Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போட்டியில் இல்லை: கலாம் திட்டவட்ட அறிவிப்பு
Page 1 of 1
போட்டியில் இல்லை: கலாம் திட்டவட்ட அறிவிப்பு
புது தில்லி, ஜூன் 18: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர்
வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை எதிர்த்து தாம் போட்டியிடப் போவதில்லை என திங்கள்கிழமை
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் நிலவும் இப்போதைய அரசியல் நிலவரம், குடியரசுத் தலைவர் தேர்தலின்
ஒட்டுமொத்தத் தன்மை ஆகியவற்றைப் பரிசீலித்து நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.
இன்னொரு முறை குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்று நான் விரும்பாவிட்டாலும்;
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என நான் ஆசைப்படாவிட்டாலும், மம்தா
பானர்ஜி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் என்னை வேட்பாளராக்க விரும்பினர். இந்திய
மக்களும் அவ்வாறே விரும்பினர். இது என் மீதான அவர்களின் அன்பையும் பற்றையும்
காட்டுவதாக உள்ளது. இந்த ஆதரவின் மூலம் நான் நெகிழ்ந்துபோனேன்.
அவர்களது விருப்பத்தை நான் மதிக்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும்
நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இப்போதைய அரசியல் நிலவரம்,
குடியரசுத் தலைவர் தேர்தலின் ஒட்டுமொத்தத் தன்மை ஆகியவற்றை நான் பரிசீலித்துப்
பார்த்தேன். அதன் பிறகு 2012 குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என
முடிவெடுத்தேன். இவ்வாறு அப்துல் கலாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கலாம் பெயரை மம்தா முன்வைத்த பிறகு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் அவர்
முரண்பட்டார். மேலும், பாரதிய ஜனதா கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கு எதிரான எதிர்க்
கட்சிகளின் பொது வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்த பெரும் முயற்சி எடுத்துக்கொண்டது.
இதற்காக, அப்துல் கலாமை 3 முறை எல்.கே. அத்வானி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரை
சம்மதிக்க வைக்க 2 முறை தனது நெருங்கிய உதவியாளர் சுதீந்திர குர்கர்னியை கலாம்
இல்லத்துக்கு அனுப்பிவைத்தார். இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் தேர்தலில்
போட்டியிட தனது "மனசாட்சி' இடம்கொடுக்கவில்லை என கலாம் தெரிவித்துவிட்டதாக அவருக்கு
நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. திட்டவட்டமாக வெற்றிபெறுவோம் என்பது உறுதியாகத்
தெரிந்தால் மட்டுமே தன்னால் போட்டியிட முடியும் என அப்துல் கலாம் வலியுறுத்தி
வந்தார். அப்துல் கலாமின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை பல
எதிர்க்கட்சித் தலைவர்கள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரால்
நிறுத்தப்பட்ட பி.ஏ. சங்மாவை ஆதரிப்பதைக் காட்டிலும் அப்துல் கலாமை நிறுத்தவே
பா.ஜ.க. விரும்பியது. பிரணாப் முகர்ஜி விஷயத்தில் கருத்தொற்றுமை தேவை என்று
கூறிவரும் ஐக்கிய ஜனதா தளம் கூட அப்துல் கலாமை ஆதரிக்கத் தயாராக இருந்தது.
மம்தாவின் நிலை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அப்துல்
கலாம் அறிவித்துவிட்ட நிலையில், ஒரு திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தள்ளப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர்
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அப்துல் கலாம் விலகிவிட்டார் என இப்போதுதான்
கேள்விப்பட்டோம். இது தொடர்பாக மம்தா ஒரு முடிவெடுப்பார். அவர் எடுக்கும் முடிவு
ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர்
குணால் கோஷ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
மம்தாவும் திரிணமூல் காங்கிரஸýம் கலாம் பெயரை முன்மொழிந்ததன் மூலம் தங்கள்
கடமையை செய்தன. மம்தா எடுக்கும் எந்த முடிவும் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும்
என்றார் குணால் கோஷ்.
Similar topics
» காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
» எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது: வைகோ திட்டவட்ட அறிவிப்பு.There is no time alliance with the Congress party: Vaiko specific declaration.
» ’காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்பே இல்லை!’:கர்நாடக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
» அமெரிக்கத் தீர்மானத்தால் எங்களுக்கு பயம் இல்லை! ராஜபக்சே அறிவிப்பு!!
» புதிய காஸ் இணைப்பிற்கு தடை இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
» எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது: வைகோ திட்டவட்ட அறிவிப்பு.There is no time alliance with the Congress party: Vaiko specific declaration.
» ’காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்பே இல்லை!’:கர்நாடக காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
» அமெரிக்கத் தீர்மானத்தால் எங்களுக்கு பயம் இல்லை! ராஜபக்சே அறிவிப்பு!!
» புதிய காஸ் இணைப்பிற்கு தடை இல்லை: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum