TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலவசம் எனும் மாய நிழல் : உரத்த சிந்தனை

Go down

இலவசம் எனும் மாய நிழல் : உரத்த சிந்தனை Empty இலவசம் எனும் மாய நிழல் : உரத்த சிந்தனை

Post by ஜனனி Sun Feb 28, 2010 7:30 am

இலவசம் எனும் மாய நிழல் : உரத்த சிந்தனை Tblfpnnews_58420526982

எதிர்க்கட்சித்
தலைவர், ஜெயலலிதா போனால் போகிறது பிழைத்துப் போங்கள் என்று, ஆறு
மாதத்திற்குப் பின் சட்டசபைக் கூட்டத்துக்கு வந்து, தி.மு.க., அரசு மீது
அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை அள்ளி வீசிவிட்டு, சென்றிருக்கிறார். அதில்
முக்கியமானது, தமிழக அரசுக்கு உள்ள மொத்த கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்
என்பதும், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 15 ஆயிரம் ரூபாய் கடனுடன்
பிறக்கிறது என்பதாகும்.


இவற்றுக்கு
முதல்வர் கருணாநிதி, சில நாட்கள் முன், மறுப்பு அறிக்கை
வெளியிட்டிருக்கிறார். அதில், மொத்த கடன் 76 ஆயிரம் கோடி ரூபாய் தான்
என்றும், பிறக்கும் குழந்தைக்கு 13 ஆயிரம் ரூபாய் தான் கடன் என்றும், கடன்
வாங்காமல் எந்த அரசும் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்றும்
தெரிவித்திருக்கிறார். அருமையான, மிக நல்ல விளக்கம் இது! "வரவு எட்டணா,
செலவு பத்தணா, அதிகம் இரண்டணா, கடைசியில் துந்தனா' என்று தான் இது
முடியும். தமிழக அரசுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன்; மத்திய அரசுக்கு,
பல லட்சம் கோடி கடன். இவை அனைத்தையும், வெளிநாடுகளில் குறிப்பாக,
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய
அரசியல்வாதிகளின், ஊழல் மூலம் சம்பாதித்த பணம் 93 லட்சம் கோடி ரூபாயை
மீட்டுக் கொண்டு வந்தாலே, நிமிடங்களில் அடைத்து விடலாம். இதைச் செய்ய,
மத்திய அரசை வற்புறுத்தி இதுவரை தி.மு.க., எம்.பி.,க்களோ அல்லது
அ.தி.மு.க., எம்.பி.,க்களோ பார்லிமென்டில் பேசி இருக்கின்றனரா என்றால்,
இல்லை என்பது தான் பதில். யாராவது தன் தலையில், தானே மண் அள்ளி போட்டுக்
கொள்வரா?


"கடன் வாங்காமல்
நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது' என்று, முதல்வர் சொல்வதற்கு காரணம்,
திருமணமாகாத பெண்களுக்கு திருமணச் செலவுக்கு அரசு மானிய உதவி, கர்ப்பிணிப்
பெண்களுக்கு அரசு மானியம், குழந்தைகளுக்கு இலவச சத்துணவு, இலவச பள்ளிப்
படிப்பு, இலவச கல்லூரி படிப்பு, பெரியவர்கள் ஆனவுடன் இலவச வேட்டி, சேலை,
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச காஸ் இணைப்பு, இலவச காஸ் அடுப்பு,
குடிசைகளுக்கு இலவச மின்சாரம், இலவச நில பட்டா, இலவச வீட்டு மனைப்பட்டா,
40 வயது கூட நிரம்பாதவர்களுக்குகெல்லாம் முதியோர் பென்ஷன், செத்த பின்
சுடுகாட்டு செலவுக்கு அரசு மானியம், இலவச "டிவி' இன்னும் பலப்பல.


இப்படிப்பட்ட
இலவசங்களால், வெகு சீக்கிரமே தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படப்
போகிறது; விவசாயம் பாதிக்கப்படப் போகிறது. இப்போதே தொழிற்சாலைகளில் வேலை
செய்ய ஆள் கிடைப்பதில்லை. எல்லாம் இலவசமாக கிடைக்கும் போது, யாரும் வேலை
பார்க்க தயார் இல்லை. அப்படியே ஆள் கிடைத்தாலும், அவர்கள் வழக்கத்தை
காட்டிலும் அதிகமான சம்பளம் எதிர்பார்க்கின்றனர். அதிக சம்பளம்
கொடுத்தால், உற்பத்திப் பொருட்களின் விலைவாசி தானாகவே உயரத்தான் செய்யும்.
இது தவிர, சமையல் காஸ் இணைப்பு போன்றவற்றை இலவசமாக கொடுத்து விட்டு, அதே
நேரம், காசு கொடுத்து ரீபில் சிலிண்டர் வாங்க வருபவர்களுக்கு இல்லை என்று
சொல்கின்றனர் அல்லது 25 நாட்கள் கழித்து தான் பதிவோம் என்கின்றனர். பதிந்த
பின் 15 நாட்கள் கழித்து சிலிண்டர் கொடுக்கின்றனர். இலவசமாக கிடைக்கும்,
காசு கொடுத்தால் கிடைக்காது என்ற நிலைமை, உலகில் வேறு எங்காவது பார்க்க
முடியுமா?


பொதுமக்களில் அனைத்து
தரப்பினரையும் சாராயம் குடிக்க வைத்து, குடிகாரர்களாக்கி இதில் ஆண்டுக்கு
கிடைக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை, இலவச திட்டங்களுக்கு அரசு
செலவிடுகிறது. மின்சார வாரியத்தில், நஷ்டத்தை மக்கள் செலுத்தும்
வரிப்பணத்திலிருந்து, ஆண்டுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் மானியமாக
வழங்குகிறது. இது தவிர, மத்திய அரசின், ஐந்தாண்டு திட்டப் பணிகளுக்காக
ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்துக்கு கொடுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை, இலவச
சத்துணவுத் திட்டத்திற்கும், இதர பிற இலவச திட்டங்களுக்கும்
செலவழிக்கிறது. ஆக, ஐந்தாண்டுத் திட்டத்திற்கு திட்டமிடப்பட்ட பணிகள்
எதுவும் செய்யப் படுவதில்லை. அப்படியே ஒருவேளை செய்தால், இருக்கவே
இருக்கிறது, உலக வங்கியிடம் கடன் அல்லது வெளிநாடுகளில் கடன் அல்லது வேறு
எங்கெல்லாம் கடன் வாங்க முடியுமோ அங்கெல்லாம் கடன். பின் ஏன், தமிழக
அரசின் கடன் சுமை 76 ஆயிரம் கோடியைத் தொடாது? இப்படி, மேன்மேலும் கடன்
வாங்கிக் கொண்டே சென்றால், எப்போது, எப்படி இந்த கடனையெல்லாம் அடைப்பது?
அதுவரையில் இதற்கு செலுத்தும் வட்டித் தொகை எவ்வளவு ஆகும்?


இலவசங்களையும்,
மானியங்களையும் ரத்துச் செய்தால் தான், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்
என்று, முன்பு பேசிய பொருளாதார நிபுணரும், முன்னாள் ரிசர்வ் வங்கி
கவர்னரும், இந்நாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங், இங்கு நடக்கும்
அத்தனை கூத்துக்களையும் வாய் திறவாமல், மவுனமாக பார்த்துக்
கொண்டிருக்கிறாரே... ஏன்? ஓட்டு வங்கி அரசியல் தான் காரணம்.
ஆக்ஸ்போர்ட்டில் பயின்ற, ஆசியாவில் பொருளாதாரப் புலி என்று பெயர் பெற்ற,
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போதும் சரி, இப்போதும் சரி,
தமிழக அரசின் இலவசங்களைப் பற்றியும், மானியங்களைப் பற்றியும், வாய்
திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. "மாறாக, இலவச "டிவி' திட்டமும், ஒரு
ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டமும் சாத்தியமானது தான்' என்று
புகழ்ந்துரைத்தார். காரணம், தானும், தன் வழித் தோன்றல்களும், தொடர்ந்து
பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையால் தான்.


ஆக,
இப்போது எல்லா இலவச திட்டங்களுக்கும் சிகரமாக, பனிரெண்டாயிரத்து ஐநூறு
கோடி ரூபாய் செலவில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித் தரப்
போகின்றனராம். 1970ம் ஆண்டுகளில் கட்டிய குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி
கட்டடங்கள் பல இடிந்து விழுந்து விட்டன. மீதமுள்ளவை, மிகுந்த சேதமடைந்து,
எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன், வெறும் களிமண்ணாலும், சுண்ணாம்பாலும், கற்களாலும், கரிகால் சோழ
மன்னனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை இன்றளவும், காலத்தை
வென்று நிற்கிறது. நெல்லை மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் மற்றும்
கல்லிடைக்குறிச்சிக்கு இடையே தாமிரபரணி ஆற்றின் மேல் 1870ல் வெள்ளையர்
ஆட்சிக் காலத்தில் வெறும் செங்கல்லாலும், சுண்ணாம்பாலும்
கட்டப்பட்டிருக்கும் ஒரு பழைய பாலத்தை பொதுப் பணித் துறையினர் இடிக்க
முயற்சி செய்து, இடிக்க முடியவில்லை. பாலம், மிகவும் வலுவாக உள்ளது என்று,
விட்டு விட்டுச் சென்றனர். அந்த பழைய பாலம் இன்றளவும், காட்சிப் பொருளாக
உள்ளது.


அதே சமயம், கட்டி முடித்து
15 ஆண்டுகள் கூட நிறைவடையாத சமத்துவபுர வீடுகள் பல, பொல, பொலவென்று
உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த நிலைமையில், மக்கள் பணம்
பனிரெண்டாயிரத்து ஐநூறு கோடி ரூபாயை செலவு செய்து, 21 லட்சம் கான்கிரீட்
வீடுகள் கட்டினால் அவை எப்படி இருக்கும். இப்படி அரசுப் பணம், அதாவது,
மக்களின் வரிப்பணம், விழலுக்கு இறைத்த நீர் போல வீணாக போனால், அடிப்படை
கட்டமைப்பு திட்டங்கள், சாலை வசதிகள், புதிய ரயில் பாதைகள் போட பணம்
எங்கிருந்து ஒதுக்க முடியும்? சரி, ரயில்பாதை திட்டம் தான் இல்லை...
நான்கு வழிச்சாலை திட்டமாவது தமிழகம் முழுவதும் நிறைவேறுமா? இவற்றை
எல்லாம் எதிர்த்துப் போராட, இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கோ, வர்த்தக
சங்கங்களுக்கோ, பிற பொது நல அமைப்புகளுக்கோ, எண்ணமோ, துணிவோ, திராணியோ
இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.


மொத்தத்தில்,
இலவசங்கள், இன்று வேண்டுமானால் இனிக்கலாம்; பின்னாளில், இதன் விளைவுகளாக,
வேலைக்கு ஆள் பற்றாக்குறை, தொழில்கள், விவசாயம் நசிந்து போதல், உணவு
உற்பத்தி குறைவு, விலைவாசி உயர்வு, இன்னும் பல எதிர்பாராத பிரச்னைகளை
தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி. அதற்குள் தமிழர்கள்
விழித்துக் கொண்டால் நல்லது.


- டாக்டர்.வி.ராதாகிருஷ்ணன் - THANKS;dinamalar
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ரேஷன்கார்டு வைத்திருக்கும் இலவசம் அனைத்தும் இலவசம் ....புழுத்து போனது , மிச்சம் மீந்தது
» லைசன்ஸ் கீயுடன் அனைத்து மென்பொருட்களும் இலவசம் இலவசம்! |
» ஜெய்ஹிந்த்" எனும் வீர மந்திரத்தை நேதாஜியின் மூலம் இந்தியர்களுக்கு சொன்ன திரு.சென்பகராமன் எனும் தமிழர் இவரே..!
» நிழல் உலக தாதா சந்தோஷ் ஷெட்டி கைது
» நிழல் ஓவியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum