TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மடிப்பிச்சை' கேட்கும் பா.ம.க., : 'வழியே' தெரியாமல் தே.மு.தி.க.,

2 posters

Go down

மடிப்பிச்சை' கேட்கும் பா.ம.க., : 'வழியே' தெரியாமல் தே.மு.தி.க., Empty மடிப்பிச்சை' கேட்கும் பா.ம.க., : 'வழியே' தெரியாமல் தே.மு.தி.க.,

Post by piraba Mon Mar 01, 2010 7:16 am



மடிப்பிச்சை' கேட்கும் பா.ம.க., : 'வழியே' தெரியாமல் தே.மு.தி.க., Tblfpnnews_2709162236













அடுத்த
சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு நாட்கள் நெருங்கி கொண்டிருப்பதால்,
பென்னாகரம் தொகுதி தான் கடைசி இடைத்தேர்தலாக இருக்கும் என, அரசியல்
கட்சிகள் கணக்கிட்டுள்ளது. இதனால், "பென்னாகரம்' தொகுதி "பொன்னாகரம்'
தொகுதியாகவும், நட்சத்திர அந்தஸ்து கொண்ட தொகுதியாகவும் மாறியுள்ளது.


எது
எப்படி இருந்தாலும், ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்ற மன ஓட்டம்
அனைத்து கட்சிகளுக்கும் இருந்தாலும், நான்குமுனைப் போட்டியில், இரண்டாவது
இடத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டி எதிர்க்கட்சிகளுக்கு
உருவாகியுள்ளது. அ.தி.மு.க., வை பொறுத்த வரையில், தி.மு.க., வுக்கு மாற்று
சக்தியாக தனது கட்சி தான் என்பதை நிருபிக்கும் வகையில், தேர்தலில்
போட்டியிட வேண்டிய அவசியம் அக்கட்சிக்கு ஏற்பட் டுள்ளது. தேர்தலை
புறக்கணித்தால், ஆளுங்கட்சி மீது அ.தி.மு.க.,விற்கு பயம் ஏற்பட்டு விட்டது
என்ற பிரசாரத்தை ஆளுங்கட்சி மேற்கொள்ளும் என்பதால் அக்கட்சியும்
பென்னாகரத்தில் களமிறங்கியுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா,
ஒருநாள் பிரசாரம் மட்டும் மேற்கொள்வார் என அக்கட்சி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ
மட்டும் நான்கு இடங்களில் நடக்கவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில்
பேசுகிறார். அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியும் பிரசாரம் செய்யவுள்ளது. மற்றொரு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், தனி
மேடையில் பிரசாரம் செய்வதாக அறிவித்துள்ளது.


பென்னாகரம்
தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமுதாயத்தினரை நம்பி பா.ம.க.,
தனியே களமிறங்கி, தீவிர ஓட்டு வேட்டை ஆடி வருகிறது. பென்னாகரத்தில் பெறும்
ஓட்டுக்கள் அடிப்படையில்தான், பொதுத்தேர்தலுக்கு கூட்டணி பேச முடியும்
என்பதால் பா.ம.க.,வின் உழைப்பு கடுமையாக உள்ளது. முந்தைய நான்கு
இடைத்தேர்தல்களை புறக்கணித்த பா.ம.க., இந்த தேர்தலில் களமிறங்க இதுவே
காரணமாக கூறப்படுகிறதுஇடைத்தேர்தலில் தனது பலத்தை பா.ம.க.,
நிருபிக்கவில்லை என்றால் அக்கட்சியை இரண்டு திராவிடக் கட்சிகளும்
உதாசீனப்படுத்தி விடும் என்ற அச்சமும் பா.ம.க.,வினர் மத்தியில்
எழுந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பென்னாகரம்
தொகுதியில் பா.ம.க., தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இரண்டு முறை
அத்தொகுதியை பா.ம.க., தக்க வைத்துள்ளது.வன்னியர் சமூகத்தின் ஓட்டு
வங்கியாக திகழும் பென்னாகரத்தில் பா.ம.க., மகளிர் அணியினர் "மடிப்பிச்சை'
போடும் படி, ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்."வன்னியர் இன சொந்தங்களை
மற்ற கட்சியினர் புறக்கணிக்கின்றனர் "வன்னியரின் நலனுக்காக பாடுபடும் ஒரே
கட்சியாக பா.ம.க., திகழ்கிறது' "இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்' என,
தெரு, தெருவாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும்
பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு
வருகின்றனர்.


ஆனால், பா.ம.க.,
விற்கு, "செக்' வைக்கும் வகையில், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர்
சி.ஆர்.ராமமூர்த்தி, வன்னியர்களை கவரும் வகையில் பிரசார வியூகத்தை
அமைத்துள்ளார். அதாவது வேலை வாய்ப்பு, கல்வியில் வன்னியர் சமுதாயத்திற்கு
தனி இட ஒதுக்கீடு தருவதற்கு ஆளுங்கட்சி உறுதி அளித்தால், அக்கட்சியை
வன்னியர் கூட்டமைப்பு ஆதரிக்கும். இது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு
வன்னியர் கூட்டமைப்பு சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.வன்னியர்களின்
கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்றுக் கொள்ளுமானால், அக்கட்சியை தேர்தலில்
ஆதரிக்கவும் கூட்டமைப்பு தயாராகவுள்ளது. இரண்டு திராவிட கட்சிகளும்
வன்னியர் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், சுயேச்சை
வேட்பாளரை ஆதரிப்பது அல்லது வன்னியர் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரை
நிறுத்துவது குறித்து கூட்டமைப்பின் பொதுக்குழு முடிவு எடுக்கவுள்ளது.


இடைத்தேர்தலில்
உருவாகியுள்ள 4 முனைப் போட்டியில் தே.மு.தி.க., இறுதி இடத்தை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பா.ம.க.,வை விட கூடுதலாக ஒரு ஓட்டு கிடைத்தாலும் தனது
கட்சிக்கு அரசியல் வாழ்வு கிடைக்கும் என, விஜயகாந்த் நம்புகிறார். எந்த
வழியில் ஓட்டுக்களைப் பிடிப்பது என்ற குழப்பத்துடன், தேர்தல்
பொறுப்பாளர்களை அறிவித்து தே.மு.தி.க.,வும் களமிறங்கியுள்ளது.மொத்தத்தில்
தங்களது கட்சியின் பலத்தை நிரூபித்து, எதிர்காலத்தை உறுதி செய்யவே
பென்னாகரம் தேர்தலை எதிர்க்கட்சிகள் சந்திப்பது தெளிவாகியுள்ளது.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

மடிப்பிச்சை' கேட்கும் பா.ம.க., : 'வழியே' தெரியாமல் தே.மு.தி.க., Empty Re: மடிப்பிச்சை' கேட்கும் பா.ம.க., : 'வழியே' தெரியாமல் தே.மு.தி.க.,

Post by ஜனனி Mon Mar 01, 2010 8:00 am

இடைத்தேர்தலில்
உருவாகியுள்ள 4 முனைப் போட்டியில் தே.மு.தி.க., இறுதி இடத்தை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் பா.ம.க.,வை விட கூடுதலாக ஒரு ஓட்டு கிடைத்தாலும் தனது
கட்சிக்கு அரசியல் வாழ்வு கிடைக்கும் என, விஜயகாந்த் நம்புகிறார். எந்த
வழியில் ஓட்டுக்களைப் பிடிப்பது என்ற குழப்பத்துடன், தேர்தல்
பொறுப்பாளர்களை அறிவித்து தே.மு.தி.க.,வும் களமிறங்கியுள்ளது.மொத்தத்தில்
தங்களது கட்சியின் பலத்தை நிரூபித்து, எதிர்காலத்தை உறுதி செய்யவே
பென்னாகரம் தேர்தலை எதிர்க்கட்சிகள் சந்திப்பது தெளிவாகியுள்ளது. மடிப்பிச்சை' கேட்கும் பா.ம.க., : 'வழியே' தெரியாமல் தே.மு.தி.க., 695262
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum