Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முதல்வரால் மட்டுமே முடியும்!
Page 1 of 1
முதல்வரால் மட்டுமே முடியும்!
திருநெல்வேலி மாவட்டத்தில், வள்ளியூர் அருகே, நம்பியாற்றில் மணல்
எடுத்துக்கொண்டு வந்த டிப்பர் லாரியை பொதுமக்கள் எதிர்த்து வழிமறித்தபோது அவர்கள்
மீதே லாரியை ஏற்றியுள்ளனர். இதில் சதீஷ் குமார் என்ற இளைஞரை மணல்கொள்ளையர் லாரி
ஏற்றிக் கொன்றுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக டிப்பர் லாரி டிரைவர், கிளீனர் ஆகிய இருவரைக் கைது
செய்து மேலும் இருவரைத் தேடிவருவதாகக் காவல்துறையினர் சொல்கின்றனர். இந்த நேரத்தில்
இந்த லாரி டிரைவர், கிளீனர், லாரி உரிமையாளர் மட்டும்தான் குற்றவாளியா என்ற கேள்வியை
நாம் கேட்க வேண்டியிருக்கிறது.
நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவது குறித்து நம்பியாற்றின் கரையில் உள்ள
மிட்டாதாரர்குளம் கிராமத்து மக்கள் அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் கொடுத்தும் எந்த
நடவடிக்கையும் எடுக்காததால்தான், பொதுமக்கள் தாங்களாகவே மணல் லாரியை மறிக்கும்
நடவடிக்கையில் இறங்கினர்.
மணல் கொள்ளையைத் தடுக்காமலும், கிராமத்து மக்களின் புகாருக்கு மதிப்பு
அளிக்காமலும் வாளாவிருந்த அதிகாரிகளும் இந்தக் கொலையில் குற்றவாளிகள்தான். ஆனால்,
அவர்கள் வருவாய்த்துறையைச் சேர்ந்தவர்கள். அரசு ஊழியர்கள். ஆகையால், அவர்களை அரசு
ஒன்றுமே செய்யப்போவதில்லை. துறை நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்பு நாடகத்தை
வேண்டுமானால் வழக்கம்போல நடத்தலாம். காவல்துறை மட்டும் என்ன, நடப்பது எதுவுமே
தெரியாமல்தான் இருந்ததா என்ன?
தாமிரபரணி நதியில் மணல் அள்ளக்கூடாது என்று நீதிமன்றத் தடை இருந்தாலும்கூட
அங்கும் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கத்தான் செய்கிறது. இதுகுறித்து இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத்
தலையிட வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்திலிருந்து போராடிக் கொண்டும், கோரிக்கை
வைத்தபடியும் தொடர்கிறார். அதற்குப் பிறகும் தொடர்ந்து மணல் அள்ளப்படுகிறது என்றால்
மணல் கொள்ளையரும் அதிகார வர்க்கமும் கைகோத்து நீதிமன்றத்தையும் மக்களின்
உணர்வுகளையும் மதிக்காமல் செயல்படுகிறார்கள் என்பதுதானே பொருள்!
தமிழ்நாட்டில் அனைத்து நதிகளுமே எல்லை கடந்து சுரண்டப்பட்டுவிட்டன. இதற்குக்
காரணம் எல்லா ஊர்களிலும் கட்டுமானப் பணிகள் அதிகரித்துவிட்டன. நகர்ப்புறங்களில்
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நல்ல விலையும் லாபமும் கிடைப்பதால்,
நகர்ப்புறங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதோடு, அண்டை மாநிலங்களுக்கும்
கடத்தப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம், அரசியல்வாதிகள்தான் இந்த மணல்கொள்ளையைப்
பின்னின்று நடத்துகிறார்கள் என்று வழக்கமாகச் சொல்லப்பட்டு வருகிறது. இது உண்மையாக
இருப்பினும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும்
நேர்மையாகப் பணியாற்றினால் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் ஒரு யூனிட் மண்கூட
அள்ள முடியாத நிலை உருவாகும் என்பது மட்டும் நிச்சயம்.
ஒரு லாரியில் இரண்டு யூனிட் மணல் மட்டுமே அள்ளப்பட வேண்டும் என்பதும், ஒரு
யூனிட்டுக்கு ரூ.300 அரசு நிர்ணயித்த கட்டணம் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஆனால்,
எந்த மணல் லாரி என்றாலும் 3 யூனிட்டுக்குக் குறையாமல் மணல் கொண்டுசெல்லப்படுகிறது.
வெளிச்சந்தையில் விற்கப்படும் விலை 3 யூனிட்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.4,000-மாக
இருக்கிறது. எந்த உழைப்பும் இல்லாமல், வெகு எளிதில் பல கோடி ரூபாய் சம்பாதிக்கும்
தொழிலாக மணல் விற்பனை உள்ளது.
சட்டப்படியே பல கோடி ரூபாய் கிடைக்கும் என்றால், சட்டவிரோதமாக எத்தனை கோடிகள்
லாபம் கிடைக்கும்? இதுபோதாதென்று, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு ஆகிய
நாடுகளுக்கும் இந்திய நதிகளிலிருந்து மணல் எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள்.
2010-11-ம் நிதியாண்டில் மாலத்தீவுக்கு மட்டுமே 12 லட்சம் டன் ஆற்று மணல் ஏற்றுமதி
செய்யப்பட்டுள்ளது.
ஆற்று மணலில் குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் மணல் அள்ளக்கூடாது என்று சட்டம்
சொல்கிறது. ஆனால், ஆற்றுக்குள் கிணறு வெட்டுவதைப்போல மணலைத் தோண்டியெடுக்கின்றனர்.
பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். இரவு-பகல் என எந்த நேரத்திலும் மணல்
அள்ளும்பணி நிற்பதில்லை. ஒரு நாளைக்கு எவ்வளவு எடுக்கலாம் என்ற கணக்கும் இல்லை.
எவ்வளவு விரைவில், எவ்வளவு அதிகம் அள்ள முடியும் என்பதில் கின்னஸ் சாதனை ஒவ்வொரு
ஆற்றுப்படுகையிலும் நடந்துகொண்டிருக்கிறது, அதிகாரிகளின் மேற்பார்வையில்!
அளவுக்கு அதிகமாக மணல் அள்ளினால் நதிகளின் நீர்சேமிப்புத்திறன் பாதிக்கப்படும்,
ஆற்றில் ஊறிச்செல்ல வழியில்லாததால் திடீர் வெள்ளம் ஏற்படும், சுற்றுச்சூழல்
பாதிக்கப்படும் என்று எவ்வளவோ சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை.
முதல்கட்டமாக, வெளிநாடுகளில் செய்வதைப்போல, நதியில் உள்ள மணல் அள்ளும்
பணியையும், மணல் எவ்வளவு ஆழத்துக்கு அள்ளப்பட்டுள்ளது என்பதையும் தொலைஉணர்
தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறிந்து, தற்போது தமிழக நதிகளில் உள்ள மணல் எவ்வளவு எனக்
கணக்கெடுப்பது அவசியம்.
அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ள இடங்களில், தொடர்புடைய ஒப்பந்ததாரர்
மீதும், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும்
கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மணல் கொள்ளை தொடரவே
செய்யும்.
மனஉறுதியுடன் தமிழக நதிகளைக் காக்கும் வல்லமை தமிழக முதல்வருக்கு மட்டுமே
உண்டு. முதல்வர் முறைத்துப் பார்த்தாலே போதும், முறைகேடுகளில் ஈடுபடுவோர்
மூலைக்கொருவராக ஓடி ஒளிந்துகொண்டு விடுவார்கள். தமிழக நதிகள் காப்பாற்றப்பட்டு
விடும். அவரால் மட்டுமே தைரியமாக இத்தகைய முடிவுகளை மேற்கொள்ள முடியும். இந்தப்
பிரச்னையில் அவர் இனிமேலும் தலையிடாமல் தாமதிக்கக் கூடாது!
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» "32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்'
» ஜனாதிபதியினால் மட்டுமே இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் - பசில் ராஜபக்ஷ
» பிரேரணை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியும்!!
» கச்சத்தீவை பா.ஜ.,வால் மட்டுமே மீட்க முடியும் : முரளீதர் ராவ் பேச்சு
» சிங்களர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு அளிக்க முடியும்: ராஜபக்சே
» ஜனாதிபதியினால் மட்டுமே இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியும் - பசில் ராஜபக்ஷ
» பிரேரணை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியும்!!
» கச்சத்தீவை பா.ஜ.,வால் மட்டுமே மீட்க முடியும் : முரளீதர் ராவ் பேச்சு
» சிங்களர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தமிழர்களுக்கு தீர்வு அளிக்க முடியும்: ராஜபக்சே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum