட்டுவும் சூசையும் என்னை பத்திரமாகத் திரும்பக்
கொண்டுவந்து சேர்த்தனர்.
கம்பர்மலையைச் சேர்ந்த சத்யநாதன் என்கிற சங்கரின் தங்கையான சத்யதேவி
என்பவரைத்தான் சூசை திருமணம் செய்திருந்தார். சங்கர்தான் மோதலின்போது
மரணமடைந்த முதல் எல்.ரீ.ரீ.ஈ போராளி. அவர் 27 நவம்பர் 1982ல் மரணமடைந்தார்,
மேலும் அந்த நாளைத்தான் எல்.ரீ.ரீ.ஈ வருடந்தோறும் மாவீரர் நாளாக
அனுஷ்டித்து வருகிறது. அவருடைய தங்கையான சத்யதேவியின் மேல் காதல் கொண்ட
சூசை அவரை மணந்து கொண்டார். அந்த திருமணம் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களின்
இணைப்பாக இருந்தது.
அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். கடைசிப் பையனுக்கு அவனது
தாய்மாமனின் நினைவாக சங்கர் எனப் பெயர் சூட்டப்பட்டது .சங்கர் 2007ம் ஆண்டு
தனது ஐந்தாவது வயதில் கடலில் நடந்த ஒரு விபத்தில் காலமானான். 2007ஜூலை
18ல் நான்கு புதிய படகுகள் கடற்புலிகளுக்கு கிடைத்தன .வட்டவாகல்
கடற்கரையில் வைத்து அவை ஒட்டிப் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. சூசை தனது
கடைசி மகனுடன் அந்தப் புதிய படகுகள் ஒன்றினுள் பயணித்துக் கொண்டிருந்தார்.
விபத்து நடைபெற்ற அந்த துரதிருஷ்டமான நாளில் சங்கர் தனது தந்தையுடன் அந்தப்
படகில்தான் அமர்ந்திருந்தான். ஒரு வேகப் படகு வேகமாகத் திரும்பி மற்றொரு
படகுடன் மோதியது. அத்தோடு ஒரு பெரிய வெடிப்பும் ஏற்பட்டது.
சங்கர் கொல்லப்பட்டான். அதேபோல சூசையின் மெய்ப்பாதுகாவலரில் ஒருவரும்
கொல்லப்பட்டார். மற்ற மூன்று அங்கத்தவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.
மற்றவர்களுக்கு சிறு காயங்களே ஏற்பட்டன. சூசைக்கு கழுத்;து, முதுகு
மற்றும் தலையின் பின்பகுதி என்பனவற்றில் கடும் காயங்கள் ஏற்பட்டன அவர்
நினைவு தப்பிய ஒரு கோமா நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
புதுக்குடியிருப்பில் உள்ள பொன்னம்பலம் தனியார் சிகிச்சை நிலையத்துக்கு
சூசை கொண்டு செல்லப்பட்டார். அதன்பின்னர் ஒரு பெயர் வெளியிடப்படாத ஒரு
இடத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ யின் மருத்துவப் பிரிவினர் சிகிச்சையளிப்பதற்காக
அவர் வேகமாக கொண்டு செல்லப்படடார்.செப்டம்பர் 26, 2007 லிலேயே சூசை
திரும்பவும் பகிரங்கமாகத் தோன்றினார்.
தனது குழந்தைகள்மேல் அளவற்ற பாசம் கொண்ட ஒருவர் சூசை. நெல்லியடிவாசிகள்
அவரது மூத்த மகனான கடலரசனின் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நினைவு
கூர்கிறார்கள். சிவநேசன் குடும்பத்தினர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு
சொந்தமாகவிருந்த முதல் கப்பலான “கடல்புறாவின்” வடிவத்தில் ஒரு பிரமாண்டமான
கேக்கினை உருவாக்கினார்கள். நெல்லியடியில் உள்ள சுபாஷ் பேக்கரியில்
தயாரிக்கப்பட்ட கேக்குகளிலேயே அது நீளம், அகலம் மற்றும் உயரங்களில் மிகவும்
பிரமாண்டமான ஒன்றாக இருந்தது, அதை ஒரு பிக் - அப் வாகனத்தில் வைத்தே
பிறந்தநாள் வைபவம் நடைபெறும் இடத்துக்கு கொண்டு செல்லவேண்டி இருந்தது.
எனவே முடிவு அருகே நெருங்கி வந்தபோது, சூசை தனது மனைவியினதும்
குழந்தைகளினதும் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் தப்பித்துச்
செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சூசையின் மனைவி சத்தியதேவி ,மற்றும்
அவர்களது இரண்டு பிள்ளைகள் மற்றும் சூசையின் மைத்துனியும் குழந்தைகளும்
உட்பட்ட உறவினர்கள் சிலருடன் மே 12,2009ல் காரைத்துறைப்பற்றிலிருந்து ஒரு
படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்கள் இலங்கை
கடற்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப் பட்டார்கள். சத்யதேவி
சூசையின் மனைவி என அடையாளம் காணப்பட்டார். அவரும் குழந்தைகளும் தனியாக
வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
அதன்பின்னர் அவரும் பிள்ளைகளும் திருகோணமலையிலுள்ள கடற்படை முகாம்
வளாகத்தினுள் தடுத்து வைக்கப்பட்டனர். அதேபோல எல்.ரீ.ரீ.ஈ அரசியற்பிரிவு
தலைவர் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வனின் விதவையான மனைவியும் பிள்ளைகளும்
பனாகொடவிலுள்ள இராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் குடும்பத்தினருக்கு கட்டுப்பாடுடன் கூடிய
விடுதலை வழங்கப்பட்டு சில நிபந்தனைகளுடன் அந்தக் குடும்பம் இப்போது
கொழும்பு புறநகர் பகுதியில் வசித்து வருகிறது. அதேபோல சூசையின்
குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுடன் கூடிய விடுதலை வழங்கப்பட்டு சில
நிபந்தனைகளுடன் அந்தக் குடும்பம் இப்போது திருகோணமலையில் வசித்து வருகிறது.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தளபதி சூசை அவர்களின் இறுதிநேரம் !
» தளபதி சூசை - உறுதி தளராத குரல்
» தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ
» சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் பொய் என்று கூற சிறைக் கைதிகளாக உள்ள சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் மனைவிமாரை நிர்ப்பந்திக்கும் அரசு
» "கேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் – கடற்புலிகளின் சிறப்பு தளபதி பிரிகேடியர் சூசை அவர்கள்"
» தளபதி சூசை - உறுதி தளராத குரல்
» தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சுழன்ற கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை. – தமிழீழத்திலிருந்து போராளி செங்கோ
» சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் பொய் என்று கூற சிறைக் கைதிகளாக உள்ள சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் மனைவிமாரை நிர்ப்பந்திக்கும் அரசு
» "கேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் – கடற்புலிகளின் சிறப்பு தளபதி பிரிகேடியர் சூசை அவர்கள்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum