TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மது விலக்கு மாநாடு - ஏன் ? எதற்காக ?

Go down

மது விலக்கு மாநாடு - ஏன் ? எதற்காக ? Empty மது விலக்கு மாநாடு - ஏன் ? எதற்காக ?

Post by மாலதி Fri Jun 01, 2012 9:19 am

மது விலக்கு மாநாடு - ஏன் ? எதற்காக ? 249113_225020207615677_1531103613_nவாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர்
சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக்
கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது
இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய
மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து
இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர்
ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு
இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது
பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக
இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி
சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை
கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை
நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை
தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!

இன்று உலகிலேயே மிக
அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப்
பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக
அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர்
என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது
அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில்
டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.

கடந்த 20
ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின்
எண்ணிக்கை சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும்
அதிகரித்து வருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின்
சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய
'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம்
குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட்
சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!

தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக
மோசம். ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்கிறார்கள்.
சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது
சிறுவர்களும் அடக்கம்.

அதுசரி, அப்புறம் அந்த நண்பன் என்ன ஆனான்
என்று சொல்லவே இல்லையே... 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி வந்த அந்த
நண்பன், பின்னாளில் டாஸ்மாக் சரக்கின் போதை போதாமல் எங்கோ ஸ்பிரிட் வாங்கி
வந்து குடித்து செத்துப்போனான்!

அரசு மருத்துவமனையில் அவனுக்கு
சிகிச்சை அளித்த டாக்டர் மோகனை ஒருமுறை யதேச்சையாக பார்த்தபோது அவனைப்
பற்றிக் கேட்டேன். ''அவங்கம்மாதான் அவனை இங்க கூட்டிட்டு வந்தாங்க.
குடிச்சிட்டு சுயநினைவு இல்லாம இருந்தான். இங்க வர்றப்பயும் குடிக்கணுமானு
அவங்கம்மாகிட்ட சத்தம் போட்டேன். 'இங்க கூட்டிட்டு வர எனக்கு வேற வழி
தெரியலைப்பா... அதான் நானே அரை பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்...’னு
அழுதாங்க.

நாலு மணி நேரம் கழிச்சு எழுந்தவன், சுற்றிலும்
பார்த்துட்டு எழுந்து ஓட ஆரம்பிச்சான். தடுத்த நர்ஸைத் தள்ளிவிட்டதில்
அவங்களுக்கும் காயம். ஒருவழியா அவனைப் பிடிச்சு, பெட்டுல கட்டிப்போட்டோம்.
ஆனாலும், அவன் பிழைக்க அஞ்சு சதவிகிதம்தான் வாய்ப்பு இருந்துச்சு. கணையத்தை
ஆல்கஹால் அடைச்சு, ஜீரண நீர் வெளியேற வழி இல்லாம அது பந்து மாதிரி வீங்கி,
எந்நேரமும் வெடிக்கத் தயாரா இருந்துச்சு. இரைப்பையோட உள்சுவரான
'மியூக்கஸ்’-ல கிழிஞ்சுபோன பனியன் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைங்க. உள்ளே எந்த
உணவும் தங்காது. கல்லீரல் 80 சதவிகிதம் அழுகிப்போயிருந்தாக்கூட அதை வெட்டி
எடுத்துட்டா, அது தானாகவே வளரும் தன்மைகொண்டது. ஆனால், கல்லீரல் முழுக்க
ஹெபாடிடிஸ், சிரோசிஸ் பரவி இருந்தது. பத்து நாள் இங்க பொழுதுக்கும்
கத்திட்டே கெடந்தவன், ஒருநாள் தப்பிச்சு ஓடிட்டான். அப்புறம் ஏதோ ஸ்பிரிட்
குடிச்சு செத்துட்டான்னாங்க...'' என்றார்.

இப்படி என் நண்பன்
மட்டும் அல்ல... இன்று தமிழகத்தில் குடிநோயால் மட்டுமே தினமும் அநேகம் பேர்
இறக்கிறார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ராஜீவ்காந்தி
மருத்துவமனையிலும் கணையம், கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாய்
வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அதுசரி, டாஸ்மாக்
ஆரம்பித்தபோது 2,828 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் கடந்த ஆண்டில் 18,000
கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனைச் சாதனையாகச் சொல்லும் அரசு...
மருத்துவமனைகளில் செத்து விழும் மனிதர்கள் எண்ணிக்கை உயரும்போதும் அதையும்
சாதனையாகச் சொல்லுமா? ஆபத்தை உணராமல் அரசாங்கம் பரப்பும் வியாதியின் கோரம்
என்ன தெரியுமா?

நன்றி : ஜூனியர் விகடன் ஜூன் 3 , 2012


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்
» தமிழக பட்ஜெட்: மளிகை பொருட்களுக்கு வரி விலக்கு
» மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!
» விமான நிலையங்களில் ராபர்ட் வதேராவுக்கு சோதனை செய்வதில் விலக்கு ஏன்?
» பெங்களூர் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் ஜெ. மனு- விசாரிக்க நீதிபதி மறுப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum