Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தோற்றால் பைனல் வாய்ப்பு! * இன்று ஆஸி.,யிடம் இலங்கை அணி * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Page 1 of 1
தோற்றால் பைனல் வாய்ப்பு! * இன்று ஆஸி.,யிடம் இலங்கை அணி * இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மெல்போர்ன்:முத்தரப்பு
ஒருநாள் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் கடைசி லீக் போட்டியில்
மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி பைனலுக்கு முன்னேற
முடியும். அதே நேரத்தில் தோற்றால், இந்திய அணிக்கு பைனல் வாய்ப்பு
கிடைக்கும்.
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும்
முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதுவரை நடந்த
போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (19 புள்ளி)
பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 15
புள்ளிகளுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன.
இன்று மெல்போர்னில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
இலங்கை முன்னிலை:
இலங்கை
அணியை பொறுத்தவரை வாழ்வா...சாவா போட்டி. அனைத்து விஷயங்களும் இலங்கை
அணிக்கு சாதகமாகத்தான் உள்ளன. அணியின் பேட்ஸ்மேன்கள், நல்ல "பார்மில்'
உள்ளனர். கடந்த போட்டியில் சதம் அடித்த தில்ஷன், சங்ககரா ஜோடி இன்றும்
ஸ்கோரை அதிகரிக்க முயற்சிக்கலாம். தவிர, கேப்டன் ஜெயவர்தனா, திரிமான்னே
மற்றும் சண்டிமால் ஆகியோரும் ரன் குவிப்பது நல்ல செய்தி. பின் வரிசையில்
ஆல் ரவுண்டர்கள் மாத்யூஸ், பெரேராவும் வெற்றிக்கு கைகொடுக்கலாம்.
பவுலிங் பலம்:
இலங்கை
அணியின் பவுலிங் இந்தியாவிடம் தான் எடுபடவில்லை. மற்றபடி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த மூன்று போட்டிகளிலும் மலிங்கா, குலசேகரா,
பெரேரா கூட்டணி நன்றாகத்தான் செயல்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு
மீண்டும் தொல்லை தான். வேகப்பந்து வீச்சாளர் மகரூப் நீக்கப்பட்டு,
சுழற்பந்து வீச்சாளர் சேனநாயகே, ஹெராத்துடன் இணைகிறார்.
பேட்டிங் மோசம்:
ஆஸ்திரேலிய
அணியின் பேட்டிங், இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியை தவிர, மற்ற 2
ஆட்டங்களில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. துவக்க வீரர் வாட்சன், வார்னர்
இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தால் மட்டுமே, இடையில் ஏற்படும் சரிவை
ஈடுகட்டலாம்.
ரெகுலர் கேப்டன் கிளார்க், காயம் குணமடையாத
நிலையில் இன்று களமிறங்க போவதில்லை எனத் தெரிகிறது. "மிடில் ஆர்டரில்'
டேவிட் ஹசி, மைக்கேல் ஹசி, இளம் பாரஸ்ட், பின் வரிசையில் வேட், கிறிஸ்டியன்
சாதிப்பர் என நம்பலாம்.
பட்டின்சன் வருகை:
அணியின்
பவுலிங்கை பொறுத்தவரையில், சுமார் ரகம் தான். இதனால், ஹாரிஸ் நீக்கப்பட்டு
பட்டின்சன் இடம் பெறுவது, பிரட் லீ, மெக்கே போன்றவர்களுக்கு உதவியாக
இருக்கும். சுழலில் வேறு வழியின்றி தோகர்டி தொடர்வார்.
வரலாறு சாதகம்:
இலங்கை
அணி கடந்த 1996ல் இதுபோன்ற கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில், இதே
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது.
கடைசியாக 2006ல் நடந்த முத்தரப்பு தொடர் பைனலுக்கு தகுதி பெற்ற இலங்கை அணி
மீண்டும் சாதிக்குமா அல்லது இந்தியாவுக்கு வழி விடுமா என்பது இன்று
தெரிந்துவிடும்.
இந்தியாவின் வாய்ப்பு எப்படி:
ஆஸ்திரேலிய
அணி ஏற்கனவே பைனலுக்கு முன்னேறி விட்டதால், இன்று தோல்வியடைந்தாலும்
தொல்லை இல்லை. ஆனால் இலங்கை வென்றால், 19 புள்ளியுடன் பைனலுக்கு செல்லும்.
இந்தியா (15 புள்ளி) வெளியேறும்.
* அதேநேரம், இலங்கை அணி
தோற்கும் பட்சத்தில், இந்திய அணிக்கு எதிரான 4 போட்டியில் 2ல் தோற்றதால்,
அதிக வெற்றி அடிப்படையில் பைனல் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.
*
மாறாக மழையால் போட்டி ரத்தானால், இரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும்
பட்சத்தில், ஆஸ்திரேலியா-இலங்கை பைனலுக்கு செல்ல, இந்தியா நாடு திரும்ப
வேண்டியது நேரிடும்.
மழை வருமா:
இன்று
போட்டி நடக்கும் மெல்போர்னில் அதிகபட்ச வெப்பநிலை 24, குறைந்த பட்சம் 14
டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் பெரும்பாலும் மேகமூட்டமாக காணப்படும்.
இரவில் மழை வர 50 சதவீதம் வாய்ப்புள்ளது.
யாருக்கு சாதகம்:
மெல்போர்னில் இதுவரை இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் 12 முறை மோதின. இதில் ஆஸ்திரேலியா 7, இலங்கை 5ல் வென்றன.
* இலங்கை அணி ஒட்டு மொத்தமாக பங்கேற்ற 15 போட்டிகளில் 10ல் தோல்வியடைந்தது.
* பேட்டிங்கில் ஆஸ்திரேலிய அணி கடந்த 1999ல் இலங்கைக்கு எதிராக அதிகபட்சமாக 310/8 ரன்கள் எடுத்தது.
* இலங்கை அணி கடந்த 1999 போட்டியில், அதிகபட்சமாக 267 ரன்கள் எடுத்துள்ளது.
Similar topics
» கோப்பை வெல்லுமா இந்திய அணி! * ஆசிய கோப்பை இன்று ஆரம்பம் * முதல் சவாலில் இலங்கை-பாக்.,
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி
» மும்பையை பழி தீர்க்குமா சென்னை * இன்று தோற்றால் "அவுட்'
» யுவராஜ், ஸ்ரீசாந்திற்கு மீண்டும் வாய்ப்பு *இந்திய அணி அறிவிப்பு
» இலங்கை சிறையில் இருக்கும் இந்திய மீனவர்கள் 78 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
» நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி
» மும்பையை பழி தீர்க்குமா சென்னை * இன்று தோற்றால் "அவுட்'
» யுவராஜ், ஸ்ரீசாந்திற்கு மீண்டும் வாய்ப்பு *இந்திய அணி அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum