Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எந்தந்த பொருட்கள் விலை கூடும்? குறைந்த விலைக்கு பலூன் வாங்கலாம்
2 posters
Page 1 of 1
எந்தந்த பொருட்கள் விலை கூடும்? குறைந்த விலைக்கு பலூன் வாங்கலாம்
புதுடில்லி
: பட்ஜெட்டில், எக்சைஸ் வரி உயர்வால், புதிய நிதியாண்டில், எலக்ட் ரானிக்
மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் அதிகரிக்க உள்ளன.
மத்திய
பட்ஜெட்டில், எக்சைஸ் வரி 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்,
தங்கள் தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க உள்ளதாக, கார் தயாரிப்பாளர்கள்
அறிவித்தனர். கார்களின் விலை 41 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கலாம் என,
மாருதி சுசூகி, ஹுண்டாய், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எலக்ட்ரானிக் பொருட் களான "டிவி', பிரிட்ஜ், "ஏசி', மற்றும் வாஷிங்
மெஷின்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்க உள்ளன. அதே போன்று போர்ட்லாண்ட்
சிமென்ட், சிமென்ட் கிளிங்கர்ஸ், பெரிய கார்கள், பல் பயன்பாட்டு வாகனங்கள்
மற்றும் பந்தய கார்கள், சிகரெட், நறுமணப் புகையிலை, மூக்குப்பொடி
ஆகியவற்றின் விலையும் அதிகரிக்க உள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் மீதான
எக்சைஸ் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப் பட்டுள்ளதால், பெட் ரோல்
மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.
மைக்ரோ
ஓவனுக்குத் தேவைப்படும் முக்கிய பாகத்திற்கான இறக்குமதி வரி 10
சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப் பட்டதால், அதன் விலை
குறையும். மொபைல் போன், வாட்ச், ரெடிமேட் ஆடைகள், விளையாட்டு பலூன் கள்,
வாட்டர் பில்டர், வால் மிளகு, சி.எப்.எல்., பல்புகள், செட் டாப்
பாக்ஸ்கள், "சிடி'க்கள், பொம்மைகள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற் றிற்கு
சில வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டதால், அவற் றின் விலைகள் குறையும்.
விளையாட்டு பலூன் களுக்கு, மத்திய எக்சைஸ் வரியில் இருந்து முழுவதுமாக
விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் வருமானமா? 10 சதவீதம் மட்டுமே வரி:
வருமான வரி செலுத்துவதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. அதே
நேரத்தில், 1.60 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு
இனி 10 சதவீதம் மட்டுமே வரி செலுத்தினால் போதுமானது.
தற்போது
1.60 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. 1.60 லட்சம்
முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதமும், 3 லட்சம்
முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 5
லட்சத்திற்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.
நேற்று சமர்ப்பிக்கப் பட்ட மத்திய பட்ஜெட்டில், வருமான வரி
செலுத்துவதற்கான உச்ச வரம்பு 1.60 லட்சம் ரூபாய் என்பது இனியும் தொடரும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1.60 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய்
வரை வருமானம் உள்ளவர்கள் இனி 10 சதவீத அளவுக்கு வரி செலுத்தினால்
போதுமானது. 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20
சதவீதமும், 8 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதமும் வருமான
வரி செலுத்த வேண்டும். பெண்களுக்கு 1.90 லட்சம் ரூபாய் வரையிலான
வருமானத்திற்கு வரி கிடையாது. 1.90 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான
வருமானத்திற்கு 10 சதவீதமும், 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான
வருமானத்திற்கு 20 சதவீதமும், 8 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு
30 சதவீதமும் வரி செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள்: மூத்த
குடிமக்களுக்கு 2.40 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.
2.40 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதமும்,
5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதமும், 8
லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதமும் வரி செலுத்த
வேண்டும். தற்போது 1.60 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு மேல், ஒரு
லட்சம் ரூபாய் வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி கிடையாது.
இனி
உள்கட்டமைப்பு துறை சார்ந்த கடன் பத்திரங்களை 20 ஆயிரம் ரூபாய்க்கு
வாங்கினால், அதற்கும் வரி விலக்கு பெறலாம். அதாவது மொத்தம் 1.20 லட்சம்
ரூபாய் வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு இனி வரிச்சலுகை உண்டு. மேலும்,
மத்திய அரசின் மருத்துவ முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்தாலும் வருமான
வரி விலக்கு உள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள்
எளிமையாக்கப்பட்டுள்ளன. கம்பெனி வரிகள் மீது விதிக்கப்படும் 10 சதவீத
கூடுதல் வரி, 7.5 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில்,
குறைந்தபட்ச பதிலீட்டு வரியானது 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக
உயர்த்தப்பட்டுள்ளது. வரி வீதங்கள் மாற்றப்பட்டதன் மூலம், தனி நபர் வருமான
வரி செலுத்துவோரில் 60 சதவீதம் பேர் பயனடைவர். அவர்களுக்கு 4 முதல் 6
சதவீத வரித் தொகை மிச்சமாகும்.
வீட்டுக்கடன் மானியம் தொடரும்; கைத்தறி துறைக்கும் சலுகை:
"வீட்டுக் கடன்களுக்கான 1 சதவீதம் வட்டி மானியம் நீட்டிக்கப்படுகிறது.
இதற்காக 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது' என, நேற்று தாக்கல் செய்த
மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. பார்லிமென்டில், 2010-11ம்
நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி கூறியதாவது: வீட்டுக் கடன்களுக்கான 1 சதவீதம் வட்டி மானியம்,
வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. கடந்தாண்டு
அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் வரையிலான
மதிப்புடைய வீடுகளுக்காக பெறும் 10 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு, 1
சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். அதே போன்று கைவினைப் பொருட்கள்,
கார்பெட்கள், கைத்தறி பொருட்கள், சிறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனம்
சார்ந்த ஏற்றுமதிக்கான 2 சதவீதம் வட்டி மானியம், மேலும் ஓராண்டிற்கு
நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டம் வரும் மார்ச் மாதம் 31ம் தேதியுடன்
முடிவடைகிறது. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் முதல் தொடர்ந்து சரிவை
சந்தித்து வந்த ஏற்றுமதி துறை, கடந்தாண்டு நவம்பர் முதல் வளர்ச்சியடையத்
துவங்கியது. ஜனவரி மாதம் நாட்டின் ஏற்றுமதி துறை, 11.5 சதவீதம்
வளர்ச்சியடைந்தது. ஊக்கச்சலுகைகள் வாபஸ் பெறுவதன் ஒரு பகுதியாக, எக்சைஸ்
வரியை 2 சதவீதம் அதிகரித்து 10 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,
சர்வீஸ் வரியில் எவ்வித மாற்றமும் செய்யாமல், 10 சதவீதமாக உள்ளது. இவ்வாறு
பிரணாப் கூறினார்.
அடையாள அட்டை ஆவணத்திற்கு ரூ.1,900 கோடி:
நந்தன் நிலேகனி தலைமையிலான தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை ஆவணத்திற்கு
1,900 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில்
120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டது. நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு
தனித்தன்மை வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்காக, வரும் நிதியாண்டில் 1,900
கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம்
படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில், அதாவது
வரும் ஆகஸ்ட் மற்றும் 2011 பிப்ரவரி மாதத்திற்குள் முதல் கட்ட அடையாள
அட்டை வழங்கும் பணி முடியும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், நாட்டில் உள்ள
அனைவருக்கும் அடை யாள அட்டை வழங்கப்படும். மேலும், நம்பகமான, அதே
நேரத்தில் எளிதில் முறைகேடு செய்ய முடியாத தகவல் தொழில்நுட்ப திட்டங்களை
உருவாக்குவதற்காக, நந்தன் நிலேகனி தலைமையில், தொழில் நுட்ப ஆலோசனைக் குழு
ஒன்று அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப்
முகர்ஜி அறிவித்தார்.
ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கு சலுகை:
"அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்றை
அமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு ஆரம்ப கட்டமாக 1,000 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்படுகிறது' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி கூறியதாவது: சமூக பாதுகாப்பு நிதியம், நெசவாளர்கள், ரிக்ஷா
ஓட்டுபவர்கள், பீடி தொழிலாளர்கள் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான
நலத்திட்டங் களுக்கு உதவி செய்யும், "அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக
பாதுகாப்பு சட்டம் -2008'ன் தொடர்ச்சியாகவும், அமைப்பு சாரா
தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் என்பதை
உணர்ந்ததாலும், தேசிய சமூக பாதுகாப்பு நிதியம் அமைக்க
தீர்மானிக்கப்பட்டது. முந்தைய நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி
திட்டத்தின் கீழ் 15 நாட்களுக்கு மேல் பணியாற்றிய பயனாளிகளுக்கு,
"ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா' திட்டத்தின் பயன்களும் அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பணியாளர்களின்
குடும்பங்களுக்கு, சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்
இதுவரை ஒரு கோடி ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், கணக்கு
தணிக்கை செய்வதற்கான விற்றுமுதல் உச்ச வரம்பு, தொழில் செய்பவர்களுக்கு,
தற்போதைய 40 லட்சம் ரூபாயில் இருந்து 60 லட்சம் ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயில் இருந்து, 15
லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
சிகரெட்டை விடுங்கள்; பொம்மையை நேசியுங்கள்:
"புகை பிடிப்பதை சில ஆண்டுகளுக்கு முன் கைவிட்டேன். இந்த விஷயத்தில்
மற்றவர்களும் என்னை பின்பற்ற வேண்டும்' என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
கூறினார். பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
பேசியதாவது: சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான கலால் வரியில்
மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இதன் காரணமாக, சிகரெட்டின் விலை உயரலாம். சில
ஆண்டுகளுக்கு முன், புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டேன். புகை பிடிப்பது
உடல் நலத்திற்கு தீங்கானது. இந்த விஷயத்தில், மற்றவர்களும் என்னை பின்பற்ற
வேண்டும். அதே நேரத்தில், பொம்மை பலூன்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், அவற்றின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான
குழந்தைகளின் தாயார்கள் இதனால் மகிழ்ச்சி அடைவர். இவ்வாறு பிரணாப் முகர்ஜி
பேசினார்.
கட்டமைப்புக்கு முன்னுரிமை:
மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக கட்டமைப்பு துறைக்குத் தான் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் சிலவற்றுக்கான நிதி
ஒதுக்கீடு விவரம்:
* கட்டமைப்புத் துறை: 1 லட்சத்து 73 ஆயிரத்து 552 கோடி ரூபாய்.
* பாதுகாப்புத் துறை: 1 லட்சத்து 47 ஆயிரத்து 344 கோடி ரூபாய்.
* நெடுஞ்சாலைத் துறை: 19 லட்சத்து 843 கோடி ரூபாய்.
* கிராமப்புற மேம்பாடு: 66 ஆயிரத்து 100 கோடி ரூபாய் (இதில் நாள்தோறும் வேலை திட்டத்திற்கு மட்டும் 40 ஆயிரத்து 100 கோடி ரூபாய்)
* சமூக நீதித்துறை: 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.
* மின்சாரம்: 5 ஆயிரத்து 310 கோடி ரூபாய்
* சிறுபான்மையினர் நலம்: 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய்.
* அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக சமூக பாதுகாப்பு நிதிக்கு முதல் தவணையாக 1,000 கோடி ரூபாய்.
* அணுசக்தி துறை: 4 ஆயிரத்து 739 கோடி ரூபாய்.
ராணுவத்திற்கு ரூ.1.47 லட்சம் கோடி:
பட்ஜெட்டில், ராணுவத்துக்கு 1.47 லட்சம் கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 4 சதவீதம் மட்டுமே அதிகம்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், ராணுவத்துக்கு ஒரு லட்சத்து
47 ஆயிரத்து 344 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள் ளது. இதில், 60 ஆயிரம் கோடி
ரூபாய் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது
ஒதுக்கப்பட்டுள்ள நிதி, கடந்தாண்டு ஒதுக்கப்பட்டதை விட 4 சதவீதம் மட்டுமே
அதிகம். நான்கு சதவீதம் அதிகம் என்பது, தொகையில் பார்க்கும் போது 5,641
ரூபாய் மட்டுமே. இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், "ராணுவத்தின்
முக்கியத்துவம் கருதி, மேலும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயாராக
உள்ளது. எதிர்காலத்தில் ராணுவத்தின் எந்தெந்த பிரிவுகளுக்கு நிதி
தேவைப்படுகிறதோ, அந்தந்த பிரிவுகளுக்கு நிதி ஒதுக்கப்படும்' என்றார்.
தற்போது சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை
நிலவினாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் அளவுக்கே
ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூருக்கு ரூ.200 கோடி:
திருப்பூரில் ஓடும் நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை கழிவுநீர் கலக்கும்
பிரச்னை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண தமிழக அரசு
தீட்டியுள்ள திட்டத் திற்கு, ரூ.200 கோடி மானியமாக அளிக்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இந்த தொகை ஒரே தவணையில் வழங் கப்படும். இந்த
திட்டத்தின் மூலம், "ஜீரோ லிக்குட் டிஸ்சார்ஜ் சிஸ்டம்' என்ற தொழில் நுட்
பத்தை நிறுவி பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இதேபோல கோவா கடற்கரையை
சுத்தம் செய்ய ரூ.200 கோடியும், கங்கை நதியை சுத்தம் செய்ய ரூ.500
கோடியும், மேற்குவங்க மாநில நதிகள் சுத்தம் செய்வதற்கும் பட்ஜெட்டில் நிதி
ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
பட்ஜெட்டில் "கவுடில்யர்' வழி:
பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி,
இந்திய பொருளாதாரத்தின் முன்னோடி அறிஞரான சாணக்கியர் என்ற கவுடில்யரை
மேற்கோள்காட்டி பேசினார். இந்திய பொருளாதாரத்தின் முன்னோடியாக
கருதப்படுபவர் கவுடில்யர். பொருளாதார விதிமுறைகள் அடங்கிய அர்த்த
சாஸ்திரத்தை எழுதியவர். சந்திரகுப்த மவுரியரின் ஆட்சிக் காலத்தில் பிரதம
அமைச்சராக இருந்தவர். கடந்த 1999 - 2000ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி காலத்தில்
அப்போது நிதி அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, பட்ஜெட் தாக்கல்
செய்தபோது, கவுடில்யரின் வரிகளை மேற்கோள்காட்டி பேசினார். அதேபோல்
கடந்தாண்டு ஜூலையில் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்தபோதும்,
கவுடில்யரை மேற்கோள் காட்டினார். அதே போல், நேற்று பொது பட்ஜெட்டை தாக்கல்
செய்து பேசிய பிரணாப் முகர்ஜி, வழக்கம்போல் கவுடில்யரின் வரிகளை
பயன்படுத்த தவறவில்லை. "வரிவிதிப்பு தொடர்பான நடவடிக்கைகைளை
முறைப்படுத்தும் போதெல்லாம், கவுடில்யர் பின்பற்றிய விஷயங்களைத் தான்,
பயன்படுத்துகிறேன்'என்றார். மேலும்,"வரி வசூல் உயர்அதிகாரி பொறுப்பில்
செயல்படுபவர், உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய துறைகளில் பாதிப்பு
ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் எந்த
விஷயமும் மக்களை வளப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்'என்ற,
கவுடில்யரின் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். இந்திய பட்ஜெட் உரைகளில்,
இதுவரை நான்கு முறை கவுடில்யரின் வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது
குறிப்பிடத் தக்கது.
சேவை வரி:
ரயில்வேக்கு இழப்பு ரூ.6,000 கோடி: "ரயில்வே சரக்கு போக்குவரத்துக்கான
சேவை வரி விலக்கு, பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை நிதியமைச்சர்
மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, ரயில்வே துறை சார்பில்
வலியுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிபுணர் குழுவின் தலைவர் அமித் மிஸ்ரா
கூறியதாவது: பொது பட்ஜெட்டில், ரயில்வே சரக்கு போக்குவரத்துக்கான சேவை வரி
விலக்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2010-11ம்
நிதியாண்டில் ரயில்வே துறை சார்பில் 6,000 கோடி ரூபாய் சேவை வரியாக
செலுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது, ரயில்வே துறையின்
செலவினத்தை அதிகரிக்கும். எனவே, வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதை
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அமித்
மிஸ்ரா கூறினார். இத்தடவை பட்ஜெட்டில் சேவை வரியாக எட்டு புதிய சேவைகள்
சேர்க்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு சேவை வரியாக அரசுக்கு 58 ஆயிரம்
கோடி ரூபாய் கிடைத்தது. அது, நடப்பாண்டில் 68 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.
இந்த சேவை வரியில் அதிர்ஷ்டப் போட்டிகள், லாட்டரி சீட்டு ஆகியவையும்
சேர்க்கப்பட்டிருக்கின்றன.
விவசாயிகள் கடனுக்கு வட்டி சலுகை:
"விவசாய கடன்களை குறிப்பிட்ட காலத்தில் திருப்பிச் செலுத்திய
விவசாயிகளுக்கு, சந்தை வட்டி வீதத்தை விட 2 சதவீதம் குறைவாக, 5 சதவீதம்
வட்டியில் கடன் வழங்கப்படும்' என, நேற்று தாக்கல் செய்த மத்திய
பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்டில் 2010-11ம்
நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி கூறியதாவது: கடந்த 2009-10ம் நிதியாண்டில் 3.25 லட்சம் கோடி
ரூபாயாக இருந்த கடன் இலக்கு, இந்த நிதியாண்டிற்கு 3.75 லட்சம் கோடி
ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறுகிய கால பயிர் கடன்களை குறிப்பிட்ட
காலத்தில் முறையாக திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு, கடந்த
நிதியாண்டில் 1 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்பட்டது. 2010-11ம்
நிதியாண்டிற்கு, இந்த வட்டி வீதம் மானியம் 2 சதவீதமாக
அதிகரிக்கப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட காலத்தில், கடனை திருப்பிச்
செலுத்திய விவசாயிகளுக்கு 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கப்படும். உணவுப்
பாதுகாப்பு மசோதா வரைவு, விரைவில் கொண்டு வரப்படும். சமூக நீதி மற்றும்
மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு 2010-11ம் நிதியாண்டிற்கு, 4,500 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டை விட 80 சதவீதம் அதிகம்.
இதனால், தலித்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மற்றும் உடல் ஊனமுற்றோர் ஆகியோர் நலனில் தீவிர கவனம் செலுத்தலாம். சமூக
நீதித் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது, பிற்படுத்தப்
பட்ட வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை அதிகரிக்க உதவும்.
தலித்கள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான
பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை விரிவுபடுத்த, இது வழி வகுக்கும். இவ்வாறு
பிரணாப் கூறினார்.
உரங்கள் விலை உயராது:
"உரங்கள் தொடர்பான அதிகபட்ச சில்லரை விலை முறையை அரசு நீக் கினாலும்,
அடுத்த நிதியாண்டில் உரங்களுக்காக விவசாயிகள் அதிக அள வில் செலவிட
வேண்டியது நேரிடாது' என, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் அவர் கூறியுள்ளதாவது: உரத்துறையில் சத்து அடிப்படையில்
மானியம் வழங்கும் கொள்கை, இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு
வருகிறது. இருந்தாலும், உரங்களின் அதிகபட்ச சில்லரை விலை, தற்போது நிலவும்
விலை அளவுக்கே தொடரும். அதனால், விவசாயிகள் உரங்களுக்காக அதிகம் செலவிட
வேண்டியது நேரிடாது. புதிய மானியக் கொள் கையால், விவசாய உற் பத்தி
அதிகரிக்கும்; விவசாயிகளுக்கு கூடுதல் பலன் கிடைக்கும். அதே நேரத் தில்,
வரும் காலகட்டங்களில் உரங்களுக்கான மானியத் தேவை குறைந்து, மானிய செலவும்
குறையும். மேலும், உரங்கள் துறையில் ஒரு சமச்சீரான நிலை உருவாவதோடு, புதிய
உரங்களும் அறிமுகமாகும். உரத் தொழிற்சாலைகளும் தங்களின் சேவைகளை
விரிவுபடுத்தும்.
மாத வருமானம் ரூ.40 ஆயிரமா: சலுகை இல்லை:
மத்திய பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட தனிநபர் வரிச்சலுகையின் படி எல்லாரும்
மகிழ்ச்சியடைய முடியாது. மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் பெறும் ஒருவருக்கு
இதனால் லாபம் கிடையாது. மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால்
வரிச்சலுகை ரூ.51 ஆயிரத்து 500 கிடைக்கும். இவ்வாறு சென்னையைச் சேர்ந்த
ஆடிட்டர் ஜி.சேகர் தெரிவித்தார். அவர் கூறுகையில், ஆண்டு வருமானம் எட்டு
லட்சத்திற்கு மேல் இருந்தால், வரிச்சலுகை ரூ.51 ஆயிரத்து 500 கிடைக்கும்.
பொதுவாக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வரித்துறை ஆகியவற்றில் ஆறாவது
சம்பளக் கமிஷன்படி மாதச் சம்பளம் பெறும் உயர் அதிகாரிகள் கூட இந்த அளவு
வருமானம் பெறுவதில்லை. அப்படிப்பார்க்கும் போது, மாதம் ரூ.40 ஆயிரம்
சம்பளம் பெறுபவர் எப்படி இந்த அறிவிப்பில் தனக்கு சாதகம் என்று கருத
முடியும்?' என்று கேட்டார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: எந்தந்த பொருட்கள் விலை கூடும்? குறைந்த விலைக்கு பலூன் வாங்கலாம்
பட்ஜெட் பிரனாப் முகர்ஜி!!!!
Rikaz- வலை நடத்துனர்
- Posts : 662
Join date : 28/01/2010
Similar topics
» டீசல் விலை உயர்ந்ததால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு
» அரசு தொடங்கும் குறைந்த விலை மருந்தகங்கள் : சென்னையில் முதல் கிளை
» "டபுள் பெட்ரூம்' வீடு குறைந்த விலையில் பொருட்கள்... : போலீசாருக்கு சலுகைகள் அறிவிப்பு
» விலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்
» இனி வருடத்துக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே ரூ.386.50 விலைக்கு..7வது சிலிண்டர் முதல் விலை ரூ.733.50

Permissions in this forum:
You cannot reply to topics in this forum