Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கருணை மனு விவகாரத்தில் மாநில உள்துறைச் செயலர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1
கருணை மனு விவகாரத்தில் மாநில உள்துறைச் செயலர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புது
தில்லி, பிப்.22: கருணை மனு விவகாரத்தில் மாநில உள்துறைச் செயலர்களுக்கு
உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாநில உள்துறைச்
செயலகங்களிடம் உள்ள கருணை மனுக்கள் குறித்த விவரங்களை அடுத்து வரும் 3
தினங்களுக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புமாறு இன்று உச்ச
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தொலைபேசி, தொலைநகல் உள்பட ஒரு தகவல்
தொடர்பு சாதனங்களின் வழியே தகவல்களை வழங்கவேண்டும் என்று அது
கூறியிருக்கிறது. மத்திய, மாநில
அரசுகளுக்கு வரும் கருணை மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,
ஒரு சில கருணை மனுக்கள் வந்து 11 ஆண்டுகள் ஆகியிருப்பதற்கும், 8 ஆண்டுகள்
ஆகியிருப்பதற்கும் கவலை தெரிவித்துள்ளனர். இவ்வளவு காலம் அந்த மனுக்கள் மீது
எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலதாமதம் செய்வது மிகவும்
வருந்தத்தக்க விஷயம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.உச்ச
நீதிமன்ற நீதிபதிகள், ஜி.எஸ். சிங்வி, எஸ்.ஜே. முகோபாத்யாய் ஆகியோர், அனைத்து மாநில உள்துறை செயலாளர்களும், அரசுக்கு வந்துள்ள
அனைத்து கருணை மனுக்கள் பற்றிய விவரங்களை 3 நாட்களுக்குள் தெரிவிக்க
வேண்டும் என்று உத்தரவிட்டனர். ராஜீவ் கொலையாளிகள் 3
பேருக்கு மரண தண்டனை வழங்கும் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில்
உள்ள வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றங்களுக்கோ அல்லது உச்ச
நீதிமன்றத்துக்கோ மாற்றி உத்தரவிடக் கோரி எல்.கே.வெங்கட் என்பவர் தாக்கல்
செய்த மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு
விசாரணையை வரும் மார்ச் மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதுகுறித்து
கருத்து தெரிவித்த நீதிபதி, முதலில் நிலுவையில் உள்ள கருணை மனுக்கள்
குறித்த விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும்.
அதன்பின்னர், மனுதாரரின் மனு மீது விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று
கூறினார். முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் ஜி.கே.மூப்பனார் பேரவை
அமைப்பு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த அமைப்பின்
எல்.கே.வெங்கட் என்பவர் இது தொடர்பான ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்தார். அதில், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கு
விசாரணை முடிந்து நளினி, ஸ்ரீஹரன் என்ற முருகன், டி.சுந்தரராஜா என்ற
சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்களில் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற
அனைவரின் மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.இந்த மூவரும்
குடியரசுத் தலைவருக்கு செய்திருந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு, கடந்த
செப்டம்பர் 9-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அதை மறு
பரிசீலனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அவ்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தினத்தில் நீதிமன்ற
வளாகத்துக்கு வெளியே சுமார் ஐயாயிரம் பேர் கூடி கொலையாளிகளுக்கு ஆதரவாக
கோஷமிட்டனர். இது நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு போல அமைந்தது.ராஜீவ்
கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது கால தாமதம் ஆவதால், மரண
தண்டனையைக் கைவிட வேண்டும் என்று தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள
அரசும் முந்தைய அரசும் வலியுறுத்தி வருகின்றன. இதை செய்தித்தாள்களும்
தனியார் தொலைக்காட்சிகளும் வெளியிட்டு வருகின்றன.தமிழக அரசின்
இந்தச் செயல்பாடு நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்தக் கூடுமோ என்ற அச்சம்
ஏற்படுகிறது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மரண தண்டனைக்
கைதிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றன.இத்தகைய சூழலில் மரண தண்டனையை
ரத்து செய்யக் கோரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்
விசாரிப்பதற்கு இடையூறு நேரக்கூடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த
வழக்கை வேறு நீதிமன்றத்துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்றலாம் என்று அவர்
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ராஜீவ் கொலை வழக்கு: அனைத்து மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
» காவிரியில் 9ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட கருநாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
» மூவர் தொடர்பான கருணை மனு தகவல்களை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு
» மதுரை ஐகோர்ட்டு உத்தரவு: கருணை கொலைக்கு அனுமதி கேட்ட குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» நக்ஸல்கள் கூட்டத்தில் அதிகாரிகள்: உள்துறைச் செயலர் அதிர்ச்சி
» காவிரியில் 9ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட கருநாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
» மூவர் தொடர்பான கருணை மனு தகவல்களை வெளியிட மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு
» மதுரை ஐகோர்ட்டு உத்தரவு: கருணை கொலைக்கு அனுமதி கேட்ட குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
» நக்ஸல்கள் கூட்டத்தில் அதிகாரிகள்: உள்துறைச் செயலர் அதிர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum