TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 1:15 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரளா தீவிரம்: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

Go down

அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரளா தீவிரம்: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை Empty அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரளா தீவிரம்: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை

Post by logu Thu May 10, 2012 7:48 am

அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய கேரளா தீவிரம்: சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை Tamil_News_large_464487
தமிழகத்திற்கும், கேரளாவுக்கும் இடையே, 999 ஆண்டுகளுக்கான முல்லைப்
பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதில், கேரள அரசு தீவிர
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது, அம்மாநிலத்தில் நடைபெற உள்ள
இடைத்தேர்தலுக்கான நாடகமாகவும் கருதப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து, தமிழக, கேரள மாநிலங்களுக்கு
இடையே இருந்துவரும் பிரச்னையை தீர்க்க, சுப்ரீம் கோர்ட் நியமித்த
உயர்மட்டக்குழு, தனது அறிக்கையை, கடந்த 25ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில்
தாக்கல் செய்தது. இதில், முல்லைப் பெரியாறு அணை உறுதியுடன் இருப்பதாகவும்,
அதற்கு பதிலாக புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும், அணையின் நீர்மட்டத்தை
142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்த அறிக்கை,
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டலாம் என்று எதிர்பார்ப்புடன்
காத்திருந்த கேரளாவுக்கு, பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. சுப்ரீம் கோர்ட்
நியமித்த உயர்மட்டக்குழுவில், கேரள அரசு சார்பில் பணியாற்றிய நீதிபதி
கே.டி.தாமஸ் குறித்து, மாநிலத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

கேரளா எதிர்ப்பு:உயர்மட்டக்குழுவின் அறிக்கையில், முல்லைப்
பெரியாறு அணை எத்தனை காலத்திற்கு பாதுகாப்பானது என்பது குறித்து தெளிவாக
குறிப்பிடவில்லை என்றும், அதுகுறித்து தெளிவாக விளக்கப்பட வேண்டும்
என்றும், கேரள அரசு கருதுகிறது. இதற்காக, சுப்ரீம் கோர்ட்டை அணுகவும்
முடிவு செய்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையில், தமிழகத்திற்கு நீர் பெற,
இரு மாநிலங்களுக்கு இடையே, 999 ஆண்டுக்கால ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதில்,
119 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. இந்நிலையில், அணை பலமிழந்து
விட்டதாகவும், அதனால் அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியில்
இருந்து, 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், பலமிழந்து விட்ட அணைக்குப்
பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும் என்றும், கேரள அரசும், அங்குள்ள
கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

அணை பாதுகாப்பானது:இதுகுறித்து ஆராய்ந்த உயர்மட்டக்குழு,
முல்லைப் பெரியாறு அணை அமைப்பு ரீதியாகவும், நிலம் மற்றும் நீர் சார்ந்த
ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால், அணையின் கட்டுமானம் பாதுகாப்பாக
உள்ளது. எனவே, அணையில் சில பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட பின், அணையின்
நீர்மட்டத்தை தற்போதுள்ள, 136 அடியிலிருந்து 142 அடி வரை
உயர்த்தலாம்.மேலும், அணையானது நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலும் உள்ளது.
கடந்த ஆண்டு, இடுக்கி பகுதியில், பலமுறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டும்,
அதனால், அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், அப்பகுதியில் உள்ள
இடுக்கி அணைக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அறிக்கையில் குறிப்பிட்டது.

சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு:தாங்கள் எதிர்பார்த்ததுபோல்,
அறிக்கை அமையாததால், அதிருப்தியில் உள்ள கேரள அரசு, ஒப்பந்தத்தை
எப்படியாவது ரத்து செய்து விட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக,
டில்லியில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனைகளை துவக்கிவிட்டது. இதற்காக
விரைவில், சுப்ரீம் கோர்ட்டை அணுகவும் முடிவு செய்துள்ளது.

"தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் தங்கவில்லை':சுப்ரீம் கோர்ட்
நியமித்த உயர்மட்டக்குழுவில், என்னை வற்புறுத்தி கேரள அரசு சார்பில்
நியமித்த பிறகு, தற்போது என்னை பற்றி விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படவும் இல்லை; தமிழக அரசின் விருந்தினர்
மாளிகையில் தங்கவும் இல்லை.நான் இந்த பொறுப்புக்கு வந்த பிறகு,
உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டங்களுக்காக, சுப்ரீம் கோர்ட் விருந்தினர்
மாளிகையில் 13 முறையும், நான்கு முறை கேரள விருந்தினர் மாளிகையிலும்,
ஒரேயொரு முறை கோவா மாநில விருந்தினர் மாளிகையிலும் தங்கினேன். ஆலோசனைக்
கூட்டங்களுக்கு செல்லும்போது, தங்குமிடம், உணவு போன்ற வசதிகளை
உயர்மட்டக்குழு அதிகாரிகள் தான் செய்து தருகின்றனர். இவ்வாறு, கேரள அரசு
சார்பில் உயர்மட்டக்குழுவில் இடம் பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், தான் எழுதிய
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில் பாஸ்போர்ட் அச்சடிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது நேபாளம்
» முல்லை பெரியாற்றில் புதிய அணை: கேரளா தீவிரம்
» கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றில் வழக்கு
» அல் ஜசீரா ஊடகவியலாளரை கைது செய்ய அரச ஊடகம் தீவிரம்
» கேரள மாணவி கற்பழிப்பு: தமிழக இன்ஸ்பெக்டர் தப்பி ஓட்டம்; கைது செய்ய போலீஸ் தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum