Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தனி ஈழம்தான் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு: சீமான்
Page 1 of 1

சென்னை, ஏப்,23:
இலங்கைக்கு சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த
மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.கே.ரங்கராசன், ஒன்றுபட்ட
இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வையே அங்குள்ள தமிழ் மக்கள்
விரும்புகிறார்கள் என்று கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பான, மோசடிப்
பேச்சு என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில்
அடுத்தடுத்து ஆட்சிப் பொறுப்பில் இருந்த சிங்கள – பெளத்த இனவாத அரசுகளின்
கொடூரமான ஒடுக்குமுறையால் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் அடிமை
நிலையில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்கள், தாங்கள் சுதந்திரமாக, சம
உரிமையுடன் வாழ ஒரே வழி தமிழீழ தனி நாடு காண்பதே என்பதை 38 ஆண்டுகளுக்கு
முன்னாலேயே தீர்மானித்துவிட்டார்கள். 1974ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில்
நடந்த மாநாட்டில் தனித் தமிழீழ குடியரசை நிறுவுவதுதான் தமிழர்கள் முழு
உரிமையுடன் வாழ ஒரே வழி எனும் தீர்மானத்தை ஈழத் தந்தை செல்வா
நிறைவேற்றினார். அதே கோரிக்கையை முன்வைத்து வல்வெட்டித் துறை நாடாளுமன்றத்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதன் பிறகு 1977ஆம் ஆண்டு
நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தனித் தமிழீழ விடுதலையை தேர்தல்
முழுக்கமாக வைத்துப் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வடக்கிலும்
கிழக்கிலும் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.சாத்வீக வழியில்
போராடிய தந்தை செல்வாவின் போராட்டங்களை ஆயுத வன்முறையின் மூலம் சிங்கள அரசு
தொடர்ந்து ஒடுக்கியதன் எதிர்வினையாகவே தமிழர்களின் ஆயுதம் தாங்கிய
விடுதலைப் போராட்டம் தொடங்கியது. தமிழ் மக்களின் முழுமையாக ஆதரவுடன் நடந்த
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத்தான் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய
வல்லாதிக்கங்களின் துணையுடன் தமிழர்களை அழிக்கும் இன அழிப்புப் போராக
சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்தது. இரண்டரையாண்டுக் காலம் நடந்த
அப்போரில் ஒன்றே முக்கால் லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அப்படிப்பட்ட ஒரு கொடூரமான போரில் தங்கள் சொந்தங்களை இழந்தும்,
வாழ்விடங்களை இழந்து வாழ வழியின்றியும் தவித்துக்கொண்டிருக்கும் தமிழ்
மக்களின் துயர நிலையை கண்டறியச் சென்ற நாடாளுமன்றக் குழுவினர், அவர்களின்
துயரத்தை போக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காததைப் பற்றிப்
பேசாமல், தமிழர்கள் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று கூறுவது
வடிகட்டிய பொய்யாகும்.மட்டக்களப்பில் மட்டும் 45,000 விதவைகளைக்
கண்டோம், அவர்களில் 13,000 பேர் 23 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்று கூறும்
டி.கே. ரங்கராசன், தங்கள் கணவர்களை கொன்றொழித்த சிங்கள இனவாத அரசுடன்
இணைந்து வாழவே தாங்கள் விரும்புவதாக இவரிடம் தெரிவித்தார்களா? தங்களுடைய
வாழ்விடங்களில் ராணுவ முகாம்களை அமைத்து, வாழ வழியற்றவர்களாக்கிய சிங்கள
அரசு, தங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை அளிக்கும் என்று இவரிடம்
கூறினார்களா? தங்களுடைய காணிகளை அபகரித்து தமிழர்கள் பகுதிகளில்
குடியேற்றியுள்ள சிங்களர்களுக்கு அளித்த அரசு, தங்களுக்கு அதிகாரப் பகிர்வு
தரும் என்று தமிழர்கள் நம்புகிறார்களா? இலங்கையில் போர் நடந்த
பகுதிகளில் சகஜ நிலை திருப்பி வருவதாக கூறுகிறார் ரங்கராசன். அப்படி ஒரு
கருத்தை நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட
கூறவில்லையே? இலங்கைத் தமிழர்களின் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை ஒருபோதும்
ஆதரிக்க மாட்டோம் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் மார்க்சிஸ்ட் கட்சியின்
உறுப்பினர், தன் கருத்தை ஈழத் தமிழர்களின் கருத்தாக அங்கு போய்விட்டு வந்து
கூறுவது கடைதெடுத்த அரசியல் மோசடியாகும். தமிழர்கள் அரசியல் தீர்வைத்தான்
விரும்புகிறார்கள், விடுதலையை அல்ல என்று கூறும் மார்க்சிஸ்ட் கட்சி, ஈழத்
தமிழர்களிடம் விடுதலைத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற
கோரிக்கையை ஆதரிக்கத் தயாரா என்று நாம் தமிழர் கட்சி கேட்கிறது. தமிழர்களுக்கு
எதிராக நடந்த முடிந்த போருக்குப் பின்னர் வடக்கில் மட்டும் 97,000 தமிழ்
பெண்கள் விதைவைகள் ஆகியுள்ளனர் என்றால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான
குடும்பத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றுதானே பொருள்?
அப்படியானால் அது திட்டமிட்ட இன அழித்தல் அல்லாமல் வேறென்ன? இந்தக்
கொடுமைக்கு காரணமானவர்களை விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்றல்லவா
ரங்கராசன் கூறியிருக்க வேண்டும்? இலங்கை அரசு செய்த தமிழினப் படுகொலையை
மறைக்க மார்க்சிஸ்ட் கட்சி முயற்சிப்பதேன் என்று கேட்கிறோம். தமிழீழ
விடுதலைக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கும் மார்ச்சிஸ்ட்கள், இப்போது
இலங்கைக்கு சென்று திரும்பியும் அதையே பேசுகிறார்கள்.நாடாளுமன்றக்
குழுவிற்கு தலைமை தாங்கி்ச் சென்ற சுஷ்மா சுவராஜ், மற்ற உறுப்பினர்கள்
அனைவரையும் தவிர்த்துவிட்டு, தனியாகச் சென்று இலங்கை அதிபர் ராஜபக்சவை
சந்தித்துப் பேசியிருக்கிறார். இப்படியொரு தனித்த சந்திப்பு எதற்காக என்று
தெளிவுபடுத்தப்படவில்லை. அது குறித்து மற்ற உறுப்பினர்கள் ஒருவரும்
விளக்கவில்லை. இந்தக் குழுவில் இடம்பெற்றுச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்
சுதர்சன நாச்சியப்பன், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை
எம்.ஜி.ஆர். என்று கூறி புகழந்துள்ளார். சென்னை, சூளையில்
தங்கியிருந்தபோது, நடுரோட்டில் துப்பாக்சியால் சுட்டு அப்பாவித் தமிழர்
ஒருவரைக் கொன்ற டக்ளஸ் எனும் கிரிமனலுடன், தமிழீழ விடுதலைக்கு துணை நின்ற
எம்.ஜி.ஆரை ஒப்பிட்டுப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இலங்கைக்கு
சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவில் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் எதுவும்
இடம்பெறாததும், இடம்பெற்றவர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இலங்கை
பிரச்னை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்பதும் இக்குழுவின் பயணம் ஒரு
திட்டமிட்ட நாடகமே என்பதை பறைசாற்றுகிறது. இலங்கைப் போரில்
அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று
உலகமே பேசுகிறது, விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது. ஆனால் இங்குள்ள
மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் அது குறித்துப் பேசாமல் மவுனம் சாதிக்கிறது.
இதிலிருந்து தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச அரசுக்கு மத்தியில் ஆளும்
காங்கிரஸ் கட்சியைப் போல், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும், மார்க்சிஸ்ட்
கட்சியும் ஆதரவு அளிக்கின்றன என்பது உறுதியாகிறது. இதனைத் தமிழர்கள்
புரிந்துகொண்டு இனிவரும் தேர்தல்களில் இந்த மூன்று கட்சிகளுக்கும் பாடம்
புகட்ட வேண்டும்.இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தனி ஈழம்தான் சரியான தீர்வு: சீமான் பேச்சு
» இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு: பிரதமர் பதில் கடிதம்
» இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா
» கனேடிய தமிழர்களுக்கு வலைவீசும் இலங்கைத் தூதரகம்
» இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பே கிடையாது! - வைகோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum