Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல்?
Page 1 of 1
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல்?
புது தில்லி, மே 12: நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்று
திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாக வெளிவந்துள்ள தகவல்கள்
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மம்தாவின் கருத்தை
காங்கிரஸ் மறுத்துள்ளது.
அண்மையில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்
கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா
காந்தி, கடந்த சில நாள்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பெரும்பாலான தலைவர்கள் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் இருப்பதும் ஒரு காரணம்
என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற கட்சிக்
கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, கட்சியினர் கோஷ்டிப் பூசலை தவிர்த்து ஒற்றுமையுடன்
செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்காலத்தில் தேர்தலை எதிர்கொள்ள முடியும்
என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனிடையே 2014-ம் ஆண்டுக்கு முன்பாகவே மக்களவைக்குத் தேர்தல் நடைபெறக்கூடும்
என்று ஊகங்கள் எழுந்தன. இந்த நிலையில் மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது
குறித்து மூத்த அரசியல் கட்சி ஆலோசித்து வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மம்தா
பானர்ஜி சூசகமாக கூறியிருந்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி என்று அவர்
வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. ஆனால், மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வந்தாலும்
அதைச் சந்திக்க திரிணமூல் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த கருத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக கருத்து: இது தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன்
கருத்துத் தெரிவிக்கையில் ஓராண்டுக்கு முன்னதாகவே 2013-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற
வாய்ப்புள்ளது என்று மம்தா கூறியுள்ளார். காங்கிரஸின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு
நல்லது அல்ல என்பதைத்தான் அவரது பேச்சு காட்டுகிறது. இந்த ஆட்சியில் இருந்து
மக்களுக்கு மம்தா விடுதலை அளித்தால் அதுவே சிறப்பானதாக இருக்கும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலை சரியில்லை.
வெளியுறவுக் கொள்கையும் மோசம், மன்மோகன் ஆட்சிபோன்ற மோசமான காலகட்டத்தை நாடு
சந்தித்தது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே மம்தா தெரிவித்த கருத்துகளுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.
மம்தா கூறியதாக வெளியான செய்திகள் முழுமையானது அல்ல. எனவே அது குறித்து கருத்துத்
தெரிவிப்பது முறையானதாக இருக்காது. அதே நேரத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு
செய்யும் என்பதை மட்டும் உறுதியாகத் தெரிவிக்க முடியும். திட்டமிட்ட காலத்தில்தான்
தேர்தல் நடைபெறும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது பதவிக்காலத்தை முழுமையாகப்
பூர்த்தி செய்யுமானால், அது எனக்கு மகிழ்ச்சிதான் என்று மம்தா பானர்ஜி மீண்டும்
கருத்துத் தெரிவித்துள்ளார்.
காப்பீட்டுத் துறை, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் அன்னிய
நேரடி முதலீட்டுக்கு அதிக வாய்ப்பு தர ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிலும் குறிப்பாக
காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால் தோழமைக் கட்சிகள், அதிலும் குறிப்பாக
திரிணமூல் காங்கிரஸ் இந்தச் சீர்திருத்தங்களை அமல் செய்ய விடாமல் தடையாக நிற்கிறது.
பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க.வில் பிரதமர் பதவியை ஏற்க மூத்த தலைவர்களிடையே
அறிவிக்காத போட்டி இருக்கிறது. ஒரு சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான மாநிலங்களில்
அந்தக் கட்சிக்கு செல்வாக்கு இல்லை. தோழமை கட்சிகளுடனும் சுமுக உறவு இல்லை. மேலும்
வாக்குகளை கவரும் தலைவர்கள் கட்சியில் இல்லை.
மார்க்சிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் ஆட்சியை இழந்துவிட்டது.
அந்தக் கட்சியின் தலைமைக்கும் மக்களிடையே செல்வாக்கு சரிந்துவருகிறது. இவ்விரு
கட்சிகளைத் தவிர்த்த மாநிலக் கட்சிகள் அவரவர் மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கோடு
இருக்கின்றன.
இந்த நிலையில் இப்போதுள்ள கூட்டணியை சிறிது விரிவுபடுத்தினாலே மீண்டும்
மக்களவையில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று காங்கிரஸ்
கருதுவதாகத் தெரிகிறது.
மேலும் நக்சல்கள் பிரச்னை, தெலங்கானா கிளர்ச்சி போன்ற உள்நாட்டுப்
பிரச்னைகளால் காங்கிரஸ் கட்சிக்கு அந்தந்த மாநிலங்களில் சிறிது பின்னடைவு
ஏற்பட்டாலும் ஒட்டுமொத்தமாக காங்கிரûஸப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நாடு முழுக்க
செல்வாக்கு பெறும் நிலையில் எந்தக் கட்சியும் இல்லை. எனவே வேட்பாளர்கள் தேர்வில்
கவனமாகச் செயல்பட்டு, நன்கு திட்டமிட்டு பிரசாரம் செய்தால் வெற்றி நிச்சயம் என்று
காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. அதன் காரணமாகவே
2014-க்குப் பதிலாக 2013-ம் ஆண்டிலேயே மக்களவைத் தேர்தலை நடத்திவிட காங்கிரஸ்
முயல்வதாகத் கூறப்படுகிறது.
Similar topics
» தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருமா : முதல்வர் கருணாநிதி பேட்டி
» காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» தேர்தல் செலவை காட்டாவிட்டால் எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க நேரிடும்: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
» காங்., எதிர்க்கட்சிகள் பலப்பரீட்சை ஆரம்பம்: முன்கூட்டியே லோக்சபா தேர்தல் வருமா?
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» தேர்தல் செலவை காட்டாவிட்டால் எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க நேரிடும்: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum