Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரத்தசோகையைத் தடுக்க இரண்டு வழிகள்!
Page 1 of 1
ரத்தசோகையைத் தடுக்க இரண்டு வழிகள்!
ரத்தத்தில்
சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை இருக்க வேண்டிய அளவைவிடக் குறையும்போது
ரத்தசோகை குறைபாடு ஏற்படுகிறது. உடலின் பல உறுப்புகளுக்கும் ஆக்சிஜனைச்
சுமந்து செல்வது இந்தச் சிவப்பு அணுக்கள்தான். அவற்றில் இருக்கும்
ஹீமோகுளோபின்கள்தான் இந்தப் பணியைச்செய்கின்றன. எனவே, ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்தால், அது உடலின் பல உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும்.
ஆரோக்கியமான
ஆண்களுக்கு, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்கள் அளவு, 13 கிராம்/டெசி
லிட்டர் என்ற அளவிலும்... பெண்களுக்கு 12 கிராம்/டெசி லிட்டர் என்ற
அளவிலும் இருக்க வேண்டும். ஒன்று முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு
11 கிராம்/டெசி லிட்டரும்... அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு 12
கிராம்/டெசி லிட்டரும் இருக்க வேண்டும். இந்த அளவைவிட ஹீமோகுளோபின்களின்
அளவு குறையும்போது, ரத்த சோகை ஏற்படுகிறது' என்ற டாக்டரிடம் நம்முடைய
கேள்விகளை முன்வைத்தோம்.
''ரத்தசோகையை எப்படிக் கண்டறிவது டாக்டர்?'
'சாதாரண
ஹீமோகுளோபின் பரிசோதனை மூலமாகவே ரத்தசோகை இருக்கிறதா, இல்லையா என்பதைக்
கண்டுபிடித்துவிட முடியும். ரத்தசோகை பாதிப்பு இருந்தால், என்ன வகையான
ரத்தசோகை என்பதைக் கண்டறிய எம்.சி.வி. (விமீணீஸீ சிஷீக்ஷீஜீusநீuறீணீக்ஷீ
க்ஷிஷீறீuனீமீ) பரிசோதனை செய்ய வேண்டும். ரத்தசோகையை மூன்று பிரிவுகளாக
வகைப்படுத்தலாம். ரத்தச் சிவப்பு அணுக்களின் அளவு 80 ஃஎப்-எல்லுக்கும்
(திமீனீtஷீ றீவீtக்ஷீமீ) குறைவாக
இருந்தால் 'மைக்ரோசைட்டிக் அனீமியா’ என்றும் 80 முதல் 95 ஃஎப்.எல். வரை
இருந்தால் 'நார்மோசைட்டிக் அனீமியா’ என்றும் 95 ஃஎப்-எல்லுக்கும் அதிகமாக
இருந்தால் 'மேக்ரோசைட்டிக் அனீமியா’ என்றும் வகைப்படுத்தலாம்.''
''இந்த மூன்று வகைகளுக்கும் இடையே என்ன வேறுபாடு?''
''வெறும்
இரும்புச் சத்துக் குறைபாட்டால் உருவாவது மைக்ரோசைட்டிக் அனீமியா.
பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது இந்த வகையால்தான். தைராய்டு பிரச்னை,
காசநோய், சிறுநீரகக் கோளாறுகள், ஹெச்.ஐ.வி. போன்றவற்றின் பாதிப்பால்
ஏற்படுவது 'நார்மோசைட்டிக் அனீமியா’. இந்த வகையான ரத்தசோகையைக்
குணப்படுத்த, அதற்குக் காரணமான நோயை முற்றிலுமாகக் குணப்படுத்துவது
முக்கியம். வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாட்டால் ஏற்படுவது
'மேக்ரோசைட்டிக் அனீமியா’.''
''ரத்தசோகையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் டாக்டர்?'
'சோர்வு
அதிகமாக இருக்கும்; படிகளில் ஏறி இறங்கினாலே, மூச்சு வாங்கும்; கால்கள்
வீங்கிக் காணப்படும். சோகை அதிகமாகும்போது இதயம் சம்பந்தப்பட்ட
பாதிப்புகளும் உண்டாகும். கவனம் இன்மை, படிப்பில் நாட்டமின்றி இருத்தல்
போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்படும். மூன்று வயதுக்கு உட்பட்ட
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய்ச் சுழற்சியில் இருக்கும்
பெண்கள் ஆகியோரிடம் இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும்.'
''ரத்தசோகையை எப்படிக் குணப்படுத்துவது?''
[You must be registered and logged in to see this image.]''மூன்று
வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் பால்தான் முக்கிய உணவு. பாலில்
இரும்புச் சத்தின் அளவு குறைவாக இருப்பதால், இரும்புச் சத்துக் குறைபாடு
ஏற்பட்டு சின்ன வயதிலேயே ரத்தசோகை உண்டாகிறது. இதைத் தவிர்க்க பிறந்த ஐந்து
மாதங்களுக்குப் பிறகு பாலுடன் சேர்த்து மற்ற உணவுகளையும் கொஞ்சம்
கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும். தவிர, வயிற்றில் உள்ள
புழுக்களினாலும் குழந்தைகளுக்கு ரத்த சோகைப் பாதிப்பு உண்டாகலாம். எனவே,
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் புழுநீக்கம் செய்ய வேண்டும்.
மாதவிடாய்ச்
சுழற்சியில் உள்ள பெண்களுக்கு, ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின்போது 20 மில்லி
கிராம் இரும்புச் சத்து வெளியாகிறது. அதேபோல், கர்ப்பிணிகளைப் பொறுத்த வரை
கரு உண்டானதில் இருந்து குழந்தைக்குப் பாலூட்டும் வரை 1,000 மில்லி கிராம்
இரும்புச் சத்துக் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதற்கேற்ற உணவை
எடுத்துக்கொள்ளவில்லை என்றால், ரத்தசோகை ஏற்படும்.
பொதுவாக,
ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல உணவுடன் இரும்புச் சத்து
மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி
எடுத்துக்கொள்ளும்போது, இரண்டு, மூன்று வாரங்களிலேயே ஹீமோகுளோபின் அளவு
அதிகரிக்கும். அதற்காக மாத்திரை எடுத்துக்கொள்வதை உடனே நிறுத்திவிடக்
கூடாது. குறைந்தது ஆறு மாதங்களுக்காவது தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது.
உணவைப்
பொறுத்த அளவில், வெறும் இரும்புச் சத்தை மட்டும் எடுத்துக்கொண்டால்
ரத்தசோகை குணமாகாது. இரும்புச் சத்துடன் புரதச் சத்து சேரும்போதுதான்,
ஹீமோகுளோபினாக மாற்றம் அடைகிறது. எனவே, இரும்புச் சத்துடன் புரதத்தையும்
சேர்த்துச் சாப்பிடுவது அவசியம். ஆட்டு ஈரல் மற்றும் முட்டையில் அதிக அளவு
இரும்புச் சத்தும் புரதமும் உள்ளன. 100 கிராம் ஈரலில் 6.3 சதவிகிதம்
இரும்புச் சத்தும் 19.3 சதவிகிதம் புரதமும் உள்ளன.
முட்டையில்
2.1 சதவிகிதம் இரும்புச் சத்தும் 13.3 சதவிகிதம் புரதமும் உள்ளன. இதேபோல்,
சைவ உணவுகளில் தாமரைத் தண்டு வற்றலில் 60 - 4.1 சதவிகிதம் என்கிற அளவிலும்
சுண்டைக்காய் வற்றலில் 60 - 8.3, அரைக்கீரையில் 38.5 - 2.8, சிறுகீரையில்
27.3 - 2.8, கைக்குத்தல் அவலில் 20 - 6.6 சதவிகிதம் என்கிற அளவில்
இரும்புச் சத்தும் புரதமும் உள்ளன.
தினமும்
ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகைக் குறைபாட்டைப் போக்க முடியும்.
சைவ உணவு சாப்பிடுபவர்கள், மேற்சொன்ன உணவுகளுடன் பருப்பு வகைகளையும்
சேர்த்து சாப்பிடுவது நல்லது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கருச்சிதைவை தடுக்க சில வழிகள்
» தமிழகத்தில் இரண்டு கட்டதேர்தல்? பண வினியோகத்தை தடுக்க அதிரடி
» மஞ்சள் காமாலை தடுக்க வழிகள்!
» டெங்கு தடுக்க... தகர்க்க... தப்பிக்க 10 வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum