Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தனி ஈழம் கிடைக்க ஐநா வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கருணாநிதி
Page 1 of 1
தனி ஈழம் கிடைக்க ஐநா வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கருணாநிதி
சென்னை,
ஏப்.17: தனி ஈழம் கிடைக்க ஐக்கிய நாடுகள் சபை தமிழர்கள் மத்தியில்
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை
விடுத்துள்ளார்.இதுதொடர்பாக கேள்வி-பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை: கேள்வி : இதுவரை உங்களுடைய நிறைவேறாத ஆசை என்ன என்ற கேள்விக்கு 'தனி ஈழம்' என்று பதிலளித்திருந்தீர்கள்.அந்தத் 'தனி ஈழம்' தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளதே?கருணாநிதி
: 'தனி ஈழம்' வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த
வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஐக்கிய நாடுகள்
மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு
ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.அதன்
அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த
வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் 'தனி ஈழம்' கிடைப்பதற்கு ஐக்கிய
நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நமது இந்திய அரசு
தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும்.கேள்வி: தில்லியில்
16-4-2012 அன்று நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த முதல்வர்கள்
மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா - அவரது தலைமையின் கீழ்
தமிழ்நாடு காவல் துறை, திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதில் தலைசிறந்த
நிலையில் உள்ளது என்றும், அவரது ஆட்சிக் காலமான கடந்த 11 மாதங்களில் பொது
அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில்
நடைபெறவில்லை என்பதை பெருமையோடு கம்பீரமாகத் தெரிவித்துக் கொள்வதாகவும்
பேசியிருக்கிறாரே?கருணாநிதி: பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகின்ற
எத்தகைய நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்று ஜெயலலிதா
குறிப்பிட்ட போதிலும், தமிழகத்தில் இந்த 11 மாதக் காலத்தில் 386 கொலைகள்,
178 செயின் பறிப்புகள், 34 வழிப்பறிச் சம்பவங்கள், பத்துக்கு மேற்பட்ட
லாக்-அப் மரணங்கள் நடைபெற்றுள்ளன. பரமக்குடியில் தலித் மக்கள் மீது
துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்று, ஆறு பேர் உயிரிழந்துள்ளார்கள். அரசில்
பணியாற்றி வந்த 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை எந்தக் காரணமும் இன்றி
நீதி மன்றங்கள் கூறியும் கேட்காமல் வேலை கொடுக்க மறுத்ததால் இதுவரை இருபது
பேர் தங்கள் இன்னுயிரை பலி கொடுத்திருக்கிறார்கள்.அதற்காக அறப்போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் நலப் பணியாளர்கள் இந்த அரசினால் கைது செய்யப்படுகிறார்கள்.கூடங்குளம்
அணு மின் நிலையப் பிரச்சினையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்து, ஆலையை
ஆறு மாத காலம் மூடி வைக்க ஜெயலலிதா காரணமாக இருந்ததால், பணியின்றி
சும்மாயிருந்த பணியாளர்களுக்கு 900 கோடி ரூபாய் ஊதியமாக இந்த ஆறு
மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது.சென்னையில் ஒரே மாதத்தில் 16 கொலைகள்
என்று பெரிதாகத் தலைப்பிட்டு ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டு, யார் யார்
கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தையும் எழுதியுள்ளது.முதல்வர்
ஜெயலலிதாவின் அகராதிப்படி இவைகள் எல்லாம் பொது அமைதிக்கு பங்கம்
விளைவிக்காத செயல்கள் போலும். வேடிக்கையான வேதனை என்ன வென்றால், ஜெயலலிதா
தில்லி மாநாட்டில் முதல்வர்களுக்கு நேராக தமிழ்நாடு தன்னுடைய ஆட்சியில்
சட்டம் ஒழுங்கு அமைதியாக இருக்கிறது என்று சொன்ன அதே நாள் நாளேடுகளில் - சென்னை நெற்குன்றத்தில் அடகுக் கடை உரிமையாளர் குணாராமைக் கொன்று நகை கொள்ளை.போச்சம்பள்ளி அருகில் இளம்பெண் படுகொலை.கோவையில் தம்பதியைக் கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை.தேன்கனிக்கோட்டையில் பெண் தர மறுத்தவர் கொலை.திருவல்லிக்கேணி லாட்ஜில் ஓட்டல் ஊழியர் தங்கபாண்டியன் கொலை.சென்னை
வாலிபரைத் தாக்கி இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிப்பு என்றெல்லாம் வந்த
சம்பவங்களை அவர் டெல்லியில் இருந்த காரணத்தால் படிக்க இயலவில்லை போலும்.கேள்வி
: தமிழ்நாட்டுக்கான மண்ணெண்ணெய் அளவினை மத்திய அரசு குறைக்க தி.மு.க.
கூட்டுச் சதி செய்வதாக தமிழக அமைச்சர் ஒருவர் பேரவையில்
சொல்லியிருக்கிறாரே?கருணாநிதி: ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்
கோவில் ஆண்டிதானே? மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ பெற வக்கற்றவர்கள்
இப்படித்தான் எதற்கெடுத்தாலும் தி.மு.க. வைக் குறை சொல்வார்கள். தி.மு.
கழகம் ஆட்சியிலே இருந்த போது தமிழகத்தின் தேவைகளுக்காக மத்திய அரசிடம் பல
முறை கடிதம் மூலமாகவும், நேரிலும் சென்று கேட்டு, கோரிக்கை வைத்து அதிக
மண்ணெண்ணெயைப் பெற்று மக்களுக்கு வழங்கினோம். அவ்வாறு செய்ய முடியாதவர்கள்
தி.மு.க. கூட்டுச் சதி என்று கூறி, பொது மக்களின் கோபத்திலிருந்து
தப்பிக்கப் பார்க்கிறார்கள்.கேள்வி : கடந்த பத்து மாதங்களில்
நிலப்பட்டா ஒரு லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும்,
ஆனால் அதையும் தாண்டி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 149 பேருக்கு பட்டாக்கள்
வழங்கப்பட்டுள்ளன என்றும் வருவாய்த் துறை அமைச்சர் பேரவையில்
சொல்லியிருக்கிறாரே? கருணாநிதி : தி.மு. கழக ஆட்சிக் காலத்தில்
2006ஆம் ஆண்டு மே திங்கள் முதல் 15-2-2011 வரை மொத்தம் 8 இலட்சத்து 29
ஆயிரத்து 236 இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் ஏழை யெளிய மக்களுக்கு
வழங்கப்பட்டன. இப்படி இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றவர்களில் ஆதி
திராவிடர்கள் 2 லட்சத்து 16 ஆயிரத்து 649 பேர் - பழங்குடியினர் 16 ஆயிரத்து
323 பேர் - பிற்படுத்தப்பட்டோர் 3 லட்சத்து 9 ஆயிரத்து 927 பேர் - மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 463 பேர். ஏனையோர் 34
ஆயிரத்து 568 பேர்.இது தவிர, 2006ஆம் ஆண்டு தி.மு. கழகத் தேர்தல்
அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் -
விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம், 17-9-2006 அன்று
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்கீழ்
15-2-2011 வரை 41 ஆயிரத்து 970 ஆதி திராவிடர்களுக்கு 45 ஆயிரத்து 65 ஏக்கர்
நிலமும் - 3 ஆயிரத்து 277 பழங்குடியினர்க்கு 3,872 ஏக்கர் நிலமும் - 66
ஆயிரத்து 790 பிற்படுத்தப்பட்டோருக்கு 82,223 ஏக்கர் நிலமும் - 58 ஆயிரத்து
269 மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 62,084 ஏக்கர் நிலமும் - பிற
வகுப்பினரில் 8,692 பேருக்கு 19,750 ஏக்கர் நிலமும் என மொத்தம் 1 லட்சத்து
79 ஆயிரத்து 2 பேருக்கு, 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் நிலம் தி.மு.
கழக ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்டது.இவ்வாறு கருணாநிதி தனது கேள்வி-பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
» இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
» ராசா கைதுடன் பிரச்சினை முடிந்துவிடவில்லை: கருணாநிதி குடும்பத்தினரையும் சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் ?
» ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு தேவை: வைகோ
» தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!
» இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
» ராசா கைதுடன் பிரச்சினை முடிந்துவிடவில்லை: கருணாநிதி குடும்பத்தினரையும் சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் ?
» ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு தேவை: வைகோ
» தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum