TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அறிவாலய திறந்தவெளி பூங்கா: தூசுதட்ட தயாராகுது ஆளுங்கட்சி

Go down

அறிவாலய திறந்தவெளி பூங்கா: தூசுதட்ட தயாராகுது ஆளுங்கட்சி Empty அறிவாலய திறந்தவெளி பூங்கா: தூசுதட்ட தயாராகுது ஆளுங்கட்சி

Post by logu Fri Apr 06, 2012 7:01 am

அறிவாலய திறந்தவெளி பூங்கா: தூசுதட்ட தயாராகுது ஆளுங்கட்சி Tamil_News_large_442321
அண்ணா அறிவாலயத்தில், 1,893 சதுர மீட்டர் பரப்பளவுள்ள
திறந்தவெளி பூங்கா நிலத்தை மீட்கும் பணிகள், வீட்டுவசதித் துறை அமைச்சரின்
ஒப்புதலுக்காக, அத்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அமைச்சரின்
ஒப்புதல் கிடைத்தவுடன் இது தொடர்பாக, கடந்த 2007ம் ஆண்டு போடப்பட்ட உத்தரவு
ரத்து செய்யப்படும் என தெரிகிறது.

இந்நிலம் தொடர்பாக, வீட்டுவசதித் துறை, சி.எம்.டி.ஏ., மற்றும்
தி.மு.க., அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையில் நடைபெற்ற கடித போக்குவரத்துகள்
தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், சி.எம்.டி.ஏ., பொது தகவல்
அதிகாரி அளித்த ஆவணங்களில் உள்ள விவரங்கள்: தமிழகத்தில், கடந்த 1980ம்
ஆண்டு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தபோது, தி.மு.க., அறக்கட்டளை சார்பில்,
அடுக்குமாடி கட்டடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. சில நிபந்தனைகளின்படி,
கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, 10 சதவீத இடத்தை திறந்தவெளி
நிலமாக ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

திட்டத்தில் மாற்றம்: இதன்பின், 1986ம் ஆண்டு, தி.மு.க.,
அறக்கட்டளை சார்பில், அரசுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், "அண்ணா அறிவாலய
வளாகத்தில், கல்யாண மண்டபமும், அனாதை இல்லமும் கட்ட இருப்பதாக கூறி,
திறந்தவெளி இடத்தில் பூங்கா அமைத்து, தாங்களே பராமரிப்பதாகவும் கூறி
இருந்தனர்' (இந்த சமயத்தில் அறிவாலய வளாகத்தில் வடகிழக்கு மூலையில், 1,893
சதுர மீட்டர் நிலம் திறந்தவெளிப்பகுதியாக ஒதுக்கப்பட்டிருந்தது.)
இதுதொடர்பாக, 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, அப்போதைய வீட்டுவசதித் துறை
செயலர் வி.செல்வராஜ் பிறப்பித்த உத்தரவில், "நகர், ஊரமைப்பு சட்டத்தின்,
113வது விதியின் அடிப்படையில், தி.மு.க., அறக்கட்டளை நிர்வாகிகளின்
மேல்முறையீட்டு மனு ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், அண்ணா அறிவாலய
வளாகத்தில் திறந்தவெளிப்பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ள 10 சதவீத நிலத்தில்,
எதிர்காலத்தில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும் சமயத்தில், சி.எம்.டி.ஏ.,
உறுப்பினர் செயலரை அணுகி அனுமதி கோரலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திறந்தவெளிப்பகுதி மாற்றம்: இந்நிலையில், 1997ம் ஆண்டு நவம்பர்
13ம் தேதி, தி.மு.க., அறக்கட்டளை சார்பில், சி.எம்.டி.ஏ.,வுக்கு ஒரு கடிதம்
எழுதப்பட்டது. அதில், "அறிவாலய வளாகத்தில் காலியாக உள்ள நிலத்தில்,
ஏற்கனவே கூறியிருந்தபடி, கல்யாண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக, கூட்ட அரங்கம்
கட்ட இருப்பதாகவும், இதற்காக திறந்தவெளிப்பகுதி நிலத்தை, வடகிழக்கு
மூலையில் இருந்து அண்ணா சாலையை ஒட்டிய மனையின் மேற்கு பகுதிக்கு மாற்ற
அனுமதி வேண்டும்' என கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக, 1998ம் ஆண்டு ஜனவரி
19ம் தேதி, அப்போதைய வீட்டுவசதித் துறை செயலர் பி.பாஸ்கரதாஸ்,
சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு எழுதிய கடிதத்தில், "தி.மு.க.,
அறக்கட்டளையின் கோரிக்கை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டதில், அதில்
கோரப்பட்டுள்ளபடி, வடகிழக்கு பகுதியில் உள்ள திறந்தவெளிப்பகுதி
ஒதுக்கீட்டை, மனையின் மேற்கு பக்கத்தில் அண்ணா சாலையை ஒட்டிய பகுதிக்கு
மாற்றும் வகையில் திட்ட வரைபடத்தை மாற்றி, கூட்ட அரங்கம் கட்ட திட்ட அனுமதி
வழங்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அண்ணா சாலையை ஒட்டியுள்ள பகுதியில் ஒதுக்கப்பட்ட, 1,893 சதுர
மீட்டர் திறந்தவெளிப்பகுதி நிலத்தை, சி.எம்.டி.ஏ.,விடம் தான பத்திரம் மூலம்
ஒப்படைப்பு செய்து, திட்ட அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,
இவ்வாறு ஒப்படைப்பு செய்யாமலே, தி.மு.க., அறக்கட்டளைக்கு திட்ட அனுமதி
வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அரசு நோட்டீஸ்: இத்தகைய சூழலில், விதிகளுக்கு உட்பட்டு
திறந்தவெளி நிலத்தை ஒப்படைப்பு செய்யாதது ஏன் என்று விளக்கம் கேட்டு,
2004ம் ஆண்டு, ஜூன் 28ம் தேதி, தமிழக அரசு சார்பில், தி.மு.க.,
அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு, "அந்த குறிப்பிட்ட
நிலத்தை பூங்காவாக மேம்படுத்தி, நாங்களே பராமரித்து வருகிறோம்' என,
தி.மு.க., அறக்கட்டளை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

செல்லமுத்து உத்தரவு: இருப்பினும், இப்பிரச்னை முடிவுக்கு வராமல்
நிலுவையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த தி.மு.க.,
ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதித் துறை செயலராக இருந்த ஆர்.செல்லமுத்து,
2007ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி, தி.மு.க., அறக்கட்டளை நிறுவனருக்கு எழுதிய
கடிதத்தில், "திறந்தவெளி நிலம் தொடர்பாக, 2004ம் ஆண்டு அளிக்கப்பட்ட
நோட்டீஸை வாபஸ் பெறுவதாகவும், இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து
செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேயர் பதில்: கடந்த ஜனவரியில் நடந்த மாநகராட்சி மன்ற
கூட்டத்தில், இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது, மேயர் சைதை துரைசாமி
அளித்த பதிலில், "அண்ணா அறிவாலயத்தில் திறந்தவெளி நிலத்துக்கு,
சி.எம்.டி.ஏ., மூலம் மாநகராட்சிக்கு தான பத்திரம் வழங்கப்படவில்லை. இது
தொடர்பான பத்திரப்பதிவும் செய்யப்படவில்லை. எனவே, தி.மு.க., அறக்கட்டளைக்கு
வழங்கப்பட்ட சிறப்பு அனுமதியை ரத்து செய்து, அந்த இடத்தை மாநகராட்சியிடம்
ஒப்படைக்க அரசை கேட்போம்' என்றார்.

அதிகாரிகள் தயார்: இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத
வீட்டுவசதித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மன்ற
கூட்டத்தின் இந்த கோரிக்கை அடிப்படையில், 2007ம் ஆண்டு செல்லமுத்து
பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய, வீட்டுவசதித் துறை நடவடிக்கை எடுக்க
வேண்டும். அப்போது தான், அறிவாலய வளாகத்தில் உள்ள, 1,893 சதுர மீட்டர்
பரப்பளவுள்ள திறந்தவெளி நிலத்தை மீட்க முடியும். இதற்காக, வீட்டுவசதித்
துறை அமைச்சரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு, அந்த அதிகாரி
கூறினார்.

என்ன நியாயம்? திறந்தவெளி நிலத்தை பூங்காவாக தாங்களே பராமரிக்க
வேண்டும் என்றாலும், விதிகளுக்கு உட்பட்டு முதலில் அந்த நிலம்,
சி.எம்.டி.ஏ.,வுக்கு தான பத்திரம் மூலம் ஒப்படைப்பு செய்யப்பட வேண்டும்.
அதன் பின் தனியாக கோரிக்கை விடுத்து, அந்த குறிப்பிட்ட நிலத்தை
பராமரிக்கும் பொறுப்பை மட்டும் சம்பந்தப்பட்ட அறக்கட்டளை பெற வேண்டும்.
ஆனால், அறிவாலய வளாக திறந்தவெளி நில விவகாரத்தில், இப்படி எந்த நடைமுறையும்
பின்பற்றப்படாமல், திறந்தவெளி நிலத்தின் உரிமையை தொடர்ந்து தன்வசமே
வைத்திருக்க, தி.மு.க., அறக்கட்டளை நினைப்பது எந்த விதத்தில் நியாயம்
என்பதே, பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

தி.மு.க., ஆட்சியில் இல்லாத போது...

* 2004ம் ஆண்டு, ஜூன் 28ம் தேதி: விதிகளுக்கு உட்பட்டு, திறந்தவெளி
நிலத்தை ஒப்படைப்பு செய்யாதது ஏன் என்று விளக்கம் கேட்டு, தமிழக அரசு
சார்பில், தி.மு.க., அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும்...

* 2007ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி: தி.மு.க., அறக்கட்டளை நிறுவனருக்கு,
தமிழக அரசு அனுப்பிய கடிதத்தில், "திறந்தவெளி நிலம் தொடர்பாக, 2004ம் ஆண்டு
அளிக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum