Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கம்ப ரசம் – அறிஞர் அண்ணா
3 posters
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
கம்ப ரசம் – அறிஞர் அண்ணா
“இராமன் வீர உரையைக் கம்பன் தீட்டுவது பார்! இயற்கையின் எழிலை அப்படியே எதுத்துக்காட்டும் திறத்தைக் கவனி! உவமைகள் தரும் உல்லாசத்தை உணர்!” என்று கூறி வந்தார்களே தவிர உண்மைக் கம்பரசம் இதுவென்று கூறினதில்லை.
என் தோழர், இராமாயணத்திலே இருப்பது கம்பரசம், அதைச் சாப்பிட வேண்டும் என்று எனக்கு உரைத்தார். நான் ஒரு டோஸ் உள்ளுக்குச் செலுத்தினேன். ஆமாம் கம்பரசத்தைத்தான். நீங்களும் அந்த கம்ப ரசத்தைச் சுவைத்தால்! சரி, இதோ முதல் டோஸ், பருகுக!
“போக்கிரிப்பயலே! இப்படி விறைத்து விறைத்துப் பார்ப்பதா பெண்களை? மங்கையர் செல்வதை இமை கொட்டாது பார்க்கிறாயே உனக்கு அறிவு இல்லையா? அணங்குகளின் இடை காற்றினால் நெகிழ்ந்து விடும். நடையினால் நங்கையரின் மேலாடை இடம் பெயரும். நீ முறைத்துப் பார்த்தபடி இருக்கலாமா? காமப்பித்தனே!” என்று இன்று மிகச் சாதாரணத் தெளிவு பெற்றவர்களும், பெண்ணைக் கண்டால், இளித்துப்பார்க்கும் இயல்பினரை இடித்துரைப்பர்.
“அவள் போய்க் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்துக்கொண்டே உடன் சென்றேன். அவளோ அழகான ஆடையால் தன்னை முழுவதும் போர்த்துக் கொண்டிருந்தாள். பிறகு ஒரு பெருங்காற்றடித்தது ஆடை…” என்று எவனாவது ஒரு காமுகன், தன் நண்பனிடம் கூறினாலும், “போதும் நிறுத்தடா, யார் காதிலாவது விழப்போகிறது” என்று மற்றவன் கூறுவான். இது சாதாரண மக்கள் வாழுமிடத்து இயல்பு!
“அயோத்தி சாமான்யமான நகரமன்று. சாட்சாத் மகாவிஷ்ணுவே திரு அவதாரம் எடுத்த புண்ய க்ஷேத்திரம். இஷ்வாகு பரம்பரையினரின் இராஜரீகத்தின் பயனாக, அஷ்ட ஐஸ்வரியம் நிரம்பி, அறமும், அறிவும், ஞானமும், தவமுன் ததும்பும் இடம். ஊராரோ உத்தமோத்தமர்கள். வசிஷ்டரே அரண்மனைக் குரு. அவ்வளவு சிரேஷ்டமான நகர மக்களின் நினைப்பும், நடவடிக்கையும் அதிலும் அரண்மனையிலேயே உள்ளவர்கள், அரச குடும்பத்தினரா - கியவர்களின் நினைப்பும் எப்படி இருக்கும்?”
“காமக் குரோதிகள் அண்டமுடியாத சீலர்களாகவன்றோ இருப்பர்! மாதரிடம் எத்துனை மரியாதைக் காட்டுவர்! பெண்பித்துக் கொண்டவராகவா இருப்பர்? குணக்கொழுந்துகளாகவன்றோ இருப்பர்!” என்று நான் கேட்டால் “ஆமாம் சந்தேகமென்ன! இராமச்சந்திரமூர்த்தி திரு அவதாரமான நகரிலே வாழ்ந்தவர்களின் திருக்கலியாண குணத்தைக் கூறவும் வேண்டுமோ?” என்று இராமயண பக்தர்கள் கூறுவர். ஆனால் உண்மை என்ன?
அயோத்தி மக்களைப் போன்ற அயோக்கியர்கள், அநாகரிகப் புத்தியும் போக்கும் கொண்டவர்கள், காமாந்தகாரக் காட்டுமிராண்டிகள், வேறு எங்கும் இல்லை என்று நான் கூறுகிறேன்.
என்மீது சீறுமுன், கலாரசிகர்கள், நான் கூறுவதைப் பொறுமையுடன் கேட்க வேண்டுகிறேன். தம்முடன் வரும் அணங்குகள் ஆடை அணிந்திருப்பதால், அவர்தம் அல்குல் வெளியே தெரியவில்லையே என்று ஏங்கிக் கிடந்து, பின்னர் தெரிந்ததும் கண்டேன், கண்டேன், களிகொண்டேன் என்று கருதிரும் மக்களை என்னவென்று கூறுவீர்கள்? கடையர், காமப்பித்தர் என்று கடிந்துரைக்க மாட்டீர்களா? மங்கையரை விறைத்துப்பார்ப்பதே மனிதத் தன்மையாகாது, மடத்தனம் என்று கூறுவீர்! மங்கையரின் மறைவிடம் வெளியே தெரியக் காணோமே என்று மனச் சோர்வு கொண்டு, அது தெரிந்ததும் அகமகிழ்ந்தனராம் அரி அவதாரமான அயோத்தி வாழ் மக்கள் அதிலும் அரண்மனையினர்.
“சுத்தப்பொய், அயோத்தி மக்கள் அவ்விதமாக இருந்திருக்க முடியாது. பெண்ணைத் தெய்வமாகக் கருதும் பெருந்தகைமையினர்” என்று கூறிச் சீறிடுவர் சிலர். அவர்களை, “இராமன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு” கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், குகப்படலம் 56 ஆவது செய்யுளைப் பார்க்க அழைக்கின்றேன்!
(தொடரும்)

Re: கம்ப ரசம் – அறிஞர் அண்ணா
இதோ அச்செய்யுள்.
இயல்வுறு செயல்வினாவா
யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித்
துவலை கண் மகளிர் மென்றூ
சுயல்வுறு பரவை யல்கு
லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க்
கயா உயிர்ப் பளித்த தம்மா!
உள்ளத்து அயர்வுறு மதுகை மைந்தர்க்கு – மனத்தளர்ச்சி அடைந்திருக்கிற வீரர்களுக்கு
அயா உயிர்ப்பு – துன்ப நீக்கத்தை
அளித்தது – உண்டாக்கிற்று
வீரர்கள் மனச்சோர்வு பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்குத் துன்ப நீக்கத்தை உண்டாக்கிற்று ஒரு பொருள்! அது? கேளுங்கள் வெட்கக்கேட்டை!
அல்குல்-பெண்குறி! அயோத்திமா நகரத்து வீராதி வீரர்களின் விசாரத்தைப் போக்கிய பொருள் இதுவாம்! அம்மட்டோ, மேலும் பாருங்கள் கம்பரசத்தை!
சாதாரணமானதல்ல, இச் சத்புருஷர்கள் கண்டுகளி கண்ட பொருள். கவி கூறுகிறார், பரவை அல்குல் என்று! இதன் பொருள் பரந்திருத்தலைக் கொண்ட பெரிய அல்குல். எப்படி கம்பரசம்? இது மட்டுமா? அல்குல், மெல்தூசு மெல்லிய ஆடையில், உயல் உறுதாங்கி மறைகின்றதாக இருந்தது. அதுபோது, மதுகை மைந்தர் அயர்வுற்றிருந்தனர். ஆனால், அவர்களின் துன்பம் போய் களிப்பு வரும்படி என்ன நேரிட்டது? கேளுங்கள் கம்பனை! மெல்தூசு உயல் உறு பரவை அல்குல், ஒளிப்புறத்தளிப்ப – (அல்குல்) ஒளியானது வெளியே தோன்ற விசாரமடைந்திருந்த வீரர்கள், மெல்லிய ஆடைக்குள்ளே கிடந்த பெரிய மறைவிடத்தின் ஒளியானது வெளியே தெரியக்கண்டு, துயரம் நீங்கப் பெற்றனர் என்பது கவியின் கூற்று!
ஆனால், மறைந்து கிடந்தது வெளியே தெரிய மாயம் என்ன? கவி கூறுவது கேண்மின்!
இயல்வுறு செலவின் நாவாய் – பொருந்திய மிக வேகத்தை உடைய நாவாய்களின் (அதாவது பெரிய படகுகளின்),
இருகையும் – இரு பக்கத்தும்,
எயினர் தூண்ட – வேடர் உந்துதலால்,
துயல்வன – அசைவனவாகிய,
துடுப்பு – துடுப்புகளால்,
வீசும் – எறியப்படுவனவாகிய,
துவலைகள் – நீர்த்துளிகள்,
மகளிர் – மாதர்களுடைய
மெல்தூசு – மெல்லிய ஆடையில்
உயல் உறு – தங்கி மறைகின்ற,
பரவை அல்குல் ஒளிப்புறத்து அளிப்ப – பரந்த மறைவிடத்து ஒளியை வெளியே தோன்றச் செய்ய!
பதவுரையை மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு பொழிப்புரையைப் பார்க்க வாருங்கள்.
மிகவேகமாகச் செல்லும் பெரிய படகுகளின் இருபக்கத்திலும் வேடர் துடுப்பு கொண்டு நீரைத்தள்ள, நீர்த் திவலை மேலெழும்பி, ஓடத்திலேறி மாதரின் மெல்லிய ஆடையை நனைத்ததால், அவ்வாடைக்குள்ளே மறைந்து கிடந்த பெரிய அல்குலின் ஒளி வெளியே தெரியலாயிற்று. படகுகளிலே இருந்த வீரர்களின் மனச் சோர்வு அந்தக்காட்சியைக் கண்டதால் நீங்கியது.

Similar topics
» அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகம் - 1945 அறிஞர் அண்ணா - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேடையில் தோன்றும் காட்சி
» புதிய புறநானூறே அறிஞர் அண்ணா
» செப்.15: அறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று..
» அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!
» வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளை காகம்!
» புதிய புறநானூறே அறிஞர் அண்ணா
» செப்.15: அறிஞர் அண்ணா பிறந்தநாள் இன்று..
» அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!
» வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளை காகம்!
TamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum