Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
காபிபோசா சட்டத்தில் கைது செய்யாமல் இருக்க 8 லட்சம் லஞ்சம் மத்திய வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் கைது
Page 1 of 1
காபிபோசா சட்டத்தில் கைது செய்யாமல் இருக்க 8 லட்சம் லஞ்சம் மத்திய வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் கைது
சென்னை, - செல்போன் நிறுவன உரிமையாளரை ‘காபிபோசா’ சட்டத்தின்கீழ் கைது
செய்யாமல் இருக்க ரூ.8 லட்சம் லஞ்சம் கேட்ட, மத்திய வருவாய் புலனாய்வு
பிரிவின் கூடுதல் இயக்குநர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். சிபிஐ
அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டலத்தின் டிஆர்ஐ (மத்திய
வருவாய் புலனாய்வு) பிரிவின் கூடுதல் இயக்குநராக இருப்பவர் ராஜன்.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள், வெளிநாட்டில் இருந்து
கொண்டுவரப்படும் பொருட்கள் ஆகியவற்றுக்கு உரிய சுங்க வரி கட்டி எடுத்துச்
செல்லப்படுகிறதா? அதில் முறைகேடு நடக்கிறதா? என்பதை சோதனை செய்து,
நடவடிக்கை எடுத்து வந்தனர். அதோடு போதைப் பொருள் தடுப்பு பணியையும் இந்த
பிரிவினர் செய்து வந்தனர்.
சோதனை என்ற பெயரில், தனியார்
நிறுவனங்களை மிரட்டி, வருவாய் புலனாய்வு பிரிவினர் பணம் பறித்து வந்ததாக
ஏராளமான புகார்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு வந்தன. கூடுதல் இயக்குநராக உள்ள
ராஜனும் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. அதனால் அவரை கடந்த 6 மாதமாக
சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில்,
வெளிநாட்டில் இருந்து செல்போன் இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தின் மீது
மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்ததோடு குடோன்களுக்கும் சீல்
வைத்திருந்தனர்.
இதனால் அந்த சீலை அகற்றவும், அந்த செல்போன் நிறுவன
உரிமையாளர் மீது காபிபோசா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல்
இருப்பதற்காகவும் ரூ.8 லட்சமும், லேட்டஸ்ட் மாடல் ஐபேடு போனும் ராஜன்
கேட்டிருக்கிறார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்போன் நிறுவன
உரிமையாளரான, சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த உபயதுல்லா, இதுகுறித்து
சிபிஐ இணை இயக்குநர் அருணாச்சலத்திடம் புகார் செய்தார். அதன்படி எஸ்பி
ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
நடத்தினர்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ராஜனின் வீட்டில் முதல்கட்டமாக
ரூ.2 லட்சம், ஒரு ஐபேடு போனை உபயதுல்லா இன்று கொடுத்தபோது, மறைந்திருந்த
சிபிஐ அதிகாரிகள் ராஜனை கைது செய்தனர். பின்னர் அவரை சிபிஐ சிறப்பு
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உடனடியாக புழல் சிறையில் அடைத்தனர். அவரை
காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ராஜனின்
சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி. இவர், சென்னை ஏர்போர்ட்
கஸ்டம்ஸ் கமிஷனராக 3 ஆண்டுகளும், துறைமுகம் கஸ்டம்ஸ் கமிஷனராக 3 ஆண்டுகளும்
பணியாற்றினார். தற்போது, மத்திய வருவாய் புலனாய்வுத்துறையில் 2 ஆண்டுகளாக
கூடுதல் இயக்குநராக பதவி வகித்து வருகிறார். வழக்கமாக ஒரு அதிகாரி ஒரு
இடத்தில் 3 ஆண்டுகள்தான் பணியாற்ற முடியும். இவர், தனது செல்வாக்கால் கடந்த
8 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையிலேயே முக்கிய பதவிகளில் பணியாற்றி
வருகிறார்.
‘இன்பார்மர்’கள் மூலம் பெரிய நெட்வொர்க் வைத்து, கடத்தல்
சம்பவங்களை கண்டறிந்து ஸ்பாட்டுக்கு உடனே சென்று பறிமுதல் செய்வதில்
கில்லாடி என்று இவரைப் பற்றி சொல்கிறார்கள். ‘கூடுதல் வேலை; கூடுதல்
பப்ளிசிட்டி’ என எல்லாவற்றிலும் அதிகப்படியாகவே செயல்பட்டதே அவருக்கு
சிக்கல் ஏற்பட காரணம் என்கிறார்கள் சக அதிகாரிகள்.
துறைமுகம்
கமிஷனராக இருந்தபோது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஏஜென்சி வழங்க ராஜன்
உதவியாக இருந்தார் என்று சிபிஐ அதிகாரிகளுக்கு ஏற்கனவே ஒரு புகார் வந்தது.
அந்த நிறுவனத்தில் இவர், சைலன்ட் பார்ட்னராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில்
ராஜனின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ஏராளமான
ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு
இவருடைய மகளுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பல விஐபிக்கள்
கலந்து கொண்டனர். அதில் துறைமுகத்தில் ஏஜென்சி எடுத்த ஒரு நிறுவனம்
விலைமதிக்க முடியாத பொருட்களை பரிசளித்ததாகவும் சிபிஐ அதிகாரிகளுக்கு
தெரியவந்துள்ளது. சிபிஐ அதிகாரிகளின் தீவிர விசாரணையில் ராஜனின்
தொடர்புகள், வருமானம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என
தெரிகிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
» ப.சிதம்பரத்துடன் அமெரிக்க புலனாய்வு இயக்குநர் சந்திப்பு
» லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை : மத்திய அரசு யோசனை!
» சென்னையில், 40 நாட்களில் 60 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது: போலீஸ் அதிரடி நடவடிக்கை
» வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்
» ப.சிதம்பரத்துடன் அமெரிக்க புலனாய்வு இயக்குநர் சந்திப்பு
» லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் தண்டனை : மத்திய அரசு யோசனை!
» சென்னையில், 40 நாட்களில் 60 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது: போலீஸ் அதிரடி நடவடிக்கை
» வருமான வரியை குறைக்க ரூ.50 லட்சம் லஞ்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum