Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
5 மாநில தேர்தல் முன்னணி நிலவரம் உ.பி.யில் ஆட்சி அமைக்கிறார் முலாயம்
Page 1 of 1

புதுடெல்லி : சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் இன்று காலை
பரபரப்பாக ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர
பிரதேசத்தில் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. முலாயம்
சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி காலை 10 மணி நிலவரப்படி 140க்கும் அதிகமான
இடங்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. பஞ்சாபில் அகாலி தளமும்,
மணிப்பூரில் காங்கிரசும், உத்தரகண்ட், கோவாவில் இழுபறியும் நிலவுகிறது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில்
தேர்தல்கள் நடந்து முடிந்தன. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை
தொடங்கியது. உ.பி.யில் 403, பஞ்சாபில் 117, உத்தரகண்டில் 70, மணிப்பூரில்
60, கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள்
எண்ணிக்கை பரபரப்பாக நடந்தது. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆளும் ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசுக்கு, இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அரை இறுதி
ஆட்டம் போல் இருக்கும் என்றும், இதன் வெற்றி தோல்வி, அடுத்து 2014ம் ஆண்டு
நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அதற்கான Ôமினி
பொதுத் தேர்தல்தான்Õ இது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. 5
மாநில தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வருமாறு: உத்தர பிரதேசம் : நாட்டிலேயே
பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 8
தொடங்கி மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த
மாநிலத்தில் சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளும் பகுஜன் சமாஜ்
கட்சி எல்லா தொகுதிகளிலும், சமாஜ்வாடி 402, காங்கிரஸ் 357, பாஜ 3898
இடங்களிலும் தனித்தனியாக போட்டியிட்டன. ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியுடன்
காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
காங்கிரசுக்கு கடைசி
இடம்தான் கிடைக்கும் என்று தேர்லுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்
கூறியிருந்தன. சமாஜ்வாடி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்
என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. அதற்கேற்ப, 10 மணி
நிலவரப்படி ஆளும் பகுஜன் சமாஜ் கட்சியை பின்னுக்கு தள்ளி சமாஜ்வாடி கட்சி
140 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றது. அடுத்து பா.ஜ 65,
பகுஜன் சமாஜ் 62, கட்சி அதிக இடங்களை பிடித்திருந்தன. காங்கிரஸ் 42
இடங்களில் முன்னிலையுடன் 4வது இடத்தில் இருந்தது. பஞ்சாப் : பஞ்சாப்
மாநிலத்தில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு ஜனவரி 30ம் தேதி தேர்தல்
நடந்தது. 77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. அங்கு பாரதிய ஜனதா,
சிரோன்மணி அகாலி தளம் கூட்டணி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
1,078 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் அகாலி தள கூட்டணியிடம்
இருந்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைவர்கள்
இருந்தனர். ஆனால், ஆளும் அகாலிதளம் 65 பெற்று முன்னிலை பெற்றிருந்தது.
உத்தரகண்ட் : உத்தரகண்டில் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த ஜனவரி 30ம் தேதி
தேர்தல் நடந்தது. 70 சதவீத வாக்குகள் பதிவாகின. அங்கு பாரதிய ஜனதா மற்றும்
காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. காலை 10 மணி நிலவரப்படி ஆளும் பாஜ
29 இடங்களில் முன்னணியில் இருந்தது. காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலை
பெற்றிருந்தது.
மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60
தொகுதிகளுக்கு ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடந்தது. 70 சதவீத வாக்குகள்
பதிவாகின. அங்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மக்கள் ஜனநாயக முன்னணி
இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கைக்கு
பிறகு காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலை பெற்று இருந்தது. மக்கள் ஜனநாயக
முன்னணி 4 இடங்களில் முன்னிலையில் இருந்தது. கோவா : நாற்பது தொகுதிகளை
கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த 3ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. 82.8 சதவீத
வாக்குகள் பதிவாகின. அங்கு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும்
பாஜ - மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி
நிலவியது. சுயேச்சைகள் உள்பட 215 பேர் போட்டியிட்டுள்ளனர். இங்கு பா.ஜ. 7
இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. வெறும் 40
தொகுதிகள் மட்டுமே இருப்பதால், இங்கு இரு கட்சிக்கும் இழுபறி இருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாநிலங்களில் உ.பி.யில் பல்வேறு
பிரச்னைகளை மாயாவதி தலைமையிலான அரசு சந்தித்து வந்தது. பட்டா பராசல்
பகுதியில் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம், ஆயிரக்கணக்கான கோடியில் கட்சி
சின்னமான யானையின் சிலைகளை வைத்தது, தலித் பெண்கள் அதிக எண்ணிக்கையில்
பலாத்காரம் செய்யப்பட்டது உள்பட பல்வேறு பிரச்னைகளால் மாயாவதியின்
செல்வாக்கு சரிந்துள்ளதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. இங்கு
சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெற்றால் முலாயம் சிங் முதல்வராவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாபில் சிரோண்மணி அகாலி தளம்- பா.ஜ. கூட்டணி,
உத்தரகண்டில் பாஜவும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் அளவில் முன்னிலையில்
பெற்றுள்ளன. மணிப்பூரில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று
தெரிகிறது. கோவாவில் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
ராகுல் வியூகம்: மீண்டும் தோல்வி உ.பி., யில் 4வது இடம்
கடந்த
1989ல் உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ், இந்த
முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பகீரத முயற்சி
செய்தது. ஓராண்டுக்கு முன்பே ராகுல் உ.பி.யில் முகாமிட்டார். கிராமம்
கிராமமாக சென்று குடிசைவாசிகளின் வீடுகளில் உணவருந்தினார். அவர்
மட்டுமல்லாது பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் சோனியா ஆகியோர்
தீவிர பிரசாரம் செய்தும் 3வது இடத்தை கூட காங்கிரசால் பிடிக்க
முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலும் இதுபோல் ராகுல் பல
மாதங்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். எந்த கட்சியுடனும்
கூட்டணி வைக்காமல் எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. எனினும், 4
இடங்கள் மட்டுமே கிடைத்தன. தமிழகத்திலும் ராகுலின் வற்புத்தலின்படி 2011
சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 5
இடங்களில்தான் வெற்றி பெற்றது. உ.பி.யிலும் ராகுலின் வியூகங்கள்
பலிக்கவில்லை.
மாயாவதி படுதோல்வி ஏன்?
லக்னோ: கடந்த 2007
உ.பி. சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களை கைப்பற்றி ஆட்சி
அமைத்தது. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார். உயர் ஜாதி இந்துக்களுக்கும்
10 சதவீத இடங்களை கொடுத்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனி
மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்த மாயாவதி, 2012 தேர்தலில் 3வது இடத்துக்கு
தள்ளப்பட்டு படுதோல்வி அடைந்துள்ளார். ஆட்சிக்கு வந்ததும், விளம்பர
மோகத்தில் கட்சியின் சின்னமாக யானையின் சிலைகளை ஆயிரக்கணக்கில்
வைப்பதிலும், தனது சிலைகளை மூலை முடுக்கெல்லாம் நிறுவுவதிலும்தான் அதிகம்
கவனம் செலுத்தினார். மக்கள் திட்டங்களில் எந்த கவனமும் செலுத்தவில்லை. ஊழல்
ஆட்சி என்று முத்திரை விழுந்ததை துடைப்பதற்காக கடைசி நேரத்தில் பல
அமைச்சர்களை நீக்கியும் எந்த பலனும் ஏற்படவில்லை. ஆடம்பர மோகத்தில் திளைத்த
அவர் ஒரு ஜோடி செருப்பு வாங்குவதற்காக தனி விமானத்தை மும்பைக்கு
அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்சிராமுக்கு பின்னர் உ.பி.
தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால்
அவர் விளம்பர மோகம், ஊழல் ஆகியவற்றால் தோல்வியை தழுவி உள்ளார் என்று
அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.
உத்தர பிரதேசம்
மொத்த இடங்கள்: 403
சமாஜ்வாடி - 140
பா.ஜ - 65
காங்கிரஸ் - 42
பி.எஸ்.பி - 62
பஞ்சாப்
மொத்த இடங்கள்: 117
அகாலிதளம் - 50
பா.ஜ - 12
காங்கிரஸ் - 35
மற்றவை - 2
உத்தரகண்ட்
மொத்த இடங்கள்: 70
காங்கிரஸ் - 20
பா.ஜ - 29
மற்றவை - 7
மணிப்பூர்
மொத்த இடங்கள்: 60
காங். - 14
திரிணாமுல் - 0
மஜமு - 4
மற்றவை - 4
கோவா
மொத்த இடங்கள்: 40
பாஜ - 7
காங் - 3
தே.காங். - 0
மற்றவை - 0

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தினமணி நாளிதழுக்கு இந்திய தேர்தல் தலைமை ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் ஆணையர் இவர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் கூட தெரியவில்லையா?
» சந்திரபாபுநாயுடு போட்ட ஓட்டு செல்லாது மாநில தேர்தல் அதிகாரி அறிவிப்பு..
» குஜராத் தேர்தல்; ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மோடி? இமாச்சலத்தில் காங்., ஆட்சி
» ஆட்சி அமைந்தால் வேலிகள் தூள் தூள்: ஜெ.,தேர்தல் முழக்கம்
» குடும்ப ஆட்சி மாறி கும்பல் ஆட்சி நடக்கிறது: விஜயகாந்த் ஆவேசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum