TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நாட்டாமைத் தீர்ப்பு!

2 posters

Go down

நாட்டாமைத் தீர்ப்பு! Empty நாட்டாமைத் தீர்ப்பு!

Post by மாலதி Sat May 19, 2012 7:51 am


நாட்டாமைத் தீர்ப்பு! Edi





திரைப்பட நடிகரோ, பிரபல இசைக் கலைஞரோ, அரசியல் பிரமுகரோ, ஆன்மிகவாதியோ
பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்ட பிறகு, தனது செயல்கள் தனிப்பட்ட விஷயம் என்றும் அதில்
மற்றவர்கள் தலையிட முடியாது, கூடாது என்றும் கூறுவது ஏற்புடையதல்ல. மக்கள்
மன்றத்தின் அங்கீகாரத்தையும், பேராதரவையும் பெறுவதில் பெருமிதம் கொள்ளும் இவர்கள்,
தங்களுக்கு சில வரம்புகள் உண்டு என்பதையும், பொது இடங்களில் பொறுப்புடன்
நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
சிறிது நாள்களுக்கு முன்பு, ஷாருக் கான் தனது நண்பரை இரவு விருந்தில்
கன்னத்தில் அறைந்ததாகப் பிரச்னை எழுந்தது. பிறகு, அவர் "செல்லமாகத் தட்டினேன். இது
வெறும் விளையாட்டு' என்று அந்த நண்பரை அணைத்துக்கொண்டு பேட்டி அளித்தார். இப்போது
குடித்துவிட்டு வான்கடே ஸ்டேடியத்தில் காவலர்கள் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்க
அதிகாரிகளுடன் தகராறு. தகராறு செய்த ஷாருக்கானை போலீஸ் கைது செய்து வழக்குப் பதிவு
செய்திருந்தால், இது குறித்து யாரும் கவலைப்படப்போவதில்லை.
ஆனால், "வான்கடே ஸ்டேடியத்துக்குள் ஷாருக் கான் 5 ஆண்டுகளுக்கு நுழையவே கூடாது.
அது ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, வேறு போட்டியாக இருந்தாலும் சரி' என்று
மத்திய அமைச்சரும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான விலாஸ்ராவ் தேஷ்முக்
தண்டனை அறிவித்திருக்கிறார்.
ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகர் குடித்துவிட்டு வந்து, காவலர்களிடமும் ,
விளையாட்டரங்க அதிகாரிகளிடமும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டால்,
அவருக்கும் இதே தீர்ப்பை வழங்குவார்களா? ஷாருக்கானின் நடவடிக்கை கேலிக்கூத்து
என்றால், அதைவிட பெரிய கேலிக்கூத்து இத்தகைய பதில்களும் கட்டப்பஞ்சாயத்துகளும்.
தரக்குறைவான வார்த்தைகளால் தங்களைத் திட்டியதாக மும்பை கிரிக்கெட் சங்க
அலுவலர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்ட பின்னர், அந்தப் புகாரை
விசாரிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஆனால், மும்பை கிரிக்கெட் சங்கத்
தலைவர் சொல்கிறார்: 5 ஆண்டுகளுக்கு அவர் வான்கடே ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது
என்று! இது தண்டனையா இல்லை சட்டத்தின் நடவடிக்கை பாயாமல் இருக்க கிரிக்கெட் சங்கம்
எடுத்திருக்கும் சாதுர்யமான முடிவா?
ஆடுகளத்தில் குற்றமிழைக்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே மஞ்சள் அட்டை
காட்டுவது கால்பந்து போட்டிகளில் வழக்கம். கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பிட்ட
தொடரில் அந்த வீரர் விளையாடக்கூடாது என்று கிரிக்கெட் வாரியம் தண்டனை தரும். ஷாருக்
கான் குடித்துவிட்டுத் தகராறில் ஈடுபட்டது என்ன விளையாட்டா, 5 ஆண்டுகளுக்கு
ஸ்டேடியத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்க?
"அவர் குடித்துவிட்டு வந்தது உண்மை. அவர் ஸ்டேடியத்துக்கு வெளியே
குடித்துவிட்டு வந்தார். குடித்து விட்டு ஸ்டேடியத்துக்குள் நுழையத் தடை ஏதும் இல்லை.
அவர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார் என்று மட்டுமே புகார் ஆகியுள்ளது' என்று
மும்பை போலீஸ் துணை ஆணையர் கூறுவது உண்மையானால், அத்தகைய குற்றத்துக்குத் தண்டனை
வழங்க வேண்டியது நீதிமன்றமே தவிர, மும்பை கிரிக்கெட் சங்கம் அல்ல.
5 ஆண்டுகள் ஸ்டேடியத்துக்குள் நுழையக்கூடாது என்று ""தீர்ப்பு'' சொல்லும்
உரிமையை மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு யார் கொடுத்தது? கட்டணம் செலுத்தி டிக்கெட்
வாங்கி வரும் ஒரு நுகர்வோருக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க தனி அமைப்புக்கு உரிமை
உள்ளதா? இப்படி இன்னும் பல கேள்விகளை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.
தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் மட்டுமே இத்தகைய தடைகளை, அதாவது, யாரை உள்ளே
அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிக்க முடியும். 5 ஆண்டுகளுக்கு
ஸ்டேடியத்திற்குள் நுழையக்கூடாது எனும் நாட்டாமைத் தீர்ப்பு சரி என்றால், வான்கடே
ஸ்டேடியம் பொது நோக்கத்துக்கானது அல்ல, தனிநபர் சொத்து என்பதாக பொருள்படும். வான்கடே
ஸ்டேடியம் மக்கள் சொத்து.
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து காவல்
நிலையத்தில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், இது குறித்து விசாரித்து வழக்குப்
பதிவு செய்வது காவல் துறையின் கடமை. இதற்கு நீதிமன்றம் விதிக்கும் அபராதத்தைச்
செலுத்த வேண்டியவர் ஷாருக் கான். காவல்துறை, நீதித்துறை செய்ய வேண்டிய பணியை, மும்பை
கிரிக்கெட் சங்கம் தனக்குத் தானே எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம்.
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சமுதாயத்தில் பிரபலமாக உள்ள பாடகி, நடிகை,
நடிகர் போதைப் பொருள் உட்கொண்டு ரகளை செய்யும்போதும், குடிபோதையில் வாகனம்
ஓட்டும்போதும் நீதிமன்றம் அவர்களுக்கு எந்தவொரு சாதாரண மனிதருக்கும் என்ன தண்டனை
விதிக்குமோ அதையே விதிக்கின்றது. அத்தகைய சட்டத்தின் தண்டனையை நீதிமன்றம்
ஷாருக்கானுக்கு வழங்கட்டுமே. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் நாட்டாமைத் தீர்ப்பை
அங்கீகரிக்க முடியாது!
ஒரு கிரிக்கெட் சங்கம், விளையாட்டு தொடர்பாக வீரர்கள் மீதான
குற்றச்சாட்டுகளில் விளையாடுவதற்கு மட்டும்தான் தடை விதிக்க முடியும்.
தடைவிதிக்கப்பட்ட அந்த வீரர், ஸ்டேடியத்துக்குள் வரக்கூடாது என்று சொல்லும் அதிகாரம்
மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு இருக்க முடியாது.
திரைப்படத்தில் கதாநாயகர்களாக இருப்பதால் வாழ்க்கையிலும் கதாநாயகனாகத்தான்
இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், தனக்கு எப்போதும் கதாநாயகனுக்கான முக்கியத்துவம்
கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு நடிகர் சமூகத்தில் பிரச்னைக்குரிய
நபராக மாறுகிறார். இதைத்தான் தற்போது நடிகர் ஷாருக் கான் விவகாரத்திலும் நாம் காண
முடிகிறது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நாட்டாமைத் தீர்ப்பு! Empty Re: நாட்டாமைத் தீர்ப்பு!

Post by ஜனனி Sat May 19, 2012 5:23 pm

அருமை நாட்டாமைத் தீர்ப்பு! 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum